Friday, July 31, 2015
லண்டனில் இருந்து இலங்கை திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பொதுத் தேர்தல் ஊடாக நாட்டில் நல்லாட்சியை உருவாக்குவதற்காக மாதுளுவாவே சோபித தேரர் தலைமையிலான பிரஜைகள் அமைப்பு மற்றும் தொழிற்சங்க ஒன்றியம் ஆகியவற்றுடன் இணைந்து மேடையில் ஏறவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஜனவரி 8 வானவில் புரட்சியில் சந்திரிக்காவே மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக கொண்டு வந்தார்.
அத்துடன் மைத்திரிபால சிறிசேன மீதான நம்பிக்கை தொடர்பில் நற்சான்றிதழை சந்திரிக்காவே எதிர்க்கட்சியினருக்கும் பொது அமைப்புகளுக்கும் வழங்கியிருந்தார்.
அத்துடன் நல்லாட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக எதிர்க்கட்சியுடன் ஐக்கியமான கூட்டணியை ஏற்படுத்த சந்திரிக்காவே பாரிய பங்கை முன்னெடுத்தார்.
இதனால், ஜனவரி 8 ஆம் திகதி பெற்ற வெற்றியை பாதுகாக்க உதவுமாறு சுயாதீன சிவில் அமைப்புகளும் அவரது ஆதரவாளர்களும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கு சந்திரிக்காவும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அறியகிடைத்துள்ளது. இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இன்னும் சில தினங்களில் மாதுளுவாவே சோபித தேரர் மற்றும் தொழிற்சங்கங்க ஒன்றியத்துடன் இணைந்து தேர்தல் மேடையில் ஏறுவார் என கூறப்படுகிறது.