தனது உறவினரான 15 சிறுவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக 48 வயது பெண்னொருவருக்கு 21 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து அநுராதபுரம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிறுவனின் சித்தியான குறித்த பெண் அந்த சிறுவனை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு குறித்த பெண்ணுக்கு எதிராக 3 குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணையில் அந்த பெண் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு குற்றத்திற்கு 7 வருடங்கள்படி, மூன்று குற்றங்களுக்கு 21 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று குற்றங்களுக்கும் தனி தனியாக 500 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதனை செலுத்தாவிடின் மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர் கெகிராவ – மரதன்கடவல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான பெண்ணாவார்.
சிறுவன் ஒருவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்திற்கு பெண்ணொருவருக்கு 21 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை, இலங்கை வரலாற்றில் இதுவே முதன் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments