கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்

Wednesday, July 31, 2019


கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய ஒருங்கேகொண்ட பெருமையினையுடைய அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது


இராம பிரானால் வழிபட்ட ஆலயமாகவும் அனுமான் இலங்கையினை எரித்தபோது வலில் ஏற்பட்ட தீயினை அணைத்த இடமாகவும் கருதப்படும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சம் பத்து தினங்கள் சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை தம்ப பூஜை,மூலமூர்த்திக்கு விசேட அபிசேக ஆராதனை நடைபெற்று திருப்பொற்சுண்ணம் இடிக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி சிவபார்வதி விநாயகர் ஆகியோர் எருது வாகனத்தில் எழுந்தருளிய பக்தர்கள் புடைசூழ மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணிக்கு ஊர்வலமாக சென்றனர்

அனுமனின் வால் நனைத்த இடமாகவும் இராம பிரானால் தோற்றுவிக்கப்பட்ட தீர்த்தக்கேணியாகவும் பிதிர்க்கடன் தீர்க்கும் இடமாகவும் உள்ள மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் விசேட பூஜைகள் நடைபெற்றன

அதனைத்தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானோர் புடை சூழ தீர்த்தக்கேணியில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசவுந்தரராஜா குருக்கள் தலைமையில் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது


இந்த தீர்த்தோற்சவத்தில் உயிரிழந்த உறவுகளுக்காக பிதிர்க்கடன் செலுத்தும் நிகழ்வுகளும் தீர்த்தக்கரையோரங்களில் நடைபெற்றன.


READ MORE | comments

ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்ற மாமாங்கேஸ்வரர் முகப்புத்திர சிற்ப மகா ரதோற்சவம்

Tuesday, July 30, 2019


கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட மரபு,முகப்புத்திர சிற்ப மகா ரதோற்சவம் ஆயிரக்கணக்கானோர் புடைசூழ இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய ஒருங்கேகொண்ட பெருமையினையுடைய அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இராம பிரானால் வழிபட்ட ஆலயமாகவும் அனுமான் இலங்கையினை எரித்தபோது வலில் ஏற்பட்ட தீயினை அணைத்த இடமாகவும் கருதப்படும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சம் பத்து தினங்கள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

இன்று காலை தம்ப பூஜை,மூலமூர்த்திக்கு விசேட அபிசேக ஆராதனை நடைபெற்று வசந்த மண்டபத்தில் பஞ்சமுக கணபதிக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து மலர் மழை சொரிய அடியார்களின் அரோகரா கோசத்தின் மத்தியில் பஞ்சமுக கணபதி உள்வீதி வலம்வந்து வெளிவீதி வந்ததும் இலங்கையில் மிக உயிரமான சித்திரத்தேர்களில் ஒன்றான திராவிட மரபு,முகப்புத்திர சிற்ப மகா ரதத்தில் பஞ்சமுக கணபதி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்;.

இதன்போது தேரடியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து ஆண்கள் ஒரு பகுதியாகவும் பெண்கள் ஒரு பகுதியாகவும் வடமிழுக்க திராவிட மரபு,முகப்புத்திர சிற்ப மகா ரதோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

நாளை பிதிர்க்கடன் தீர்க்கும் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |