Home » » கருணாவை விடுதலை செய்தது நீதிமன்றம்

கருணாவை விடுதலை செய்தது நீதிமன்றம்

முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் பிரதியமைச்சராக இருந்த போது, அவரது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி குண்டுகள் துளைக்காத அரச வாகனத்தை மீளளிக்காமை தொடர்பான குற்றச்சாட்டில், கருணா அம்மான் கைதுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இன்று மீண்டும் குறித்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க பண்டார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, இந்த சந்தேகநபர் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளதிருக்குமாறு, சட்டமா அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தினர்.
இதற்கமைய, சந்தேகநபரை விடுவிக்குமாறும் அவர்கள், கோரினர் என, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதவான் லால் ரணசிங்க பண்டார, இந்த வழக்கில் இருந்து கருணா அம்மானை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |