செ.துஜியந்தன்
பாண்டிருப்பு ஸ்ரீ பெரியதம்பிரான் ஆலயத்தில் எண்ணைக் காப்பு சாத்தும் வைபவம்
பாண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீ பெரியதம்பிரான் அலயத்தின் புனராவர்த்தன குண்டபசஷ அஷ்டபந்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் நாளை ஞாயிற்றுக்கிழமை முதலாம் திகதி நடைபெறவுள்ளது.
ஆலய பூர்வாங்க கிரியாரம்பம் கடந்த 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது பாண்டிருப்ப ஸ்ரீ பெரியதம்பிரான் அலயத்தின் புனரமைப்பு பணிகள் கடந்த பல வருடங்களாக நடைபெற்றுவந்தன. தற்போது ஆலயம் புதுப்பொழிவுடன் காட்சியளிக்கின்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் 10.30 மணிவரையுள்ள முகூர்த்த நாளில் பெரியதம்பிரானுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இன்று சனிக்கிழமை சுவாமிக்கு பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து பத்து தினங்கள் மண்டலாபிஷேகம் விசேட பூசை நடைபெற்று எரிவரும் 11 ஆம் திகதி புதன்கிழமை பாற்குடபவனியும், சங்காபிஷேகமும் நடைபெறும் இவ் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு ஆகஸ்ட் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: