மட்டக்களப்பில் தமிழ் – முஸ்லிம் இன முரண்பாடுகள் வன்முறையாக உருவாகும் ஆபத்து

Tuesday, October 31, 2017

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லீம் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை வன்முறை இன்றி உயிர் ஆபத்துக்கள் ஏற்படாத வகையில் கையாளவேண்டியது இரு இனங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள் , மத தலைவர்களின் தலையாய கடமையாக உள்ளது.குறித்த சந்தர்ப்பத்தை சிலர் தங்களது அரசியலுக்கும் இன்னும் சிலர் பெரும்பான்மை இன அரசியல் தலைமைகளிடம் சிறுபான்மை இன அரசியல் தலைவர்கள் மண்டியிட வேண்டும் என்பதற்காகவும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லீம் இன வன்முறையை உருவாக்க இளைஞர்களி உணர்வுகளை பயன்படுத்த திரைமறைவில் முயற்சிகள் நடக்கின்றன.
தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை வன்முறைகள் ஏற்படாது உயிர் உடைமைகளுக்கு பங்கம் வராமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொலீசாருக்கும் ஏனைய அமைப்புகளுக்கும் உண்டு.
இதேவேளை குறித்த அசாதாரண சூழ்நிலை உருவாகுவதற்கு தமிழ் மக்கள் பக்கம் உள்ள நியாயமா காரணிகளையும் முஸ்லிம்கள் பக்கம் உள்ள நியாயமான காரணிகளையும் கண்டறிந்து பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
குறிப்பாக கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லீம் மக்களின் காணி பிணக்குகள் உள்ளிட்ட பல விடயங்களுக்கு விசேட மத்தியஸ்த சபைகள் உருவாக்கப்பட்டு தீர்வுகள் காணப்பட வேண்டும்.
அத்துடன் பிணக்குடன் சம்பந்தப்பட்ட இரு பிரிவினரும் ஒரேமேசையில் அமர்ந்து பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
தற்போது ஏற்பட்டுள்ள இன முரண்பாடுகள் நேற்று உருவானதல்ல 2009 ற்கு பின்னர் உருவானது.
கிழக்கு மாகாணத்தில் யுத்தத்திற்கு பின்னரான போக்கு தமிழ் மக்களை அடிமைகளாக உணர வைத்துள்ளது.
அதிகாரமற்ற அரசியல் ஆளுமை அற்ற தலைமைகள், பாரபட்சமான அபிவிருத்தி, வேலை வாய்ப்பில் புறக்கணிப்பு, காணி அபகரிப்பு, ஒரு இனத்திற்கு சார்பான அரச நிர்வாக கொள்கை, தமிழ் மக்களின் அனைத்து நிர்வாகங்களின் மீதான ஆக்கிரமிப்பு என தமிழ் சமூகத்தின் மீதான அத்துமீறல்கள் இன்று இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒப்பீட்டளவில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் மிகவும் முஸ்லிம் சமூகத்தை விட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
அரசியல் அதிகாரங்கள் உட்பட அரச நிர்வாகம் வரை முஸ்லிம் தலைமைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் முஸ்லிம்களுக்கான முதலமைச்சராகவே செயல்பட்டுள்ளார். தமிழ் அரசியல் தலைமைகள் தட்டி கேட்க முடியாத கையாலாகாத் தலைவர்களாக உள்ளனர்.
முஸ்லிம் சமூகத்திற்கு உள்ள காணி பிரச்சினை மற்றும் முஸ்லிம்கள் தங்களது பிரதேசத்தை தனி இஸ்லாமிய பிரதேசமாக வைத்துக் கொண்டு தமிழர்களின் பிரதேசத்தில் காணிகளை கொள்வனவு செய்வது வியாபார நிலையங்களை கொள்வனவு செய்வது காணி அபகரிப்பில் ஈடுபடுவது போன்ற விடயங்கள் தமிழ் சமூகம் முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இல்லாது செய்துள்ளது.
இவற்றுக்கெல்லாம் நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டிய தமிழ் அரசியல் வாதிகள் கை கட்டி வேடிக்கை பார்ப்பது இளைஞர் மத்தியில் ஒரு வித ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு கிழக்கில் அநீதி நடப்பதாக இளைஞர்கள் உணர்கிறார்கள்.இதன் வெளிப்பாடுகள் இன்று சமூக வலைத்தளங்களில் பிரதிபலிப்பதுடன் யார் யாரையெல்லாம் இன வாதிகள் என்று ஆர்ப்பாட்டம் செய்தார்களோ அவர்களை தேடி சென்று அவர்களது இனவாதத்தை இன்று ஆயுதமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
கிழக்கில் நடப்பது அதிகார மோதலோ அல்லது ஆட்சி அமைப்பதற்கான சண்டையோ அல்ல இது இரண்டு இனத்தின் இருப்புக்கான போராட்டம்.
இதில் கடந்த 60 ஆண்டுகாலமாக சிங்கள அரசுடன் போராடி இருப்பதை எல்லாம் இழந்த தமிழ் சமூகம் இன்று முஸ்லிம் சமூகத்திடம் போராடி இருப்பதையும் இழப்பதாக உணர்கின்றனர்.
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இயலாமை இளைஞர்களையும் மாற்று சக்திகளையும் களத்தில் இறங்க தூண்டியுள்ளது.
இது ஒரு சாதாரண விடயமல்ல இலங்கையில் இரத்த ஆறு ஓட வேண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெடிக்க வேண்டும் என்று செயற்படும் வெளி சக்திகள் கிழக்கில் உள்ள இந்த கொந்தளிப்பான சூழ்நிலையை பயன்படுத்த முயற்சிக்கின்றார்கள்.
எனவே இது குறித்து தமிழ் முஸ்லிம் தலைமைகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக தமிழ் சமூகத்தின் நியாயமான யதார்த்தமான எண்ணங்களுக்கு, கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து தமிழ் மக்கள் மீது திணிக்கப்படும் காணி அபகரிப்பு மற்றும் இஸ்லாமிய வாத சிந்தனைகளை கைவிட்டு கிழக்கில் இரண்டு சமூகங்களும் சமத்துவத்துடன் வாழும் சூழலை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
READ MORE | comments

ஆப்கான் குண்டு வெடிப்பில் 15 பேர் பலி

ஆப்கான் தலைநகர் காபுலில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.சம்பவத்தை நேரில் பார்த்த ரொய்ட்டர் செய்திச்சேவையின் செய்தியாளரும் அதிகாரிகளும் இதனை உறுதிசெய்துள்ளனர்
காபுலின் வாசிர் அக்பர் கான் பகுதியில் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ள எட்டுபேரின் உடல்களை பார்க்கமுடிந்துள்ளதாக ரொய்ட்டர் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பலர் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
இதேவேளை 14 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 15ற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.தற்கொலை குண்டு தாக்குதலே இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
READ MORE | comments

கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான வர்த்தமானி 2ஆம் திகதி

2015 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் பிரகாரம் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இந்த வார இறுதியில் வெளியிடப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
27 கற்கை நெறிகளுக்காக இம்முறை 4745 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பங்களை எதிர்வரும் 24ஆம் திகதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்
READ MORE | comments

வவுனியா பள்ளிவாசல் முன்பாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடைகளை அகற்ற கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்: பதற்ற நிலை

வவுனியா பள்ளிவாசல் முன்பாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட வேண்டும் என தெரிவித்து இளைஞர்கள் இன்று (31) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிவாசல் முன்பாக திரண்ட இளைஞர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டிடங்களையும் அடையாளம் காட்டினர். குறித்த கட்டடங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாக தகவல் திரட்டப்பட்டுள்ளதாகவும் அவை சட்டவிரோதமானதாக அமைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதுடன், அரசியல் செல்வாக்கு காரணமாகவே அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குறித்த இளைஞர்கள் தெரிவித்தனர்.
இச் சட்டவிரோத கடைகள் மக்கள் போக்குவரத்து செய்வதற்கு இடைஞ்சலாக இருப்பதாகவும், இதனால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதன்போது குறித்த பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் முன்பாக இஸலாமிய இளைஞர்களும் ஒன்று கூடியமையால் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதியில் பதற்ற நிலமை காணப்பட்டதால் காலை முதல் மதியம் வரை பாதுகாப்புக்காக பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். இக்கவனயீர்ப்பு போராட்டம் குறித்து அப்பகுதியில் உள்ள வவுனியா பள்ளிவாசல் நிர்வாகம் கருத்து தெரிவிக்கையில்,
குறிப்பிட்ட போராட்டமானது வவுனியா பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் அமைந்துள்ள கடைகளை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளமையானது மன வேதனைக்கான விடயமாக இருக்கிறது. கடந்த காலத்தில் வவுனியாவில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான நிலத்தில் பல கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து கட்டிடங்களும் அகற்றப்பட வேண்டும். அப்போது நாங்களே முன்நின்று இந்த கடைகளை அகற்றி தருவோம் என்பதுடன், 1995 ஆம் ஆண்டு நகரசபையின் நகரபிதா ஜி.ரி.லிங்கநாதன் 14 கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்ததுடன், வவுனியாவில் பல இடங்கள், குளங்கள் என்பன ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை தடுக்காது குறித்த ஒரு இனத்தினுடைய கடைகளை மட்டும் அகற்ற முனைவது தான் வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா நகரசபையின் செயலாளர் ஆர்.தயாபரன் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த ஆக்கிரமிப்பு கடைகளில் 14 கடைகளுக்கு முன்னைய நகரசபையின் நகரபிதா ஜி.ரி. லிங்கநாதன் அவர்களால் 1995 ஆண்டு அனுமதி வழங்கியுள்ளார். அத்துடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான நிலத்திலேயே இக்கடைகள் அமைந்துள்ளது. இப்பிச்சனைக்கு நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் வவுனியா நகரசபைக்கு இல்லை என்பதுடன், இப்பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே நகர அபிவிரத்தி அதிகார சபைக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

IMG_1767IMG_1770
IMG_1755IMG_1777

READ MORE | comments

இன்றிரவு 8 மணிவரை விவாதம்

நாடாளுமன்றத்துக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள, புதிய அரசமைப்புக்கான, அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதம், சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்றுக்காலை 10:30க்கு ஆரம்பமானது.
இன்றைய விவாதத்தை இன்றிரவு 8 மணிவரை நடத்துவதற்கு சபை அங்கிகாரமளித்தது.
READ MORE | comments

15 வயது சிறுவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பெண்ணுக்கு 21 வருட சிறை : அனுராதபுரத்தில் தீர்ப்பு

தனது உறவினரான 15 சிறுவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக 48 வயது பெண்னொருவருக்கு 21 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து அநுராதபுரம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிறுவனின் சித்தியான குறித்த பெண் அந்த சிறுவனை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு குறித்த பெண்ணுக்கு எதிராக 3 குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணையில் அந்த பெண் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு குற்றத்திற்கு 7 வருடங்கள்படி, மூன்று குற்றங்களுக்கு 21 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று குற்றங்களுக்கும் தனி தனியாக 500 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதனை செலுத்தாவிடின் மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர் கெகிராவ – மரதன்கடவல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான பெண்ணாவார்.
சிறுவன் ஒருவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்திற்கு பெண்ணொருவருக்கு 21 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை, இலங்கை வரலாற்றில் இதுவே முதன் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

குளிர்பானத்தில் சீனியின் அளவு அதிகரித்தால் வரி

இனிப்பு பானங்களில் காணப்படும் சீனியின் அளவுக்கு ஏற்றால் போன்று குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து வரிகளை அறவிடுவதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக சுகதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு அமைவாக 6 கிராமுக்கும் அதிகமான அளவு சீனியை கொண்டுள்ள குளிர்பான வகைகளுக்கு மேலதிகமாக காணப்படும் ஒவ்வொரு கிராம் சீனிக்கும் ஒரு ரூபா என்ற ரீதியில் வரி அறவிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் 70 வீதமான உயிரிழப்புகள் தொற்றா நோயினாலேயே ஏற்படுகின்றன. இதில் நீரிழிவு நோய் பிரதானமானது இதனால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
READ MORE | comments

மட்டக்களப்பு மகிழுரைச் சேர்ந்த கிராம சேவையாளர் மரணத்தில் சந்தேகம் சடலம் தோண்டியெடுப்பு

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடமையாற்றிவந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த கிராம உத்தியோகத்தரின் சடலம் இன்று நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.மட்டக்களப்பு மகிழுரைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தரான சோமசுந்தரம் விக்னேஸ்வரனின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகள் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், கடந்த 28-10-2017 திகதி மரணமடைந்தவரின் உறவினர்களினால் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஆட்சேபனை மனு தாக்கல் செய்ததனை தொடர்ந்து களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வான் அவர்களினால் குறித்த சடலத்தினை தோண்டி எடுத்து விசேட பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பிவைக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
குறித்த நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக இன்று (31) நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வான் முன்னிலையில் எருவில் மயானத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு களுவாஞ்சிகுடி பொலிசார் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
2016ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர் மகிழுர்முனையில் உள்ள குறுக்கு வீதியில் மின்சார தூண் ஒன்றில் மோதிய நிலையில்சடலமாக மீட்க்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
DSC07795DSC07881DSC07893DSC07916
READ MORE | comments

பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பக் கல்விப் பிரிவு நடாத்திய சிறுவர் விளையாட்டு விழா

2017 ஆம் ஆண்டிற்கான சிறுவர் விளையாட்டு விழா மட்/ பட்/ பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் ஆரம்பக் கல்விப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன் தலைமையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. 
இவ் விழாவில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். அத்துடன் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ,கல்வி அபிவிருத்தி செல்வி கே.ஜெயந்திமாலா, மன்முனை தென் எருவில் பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.வி.திரவியராசா, உதவிக் கல்விப் பணிப்பாளர் க.குணசேகரம், சேவைக்கால ஆசிரிய ஆலோசகரான திருமதி,ர.நவரெட்ணராசா, திருமதி.த.சபாரெத்தினம், திருமதி.கி.ஜீவநாதன், திரு.கா.ஜெயமோகன், ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் திரு. சீ.விசுவலிங்கம், ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இவ் விழாவினை பட்டிருப்பு கல்வி வலய சிறுவர் விளையாட்டுக்கு பொறுப்பான வளவாளர் திரு.அ.ஜெயப்பிரதாபன் ஒழுங்கமைத்திருந்தார்
இவ்விழாவில் 33 பாடசாலைகளிலிருந்து சுமார் 900 மாணவர்கள் சிறுவர் விளையாட்டு விழாவில் பங்கேற்று தங்களது திறமைகளைக் காட்டி நின்றனர். மாணவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் பின்வரும் பாடசாலைகள் முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலைகளைப் பெற்றுக் கொண்டனர்.
தரம் 3 இற்கான போட்டியில்
முதலாம் இடம்: மட்/ பட்/ மண்டூர் 37 நவகிரி வித்தியாலயம்,
இரண்டாம் இடம்;: மட்/ பட்/ களுமுந்தன்வெளி அ.த.க.பாடசாலை
இரண்டாம் இடம்: மட்/ பட்/ பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம்
தரம் 4  இற்கான போட்டியில்
முதலாம் இடம்: மட்/ பட்/ மண்டூர் 37 நவகிரி வித்தியாலயம்,
இரண்டாம் இடம்;: மட்/ பட்/ களுதாவளை புலவர்மணி பெரியதம்பிபிள்ளை வித்தியாலயம்
மூன்றாம்; இடம்: மட்/ பட்/ பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம்
தரம் 5  இற்கான போட்டியில்
முதலாம் இடம்: மட்/ பட்/ பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம்
இரண்டாம் இடம்;: மட்/ பட்/ களுதாவளை புலவர்மணி பெரியதம்பிபிள்ளை வித்தியாலயம்
மூன்றாம்; இடம்: மட்/ பட்/ திருப்பழுகாமம் விபுலாநந்தா வித்தியாலயம்

















READ MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த கே.அருட்பிரகாசம் அவர்கள் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளராக நியமனம்

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக பரிபாலனத்தின் கீழுள்ள மண்முனை வடக்கு கோட்டத்திற்கான கோட்டக்கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் தெரிவித்தார். 2017. 10.25 திகதி முதல் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளாராக கடமையாற்றும்படி  கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் H.E.M.W.G.திசாநாயக்க அவர்களினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தனது கடமையை 30.10.2017 திகதியன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளாராக இருந்த ஏ.சுகுமாரன் கடந்த 4.8.2017 திகதியன்று கல்விச்சேவையிலிருந்தும், கோட்டக்கல்விப்பாளர் பதவியிலிருந்தும் ஓய்வு பெற்றதையடுத்து சுமார் இரண்டுமாதமாக இவ் வெற்றிடம் நிலவியது. இதனைத் தொடர்ந்து மண்முனை வடக்கு கோட்டத்திற்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் நியமிக்கப்படாத காரணத்தால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இதனை துரிதகவனம் எடுத்து நேர்முகத் தேர்வை நடாத்தி கோட்டக்கல்விப்பணிப்பாளராக அதிபர் சேவைத்தரம் 1ச்சேர்ந்தவரும், மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் அதிபருமான  கே.அருட்பிரகாசம் அவர்கள்  நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு குருக்கள்மடத்தை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு நகரத்தை வசிப்பிடமாக கொண்ட கே.அருட்பிரகாசம் அவர்கள் 1978.11.7 திகதி ஆசிரியசேவையில் நியமனம் பெற்று வவுனியா கோமரசன்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் ஆசிரியராக முதன்முதலில் கடமையாற்றினார். அதன்பின்பு கல்வியமைச்சின் அதிபர்சேவைப் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து 1991 முதல் 2017.10.25 வரையும் அதிபராக பல பாடசாலைகளிலும், இறுதியாக மட்டக்களப்பு இந்துக் கல்லூரியிலும் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் ஆசிரியராக, தொலைக்கல்வி ஆசிரியப் பயிற்ச்சிநெறி போதனாசிரியராகவும், குருக்கள்மடம் ஸ்ரீமுருகன் ஆலய பரிபாலன சபைச்செயலாளராகவும் இருந்து பல கல்விப்பணி, சமூக சமய கலாச்சார பண்பாட்டுப் சேவைகளை சமூகத்திற்கும், மற்றவர்களின் எண்ணத்திற்கும் ஏற்றாற்போல் செய்துகாட்டிய செயல்வீரர் ஆவார்.

அதிபர் என்ற கர்வமில்லாமலும், தன்னலம் கருதாமலும், பிறர்நலன் கருதியும், அலுவலகத்திறன், முகாமைத்துவம்,நேரமுகாமைத்துவத்தைப் பின்பற்றி பாடசாலைகளிலும்,ஆலயங்களிலும் நல்ல பலவிடயங்களை செய்து தான் செய்த வேலைகளில் வெற்றிகண்டவர்.சக அதிபர்களுடனும், ஆசிரியர்களுடனும் அன்பாகவும், ஒழுக்கமாகவும் பழகும் மதிநுட்பமிக்க அதிபராவார். இந்துக்கல்லூரியில் அதிபராக இருந்த காலத்தில்தான் க.பொ. உயர்தர மாணவர்களின் நன்மை கருதி தொழிநுட்ப பிரிவை ஆரம்பித்து வைத்தவர் ஆவார்.
READ MORE | comments

வடக்கு, கிழக்குக்குக் காணியுரிமை வழங்கப்படாது! - லக்ஸ்மன் கிரியெல்ல

வடக்கு, கிழக்குக்குக் காணியுரிமை வழங்கப்படாது என சபை முதல்வரும் அமைச்சருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல, தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடைக்கால அறிக்கை குறித்த விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“வரலாற்றில் இரண்டு சந்தர்ப்பங்களில், இலங்கையில் அரசமைப்புகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ் கட்சிகளும் தமிழ் மக்களும் பங்கேற்றிருக்கவில்லை. முதல் தடவையாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து சட்டவாக்கத்தை மேற்கொள்ள முனைந்துள்ளோம். இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது.
இந்த நாட்டில் மொழிப் பிரச்சினையே தனிநாட்டுக் கோரிக்கை வரை சென்றது. இந்தத் தவறை திருத்திக்கொள்ள இரண்டு தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. இலங்கையில் 30 சதவீதம் தமிழ் பேசும் மக்களும் 70 சதவீதம் சிங்கள மக்களும் வாழ்கின்றனர். தேசியப் பிரச்சினைகளை தீர்த்து முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். இடைக்கால அறிக்கை ஓர் இறுதிப்படுத்தப்பட்ட அரசமைப்பு அல்ல. சில ஊடகங்கள் இதனை இறுதிப்படுத்தப்பட்ட அறிக்கையாகச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த தருணத்தில் 13ஆவது திருத்தச்சட்டத்தை தாண்டி அதிகாரப் பகிர்வை வழங்குவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு வாக்குறுதியளித்திருந்தார். இந்தியாவை எதிர்த்து யுத்தத்தை கொண்டு செல்ல முடியாது என்பதன் அடிப்படையிலேயே மஹிந்த இவ்வாறு வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், இன்று அவர் புதிய அரசமைப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகிறார்.
வரலாற்றில் இரண்டு கட்சிகளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேசிய பிரச்சினைக்கான தீர்வை எதிர்த்தே வந்தன. அதனை நாங்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொள்கின்றோம். தற்போது அனைவரும் ஒரே மேசையில் அமர்ந்து தீர்வுகாணும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. புதிய அரசமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை அவ்வாறே பேணப்படும். நாமும் பௌத்தர்கள்தான். பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை நாங்கள் ஒருபோதும் நீக்க மாட்டோம். அரசமைப்பு நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படும். ஒற்றையாட்சியின் கீழ் ஒருமித்த பிளவுப்படாத நாட்டுக்குள் அதிக பட்ச அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதே அரசின் நோக்கமாக உள்ளது.
மொழிப் பிரச்சினைக்கே தமிழர்கள் தீர்வைக் கோரியிருந்தனர். அதில் இருந்துதான் காலத்துக்கு காலம் இந்தப் பிரச்சினை தோற்றம் பெற்றது. தனிநாடு கோரிக்கை வரை தேசிய இனப்பிரச்சினை வலுப்பெற்றிருந்தது. தமிழர்கள் விடயத்தில் நாம் தவறிழைத்துள்ளோம். அதற்காக இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தீர்த்துக்கொள்ள வேண்டும். தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும் போதுதான் இலங்கையின் தனித்துவம் பாதுகாக்கப்படும். இன,மதங்களை கடந்து இலங்கையர்களின் தனித்துவத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
READ MORE | comments

இழுத்தடித்தால் மீண்டும் பொறியில் சிக்க நேரிடும்! - இலங்கைக்கு மேற்குலக இராஜதந்திரிகள் எச்சரிக்கை

புதிய அரசமைப்பை உருவாக்குவதிலும், தேர்தலை நடத்துவதிலும் இலங்கை அரசு தொடர்ந்தும் உறுதியற்ற போக்கைக் கடைப்பிடித்து இழுத்தடிப்புச் செய்தால், சர்வதேசத்தின் பொறிக்குள் மீண்டும் சிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று, கொழும்பிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகள், வெளிவிவகார அமைச்சுக்கு இராஜதந்திர மட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச களத்தில் நல்லாட்சி அரசுக்கு கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் முக்கிய பாத்திரத்தை வகித்த இராஜதந்திரிகளே இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருப்பதானது, அரசின் கொள்கை வகுப்பாளர்களையும், ஆலோசகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனநாயகத்தின் முக்கிய கருப்பொருளாக தேர்தலே கருதப்படுகின்றது. எனவே, அது உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் அது உரிமை மீறலாகவே பார்க்கப்படும். அத்துடன், ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் புதிய அரசமைப்பு கொண்டு வரப்படும் என்று நல்லாட்சி அரசு உறுதியளித்திருந்தது. பொறுப்புக்கூறலும் வெளிப்படுத்தப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவை ஒன்றும் இன்னும் நடைபெறவில்லை. அரசின் செயன்முறையானது அதே பாணியில் பயணிக்குமானால் மீண்டும் நெருக்கடிதான் ஏற்படும் என்று மேற்குலக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசானது, மேற்குலக நாடுகளுடன் சிறந்த நட்புறவை பேணவில்லை. இதனால், சர்வதேச மட்டத்தில் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது. சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் பெரும் தலையிடி கொடுத்தன. பொறுப்புக்கூறும் கடப்பாட்டை வெளிப்படுத்தல், தேர்தலை நடத்தல் உள்ளிட்ட விடயங்களில் அசமந்தப்போக்கைக் கடைப்பிடித்து வந்ததாலேயே மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிகாலத்தில் இலங்கைக்கு எதிராக ஜெனிவா கூட்டத்தொடரில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அத்துடன், சில நாடுகளும் பொருளாதார மட்டத்திலான தடைகளை விதிக்கத் தயாராகின. இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளும் மட்டுப்படுத்தப்பட்டன. ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும், பொறுப்புக்கூறுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கான தீர்வுப்பொதியாக புதிய அரசமைப்பு அமையும் என்றும் மைத்திரி, ரணில் தலைமையிலான தேசிய அரசு உறுதியளித்திருந்தது.
இதையடுத்து இலங்கை மீதான பிடியை சர்வதேசம் தளர்த்திக்கொண்டு நெகிழ்வுப்போக்கைக் கடைப்பிடித்தது. இலங்கை மீதான சில தடைகளும் நீக்கப்பட்டன. ஆனால், வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசு முன்னேற்றம் காட்டவில்லை. ஈராண்டுகள் கடந்தும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டுப் பிரமுகர்களும், ஐ.நா. அறிக்கையாளர்களும் இந்த விடயத்தைப் பகிரங்கமாகவே குறிப்பிட்டிருந்தனர். அத்துடன், புதிய அரசமைப்புக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இலங்கை அரசு இனியும் ஆமை வேகத்தில் பயணிக்குமானால் சர்வதேச நாடுகள் வழங்கிவரும் பொருளாதார, அரசியல் ரீதியான ஒத்துழைப்புகளை இழக்க நேரிடும் என்றும், நேரடி வெளிநாட்டு முதலீட்டிலும், சுற்றுலாத்துறையிலும் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தமக்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுகின்றது என்றும், வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சின் சார்பில் மேற்படி இராஜதந்திரிகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
READ MORE | comments

இலங்கை வருகிறார் அவுஸ்திரேலிய பிரதமர்

அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் ட்ரன்புல்,இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
எதிர்வரும் 2ஆம் திகதி அவர் இலங்கை வரவுள்ளார் என்று கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
READ MORE | comments

ஓமந்தையில் பால் பவுசஸருடன் மோதியது பஸ்! - 24 பேர் காயம்

ஏ-9 வீதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி வந்த பஸ், இன்று காலை 6.10 மணியளவில் ஒமந்தை பகுதியில் பால் பவுஸருடன் மோதி விபத்துக்குள்ளானதில், 24 பேர் காயமடைந்தனர். வவுனியா - இராசேந்திரகுளம் பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி வந்த பஸ், ஓமந்தை - பன்றிக்கெய்த குளம் பகுதியில் வைத்து, எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த பால் பவுஸருடன் மோதி, விபத்துக்குள்ளானது.
இதனால் பஸ்ஸில் பயணித்த 24 பேர் காயமடைந்து, வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பான விசாரணைகளை, ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இதேவேளை, கடந்த 5 நாட்களுக்கு முன்னர், ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி வந்த பஸ் ஒன்று தாண்டிக்குளத்தில் வைத்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் காயமடைந்நிருந்தனர்.
READ MORE | comments

யாழ். பல்கலைக்கழக சமூகம் இன்று தொடக்கம் காலவரையறையற்ற கதவடைப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும், குறித்த கைதிகளின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு கோரியும் யாழ். பல்கலைக்கழக சமூகம் இன்று தொடக்கம் காலவரையறையற்ற கதவடைப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.இன்று முதல் பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா செயற்பாடுகள் முற்றிலும் ஸ்தம்பிதமடையும் வகையில் பிரதான வளாகத்தின் அனைத்து வெளிப்புறக் கதவுகளும் இழுத்து மூடப்படவுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். குறித்த சந்திப்பின் போது இது தொடர்பாக ஆராய்ந்து சாதகமான தீர்வொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்தார். எனினும், அந்த வாக்குறுதியும் அவர் வழங்கிய காலவளவு கடந்து பல நாட்கள் கடந்துள்ள போதும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையிலேயே, ஒட்டுமொத்த யாழ்.பல்கலைக்கழக சமூகமும் ஒன்றிணைந்து நாளை கதவடைப்பு போராட்டத்தினை ஆரம்பிக்கத்தி ட்டமிட்டுள்ளது.(
READ MORE | comments

கருணாவை விடுதலை செய்தது நீதிமன்றம்

Monday, October 30, 2017

முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் பிரதியமைச்சராக இருந்த போது, அவரது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி குண்டுகள் துளைக்காத அரச வாகனத்தை மீளளிக்காமை தொடர்பான குற்றச்சாட்டில், கருணா அம்மான் கைதுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இன்று மீண்டும் குறித்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க பண்டார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, இந்த சந்தேகநபர் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளதிருக்குமாறு, சட்டமா அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தினர்.
இதற்கமைய, சந்தேகநபரை விடுவிக்குமாறும் அவர்கள், கோரினர் என, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதவான் லால் ரணசிங்க பண்டார, இந்த வழக்கில் இருந்து கருணா அம்மானை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
READ MORE | comments

யாழில் 5 பேர் நஞ்சருந்தி தற்கொலை!! : பணத்தை ஏமாற்றிவிட்டு சுவிஸ்லாந்துக்கு ஓடியவர்கள் இவர்கள்தான்!!

Sunday, October 29, 2017

கிருசாந்தனின் தந்தையான ரமணனும் கிருசாந்திடம் பணத்தை வாங்கி ஏமாற்றிய சிறி என்பவனது தந்தையும் தொழில் நண்பகள் எனவும் தெரியவருகின்றது.
கிருசாந்தனும் தொழில் ரீதியிலேயே தனது தந்தையின் நண்பனாக இருந்த மகனான சிநி நட்பாயிருந்தான் எனத் தெரியவருகின்றது.


கிருசாந்தின் 3 சகோதரிகள் என அயலவர்கள் தெரிவிக்கின்றார்கள். 3 சகோதரிகளும் திருமணம் முடித்தவர்கள் என்பதும் அவர்களில் இருவர் புலம்பெயர் நாட்டில் வாழ்கின்றார்கள் எனவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
கிருசாந்தின் மனைவி சுனேந்திரா சாவகச்சேரி சொந்த இடமாக் கொண்டவர். 

கிருசாந்தும் சுனேந்திராவும் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
11968-1-2347dc5d86006aee66d61f421a953589  யாழில் 5 பேர் நஞ்சருந்தி தற்கொலை!! : பணத்தை ஏமாற்றிவிட்டு சுவிஸ்லாந்துக்கு ஓடியவர்கள் இவர்கள்தான்!! 11968 1 2347dc5d86006aee66d61f421a953589
இவர்கள் இருவரும் அரியாலை மாம்பழம் சந்தியிலிருந்து அரியாலை செல்லும் வீதியில் ஒரு ஒழுங்கையில் இவர்கள் தனி வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.
இவர்கள் அப்பகுதியில் இருப்பவர்களுடன் எந்தவித முரண்பாடோ அல்லது தொடர்புகளோ இல்லாது அமைதியாக வாழ்ந்து வந்ததாக தெரியவருகின்றது. 

பிஞ்சுக் குழந்தைகளுடன் இவர்களைக் குடும்பமாக கருக்கியவர்கள் யார்…
நடந்தது என்ன?


கிருசாந்தின் போலி நண்பனான சிறி தனது தம்பியான சிவசங்கரை வெளிநாடு அனுப்புவதற்காக பணம் தேவைப்படுகின்றது. கடனாக பணம் யாரிடமாவது வாங்கித் தர முடியுமா? எனக் கேட்டுள்ளான்.
அதற்கு மறு்பபுத் தெரிவிக்காத கிருசாந்த தனது பணத்தையும் கொடுத்து வட்டிக்கு இன்னொருவனிடத்திலும் பணம் பெற்று பகுதி பகுதியாக ஒரு கோடி ரூபா அளவில் கொடுத்தாதாக தெரியவருகின்றது.
தனது நண்பன்தானே என நினைத்து பொறுப்பேதும் இல்லாமல் அவர்களிடம் இருந்து கொடுத்த கடனுக்காக காசோலை எழுதி வாங்கி விட்டு (சிறி பெயரில் பத்து லட்சம் காசோலையும் தம்பியார் சிவசங்கர் பெயரில் இன்னொரு காசோலையும்) குறித்த பணத்தை கிருசாந்த தனது நண்பனுக்கு கொடுத்துள்ளான்.
குறித்த பணத்தை பெற்ற சிவசங்கர் அந்தப் பணத்தில் தனது தம்பியை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு தானும் தலைமறைவாகியுள்ளான்.
சிறி தன்னை ஏமாற்றிவிட்டான் என அறிந்த கிருசாந் சிறியின் தம்பியான சிவங்கரின் வீட்டுக்குச் சென்று சிவசங்கரின் மனைவியிடம் இது தொடர்பாக வினாவிய போது சிவசங்கரின் மனைவி மிகக் கேவலமாக சிவசங்கரை ஏசியதாக தெரியவருகின்றது.
‘காசை தராவிட்டால் நாங்கள் தற்கொலை செய்வோம் என்று கூறியபோது “நீங்கள் செத்தால்தான் நிம்மதி” என சிவசங்கரின் மனைவி கிருசாந்திற்கு கூறியுள்ளாள்.
11968-3-2347dc5d86006aee66d61f421a953589  யாழில் 5 பேர் நஞ்சருந்தி தற்கொலை!! : பணத்தை ஏமாற்றிவிட்டு சுவிஸ்லாந்துக்கு ஓடியவர்கள் இவர்கள்தான்!! 11968 3 2347dc5d86006aee66d61f421a953589
இதனால் விரக்தியும் அதிர்ச்சியுமடைந்த கிருசாந் இது தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்க முற்பட்ட போது சிறியின் தம்பியாரின் பெயரிலேயே பெருமளவு பணம் வாங்கியதால் தம்பியார் சுவிஸ் ஓடித் தப்பிவிட்டதால் சரியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் சிவசங்கரிடம் கொடுத்த முழுமையான பணத்தையும் பெற முடியாது போய் விட்டது.
இதனால் சிவசங்கருக்காக வேறு நபரிடம் இருந்து பெற்ற பணத்தையும் அதற்கான வட்டியையும் கட்டுவதற்கு கிருசாந்தால் முடியாமல் போய் விட்டது. 

கிருசாந்துக்கு வட்டிக்கு பணம் கொடுத்தவர் அது தொடர்பாக கிருசாந்திற்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தெரியவருகின்றது.
இதனால் கிருசாந் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயன்றுள்ளர். இருப்பினும் அந்த முடிவை மாற்றி தனது நகைப்பட்டறையில் நகைகளை துாய்மையாக்கும் நச்சுப் பதார்த்ததை உண்டு கிருசாந் இரு மாதங்களுக்கு முன் தற்கொலை செய்துள்ளார்.
கிருசாந் தற்கொலை செய்ததால் கிருசாந்தின் காதல் மனைவி சுனேந்திரா பெரும் விரக்தி நிலையில் இருந்துள்ளார்.
அத்துடன் கிருசாந்தின் குழந்தைகளான பிஞ்சுகளும் அப்பா தொடர்பாக தாயை தொடர்ந்து கேள்விகள் கேட்டு வந்ததால் சுனேந்திராவும் தனது பிள்ளைகளுடன் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்து கணவன் அருந்திய அதே விசத்தை அருந்தி குழந்தைகளுடன் தற்கொலை செய்துள்ளார்.



குறித்த இளம் குடும்பத்தை பிஞ்சுகளுடன் கருக்கியுள்ளது கடன் வாங்கிய நம்பிக்கைத் துரோக நண்பனும் அவனது தம்பி குடும்பமும். தற்போது இவர்கள் சுவிஸ்லாந்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ்கின்றார்கள்.
சிறி மற்றும் அவனது தம்பி சிவசங்கர் மற்றும் சிவசங்கரின் மனைவி சுகன்யா ஆகியோர் செய்த துரோகத் தனம் எழுத்தில் வடிக்க முடியாத கொடூரச் செயலாகும்.
ஒரு குடும்பத்தை கருக்கிய இப் பாவிகளை கண்டால் தாங்கள் செய்த கொடூரச் செயல் என்ன என்பதை உணர்த்தும் வகையில் அவர்களுக்கு பொதுமக்கள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். 

தற்போது சிவசங்கர் சுவிசில் வாழ்ந்துவருகின்றார்.
அவன் தொடர்பாக தகவல்கள் அங்குள்ள தமிழர்கள் அறிந்தால் அவனுக்கு தான் செய்த கொடூரம் என்ன என்பதை உணர்த்தும் வகையில் நடவக்கை எடுக்க வேண்டும்.
இல்லாது போனால் சுவிசிலும் அவன் பலரை இவ்வாறு கொலை செய்யத் தயங்கமாட்டான். 

யாழ்ப்பாணம் உட்பட தற்போது வடக்கு கிழக்குப் பகுதிகளில் இவ்வாறான துரோகத்தனங்களும் ஏமாற்றும் செயற்பாடுகளும் ஏராளமாக நடந்தேறி வருகின்றது.
 11968-6-2347dc5d86006aee66d61f421a953589  யாழில் 5 பேர் நஞ்சருந்தி தற்கொலை!! : பணத்தை ஏமாற்றிவிட்டு சுவிஸ்லாந்துக்கு ஓடியவர்கள் இவர்கள்தான்!! 11968 6 2347dc5d86006aee66d61f421a95358911968-7-2347dc5d86006aee66d61f421a953589  யாழில் 5 பேர் நஞ்சருந்தி தற்கொலை!! : பணத்தை ஏமாற்றிவிட்டு சுவிஸ்லாந்துக்கு ஓடியவர்கள் இவர்கள்தான்!! 11968 7 2347dc5d86006aee66d61f421a953589

READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |