பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை )களுவாஞ்சிக்குடி யின் சிரேஸ்ட ஆசிரியரான எம்.ஐ.எம்.அஸ்ஹர் எதிர்வரும் 1.05.2021 அன்று தனது 60 வயதில் ஓய்வுபெறுகின்றார்.

Friday, April 30, 2021

 


சாய்ந்தமருது 17 , ஓய்வுபெற்ற அதிபர் மர்ஹும்  ஏ.ஸி.எம்.இப்றாஹிம் , மர்ஹுமா கதீஜா இப்றாஹீம் தம்பதிகளின் நான்காவது புதல்வரும்  பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை )களுவாஞ்சிக்குடி யின் சிரேஸ்ட ஆசிரியருமான  எம்.ஐ.எம்.அஸ்ஹர் எதிர்வரும் 1.05.2021 அன்று தனது 60 வயதில் ஓய்வுபெறுகின்றார்.


கல்வி கற்பித்தல்  புலத்தில் 35 வருடங்களை பூர்த்தி செய்துள்ள இவர் தனது ஆரம்பக் கல்வியை குருநாகல் மாவட்டத்திலுள்ள பக்மீகொல்ல அல் மினா மகா வித்தியாலயத்திலும் தரம் இரண்டு முதல் ஐந்து வரை சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்திலும்  , தரம் ஆறு முதல் உயர்தர உயிரியல் விஞ்ஞானப்பிரிவு வரை கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியிலும் சிறிது காலம் யாழ்ப்பாணம் வைத்தியேஸ்வரா கல்லூரியிலும் கல்வி கற்றார்.

1982 முதல்  1985 வரை மொரட்டுவ பல்கலைக் கழகத்திற்கு தேசிய டிப்ளோமா தொழில்நுட்பம் NDT (Agriculture Engineering) விவசாய பொறியியல் பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்டு  அம்பாறை ஹார்டி சிரேஸ்ட தொழில்நுட்பக் கல்லூரியில் ஆங்கில மொழி மூலமாக மூன்று வருட கற்கையை நிறைவு செய்திருந்தார்.
இவரது தந்தை சாய்ந்தமருது கடற்கரையோர பிரதேச மக்கள் கல்வியில் பிரகாசிக்க வேண்டும் என்ற நோக்கில் அந்த கால கட்டத்தில் அமைச்சராக இருந்த மர்ஹும் எம்.எஸ்.காரியப்பர் அவர்களின் ஆலோசனையின் பேரில் சாய்ந்தமருது 6 ஆம் பிரிவில்  (தற்போது 17 ஆம் பிரிவு) சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயம் என்ற பெயரில் ஒரு பாடசாலயை ஆரம்பித்து அதன் ஸ்தாபக அதிபராகவும் கடமையாற்றி இருந்தார்.தனது தந்தை வழியிலேயே தானும் கல்விப் புலத்திற்குள் நுழைய வேண்டும் என்ற ஆசையில் ஆசிரிய சேவையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஆசிரிய சேவையில் காலடி வைத்த இவர் 1985.12.26 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் உள்ள மல்வான அல் முபாரக் தேசியக் கல்லூரியில் (முஸ்லிம் ஆண் பெண் கலவன் பாடசாலை )முதல் நியமனத்தைப் பெற்று அங்கு உயர்தர விஞ்ஞானப் பிரிவை ஆரம்பித்து அதன் பகுதித் தலைவராக இருந்து மாணவர்களுக்கு தாவரவியல் பாடத்தை கற்பித்து கம்பஹா மாவட்டதிலிருந்தே மருத்துவம் , பொறியியல் , பல்மருத்துவம், விவசாயம், விஞ்ஞானத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல இவர் காரணமாக இருந்துள்ளார்.

10 வருடங்களாக மல்வான அல் முபாரக் தேசியக் கல்லூரியில் தாவரவியல் பாடத்தை கற்பித்த இவர் 1994 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் தான் கல்வி கற்ற கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரிக்கு (முஸ்லிம் ஆண்கள் பாடசாலை )இடமாற்றம் பெற்று வந்தார் அங்கு கடந்த 22 வருடங்களாக உயர்தர விஞ்ஞானப் பிரிவில் தாவரவியல் பாட ஆசானாகவும், கல்லூரியில் ஆங்கில பிரிவு bilingual ஆரம்பிக்கப்பட்ட போது அதன் முதல் பகுதித் தலைவராகவும், தரம் 6 முதல் தரம் 8 வரையுள் பகுதிகளுக்கு பகுதித் தலைவராகவும் , ஆசிரிய நூலகராகவும், அதிபர் காரியாலய நிர்வாக பொறுப்பாளராகவும், விளையாட்டுக் குழு செயலாளராகவும், சாய்ந்தமருது கோட்டப் பாடசாலைக்கான சுற்றாடல் ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
அஹ்ஸன் அக்தர் , அக்மல் சிபாக் , அஸ்பாக் அஹமட் , அல் அபான் ஆகிய நான்கு ஆண் பிள்ளைகளுக்கு தந்தையான இவர் சாய்ந்தமருதில் புகழ்பூத்த குடும்பத்தைச் சேர்ந்த யூசுப் றஸீதாவை துணைவியாக்கிக் கொண்டார்.

பல் துறையிலும் செயலாற்றக்கூடிய இவர் தமிழ் , ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் பாண்டித்துவம் பெற்றவராவார்.

இலங்கையில் வெளியாகும் தமிழ் , சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூல தேசிய பத்திரிகைகளுக்கு சிரேஸ்ட ஊடகவியலாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.தனது உயர்ச்சில் பெரும் பங்கு வகிக்கும் தனக்கு அறிவூட்டிய தமிழ் ஆசிரியர்களை கெளரவிக்கும் வகையில் அவர்களிடம் கற்ற கல்வியை அதே சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் 
2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை )களுவாஞ்சிக்குடி க்கு தானாக விரும்பி இடமாற்றம் பெற்றுவந்த இவர் 3
1.5.2021 முதல் ஓய்வு பெற்று செல்கின்றார்.
கல்வித்துறையில் மட்டுமல்ல விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்கிய இவர் 1980 ஆம் ஆண்டு சாய்ந்தமருது பிரதேசத்தின் முதிசங்களான பிரேவ் லீடர்ஸ் விளையாட்டு கழகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக இருந்து அக் கழகத்தின் செயலாளராகவும் 2000 ஆம் ஆண்டு முதல் அதன் தலைவராகவும் இருந்து வந்துள்ளதுடன் சாய்ந்தமருது தாமரை விளையாட்டு மைதானம் உருவாவதற்கம் காரணகர்த்தாவாகவும் திகழ்ந்துள்ளார்.
கலைப் பணியினை தொடர கல்முனை கலை இலக்கிய பொதுப்பணி மன்றம்  , சமூகம் பணியினை தொடர கிழக்கு நட்புறவு ஒன்றியம் ஆகியவற்றிலும் இணைந்து செயற்பட்டு வருகின்றார்.
தாவரங்களோடு மிகவும் பற்றுள்ள இவர் தனது வீட்டுத் தோட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இன பல்லின தாவரங்களை பராமரித்து வருவதுடன் வீட்டுச் சூழலையும் அழகாக வைத்துள்ளார். சூழலுக்கு உரத்து பிடிக்காத மரங்களை வளர்த்து அதனை பயன்பெறும் மரங்களாக மாற்றிய பெருமையும் இவரையே சாரும்.

READ MORE | comments

திரு.நாராயணப்பிள்ளை நாகேந்திரன் இலங்கை அதிபர் சேவை வகுப்பு - 1 இற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.


எம்.ஐ.எம்.அஸ்ஹர்


பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடியில் பிரதி அதிபராக கடமையாற்றும் விசேட பயிற்றப்பட்ட விவசாய ஆசிரியரான திரு.நாராயணப்பிள்ளை நாகேந்திரன் இலங்கை அதிபர் சேவை வகுப்பு - 1 இற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவர் கலைமாமணி, இந்து தர்மாசிரியர் , பட்டப்பின் கல்வி டிப்ளோமா , பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா , கல்வி முகாமைத்துவ டிப்ளோமா , முன் பள்ளி டிப்ளோமா போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார்.
பல ஆண்டுகளாக உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு அளவையியலும் விஞ்ஞான முறையும் பாடத்தை கற்பித்து பல மாணவர்களை பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பி மாணவர்கள் மத்தியில் தளராத நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக கல்வியமைச்சின் கல்வி வெளியீட்டு திணைக்களத்தால் 2008, 2010 , 2015 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய பாட நூலாக்கப்பணியில் எழுத்தாளராகவும் , பதிப்பாசிரியருமாக பங்காற்றியுள்ளதுடன் தேசிய கல்வி நிறுவகத்தின் பிராந்திய நிலையங்களில் நடத்திவரும் கல்விமாணி சட்டக் கற்கை நெறியின் பகுதி நேர விரிவுரையாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.
பல கல்வி , கலைசார் , சிறுவர் ஆக்கங்களை நூல்களாக வெளியீடு செய்துள்ள இவர் கல்வியமைச்சு , கலாச்சார அலுவல்கள் அமைச்சு , தேசிய மொழிகள் ஒருமைப்பாட்டு அமைச்சு , ஜனாதிபதி செயலகம் , லேக்ஹவுஸ்   போன்றவற்றால் நடாத்தப்பட்ட கட்டுரை ,பாடலாக்கம் , கவிதை , சிறுவர் கதைகள் என பல போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்று விருதுகளையும் , பணப்பரிசில்களையும் வென்றுள்ளார்.
இவருடைய சமூக , சமய அறநெறிச் சேவைகள் , கல்விச் சேவைகள் , சிறுவர்களுக்காக ஆற்றிய பணிகள் பாராட்டி அரச , அரச சார்பற்ற நிறுவனங்கள் கெளரவ பட்டங்களையும் விருதுகளையும் வழங்கி கௌரவித்துள்ளன.
கல்வியமைச்சு குரு பிரதீபா பிரபா விருதினையும் ,இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சும் , இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து கலைச் சுடர் , தேசிய கலைஞர் விருதுகளையும் , தேசிய விஞ்ஞான மன்றம் ஐந்து நட்சத்திர விருதையும் , பட்டிருப்பு கல்வி வலயம் சாதனையாளர் விருதினையும் , அகில இன் நல்லுறவு ஒன்றியம் கலாநிதி, சாமசிறி வித்தியாசகர் பட்டங்களையும் , தேசிய சமாதான சங்கம் கல்வி சூரி , கீர்த்திசிறி தேசபந்து , இலங்கை சமாதான கற்கை நிலையம் சமாதான தூதுவர் , விஸ்வம் கெம்பஸ்  வாழ்நாள் சாதனையாளர் விருதினையும், தேசிய சமாதான நீதிவான்கள் பேரவை கீர்த்தி ஸ்ரீ விருதினையும் , மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையம் சமூகஜோதி விருதினையும் வழங்கி கெளரவித்துள்ளன.
திரு.நாராயணப்பிள்ளை நாகேந்திரன் தேசிய எழுத்தாளர் அமைப்பின் உறுப்பினராகவும் , மட்டக்களப்பு மாவட்ட கலாசார அதிகார சபையின் உப செயலாளராகவும், மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் நிருவாக சபை உறுப்பினராகவும் , மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் நிருவாக சபை உறுப்பினராகவும் , அகில இலங்கை சமாதான நீதிவானாகவும் ,மண்முனை தென் எருவில்பற்று , களுவாஞ்சிக்குடி பிரதேச கலாசார அதிகார சபையின் உப தலைவராகவும் , கோயில்போரதீவு தென்கண்ட கண்ணகி கமநல அமைப்பின் தலைவராகவும் பல சமூகப் பணிகளை சிறப்பாக ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்

READ MORE | comments

நாடு முழுவதும் திருமணம் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் நடத்துவதற்கு தடை!

 


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால், திருமணம் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்துவதற்கு, இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல், இரண்டு வாரங்களுக்கு குறித்த நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

ஒரு மீட்டர் இடைவெளி இரண்டு மீட்டராகிறது

 


கொரோனா பரவலை அடுத்து ஒரு மீற்றர் சமூக இடைவெளியில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.


இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

தற்போது நாடளாவிய ரீதியில் வேகமாக பரவிவரும் புதிய கொரோனா பரவலையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற சுகாதார பரிந்துரையில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதற்கமைய, தற்போது கடைப்பிடிக்கப்பட்டுவரும், ஒரு மீற்றர் சமூக இடைவெளியை ஆகக் குறைந்தது 2 மீற்றர்களாக அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

செங்கலடி பொதுச்சந்தை மறு அறிவித்தல் வரை பூட்டு!

 




(எம்.ஜி.ஏ நாஸர்)

மட்டக்களப்பு ஏறாவூர்ப் பற்று பிரதேசத்தில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான சிலர் அடையாளங்காணப்பட்டதையடுத்து செங்கலடி பொதுச்சந்தை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

இச் சந்தை தற்காலிகமாக செங்கலடி பாடசாலை மைதானத்தில் அன்று முதல் இயங்குகிறது.

எனினும் வியாபாரிகளுக்கு கூடாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர்ப் பற்று பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பிரிவின் சில பகுதிகளில் அண்மையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைல் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான சிலர் அடையாளங் காணப்பட்தையடுத்து சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக பொதுமக்கள் ஒன்று கூடுவதைத்தடுக்கும் நோக்குடன் செங்கலடி பொதுச்சந்தை இடமாற்றப்பட்டுள்ள போதிலும் அங்காடி வர்த்தகர்களுக்கு கூடாரம் அமைக்கப்படாதுள்ளதனால் வெயிலின் பாதிப்பை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வியாபாரிகளிடம் செங்கலடி பிரதேச சபை வரி அறவிடுகின்ற போதிலும் வியாபாரிகள் மற்றும் பொது மக்களது நலன்கருதி குடிநீர் வசதியைக்கூட ஏற்படுத்தவில்லையென கவலை தெரிவிக்கப்படுகிறது.





READ MORE | comments

மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 05 பேர் கைது

 


(எம்.ஜி.ஏ நாஸர்)

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஐந்து பேர் மட்டக்களப்பு ஏறாவூர்ப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து ஒரு தொகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு- அக்கரைப்பற்று போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் நடாத்துனர் ஒருவரும் இதிலடங்குவதாக ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கீர்த்தி ஜயந்த தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்குக்கிடைத்த இரகசியத் தகவலையடுத்து பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்ஸ்பெக்டர் எச்எம். ஷியாம் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பஸ் நடாத்துனரிடமிருந்து 4320 மில்லி கிராம் ஹெரொயின் கைப்பற்றப்பட்டுள்ளதனால் இவர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

மேலும் பஸ்தரிப்பிடத்தில் நின்ற இரு நபர்களை சோதனையிட்டபோது கேரள கஞ்சா ஒருவரிடம் 390 மில்லிகிராமும் மற்றவரிடம் 660 மில்லி கிராமும் அடங்கிய பொதிகள் காணப்பட்டுள்ளன.

இதேவேளை விசேட சோதனையின்போது ஒரு நபரிடம் 350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் இன்னுமொருவரிடம் 460 மில்லி கிராம் ஹெரொயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நால்வரும் ஏறாவூர் சுற்றலா நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.


READ MORE | comments

P2P பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை கல்முனை நீதவான் நீதிமன்றினால் இடைநிறுத்தப்பட்டது!!

 


கல்முனை நீதவான் நீதிமன்றினால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்ட ஏழு பேரின் வழக்கு விசாரணையை இடைநிறுத்தி நீதிவான் கட்டளை பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.


கல்முனை நீதவான் நீதிமன்றினால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்ட ஏழு பேருக்கு ஏப்ரல் மாதம் 30 திகதி ஆஜராகுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொள்வார்கள் என கூறி கல்முனை பொலிஸ் நிலையத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பேருக்கு கல்முனை நீதிமன்ற உத்தரவின் பேரில் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.

எனினும் பேரணி இடம் பெற்றதுடன் நீதிமன்ற தடை உத்தரவினை மீறி நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டவர்கள் என பெயரிடப்பட்டவர்கள் சிலர் மீறி கலந்து கொண்டதாக குற்றஞ் சாட்டப்பட்டு மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எழுவருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று கல்முனை பொலிஸாரினால் கடந்த 5.02.2021 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த தவணைகள் கல்முனை நீதவான் ஐ.என் றிஸ்வான் முன்னிலையில் இடம்பெற்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்கு நீதிமன்ற தடை உத்தரவினை மீறியுள்ளதாக தொடரப்பட்ட வழக்கினை கல்முனை நீதவான் நீதிமன்றம் தொடர்ந்து நடார்த்தவும் அதன் மீது கட்டளை பிறப்பிக்கவும் மே 18 ஆம் திகதி வரை கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து கட்டளை பிறப்பித்துள்ளது.

இப்பேரணிக்கு தடை விதித்த நிலையில் பேரணியில் பங்குகொண்டு நீதிமன்றை அவமதித்தனர் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு இன்று ( வெள்ளிக்கிழமை )கல்முனை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் எதிராக ஆட்சேபனை மனுவினை கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நிரான் அங்கிற்றல் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர். இதனை ஏற்ற மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அர்ச்சுனா ஒபயசேகர மாயதுன்ன கொரய ஆகியோர் மேற்படி கட்டளையை வழங்கினர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணை செய்யும் நியாயாதிக்கம் நீதவான் நீதிமன்றிற்கு கிடையாது ஆகவே கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற வழக்கினை தடை செய்யக்கோரி முன் வைக்கப்பட்ட சமர்ப்பணத்தை ஏற்ற நீதிமன்றம் எதிர் வரும் 18ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்ததோடு எதிராளிகளுக்கான அறிவித்தலை வழங்குமாறும் மேன் முறையீட்டு நீதிமன்ற பதிவாளர் கல்முனை நீதவான் நீநிமன்றின் பதிவாளருக்கு இந்த கட்டளையை தொலை நகல் மூலமும் அனுப்பி வைக்குமாறும் கட்டளையிடப்பட்டதோடு இந்த வழக்குத் தொடர்பில் கல்முனை நீதவான் நீநிமன்றம் இதற்கு மேல் எந்த உத்தரவும் வழங்க கூடாது எனவும் கட்டளையிடப்பட்டது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியை தடுக்க கோரி பெப்ரவரி 2ம் திகதி பின்னேரம் கல்முனை பொலிஸ் கோரியிருந்த தடையுத்தரவுக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் பொதுமக்களுக்கு உயிர் அல்லது சுகாதாரத்திற்கு பாதிப்பில்லாதவாறு பேரணி செல்பவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவுதான் பொலிஸாருக்கு கொடுக்கப்பட்ட நிலையில் இன்று வழக்கு விசாரணை நீதிவான் நீதிமன்ற நீதிபதி வை.எம்.எம் றியால் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது பிரதிவாதிகள் தரப்பினர் வழக்கை மீளப் பெறுமாறு மன்றிற்கு சமர்ப்பணம் விடுத்த போது நீதிவான் பொலிஸாரிடம் வழக்கை மீளப்பெறுவீர்களா என கேட்டார்.அதற்கு பொலிஸ் தரப்பினர் மேலிடத்து உத்தரவின் பிரகாரமே வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும் எனவே அதே மேலிடத்திலிருந்து அனுமதி பெற வேண்டும் என தெரிவித்த நிலையில் குறித்த வழக்கு முற்றாக இடைநிறுத்த நீதிவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.இவ்விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனும் ஊடகங்களுக்கு கருத்துக்களை முன்வைக்கின்ற போது சுட்டிக்காட்டினார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம் ,த.கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன் ,மாணவர் மீட்பு பேரவை தலைவர் செ.கணேஷ் , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன், ஆகியோரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆந் திகதி மன்றில் ஆஜராகுமாறு கல்முனை நீதவான் அழைப்பாணை பிறப்பித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

காய்ச்சல், மூச்சுத்திணறல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபர் உயிரிழப்பு!!

 


எப்.முபாரக்

காய்ச்சல், மூச்சுத்திணறல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபர் இன்று (30) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை-கந்தசாமி கோயில் வீதியைச்சேர்ந்தவர் (75 வயது) எனவும் தெரியவருகின்றது.

இதேவேளை தந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் அழுது கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு பெறப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் மகன் திருகோணமலையில் உள்ள பிரபல சீமெந்து தொழிற்சாலையில் கடமையாற்றி வருகின்றவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இருந்தபோதிலும் பிரபல சீமெந்து தொழிற்சாலையில் அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் இனங்காண பட்டிருந்த போதிலும் தொடர்ந்தும்
பரிசோதனையின் போது அங்கு கடமையாற்றி வருபவர் களுக்கு தொற்று ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே சீமெந்து தொழிற்சாலையில் கடமையாற்றி வந்தவர்களுக்கு சிறந்த முறையில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதா? என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் திணைக்களம் கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் பாலையூற்று மற்றும் பூம்புகார் பகுதிகளில் சீமெந்து தொழிற்சாலையில் கடமையாற்றி வந்தவர்களுக்கே அதிக அளவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
READ MORE | comments

வடமராட்சியில் அதிகாலையில் பதற்றம்- கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம்!

 


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலையிலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் , கடத்தல்காரர்களின் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குடத்தனை பகுதியில் கடற்படையினர் சுற்றுக்காவல் (ரோந்து) பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் வந்த "கன்ரர்" ரக வாகனத்தை மறித்துள்ளனர். வாகனம் கடற்படையினரின் கட்டளையை மீறி சென்ற போது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அதன் போது வாகனத்தில் பயணித்தவர்களும் , வாகனத்திற்கு வழி காட்டியாக சென்றதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒட்டிச் சென்ற  ஒருவரும் தமது வாகனங்களை கைவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

அதனை அடுத்து கன்ரர் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கடற்படையினர் மீட்டதுடன் , பருத்தித்துறை பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வாகனங்களை பொறுப்பேற்றதுடன், விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர். தப்பி சென்றவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். 

READ MORE | comments

இன்று வானிலையில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை...!!

 


ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை: மட்டக்களப்பிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கொழும்பிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: கொழும்பிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையானகடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
READ MORE | comments

அனைத்து வைத்தியசாலைகளுக்கும் விடுக்கும் செய்தி! சுகாதார அமைச்சு

 


கொரோனா தொற்று இலங்கையில் தீவிரமடைந்துவரும் நிலையில் சுகாதார அமைச்சு அதிரடி தீர்மானம் ஒன்றை அனைத்து வைத்தியசாலைகளுக்கும் அனுப்பிவைத்துள்ளது.


தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நோயாளர்களினால் நிரம்பியுள்ள நிலையில், அவசரமாக ஏற்கப்படுகின்ற கொரோனா நோயாளர்களை சாதாரண வார்ட்டு அறைகளில் சேர்ப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் இரண்டாம் கட்டப் பணிகள் ஆரம்பம்

 


(ரீ.எல்.ஜவ்பர்கான்)

கொரோனா தடுப்பூசி ஏற்றும் இரண்டாம் கட்டப்பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (30) ஆரம்பமாகின.

மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பணிமனையில் சுகாதார வைத்தியதிகாரிகளான டாக்டர் ஈ.உதயகுமார், எஸ்.கிரிசுதன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் போது வைத்தியதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், தாதியர்கள் பிராந்திய சுகாதரா சேவைகள் நிலைய ஊழியர்கள், வைத்தயசாலை ஊழியர்கள் ஆகியோர் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை ஏற்றி கொண்டனர்.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைககள் தொடர்ந்தும் இடம்பெறுமென மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி ஈ.உதயகுமார் தெரிவித்தார்.

READ MORE | comments

புலமை பரீட்சை மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இன்று வெளியாகின்றன!

 


இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு இன்று (30) வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


குறித்த பெறுபேறுகள் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.புலமை பரீட்சை மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின
READ MORE | comments

நேற்று மாத்திரம் 1531 பேருக்கு கொரோனா தொற்று; மொத்த எண்ணிக்கை 106,484ஆக அதிகரிப்பு- பல பகுதிகள் தனிமைப்படுத்தலில்...!!

 


இலங்கையில் மற்றுமொரு புதிய கோவிட் கொத்தணி உருவாகி தாண்டமாடுகின்றது. நேற்றைய தினம் மாத்திரம் 1,531 பேர் கோவிட் வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


நாட்டில் நாள் ஒன்றில் அதிகளவான தொற்றாளர்கள் இன்றே இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் புத்தாண்டு கோவிட் கொத்தணியில் பதிவாகியுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த மூன்று நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 484 ஆக எகிறியுள்ளது.

புதிய கோவிட் கொத்தணியின் தீவிரத்தையடுத்து நாடெங்கும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதேவேளை, நாடெங்கும் எழுந்தமான பி.சி.ஆர். பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் கூறினார். மேலும், 362 பேர் கோவிட் வைரஸ் தொற்றுப் பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 95 ஆயிரத்து 445 ஆக அதிகரித்துள்ளது.

கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 661ஆக உள்ள நிலையில், இன்னும் 10 ஆயிரத்து 378 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
READ MORE | comments

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான இறுதித்தீர்மானம் ஞாயிற்றுக்கிழமை!!

 


பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்படவிருப்பதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.


முழு நாட்டை உள்ளடக்கும் வகையில் மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களிடம் இருந்து இது தொடர்பான தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது பிரதானமாக மாணவர்களின் பாதுகாப்பு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக கல்வியமைச்சர் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதுமுள்ள பாடசாலைகள், முன்பள்ளி பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்கள் முதலானவற்றை இன்று வரை மூடுவதற்கு அரசாங்கம் கடந்த திங்கட்கிழமை தீர்மானித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

வார இறுதி நாட்களில் நாடு முடக்கப்படும்? கொழும்பு உயர்மட்டத் தகவல்

 


இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்த வரும் நிலையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நாடு முடக்கப்டம் என கொழும்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 1ஆம் திகதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் பொதுமக்களின் ஒன்று கூடலினை தவிர்க்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,

READ MORE | comments

அதிகாலையில் ஏற்பட்ட அனர்த்தம்! மயிரிழையில் உயிர்பிழைத்த சுமந்திரன்

 


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் அதிஷ்டமவசமாக உயிர்தப்பியுள்ளார்.

எனினும் சுமந்திரனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த அவரின் வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.

சுமந்திரன் பயணித்த வாகனம் கடுமையாக விபத்துக்குள்ளானதில் முழுமையாக சேதமடைந்துள்ளது.

மழை பெய்து கொண்டிருந்த போது, அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது வாகனம் வீதியில் வழுக்கி, பலமுறை உருண்டு விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. எனினும் வேறு வாகனம் ஒன்றின் மூலம் அவர் கல்முனை நோக்கி பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றமைக்காக அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காக, கல்முனை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகும் பொருட்டு அங்கு செல்லும் வழியிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

READ MORE | comments

விபச்சாரத்தில் ஈடுபட்ட ஏழு பெண்கள் பொலிஸாரால் கைது!

Thursday, April 29, 2021

 


அநுராதபுரம் பழைய பஸ் தரிப்பிடம்,அநுராதபுரம் நுவரவெவ நீர் தேக்க பகுதிகளில் நடமாடிய பாலியல் தொழிலாளர்கள் ஏழு பேரை அநுராதபுரம் கோட்டப் பிரிவு குற்றப் புலனாய்வு பொலிஸார் கைது செய்தனர்.


சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இப்பெண்கள் 25வயதுக்கும் 40வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும்,அநுராதபுரம், கல்கமுவ, சிலாபம், மதவச்சி,கம்பொல பளுகஸ்வெவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

இவர்கள் விலைமாதர்களாக விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் கோட்டத்திற்குப் பொறுப்பான குற்றப் புலனாய்வு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பண்டார விஜேயகோன் ஆலோசனையின் பேரில், மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இம்மாதம் 25 ஆம் திகதி இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
READ MORE | comments

கிழக்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்று- கடந்த 24 மணி நேரத்தில் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!! on 4/29/2021 06:53:

 


கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 107 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதன் அடிப்படையில், திருகோணமலையில் 21 பேருக்கும், தெஹியத்தகண்டியவில் 15 பேருக்கும், உஹனையில் 13 பேருக்கும், உப்புவெளியில் 11 பேருக்கும், பதியத்தளாவையில் 07 பேருக்கும், அம்பாறையில் 6 பேருக்கும், மட்டக்களப்பில் 6 பேருக்கும், கிண்ணியாவில் 05 பேருக்கும், மூதூரில் 04 பேருக்கும், களுவாஞ்சிக்குடியில் 03 பேருக்கும், குருஞ்சாங்கேனியில் 03 பேருக்கும், ஏறாவூரில் 03 பேருக்கும், கந்தளாயில் 03 பேருக்கும், சேருவிலையையில் ஒருவருக்கும், தமனையில் ஒருவருக்கும், வாழைச்சேனையில் ஒருவருக்கும், பதவிசிரிபுரத்தில் ஒருவருக்கும், செங்கலடியில் ஒருவருக்கும், ஆரையம்பதியில் ஒருவருக்கும், காத்தான்குடியில் ஒருவருக்குமாக மொத்தம் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
READ MORE | comments

பொத்துவில்-பொலிகண்டி பேரணி வழக்கு உத்தரவுக்கு மே 18 வரை தடை!

 


கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நாளை (30) நடைபெறவிருந்த பொத்துவில் - பொலிகண்டி பேரணி தொடர்பான வழக்குக்கு எவ்வித உத்தரவுகளையும் கட்டளைகளையும் மே 18 வரை வழங்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கல்முனை பொலிஸாரால் தொடரப்பட்ட இந்த வழக்குக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்ட எழுத்தாணை மனு இன்று (29) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுதாரரான அ.நிதான்சன் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியின் போது, நீதிமன்ற தடை உத்தரவை மீறியதான வழக்கை, கல்முனை நீதிமன்றம் விசாரணை செய்ய முடியாதெனன மேன் முறையீட்டு நீதிமன்றில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் செய்த மேன்முறையீடு ஏற்கப்பட்டு, மேற்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.சாணக்கியன், த.கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஷ்வரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

நாடு முழுவதும் தற்சமயம் 08 மாவட்டங்களில் 29 பகுதிகள் தனிமைப்படுத்தலில்!

 


நாடு முழுவதும் தற்சமயம் எட்டு மாவட்டங்களில் 29 பகுதிகள் தனிமைப்படுத்தலில் உள்ளதாக கொவிட்- 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.



READ MORE | comments

அத்தியாவசியப் பொருட்களின் கொள்வனவு மற்றும் முழு நாட்டையும் முடக்கி வைத்தல் தொடர்பில் இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு!!

 


ந்த நேரத்திலும் நாடு முடக்கப்படலாம் என்றும், அன்றாட நுகர்வுக்கான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வைத்துக்கொள்ளுமாறும் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புரம்பானது என இராணுவத் தளபதி ஜெனரால் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், முழு நாட்டையும் முடக்கி வைப்பதற்கான நோக்கம் இதுவரையிலும் இல்லை என்றார்.

அத்துடன், அதிகமான தொற்றாளர்கள் அடையாளம்காணப்படுகின்ற பிரதேசங்களின் கிராம அலுவலர் பிரிவுகள் அல்லது பொலிஸ் பிரிவுகள் எந்தவித முன் அறிவித்தலுமின்றி தனிமைப்படுத்தப்படலாம் என இராணுவத் தளபதி ஜெனரால் ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

நேற்று மாத்திரம் 1466 பேருக்கு கொரோனா தொற்று- தொற்றுக்குள்ளானவர்களின் முழு விபரம் வெளியாகியது...!!


இலங்கையில் இன்று (29) காலை வரையில் 1466 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் - 19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


இவர்களில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 15 இலங்கையர்கள் உள்ளடங்குவர்.

ஏனைய 1,451 பேரும் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்கள் என்பதுடன், இவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 228 ஆகும்.

இதற்கமைய கம்பஹா மாவட்டத்திலிருந்து 209 பேர் மற்றும் குருநாகல் மாவட்டத்திலிருந்து 172 பேரும் பதிவாகியுள்ளனர். ஏனைய 842 பேரும் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று (29) காலை வரையிலான மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் கொத்தணி மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 99,688 ஆகும். இவர்களில் 93,683 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, இன்று (29) காலை வரையிலும் இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 104,952 பேர் என்பதுடன், அவர்களில் 95,083 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன் இன்று காலை (29) வரையிலும் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களில் 9,208 தொற்றாளர்கள் மேலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இன்று (29) காலை 6.00 மணி வரையிலான கடந்து 24 மணித்தியாலங்களுக்குள் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களிலிருந்து 227 பேர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, இன்று (29) காலை வரையிலான கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொவிட் வைரஸ் தொற்று பாதிப்பினால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் மாவனல்ல, நிட்டம்புவ, பல்லேகம, வீரபொகுண, வத்தளை மற்றும் ஹாலிஹெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இதன்படி, இன்று (29) காலை வரையிலும் இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்று பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 661 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்றைய (29) தினம் வரையிலும் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 113 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 11,241 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், இன்று (29) காலை வரையிலும் குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தித்தவெல்கம, கும்புக்கெடே கிராம சேவகர் பிரிவு நிராவிய மற்றும் நிகதலுபொத ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமை படுத்தப்பட்டுள்ளன.
READ MORE | comments

திருகோணமலையில் பல பகுதிகளுக்கு ஊரடங்கு

 


திருகோணமலை மாவட்டத்தில் மேலும் சில கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, உப்புவெளி பொலிஸ் பிரிவில் சுமேதகம்புர, திருகோணமலை பொலிஸ் பிரிவில் மூதோவில், கோவிலடி, லிங்கநகர் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் சீனக்குடா பொலிஸ் பிரிவின் சீனக்குடா மற்றும் காவட்டிக்குடா ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன 

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதை குறிப்பிட்டார்.

READ MORE | comments

கொவிட் தொற்றின் எதிரொலி! தொற்றுநோயியல் நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை


தற்போதைய கொவிட்-19 நிலைமைகளுக்கு மத்தியில் மூடிய அறைகளுக்குள் தொழில் செய்வது மிகவும் ஆபத்தானது என்று தொற்றுநோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுதத் சமரவீர எச்சரித்துள்ளார்.

தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

குளிரூட்டப்பட்ட அலுவலகங்கள் அல்லது இடங்களில் கடமைகளைச் செய்யும்போது ஒருவர் எப்போதும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

ஒரு நபர் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடியிருக்கும் ஒரு சிறிய அறையில் இருந்தால், குறிப்பாக குளிரூட்டப்பட்ட பகுதியில், இந்த நோய் மற்றொரு நபருக்கு பரவ அதிகம் வாய்ப்புள்ளது.

எனவே இது போன்ற இடங்களில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை முடிந்தவரை திறந்து வைக்குமாறு பரிந்துரைக்கிறோம்.

அதேவேளை, அத்தகைய இடங்களில் முகக் கவசம் அணிவது, கைகளை சவர்க்கரமிட்டு கழுவுதல் போன்ற சுகாதார வழிகாட்டல்களை அவசியம் கடைபிடிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

READ MORE | comments

வங்கிகளுக்கு நாளை விசேட விடுமுறை!

 


(காமிலா பேகம் )

வங்கிகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) அரை நாள் விடுமுறை தினமாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மே முதலாம் திகதி சனிக்கிழமையன்று, சர்வதேச உழைப்பாளர் தினம் கொண்டாடப்படவுள்ளது.

இதன் காரணமாக அனைத்து வங்கிகளுக்கும் நாளை விசேட அரை நாள் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தை நாளை மதியம் 12.30 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
READ MORE | comments

கல்முனை காணி பதிவகத்துக்கு பூட்டு! பதிவகத்துக்கு கடந்த இரு வாரங்களுக்குள் சென்றவர்கள் சுயமாகவே தனிமைப்பட்டு கொள்ளுங்கள்!

 


அம்பாறை, காணிப் பதிவகத்தின் கல்முனைக் காரியாலயம் தனிமைப்படுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.


காணிப் பதிவகத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, நேற்றிலிருந்து (28) 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இங்கு கடமை புரிந்த ஏனைய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என 25 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, கல்முனை காணி பதிவகத்துக்கு கடந்த இரு வாரங்களுக்குள் சென்றவர்கள் சுயமாகவே தனிமைப்பட்டு கொள்ளுங்கள் எனவும் தங்கள் பகுதி பொதுச் சுகாதார உத்தியோகத்தரை தொடர்புகொள்ளுமாறும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் குண.சுகுணன் அறிவித்துள்ளார்.
READ MORE | comments

மட்டக்களப்பு- அரசடியில் திடீர் கொரோனா அன்டிஜன் பரிசோதனைகள்- 05 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!

Wednesday, April 28, 2021

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் 19 நிலையினைக் கருத்திற்கொண்டு இன்று 28.04.2021 திடீர் அன்டிஜன் பரிசோதனைகள் சுகாதாரத் துறையினரால் அரசடியில் மேற்கொள்ளப்பட்டது.


இதன்போது 177 நபர்களின் மாதிரிகள் பெறப்பட்டிருந்தது. அதில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு நகர்பகுதிகளில் சுகாதார அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து வீதிகளில் முககவசம் அணியாது மோட்டர்சைக்கிள் மற்றும் வாகனங்களில் பிரயாணித்தவர்களை இன்று புதன்கிழமை (28) வழிமறித்து திடீர் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டதில் வங்கி ஊழியர்கள்
பொலிஸார் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கிரிசுதன் தெரிவித்தார்.

நாட்டில்  மூன்றாவது அலையாக அதிகரித்துள்ள கொரோனா தொற்றினையடுத்து அதனை கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரதுறையினர் இன்று நகர்பகுதியான அரசடி வீதிசுற்று வட்டத்திற்கு அருகில் அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் பொலிசாருக்கும் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டு பரிசோதனைகள் இடம்பெற்றது.

இந்த நிலையில் அந்த பகுதி பிரதான வீதியால் மோட்டர்சைக்கிள் மற்றும் பஸ்வண்டிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் பொலிஸார் பொதுசுகாதார உத்தியோகத்தர்கள் நிறுத்தி முககவசம் அணியாது பிரயாணித்தவர்களை நிறுத்தி 177 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இந்த பரிசோதனையில் 3 வங்கி ஊழியர்களுக்கும் வங்கி ஊழியர் ஒருவரின் உறவினருக்கும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் ஒருவர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
READ MORE | comments

வடமாகாணத்தில் கொரோனா பரவல் எந்நேரத்திலும் அதிகரிக்கலாம்- மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


வடமாகாணத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தாலும், புத்தாண்டு தினத்திற்கு பின்னர் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இலங்கை முழுவதும் நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இனம் காணப்பட்டுள்ளனர் என வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தள்ளார்.

ஆகவே வடமாகாணத்திலும் இது போன்று பரவல் அதிகரிக்க வாய்ப்புக்கள் இருப்பதாகவும், இருப்பினும் மக்களின் பயணங்களில் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை, ஆகவே மக்களின் பயணங்கள் தடையின்றி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. எனவே எந்த நேரத்திலும் வடமாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே பொதுமக்கள் அநாவசியமாக வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தற்போது தனியார் கல்வி நிலையங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்பன மூடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் இயலுமானவரை வெளியில் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


READ MORE | comments

எதற்கும் தயாராக இருங்கள் -மக்களுக்கு இராணுவத்தளபதி விடுத்த அறிவுறுத்தல்

 


கொரோனா தொற்று ஏற்படும் பகுதிகள் முடக்கப்படும் சாத்தியம் காணப்படுவதால் நீண்ட நாட்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை களஞ்சியப்படுத்துமாறு  மக்களுக்கு  கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் தொற்று ஏற்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்படலாம் என்பதால் அதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என மையத்தின் தலைவரான ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.

மக்களை தூண்டவோ நாட்டில் தற்போதுள்ள நிலை மையை மூடி மறைக்கவோ வேண்டிய தேவையில்லை என்ற போதிலும் எந்தவொரு நிலைமைகளையும் எதிர்கொள்ளும் வகையில் அதற்கு தயாராக இருக்க வேண்டியது முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் கோவிட் நோயாளிகளுக்கு கூடுதல் சிகிச்சை மையங்களை அமைக்க ராணுவம் தயாராக இருப்பதாக ஜெனரல் கூறினார்.

"பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சையளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, தேவைப்பட்டால் மருத்துவமனைகளுக்கு குறைந்தபட்சம் 10,000 படுக்கைகளை வழங்க இராணுவம் தயாராக இருப்பதாக நாங்கள் சுகாதாரத் துறைக்கு அறிவித்துள்ளோம்.

“நாம் என்ன சவால்களை எதிர்கொண்டாலும், எந்த அலைகளை எதிர்கொண்டாலும், நாம் தோல்வியுற்ற தேசம் அல்ல. நாங்கள் ஒரு தேசமாக உயருவோம், ”என்றார்.

ஒக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து பேசிய ஜெனரல், நாட்டில் உள்ள நோயாளிகளுக்கு ஒக்ஸிஜன் தேவை குறித்த தகவல்களை ஒவ்வொரு 12 மணி நேரத்திற்கும் ஒரு முறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் தனிப்பட்ட முறையில் கேட்டுள்ளதாக தெரிவித்தார்.

"இலங்கையில் ஒக்ஸிஜன் விநியோக நிறுவனங்கள் தற்போது போதுமான ஒக்ஸிஜன் கையிருப்புக்கள் உள்ளதாக எங்களிடம் தெரிவித்துள்ளன" என்று அவர் கூறினார்.

சில கட்சிகள் தமது நிகழ்ச்சி நிரல்களில் தவறான தகவல்களை பரப்ப முயற்சிப்பதால் இந்த நாட்டின் உத்தியோகபூர்வ நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களுக்கு மட்டுமே மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தளபதி கேட்டுக்கொண்டார்.

READ MORE | comments

ஒவ்வொரு மணி நேரத்திற்கு 115 பேர்- ஓய்வில்லாமல் எரியும் சடலங்கள்: நெஞ்சை உருக்கும் பரிதாபம்!!

 


இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 115 பேர் இறந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லி கொரோனாவால் கதிகலங்கி போய் நிற்கிறது. அங்கிருக்கும் மக்கள் போதுமான ஒக்ஸிஜன் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இது தொடாபான விரிவான செய்திகளுடன் மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.

.




READ MORE | comments

பூம்புகார் முடக்கம் ! திருகோணமலையில் 67 தொற்றாளர்கள்!

 


திருகோணமலை மாவட்டத்தின் பூம்புகார் கிராம வேசகர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது. பட்டிணமும் சூழலும் (உப்புவெளி) பிரதேச சபைக்குட்பட்ட இப்பகுதி உப்புவெளி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுக்கு உட்பட்டது.


குடைமாதா சந்தியில் உள்ள ரயில்வே கடவைக்கு அருகாமையிலும் அப்பகுதிகுள் உள் நுளையும் மற்றும் இரு இடங்களிலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் சேதனைச் சாவடி அமைக்கபட்டு, பொதுமக்கள் வெளியேரவோ அல்லது புதிய நபர்கள் உள் நுளையாமலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை இப்பகுதியில் ஆன்டிஜன் பரிசோதிக்கப்பட்டவர்களில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளது.

திருகோணமலை நகராட்சி மன்றம், பொது வைத்தியாலை, உப்புவெளி பிரதேச சபை, அரச அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் போன்ற அத்தியாவசிய சேவையில் உள்ள பலர் இப்பகுதி முடக்கத்தில் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கொரொனா பாதிப்பின் இரண்டாம் அழையின் போதும் இப்பகுதி முற்றாக முடக்கப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (27) மாத்திரம் 67 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.ஜீ.எம்.கொஸ்தா, இன்று (28) தெரிவித்தார்.

இதன்படி, உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் 31 பேரும், திருகோணமலையை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் 27 பேரும், கிண்ணியா பிரதேசத்தில் 5 பேரும், குறிஞ்சான்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பகுதி மற்றும் தம்பலகாமத்தில் தலா ஒருவரும், கந்தளாயில் இருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |