Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியைகள் கர்ப்ப காலத்தில் அணிவதற்கான ஆடை பற்றிய சுற்றுநிருபம் ரத்து!

ஆசிரியைகள் கர்ப்பம் தரித்திருக்கும் போது, கவுண் உடையொன்றை அணிவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் கல்வியமைச்சு விடுத்த சுற்று நிருபம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் கடந்த வியாழக்கிழமை வௌியிடப்பட்ட புதிய சுற்றுநிருபமொன்றின் பிரகாரம் ஆசிரியைகள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கவுண் போன்ற ஆடையொன்றை அணிவதற்கு வாய்ப்பை வழங்கும் வகையில் சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
எனினும் கல்வியமைச்சின் சுற்றறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களின் பிரகாரம் சிபார்சு செய்யப்பட்டுள்ள கவுணை அணிவதில் சில சிக்கல்கள் இருப்பதாக பிரதமருடனான சந்திப்பொன்றில் ஆசிரியைகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து முன்னைய சுற்றறிக்கையை உடனடியாக ரத்துச் செய்து கர்ப்பிணி ஆசிரியைகள் எந்தவொரு வசதியான ஆடையையும் அணியும் வகையில் அவர்களுக்கு அனுமதி வழங்கி புதிய சுற்றறிக்கையொன்றை வௌியிடுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments