அரசாங்கத்தை குழப்பும் வகையில் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டங்கள் உள்ளிட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் போராட்டங்களை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது எனவும் தொழிற்சங்க உரிமைகள் தவிர்ந்த அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தியே ஆக வேண்டுமெனவும் இது தொடர்பாக எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்திலும் , கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
0 Comments