போர் வெற்றியைக் காரணம் காட்டி குற்றமிழைத்த எவரும் தண்டனையில் இருந்துப்பிக்க முடியாதுசோபித தேரர்

Saturday, February 28, 2015

இறுதிப் போரில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த உண்மைகள் கண்டறியப்படுவது நல்ல விடயம். போர் வெற்றியைக் காரணம் காட்டி குற்றமிழைத்த எவரும் தண்டனையில் இருந்து தப்பிக்கவோ அல்லது தண்டனை வழங்கப்படாமலோ இருக்க முடியாது என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்தார்.
உண்மையைக் கண்டறிவதன் மூலமாக இவ்விடயத்தில் தெளிவைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பாப்பரசர் முதற்கொண்டு உலகத் தலைவர்கள் பலரும் உண்மையைக் கண்டறிய வேண்டும் என தெரிவித்த கருத்துடன் உடன்படுவதாகத் கூறிய சோபித தேரர், மறைப்பதற்கு இவ்விடயத்தில் ஏதுமில்லையல்லவா என்றும் தெரிவித்தார்.

இறுதிப்போரில் போர்க்குற்றங்கள் உட்பட பாரிய மனித உரிமைமீறல்கள் இடம்பெற்றதான குற்றச்சாட்டுக்கள் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக இலங்கை மீது சர்வதேச அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது. இந்நிலையில், இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் உட்பட உலகத்தலைவர்களும் இறுதிப்போரில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ்விடயத்தில் நிலைப்பாடு என்னவென்று சோபித தேரரிடம் வினவியபோது, “உண்மைகள்கள் கண்டறியப்படுவது நல்ல விடயமே. உண்மைகளைக் கண்டறிவதனூடாக நாம் தெளிவுபெறமுடியும்” என்று குறிப்பிட்டார்.
போர் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும் என சில தரப்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து வினவியபோது, “போர் வெற்றிக்கான கௌரவம் அவருக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், அவர் மட்டுமே போர் வெற்றிக்கு காரணமல்ல. அப்படியென்றால் சரத் பொன்சேகா தேங்காய் உரித்துக் கொண்டிருந்தாரா? போர் வெற்றியைப் பெற்றதற்காக வேறு குற்றங்களை இழைத்திருந்தால் தண்டனை வழங்காது இருக்க முடியாது. போதுமான சாட்சியங்கள் இருக்குமிடத்தில் குற்றச்சாட்டுக்களுக்கு தராதரம் பார்க்காது தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு” என்று தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

விவசாய துறையில் பெண்களின் தலைமைத்துவத்தினை முன்னேற்ற கள பயிற்சி நெறிகள் ஆரம்பம்


கிழக்கு மாகாண விவசாயத்துறையில் பெண்களின் தலைமைத்துவத்தை முன்னேற்றல் என்ற திட்ட நோக்கத்திற்கமைய பெண்களுக்கான உட்கள மற்றும் வெளிக்களப் பயிற்சிநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மாவட்ட விவசாயப்பயிற்சி நிலைய பண்ணை முகாமையாளர் ஏ.சுகுந்ததாஸன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாயத்திணைக்களமும் பிஸ்னஸ் கிரியேஷன்ஸ்   நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மேற்படி பயிற்சிநெறி வியாழக்கிழமை (26) மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் பண்ணை முகாமையாளர் ஏ.சுகுந்ததாஸனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

விவசாயம் சார்ந்த வியாபார வழிகாட்டிகளாக உள்வாங்கப்பட்ட சுமார் 30 இளம் பெண்கள்  இந்தப் பயிற்சிநெறியில் பங்கெடுத்துள்ளனர். கிழக்கு மாகாண விவசாயத்துறையில் பெண்களின் தலைமைத்துவத்தை முன்னேற்றல் என்ற திட்ட நோக்கத்திற்கமைய இந்தப் பயிற்சிநெறிக்கு தமது நிறுவனம் நிதி அனுசரணை வழங்குவதாக ஒக்ஸ்பாம் நிறுவன நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் எஸ்.செந்தூரன் தெரிவித்தார்.

பயிற்சி ஆரம்பிப்பு நிகழ்வில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய பண்ணை முகாமையாளர் ஏ.சுகுந்ததாஸன், மட்டக்களப்பு மாவட்ட விவசாய உதவி விரிவாக்கப் பணிப்பாளர் செல்வி சிவஞானம் மங்களகேசரி, பண்ணைப் பெண்கள் விவசாய விரிவாக்க உத்தியோகத்தர் கே.ராஜாம்பிகை, விவசாயப் போதனாசிரியர் எம்.ஐ.எம்.ஜமால்தீன், ஒக்ஸ்பாம் நிறுவன நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எஸ்.செந்தூரன், அதன் கிழக்கு மாகாண  நிகழ்ச்சி இணைப்பாளர் ஆர்.சிவாஸ்கரன், திட்ட அதிகாரி வை.பிரியதர்ஷினி, திட்ட இணைப்பதிகாரி கே.ஜயனிகா, பிஸ்னஸ் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் திட்ட அதிகாரி எஸ். தினேஸ் உட்பட திட்டப் பயனாளிகளான 30 பெண்களும் கொண்டனர்.

ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் 20 நாட்கள் கொண்டதாக இந்த உட்கள வெளிக்கள செயன்முறைப் பயிற்சிநெறி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.



Ads by InfoAd Options



Ads by InfoAd Options



Ads by InfoAd Options



Ads by InfoAd Options



Ads by InfoAd Options




READ MORE | comments

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் காயம்

இன்று பிற்பகல் 11.30மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் கூழாவடி முதலாம் குறுக்கினை சேர்ந்த இரண்டு சிறுவர்களே காயமடைந்தாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

கூழாவடி முதலாம் குறுக்கு வீதியில் இருந்து கூழாவடி பிரதான வீதிக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த இரண்டு சிறுவர்களை பிரதான வந்த மோட்டார் சைக்கிள் மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் இதன்போது துவிச்சக்கர வண்டியில் வந்த இரண்டு சிறுவர்களும் காயமடைந்ததாகவும் அதில் ஒருவருக்கு சிறு காயங்கள் எனவும் காயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்
READ MORE | comments

மட் /பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியின் இல்ல விளையாட்டுப் போட்டி 2015 நிகழ்வுகள் photoes

மட் /பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியின் இல்ல விளையாட்டுப் போட்டி 2015  நிகழ்வுகள்






















































READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |