Home » » கொவிட் தொற்றின் எதிரொலி! தொற்றுநோயியல் நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை

கொவிட் தொற்றின் எதிரொலி! தொற்றுநோயியல் நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை


தற்போதைய கொவிட்-19 நிலைமைகளுக்கு மத்தியில் மூடிய அறைகளுக்குள் தொழில் செய்வது மிகவும் ஆபத்தானது என்று தொற்றுநோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுதத் சமரவீர எச்சரித்துள்ளார்.

தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

குளிரூட்டப்பட்ட அலுவலகங்கள் அல்லது இடங்களில் கடமைகளைச் செய்யும்போது ஒருவர் எப்போதும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

ஒரு நபர் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடியிருக்கும் ஒரு சிறிய அறையில் இருந்தால், குறிப்பாக குளிரூட்டப்பட்ட பகுதியில், இந்த நோய் மற்றொரு நபருக்கு பரவ அதிகம் வாய்ப்புள்ளது.

எனவே இது போன்ற இடங்களில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை முடிந்தவரை திறந்து வைக்குமாறு பரிந்துரைக்கிறோம்.

அதேவேளை, அத்தகைய இடங்களில் முகக் கவசம் அணிவது, கைகளை சவர்க்கரமிட்டு கழுவுதல் போன்ற சுகாதார வழிகாட்டல்களை அவசியம் கடைபிடிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |