சிகிரியாவுக்குள் கூகுள் பலூன்

Tuesday, March 29, 2016

சிகிரியாவில் நாளை  புதன்கிழமை  5 ஆயிரம் இளைஞர்களின் பங்குபற்றலுடன் கூகுள் பலூன் ஒன்று காட்சிப்படுத்த எதிர்ப்பார்ப்பதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
கடந்தமுறை உடைந்து விழுந்ததாகக் கூறப்படும் கூகுள் பலூன், உண்மையில் உடைந்து விழுந்ததா அல்லது தரையிறக்கப்பட்டதா என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்ற போதிலும், இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் விளக்கமளிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
READ MORE | comments

வாகனங்கள் செலுத்தும் போது கையடக்கத் தொலைபேசி பாவனையை முற்றாக தடை செய்ய நடவடிக்கை

வாகனங்கள் செலுத்தும் போது கையடக்கத் தொலைபேசி பாவிப்பதை முழுமையாக தடை செய்வதற்கான சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
கையடக்கத் தொலைபேசி பாவிப்பதன் ஊடாக விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் இதில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகளவில் இடம்பெறுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் கலாநிதி சிசிறி கோதாகொட தெரிவித்துள்ளார் .
நேற்று சட்டத்தரணிகள் சங்கத்துடன் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
வாகனங்களின் வேகக் கட்டுப்பாடு தொடர்பான சட்டதத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு உயர் நிதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்க எண்ணியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த வாரம் இடம் பெற்ற மாநாட்டின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் நேற்று சட்டத்தரணிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கலாநிதி சிசிற ஜயகொடி தெரிவித்துள்ளார் .
வீதி சமிஞ்சை மற்றும் அது தொடர்பான சட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பில் பல தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த விடயங்கள் தொடர்பில் எதிர் வரும் வாரம் அளவில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கலாநிதி சிசிற ஜயகொடி தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த பா.லோகிதராஜனின்இறுதி ஊர்வலம்

READ MORE | comments

பி.ரீ.ரீ. வரியை அறவீடு செய்வது குறித்து அரசாங்கம் கவனம்

Sunday, March 27, 2016

பெறுமதி சேர் வரியை அரசாங்கம் அதிகரித்துள்ள நிலையில் பி.ரீ.ரீ எனப்படும் விற்பனை புரள்வு வரியை விதிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாகாண ரீதியில் இந்த வரி அறவீடு செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் தெற்கில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் பி.ரீ.ரீ வரி அறவீடு செய்வது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டில் அப்போதைய அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பி.ரீ.ரீ வரியை ரத்து செய்திருந்தது.
மீளவும் வரியை அறவீடு செய்ய சுற்று நிருபம் ஒன்றை வெளியிட தீர்மானிக்;கப்பட்டுள்ளது.
இதன்படி மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு 1 வீத வரியையும், ஆடம்பர பண்டங்களான தங்க நகை, சிகரட் மற்றும் மதுபானம் போன்றவற்றுக்கு 5 வீத வரியையும் அறவீடு செய்ய சாத்தியமுண்டு என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விற்பனை புரள்வு வரி அறவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

இலங்கையில் 30க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.பயங்கரவாதிகள்?

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் சிரியாவில் செயற்படும் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ள நாற்பத்தி ஐந்துக்கும் மேற்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களும் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உலகம் பூராகவும் தடை செய்யப்பட்டுள்ள ஐ.எஸ். இணையத்தளங்களுக்கு இலங்கையில் இருக்கும் அதன் ஆதரவாளர்கள் எதுவித கட்டுப்பாடுகளும் இன்றி பிரவேசிக்கும் வசதி இன்னும் காணப்படுகின்றது.
அத்துடன் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் கண்டறியப்பட்டுள்ள போதிலும் அவர்களைக் கைது செய்யவும் முடியவில்லை. அதற்கான காரணம் இலங்கையில் குறித்த அமைப்பு இதுவரை தடை செய்யப்படாமையே ஆகும்.
இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தொழில் பெற்றுச் செல்வோர் மற்றும் மாலைதீவிலிருந்து இலங்கை வருவோர் ஆகிய தரப்பினர் மூலமாகவே ஐ.எஸ். பயங்கரவாதம் இலங்கையில் பரவிக் கொண்டிருக்கின்றது என்றும் குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

மலேசியாவில் மூன்று தமிழர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்!

சர்வதேச மன்னிப்புச் சபையின் கடும் எதிர்ப்புகளையும் மீறி மூன்று தமிழர்களின் மரண தண்டனையை மலேசிய அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த குணசேகர் பிச்சைமுத்து (35), ரமேஷ் ஜெயகுமார் (34), மற்றும் அவருடைய சகோதரரான சசிவர்ணம் ஜெயகுமார் (37) ஆகிய மூவருக்குமே நேற்று முன்தினம் அதிகாலை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டு ஒருவரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு இம்மூவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணையின் போது குறித்த மூவரும் தம்முடைய தற்காப்புக்காகவே மேற்படி நபரைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர்.
ஆனால் மூவரின் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து மூவருக்கும் மலேசிய நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சில தினங்களுக்கு முன்னதாக குணசேகரனின் தாயாருக்கு சிறை அதிகாரிகள் கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.
அதில் அவருடைய மகனுக்குமரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளதால், அவரை அடக்கம் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கூறியிருந்தனர்.
இந்த மரணதண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனங்களை வெளியிட்டு மரணதண்டனையை ரத்து செய்யுமாறு மலேசிய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
ஆனால் பல்வேறு எதிர்ப்புகளை மீறி மலேசிய அரசாங்கம் நேற்று மூவரின் மரணதண்டனையும் நிறைவேற்றியுள்ளதாக தற்போது அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து மூவரின் வழக்கறிஞர் கருத்து தெரிவித்த போது, வெள்ளிக்கிழமை அதிகாலை 04.30 மணியிலிருந்து 05.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

மட்டக்களப்பு புணாணை பாடசாலையில் குதூகல இல்ல விளையாட்டுப் போட்டி!

Saturday, March 26, 2016

கல்குடா வலயத்தின் கோறளைப்பற்று வடக்கு கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள புணாணை  அ.த.க.பாடசாலையில் 24.03.2016(வியாழக்கிழமை) இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் ஏ.றொபட்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ். பரமேஸ்வரன், கிராம உத்தியோகத்தர் எஸ்.முருகானந்தம், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான க.ஜெகதீஸ்வரன்,க.சிவறஞ்சினி, க.ரமேஸ், அதிபர்களான என்.மகாலிங்கம்,டி.கேதீஸ்வரன், சுகாதாரப் பரிசோதகர் எஸ்.அமிர்தாப் , ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள், பெற்றார்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்திருந்தனர்.  
 
 



READ MORE | comments

சவுதியில் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் இலங்கைக்கு வந்துள்ளது! -

சவுதி அரேபியாவில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மாத்தளை, உக்குவளை பரகாவெலயைச் சேர்ந்த இராமையா கிருஸ்ணகுமார் உதயகுமாரியின் உடல் நான்கு மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரு பிள்ளையின் தாயாரான உதயகுமாரி கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி தொழிலுக்காக சவுதி அரேபியாவிற்குச் சென்றிருந்தார்.
தனது கணவரான தங்கராஜ் யோகராஜா, சவுதி அரேபியா சென்று 15 நாட்களில் இவரும் அங்கு சென்றதாக உறவினர்கள் குறிப்பிட்டனர்.
இருவரும் ஒரே உரிமையாளரின் ஹோட்டல் மற்றும் வீட்டில் தொழில் புரிந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் திகதி இரவு, உதயகுமாரி சவுதி அரேபியாவில் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாக உறவினர்களுக்குத் தகவல் கிடைத்திருந்தது.
எனினும், உதயகுமாரியின் உடலை இலங்கைக்குக் கொண்டு வருவதில் நிலவிய தாமதம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உதயகுமாரியின் கணவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கைக்கான சவுதி தூதரகம் அறிவித்திருந்தது.
சவுதி அரேபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட உதயகுமாரியின் பூதவுடல் மாத்தளையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக்கிரியை  இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
READ MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த பா.லோகிதராஜன் காலமானார்

மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த பாரதிதாசன் லோகிதராஜன் 26.03.2016 அன்று காலமானார்






READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |