வாகனத்தின் வேகத்தை குறைக்க பொலிஸாரின் வித்தியாசமான கண்டுபிடிப்பு

Saturday, June 30, 2018

போக்குவரத்து சட்டங்களை மீறி வேகமாக பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை குறைக்க பொலிஸார் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
முந்தலம பொலிஸாரினால் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முந்தலம பொலிஸ் பிரிவிற்கு சொந்தமான வீதியில் பொலிஸ் அதிகாரிகளுக்கு சமமான உருவங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
புத்தளம் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியின் உத்தரவிற்கமைய புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் கிரியன்கல்லியில் இருந்து கரிக்கட்டி வரையான வீதியில் இவ்வாறு பொலிஸ் அதிகாரிகளின் உருவ பதாகை பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனை பார்த்தால் பொலிஸ் அதிகாரிகள் நிற்பது போன்று காட்சியளிப்பதனால் வாகனங்களின் வேகம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



READ MORE | comments

அடுத்த சில நாட்களுக்கு மக்கள் அவதானம்!!!!!

நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் இன்று(30) காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சிறிதளவு மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இடி மின்னலால் ஏற்படும் தாக்கங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களை கேட்டுள்ளது.

இதேவேளை புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு கடற்பரப்பில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று, மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணம் உட்பட அடுத்த சில நாட்களுக்கு மக்கள் அவதானம் !

Rating: 4.5
Diposkan Oleh:
Viveka Viveka
READ MORE | comments

பாண்டிருப்பு ஸ்ரீ பெரியதம்பிரான் ஆலயத்தில் பக்தர்கள் எண்ணைக்காப்பு சாத்தும் வைபவம்

செ.துஜியந்தன்

பாண்டிருப்பு ஸ்ரீ பெரியதம்பிரான் ஆலயத்தில் எண்ணைக் காப்பு சாத்தும் வைபவம் 

பாண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீ பெரியதம்பிரான் அலயத்தின் புனராவர்த்தன குண்டபசஷ அஷ்டபந்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் நாளை ஞாயிற்றுக்கிழமை  முதலாம் திகதி நடைபெறவுள்ளது. 
ஆலய பூர்வாங்க கிரியாரம்பம் கடந்த  29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது பாண்டிருப்ப ஸ்ரீ பெரியதம்பிரான் அலயத்தின் புனரமைப்பு பணிகள் கடந்த பல வருடங்களாக நடைபெற்றுவந்தன.  தற்போது ஆலயம் புதுப்பொழிவுடன் காட்சியளிக்கின்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் 10.30 மணிவரையுள்ள முகூர்த்த நாளில் பெரியதம்பிரானுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இன்று சனிக்கிழமை சுவாமிக்கு பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து பத்து தினங்கள் மண்டலாபிஷேகம் விசேட பூசை  நடைபெற்று எரிவரும் 11 ஆம் திகதி புதன்கிழமை பாற்குடபவனியும், சங்காபிஷேகமும் நடைபெறும்  இவ் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு ஆகஸ்ட் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
READ MORE | comments

மட்டக்களப்பு சிவாநந்தா தேசிய பாடசாலை மாணவர்களின் ”ஆற்றல் - 2018” அறிவியல் கண்காட்சி


மட்டுநகர் சிவாநந்தா தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவும் சிவாநந்தாபழைய மாணவர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள "ஆற்றல்-2018" கல்விக் கண்காட்சி எதிர்வரும் 2ம் மற்றும் 3ம் திகதிகளில் (திங்கள் மற்றும் செவ்வாய்) முற்பகல் 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணிவரை பாடசாலையின் கலையரங்கு மற்றும் வளாகத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. 

ஆரம்ப பிரிவு மாணவர்களிடத்தில் புதைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டுவரும் முகமாக சிவாநந்தா தேசிய பாடசாலையின் அதிபர் திருவாளர் யசோதரன்  மற்றும் சிவாநந்தா பழைய மாணவர் சங்கத் தலைவர்  திருவாளர் முருகவேள் ஆகியோர் பாடசாலை ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்விசாரா ஊழியர்களுடன் இணைந்து மேற்கொண்ட முயற்சியின் பயனாக "ஆற்றல்-2018" கல்விக் கண்காட்சி சிறப்பு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் கண்காட்சி பிரியர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத் தக்க விடயம்

மாணவர்களின் அறிவியல்சால் கைவினைப் பொருட்களுடன் மாணவர்களின் அறிவினை எழுச்சியுறச் செய்யும் பல்வேறுபட்ட பாரம்பரிய பொருட்கள், பாரம்பரிய குடிசைக் கைத்தொழில் பொருட்கள், பல்வேறுபட்ட இசைக் கருவிகள்,விவசாய மற்றும் மீன்பிடி நுட்பங்களின் காட்சிபடுத்தல்களும் ' ஆற்றல்-2018' இல் உள்ளடக்கப்பட்டுள்ளன 

ஆற்றல்-2018 கல்விக் கண்காட்சியினை கண்டு பயன்பெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்

பாடசாலை சமூகத்தினர், 
பாடசாலை அபிவிருத்திக் குழு மற்றும் 
பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினர்








READ MORE | comments

மட்டக்களப்பு முதலைக்குடாவில் வறியமாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

செ.துஜியந்தன் 

மட்டக்களப்பு முதலைக்குடாவில் வறியமாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு 

வீரத்தமிழர் முன்னணி ஐக்கிய இராட்சியத்தின் அறம்செய் அறக்கட்டளை அமைப்பின் ஏற்பாட்டில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு கற்றலை ஊக்கப்படுத்தும் வகையில் துவிச்சக்கரவண்டி வழங்கும்; நிகழ்வு முதலைக்குடா கண்ணகி அரங்கில் நடைபெறவுள்ளது.
வீரத்தமிழர் முன்னணியின் தலைவர் அ..ஞானசேகரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதலைக்குடா மகாவித்தியாலய அதிபர் பி.தங்கவேல், சமூகஆர்வலர் பொ.கோபாலபிள்ளை, அகரம் அமைப்பின் தலைவர் அகரம் செ.துஜியந்தன் அறம் செய் அமைப்பின் செயற்பாட்டாளர்களான மட்டுநகர் கமலதாஸ், அ.தேகதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
படுவான்கரைப் பிரதேசத்தில் பல்வேறு சமூகசேவையில் ஈடுபட்டுவரும் வீரத்தமிழர் முன்னணி ஐக்கிய இராட்சியம் இப்பகுதியிலுள்ள வறிய மாணவர்களின் கல்விக்கு கரம் கொடுக்கும் செயற்பாட்டில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றது. அந்தவகையில் படுவான்கரைப்பிரதேசத்தில்  உள்ள தெரிவு செய்யப்பட்ட கஸ்டப்பிரதேசங்களாக இனங்காணப்பட்ட பதினொரு கிராமங்களில் இருந்து குறிப்பாக 15 கிலோமீற்றருக்கு அப்பால் இருந்து பாடசாலைக்கு சமூகமளிக்கும் வறிய மாணவர்கள் 30 பேருக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

விவசாயிகளின் வேண்டுகோளிற்கிணங்க வெட்டப்பட்டது முகத்துவாரம்

Friday, June 29, 2018

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மட்டக்களப்பு வாவியின் நீர் மட்டம் உயர்ந்ததால், கடந்த இரு வாரமாக  அதிகமான நெல் வயல்கள் நீரில் மூழ்கிக்கிடந்தன. இதனால் கவலையடைந்த விவசாயிகள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களை தொடர்பு கொண்டு வாவி கடலோடு சங்கமிக்கும் முகத்துவாரத்தினை திறந்து வாவியின் நீர் மட்டத்தை குறைப்பதன் மூலம் தமது நெல் வயல்களை காப்பாற்றுமாறு கேட்டிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்அவர்கள் உரிய அதிகாரிகளை மாவட்ட செயலாளருக்கும் அறிவித்ததோடு,அவர்களையும் மீனவர்கள்,விவசாய பிரதிநிதிகளையும் அழைத்துக்கொண்டு பல தடவைகள் சென்று முகத்துவாரத்தை வெட்டித்திறப்பதற்கான சாத்தியம்  தொடர்பாக ஆராய்ந்தார். எனினும் கடல் நீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டமையினால் இது சாத்தியப்படவில்லை
எனினும் இன்று கடல் நீர் மட்டம், வாவிநீர் மட்டத்தை விட தாழ்ந்து காணப்பட்டமையினால்மேலதிக அரசாங்க அதிபர்,வீதி  அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள்,மாநகர சபை மேயர் ,பிரதேச செயலாளர்,மீனவ பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளின் முன்னிலையில் இயந்திர உபகரணங்களின் உதவியோடு முகத்துவாரம் வெட்டி திறக்கப்பட்டு வாவி நீர் கடலினுள் ஓட வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
அவ்விடத்திற்கு பிரதி அமைச்சர் செய்யத் அலிசாகீர் மௌலானா அவர்களும் வருகை தந்திருந்தார்.பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் தொடர்ச்சியான முயற்சியினால் முகத்துவாரம் வெட்டப்பட்டமையினால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகளும்,மீனவ பிரதிநிதிகளும் குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் கேள்வியுற்று ப சம்பவ இடத்திற்கு தேடி வந்து பிரதியமைச்சர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது-
ஏறாவூர் பற்று பிரதேசத்தில் உள்ள பங்குடாளெி ,செங்கலடி நேரக்குடா, நைனா வெளி களித்தீவு, வெள்ளக்குடா, இலுப்படிச்சேனை , களித்தீவு , உட்பட பல பிரதேசங்களில் விவசாயிகளின் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய காணிகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

சபரகமுவவில் விரைவில் 900 பேருக்கு ஆசிரியர் நியமனம் : ஓய்வு பெற்றவர்களும் இணைக்கப்படலாம்


சபரகமுவ மாகாண பாடசாலைகளுக்காக புதிதாக 900 ஆசிரியர்கள் எதிர்வரும் ஜுலை மாதம் இறுதியில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

எம்பிலிப்பிட்டிய கல்வி வலய அதிபர்களின் கூட்டத்தில கலந்து கொண்ட சப்ரகமுவ ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்க இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் மாகாணத்தில் இரத்தினபுரி கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள சிங்கள மற்றும் தமிழ் ஆசிரியர் வெற்றிடங்களை கருத்திற் கொண்டு டிப்னோமா மற்றும் பட்டதாரிகள் 900 பேர் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

இதேவேளை தமிழ் மொழி மூலம் தகைமையுடைய ஆசிரியர்கள் இல்லாத பட்சத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களையும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் சப்ரகமுவ ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார்.கூறினார். -(3)
READ MORE | comments

மாணவி றெஜினாவின் படுகொலைக்கு நீதி கோரி சுழிபுரத்தில் இன்றும் போராட்டம்


மாணவி றெஜினாவின் படுகொலைக்கு நீதி கோரி சுழிபுரத்தில் இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.சுழிபுரம் சந்தியில் கொட்டகை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இன்று காலை சங்கானை பிரதேச செயலகம் நோக்கி பேரணியை முன்னெடுத்தனர்.
சுழிபுரத்தில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்துக்கு பொது அமைப்புக்களும் சங்கங்களும் ஆதரவைத் தெரிவித்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.சுழிபுரரத்திலிருந்து சங்கானை பிரதேச செயலகம் வரை பேரணியாகச் சென்று பிரதேச செயலரிடம் மனு ஒன்றையும் மக்கள் கையளித்தனர்.(15)
READ MORE | comments

சமையில் எரிவாயு விலையைக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது


கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய வாழ்க்கைச் செலவினக் குழு இந்தத் தீர்மானத்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சர்களான மலிக்க சமரவிக்கிரம, றிஷாத் பதியுதீன், விஜித் விஜயமுனி சொய்ஸா ஆகியோரின் பங்கேற்புடன் இந்தக் குழு கூடியது. உலக சந்தையில் அமுலில் உள்ள விலைக்கு அமைவாக உள்ளுர் சந்தையிலும் சமையல் எரிவாயு விலை நிர்ணயிக்கப்படவுள்ளது.

இதற்கு அமைவாகவே சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வாழ்க்கை செலவினக் குழு தீர்மானித்ததாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பணிப்பாளர் இந்திக்கா ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சில நாட்களில் நுகர்வோர் அதிகார சபை சமையல் எரிவாயு விலையை அறிவிக்கவுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இதன் விலை 245 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)
READ MORE | comments

சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் “கூத்து” ஓவிய கண்காட்சி

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு கல்லடி,சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் கட்புலத்துறை விரிவுரையாளர் ஹோகுலரமணனின் கூத்து ஓவியக்கண்காட்சி இன்று நடைபெற்றது.

விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் கலைக்கூடத்தில் இந்த கண்காட்சி இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.

தமிழர்களின் கலைகளுக்குள் அலங்காரக்கலையின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தனித்துவத்தினை வெளிப்படுத்தும் கூத்துக்கலையின் பரிமாணத்தினை பல்வேறு வகையில் இந்த கண்காட்சியின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி திறப்பு விழாவில் பேராசிரியர் சி.மௌனகுரு பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளருமான கலாநிதி கே.பிரேம்குமார், விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறை விரிவுரையாளர் திருமதி பிரியதர்சினி உட்பட மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த கண்காட்சியை எதிர்வரும் முதலாம் திகதிவரையில் காலை முதல் மாலை வரை பார்வையிடமுடியும்.






























READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |