அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும், குறித்த கைதிகளின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு கோரியும் யாழ். பல்கலைக்கழக சமூகம் இன்று தொடக்கம் காலவரையறையற்ற கதவடைப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.இன்று முதல் பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா செயற்பாடுகள் முற்றிலும் ஸ்தம்பிதமடையும் வகையில் பிரதான வளாகத்தின் அனைத்து வெளிப்புறக் கதவுகளும் இழுத்து மூடப்படவுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். குறித்த சந்திப்பின் போது இது தொடர்பாக ஆராய்ந்து சாதகமான தீர்வொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்தார். எனினும், அந்த வாக்குறுதியும் அவர் வழங்கிய காலவளவு கடந்து பல நாட்கள் கடந்துள்ள போதும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையிலேயே, ஒட்டுமொத்த யாழ்.பல்கலைக்கழக சமூகமும் ஒன்றிணைந்து நாளை கதவடைப்பு போராட்டத்தினை ஆரம்பிக்கத்தி ட்டமிட்டுள்ளது.(
0 Comments