Home » » வவுனியா பள்ளிவாசல் முன்பாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடைகளை அகற்ற கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்: பதற்ற நிலை

வவுனியா பள்ளிவாசல் முன்பாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடைகளை அகற்ற கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்: பதற்ற நிலை

வவுனியா பள்ளிவாசல் முன்பாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட வேண்டும் என தெரிவித்து இளைஞர்கள் இன்று (31) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிவாசல் முன்பாக திரண்ட இளைஞர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டிடங்களையும் அடையாளம் காட்டினர். குறித்த கட்டடங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாக தகவல் திரட்டப்பட்டுள்ளதாகவும் அவை சட்டவிரோதமானதாக அமைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதுடன், அரசியல் செல்வாக்கு காரணமாகவே அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குறித்த இளைஞர்கள் தெரிவித்தனர்.
இச் சட்டவிரோத கடைகள் மக்கள் போக்குவரத்து செய்வதற்கு இடைஞ்சலாக இருப்பதாகவும், இதனால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதன்போது குறித்த பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் முன்பாக இஸலாமிய இளைஞர்களும் ஒன்று கூடியமையால் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதியில் பதற்ற நிலமை காணப்பட்டதால் காலை முதல் மதியம் வரை பாதுகாப்புக்காக பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். இக்கவனயீர்ப்பு போராட்டம் குறித்து அப்பகுதியில் உள்ள வவுனியா பள்ளிவாசல் நிர்வாகம் கருத்து தெரிவிக்கையில்,
குறிப்பிட்ட போராட்டமானது வவுனியா பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் அமைந்துள்ள கடைகளை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளமையானது மன வேதனைக்கான விடயமாக இருக்கிறது. கடந்த காலத்தில் வவுனியாவில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான நிலத்தில் பல கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து கட்டிடங்களும் அகற்றப்பட வேண்டும். அப்போது நாங்களே முன்நின்று இந்த கடைகளை அகற்றி தருவோம் என்பதுடன், 1995 ஆம் ஆண்டு நகரசபையின் நகரபிதா ஜி.ரி.லிங்கநாதன் 14 கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்ததுடன், வவுனியாவில் பல இடங்கள், குளங்கள் என்பன ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை தடுக்காது குறித்த ஒரு இனத்தினுடைய கடைகளை மட்டும் அகற்ற முனைவது தான் வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா நகரசபையின் செயலாளர் ஆர்.தயாபரன் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த ஆக்கிரமிப்பு கடைகளில் 14 கடைகளுக்கு முன்னைய நகரசபையின் நகரபிதா ஜி.ரி. லிங்கநாதன் அவர்களால் 1995 ஆண்டு அனுமதி வழங்கியுள்ளார். அத்துடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான நிலத்திலேயே இக்கடைகள் அமைந்துள்ளது. இப்பிச்சனைக்கு நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் வவுனியா நகரசபைக்கு இல்லை என்பதுடன், இப்பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே நகர அபிவிரத்தி அதிகார சபைக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

IMG_1767IMG_1770
IMG_1755IMG_1777

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |