ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிக்கு

Sunday, April 30, 2023

 


கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான ஆய்வாளர்கள் ஆட்சேர்ப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் ஆன்லைன் முறை மூலம் மேற்கொள்ளப்படும் மற்றும் அது மே 2 ஆம் திகதி முடிவடையும். பல பாடங்களுக்கான தமிழ் வழி விடைத்தாள் தேர்வு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, உயர்தரப் பரீட்சையின் எஞ்சியுள்ள நடைமுறைப் பரீட்சைகளை விரைவில் ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவை உள்ளூர், இந்திய நடனம் மற்றும் ஓரியண்டல் இசை தொடர்பான பாடங்களில் நடைமுறைச் சோதனைகள். இன்னும் பல பாடங்களின் நடைமுறைத் பரீட்சைகள் தற்போது முடிவடைந்துள்ளன.

மே 29ஆம் திகதி முதல் ஜூன் 8ஆம் திகதி வரை கல்விப் பொதுச் சான்றிதழ் பரீட்சையை நடத்த பரீட்சைத் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான நடைமுறைப் பரீட்சைகள் ஜூன் 8ஆம் திகதிக்குப் பின்னர் நடத்தப்படும் என பரீட்சை திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

இதேவேளை, உயர்தர விடைத்தாள் பரீட்சைக்கான மதிப்பெண் முறை குறித்து கலந்துரையாட பல்கலைக்கழக பேராசிரியர்கள் இதுவரை வரவில்லை. அதற்குக் காரணம் அவர்கள் தொழில் ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதேயாகும். அண்மையில் பல தரப்பினரும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடம் சிறுவர்களைப் பற்றி சிந்தித்து அதில் பங்குபற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், தங்களது பிரச்சினைகளுக்கு சாதகமான பதில் அளித்தால், உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணியில் இணைவோம் என பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

READ MORE | comments

மாணவர்களின் கல்வி உலகின் வழிகாட்டியாக திகழும் ஆசிரியத்துவத்தின் முக்கியத்துவம்

 





“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” எனும் கூற்றிற்கு இணங்க இவ் உலகில் எத்தனையோ தொழில்கள் காணப்பட்ட போதிலும் அறப்பணியாக மதிக்கும் தொழிலாக ஆசிரியத்துவம் அமைகின்றது. வாழும் காலம் மட்டுமல்ல ஒரு மனிதன்மரணித்த பின்பும் பிற மனிதர்களால் போற்றப்பட்டு மனங்களில் ஒரு சிலரால் தான் வாழவும் ஆளவும் முடியும் அவர்களில் ஆசிரியர்கள் முதல் நிலை வகிக்கின்றனர். பாரம்பரிய சமூதாயத்தில் ஆசிரியர் சேவை இறை தொண்டாக கருதப்பட்டது. அதன் பின்னணியில் சமூதாயத்தின் ஆல விருட்சமாக இருந்து பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் ஊடாக மாணவர்களின் எதிர்கால வாழ்வு சிறப்பிக்க வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள் ஆசிரியர்களாவர். ஆசிரியத் தொழிலின் உன்னத நிலையினை பேணும் வகையில் ஆசிரியர்களின் கௌரவம், மேன்மை, உயர்வு, மாண்பு என்பவற்றினை எடுத்தியம்புவதற்காக 1966ல் பரீஸ் யுனேஸ்கோ மாநாட்டின் படி அக்டோபர் 6 ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகின்றது. இவ்வாறான உயர் நிலையினைக் கொண்ட ஆசிரியர் பணியினை கடமையாக கருதாமல் பாக்கியமாக கருத வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் ஒழுங்கின் படி மனிதனை முழுமைப்படுத்தும் ஆற்றல்கள் குருவிடம் உள்ளமை ஏற்புடையதாகும். அந்த வகையில் ஆசிரியரை பொறுத்தே மாணவரது நிலை தீர்மானிக்கப்படுகின்றது. மாணவர்களது அறிவு மட்ட வளர்ச்சி, செயற்பாடுகள், திறன்கள், வெற்றிகள் அனைத்தும் மாணவனை வழிப்படுத்தி நெறிப்படுத்தும் ஆசிரியரையே சாரும். அந்த வகையில் மாணவர் விருத்தியில் ஆசிரியரின் பங்கு முதன்மையானதாக காணப்படுகின்றது.


கல்வி என்பது இயற்கையாக எழும் வளர்ச்சியாகும். மாணவர்களின் இவ் வளர்ச்சிக்கு ஆசிரியர் உந்து சக்தியை வளங்குகின்றார். கல்வியினை மனித வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் ஆயத்தக் கருவியாகவும் மாணவர்களிடம் இருக்கின்ற எல்லாத் திறன்களையும் ஆற்றல்களையும் இசைந்து வளர்ச்சி பெறச் செய்வதற்கு பக்கபலமாக இருப்பவர்கள் ஆசிரியர்களே ஆவர். பாடசாலை மாணவர்களின் நடத்தைகள் அவர்கள் வாழும் சழூகத்திற்கு பயன் தரக்கூடிய வகையில் நிறைவு செய்பவர்களில் ஆசிரியர்கள் முதல் நிலை பெறுகின்றனர். அத்துடன் மாணவர்கள் சமூகத்தில் நல்ல உயர் நிலை, பொருத்தப்பாடு அடைந்து வாழத் தேவையான அறிவு, திறன்கள், உளப்பாற்கு பழக்க வழக்கங்கள்,  விழுமியங்கள் போன்றவற்றை ஆசிரியர் கலைத்திட்ட இயக்குனராக இருந்து மாணவர்களுக்கு புகட்டுகின்றனர். பாடப்பொருளை தான் கற்று கற்பித்தல் சாதனங்கள், சிறந்த கற்பித்தல் முறைகளின் ஊடாக தனது கற்பித்தலை விருத்தி செய்து மாணவர்களை கற்க வழி காட்டுகின்றனர். வகுப்பறையில் மாணவர்களை முகாமைத்துவம் செய்பவராகவும் ஆலோசனை வழிகாட்யாகவும் அழகியல் உணர்வுள்ள கலைஞனாகவும் இணைப்பாளராகவும் ஆசிரியர் பல வகையிலும் மாணவர்களது விருத்திக்கு கைகொடுக்கின்றனர்.


அந்த வகையில் சிறந்த பண்புகளை தம்முள் கொண்ட ஆசிரியர்கள் சிறந்த வினைத்திறனான மாணவ சமூதாயத்தை உருவாக்குவர். ஆகையால் ஆசிரியர்கள் மாற்றத் வதிறனை ஏற்றுக்கொள்பவர்களாகவும், மாற்றத்தினை உருவாக்குபவர்களாகவும், தனது தொழிலை வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்பவராகவும். மாணவர்களிடையே நடுநிலை பங்கினை வகிப்பவராகவும், முன்மாதிரியானவராகவும் உளவியல் நுட்பம் அறிந்தவராகவும், ஆலாசனை மற்றும் வழிகாட்டல் தன்மையுடன் புதியவற்றை படைக்கும் ஆற்றல் கொண்டவராகவும், மரபினையும் நவீனத்துவத்தினையும் பேணும் தன்மை உடையவராகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறான பண்புகளினையுடைய ஆசிரியர்கள் மாணவர் சமூகத்தினை உயர் நிலைக்கு இட்டுச் செல்லும் ஆற்றல் படைத்தவர்களாவர். இதனையே காந்தியடிகள் “மாணவனின் இதயத்தை தொடுவதன் மூலம் அவனிடம் இருந்து சிறந்த ஆற்றலினை இனங்காண முடியும்” என கூறியுள்ளார். 


மாணவ விருத்தியில் பங்கு கொள்ளும் ஆசிரியர்கள் வாண்மை தேர்ச்சியுடையவர்களாக இருத்தல் அவசியம். பாடத்திட்டத்தில் முழுமையான அறிவு, வகுப்பறை ஒழுங்கு, பாடசாலை இடைவினைகள், பெற்றோருடனான பின்னூட்டல்கள் முதலியன பற்றி அறிந்திருத்தல் அவசியமாகும். “தாய் ஊட்டாத பாலை பசு ஊட்டும்” என்பது போல இல்லம் புகட்டாத இயல்பை ஆசிரியர் புகட்டுவார். இவ் உறவானது மாணவர்களின் எதிர்காலத்தினை கட்டியெழுப்பும் வகையில் அமைகின்றது.


எனினும் மாணவ விருத்தியில் பங்கெடுக்கும் ஆசிரியர்கள் நெருக்கீடுகளுக்கும் முகம் கொடுக்கின்றனர். ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான ஆய்வுகள் உலக அளவிலே பரவாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. திறமைமிக்க மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் அனைத்திலும் திறம்பட அமைந்திருத்தல் வேண்டும். எனினும் தரம் குறைவான முகாமைத்துவமானது ஆசிரியர்களின் உயர்நிலைக்கான சவாலாகும். அத்துடன் சில ஆசிரியர்கள் பாட அறிவில் போதியளவு தேர்ச்சி அற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். வளர்ந்து வரும் நவீன உலகிற்கு ஏற்ற தொழில்நுட்ப அறிவு அற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். ஆசிரியர் பூரண ஆற்றல் உடையவராக இருப்பதனால் மட்டுமே அவரால் பயிற்றுவிக்கும் மாணவர்களும் பூரண ஆற்றலுடையவராக உருவாக முடியும். ஆகையால் ஆசிரியர்கள் இவ்வாறான தன்மைகளில் கவனம் செலுத்துவது அவசியமாகும். அத்துடன் ஆசிரியர்கள் அதிக வேலைப்பழுவினையும் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமன்றி பாடசாலைகளில் அதிகளவான காகித வேலையினாலும் பாட நேரம் போதாமை முதலியனவற்றாலும், ஆசிரியர்கள் நெருக்கீடுகளுக்கு முகம் கொடுக்கின்றனர். மேலும் பாடசாலைகளில் வளப்பற்றாக்குறை, ஆசிரிய-மாணவர்களுக்கிடையிலான தொடர்பில் இடைவளிகளும் பெற்றோரின் ஒத்துழைப்பின்மையும், வேண்டத்தகாத அரசியல் விளைவுகளும், இனத்துவ மதத்துவ முறுகல் நிலைகளும் ஆசிரிய சமூகத்தினை கற்பித்தலில் ஈடுபடுவதற்கு நெருக்கீடுகளை ஏற்படுத்துகின்றன. இவ்வாறான சூழ்நிலைகளில் ஆசிரியர்களால் மாணவர்களை நெறிப்படுத்தி வழிப்படுத்தி மாணவ சமுதாயத்தினை உயர் நிலைக்கு இட்டுச்செல்ல முடியுமா? என்பது ஜயப்பாடே ஆகும்.


ஆசிரியர், மாணவர்கள் சீரான நிலையில் இருப்பதன் மூலம் மாத்திரமே கற்றல் கற்பித்தல் சீரானதாக இடம்பெறும். அந்த வகையில் மாணவர்களது நிலையும் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் பிரதான பங்கினை வகிக்கின்றது. எனினும் முதலாளித்துவத்தின் வளர்ச்சியும், தொழில்நுட்பத் துறையில் அதீத முன்னேற்றங்கள், நுகர்ச்சிபண்பாட்டின் எதிர்மறைப்பண்புகள், இல்லாமையின் அழுத்தங்கள், போர்நிலைகளின் தாக்கம், இயற்கை சீற்றம் முதலிய காரணிகளால் மாணவ நடத்தையில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றன. அதன் படி மாணவர்கள் பாடசாலையில் இடைவிலகல். நேரம் தாழ்த்தி பாடசாலை செல்லல், பாடவேளைகளில் இடை நடுவே வௌpயேறல், வகுப்பறைச் செயற்பாடுகளை வலுவிழக்கச் செய்தல், கற்பித்தலின் போது இடையூறுகளைச் செய்தல், செயற்பாடுகளில் ஈடுபடாது தனிமைப்படல், வகுப்பறையில் மோதுதல் உடலுக்கு ஊறு விளைவித்தல், ஒப்படைகள் கணிப்பீடுகளை நிறைவேற்றாமை முதலிய நடத்தை மாற்றங்கள் தோன்றுகின்றன. இவை அனைத்தும் ஆசிரிய மாணவர்களின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளிலும் கல்வி வளர்ச்சியிலும் பாதிப்பினை உண்டு செய்கின்றன. மாணவர்களின் விருத்தியில் ஆசிரியரின் பங்கானது அளப்பரியதாகும். மாணவர்களின் நடத்தை மாற்றங்கள் ஆசிரியரின் கற்பித்தலுக்கு எதிராக காணப்படும் எனில் அங்கு கல்வி வெற்றியளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் பங்குவகிக்கும் கல்வி செயற்பாட்டில் ஆசிரியர்கள், மாணவர்களின் சவால்களாலும் நெருக்கீடுகளாலும் தாக்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாத விடயம் ஆகும். அந்த வகையில் பாடசாலையில் உள்ளமைந்த தொடர்புகளும் இடைவினைகளும் பாதிக்கப்படுதல், பாடசாலையில் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களும் அதற்கான நன்மை தரும் விளைவுகளும் வீழ்ச்சி அடைதல் இகற்பித்தல் செயற்பாடுகளை வினைத்திறனாக மேற்கொள்ள முடியாமை, மனதை ஒருங்குவிக்க முடியாமை, கூட்டாக தொழிற்பட முடியாமை, வெற்றிப் பாதையினை அடைய முடியாமை முதலிய பாதிப்புக்களை எதிர்கொள்ளும் நிலை உருவாகின்றது. இவை பாடசாலை மட்டத்தில் மட்டும் பாதிப்பினை ஏற்படுத்தாது மாணவர்களது எதிர்காலத்தினையும் எமது தேசத்தின் வளர்ச்சியினையும்கேள்விக்குறியாக்கும்.


நெருக்கீடுகள் நீடித்துச் செல்லும் நிலையினை தவிர்த்தல் மூலமே இவற்றினை சீராக்க முடியும். ஆசிரியர்கள் தம்மை திருத்திக் கொள்ளலும் மாற்றியமைத்தலும் அவசியமாகும். அத்துடன் பாடசாலையின் தொடர்புகளையும் இடைவினைகளையும் சீர்படுத்தல். உளரீதியான சிந்தனைகளை மாற்றியமைத்தல், பின்வாங்கும் செயற்பாடுகளை கைவிட்டு எதிர் சீராக்கலில் ஈடுபடுதல் முதலியவற்றின் மூலம் தாக்கத்தினை குறைத்துக் கொள்ள முடியும். அத்துடன் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஓய்வு தருவதன் மூலமும் சாதகமான நிலையினை உருவாக்கலாம். அத்துடன் தியான வழிமுறைகளை முன்னெடுத்து மனதை ஒருநிலைப்படுத்தல், அழுத்தங்களை கட்டுப்படுத்தல், உறுதியினை  வளர்த்தல், உடற்பயிற்சி, நல்ல பொழுது போக்குக்குகளையும் இவாசிப்பு ஆக்கச் செயற்பாடுகளில் ஈடுகொடுத்தல், அலெக்சாண்டரின் நுட்பமான தவறான உடற்கோலங்களையும் உடல் மொழிகளையும் மாற்றியமைத்து விரும்பத்தக்கபுதிய உடற் கோலங்களை உருவாக்கும் நுட்பத்தினை பயன்படுத்தல், அறிவினை வளர்க்கும் தற்படிமத்தினை வளர்த்தல் முதலிய அணுகு முறைகளில் ஈடுபடுவதன் மூலம் ஆசிரிய, மாணவர்களின் நெருக்கீடுகளை குறைத்து ஆசிரிய, மாணவர்களின் கற்றல் கற்பித்தலில் துரிதமான முன்னேற்றத்தினை உருவாக்க முடியும். 


இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்களாக தோற்றுவிக்கும் ஆசிரியப் பணியானது இவ் வையகம் நிலைத்திருக்கும் வரை உறுதியுடன் நிலைத்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கல்விச் செயற்பாடுகளை இங்கிதமாக முன்னெடுக்கும் ஆசிரியர்கள் சீரான பாதையில் செல்வதுடன் மாணவர் சமூகத்தினையும் சீரான பாதையில் இட்டுச் செல்ல பெரிதும் துணை புரிகின்றனர். மாறிவரும் சர்வதேச சூழலை கருத்திற்கொண்டு புதிய தலைமுறையினரை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். ஆசிரிய மாணவ உறவானது வெறுமனே தண்டனை உறவாக இல்லாது சுமூகமான உறவாக இருப்பது அத்தியாவசியம் ஆகும். “ஆசிரியப் பணியே அறப்பணி அதற்கே உன்னை அற்பணி” எனும் கூற்றின் படி ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையிலும் ஆசிரியர் முக்கிய பங்கு வகிக்கின்றார் என்பதனை எம் சமூகம் உணர்ந்து அதன்படி நடத்தல் வேண்டும்.


யோ. அகல்யா,

உதவி விரிவுரையாளர்,

கல்வி, பிள்ளை நலத்துறை,

கிழக்குப்பல்கலைக்கழகம்,

இலங்கை.

READ MORE | comments

மே மாத இறுதிக்குள் கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைக்க தீர்மானம்

Saturday, April 29, 2023

 


மே மாத இறுதிக்குள் கல்லூரிகளுக்கு புதிய மாணவர் குழுக்கள் இணைத்துக் கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த நேற்று (28) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்

மாணவர்களுக்கு ரூ. 5000 உதவித்தொகை மற்றும் வங்கிகள் மூலம் பணம் செலுத்தும் அடிப்படையில் ரூ. 15,000 கடன் தொகையும் வழங்கப்படுகிறது.

READ MORE | comments

IMF மீதான பாராளுமன்ற வாக்கெடுப்பு இன்று

Friday, April 28, 2023

 


சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான விரிவான நிதிக் கடன் வசதியை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பாராளுமன்ற விவாதம் மூன்றாவது நாளாக இன்று காலை ஆராம்பமாகியது.

இந்த பிரேரணைக்கு எதிராக தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிக் கடன் வசதியை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்வதற்கு எதிராக வாக்களிப்பதாகவும் உத்தர லங்கா கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிற்பகல் 01.00 மணிக்கு பாராளுமன்றத்தில் கூடி இது தொடர்பான பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்பின் போது எடுக்கப்படும் தீர்மானம் தொடர்பில் தீர்மானம் எடுப்பார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் இன்று காலை அறிவிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டையும் மக்களையும் பற்றி சிந்தித்து அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன நேற்று தெரிவித்தார்

READ MORE | comments

காலி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலினால் அதிகளவானோர் பலி


காலி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாகவும், இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் 26ஆம் திகதி வரையான நான்கு மாதங்களில் 19 எலிக்காய்ச்சல் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் காலி மாவட்ட தொற்று நோய் நிபுணர் எரந்த ஹெட்டியாராச்சி நேற்று (27) நடைபெற்ற காலி மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

காலி மாவட்ட செயலாளர் சாந்த விரசிங்க தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் இன்று வரை 224 எலிக்காய்ச்சல் பதிவுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இந்தக் காலப்பகுதியில் எலிக்காய்ச்சலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இந்த மரணங்களில் 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரும் உள்ளதாகவும், தற்போது மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் கரந்தெனிய, பத்தேகம, இமதுவ, பலபிட்டிய, உடுகம, யக்கலமுல்ல, ஹபராதுவ ஆகிய பிரதேசங்களில் பதிவாகியுள்ளதாகவும் அவர் விசேட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டிலிருந்து, இலங்கையில் எலிக்காய்ச்சலினால் அதிகளவான மரணங்கள் காலி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.

ஒரு வருடத்தில் ஒரு எலியிடம் இருந்து சுமார் 2000 எலிக் குஞ்சிகள் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், இலங்கை எலிக்காய்ச்சல், எலியின் சிறுநீர் மூலம் பரவினாலும், எருமை மற்றும் நாய் ஆகியவற்றிலிருந்தும் பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.

இதன் காரணமாக எலி பெருக்கத்தை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த வைத்தியர்

பொதுவாக, இந்த நோய், தினமும் வயல்களில் வேலை செய்பவர்களுக்குத்தான் வந்தது. ஆனால், தற்போது அந்த மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதால், வயலுக்குச் செல்வதற்கு முன்பே சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர்.கடந்த கால செய்திகளில், எப்போதாவது மற்றவர்களுக்கு உதவ வயலுக்குச் சென்றவர்கள், வயலுக்குச் சென்ற குழந்தைகள், காத்தாடி பறக்கச் சென்றவர்கள், வயல்களின் மூலம் மற்ற வேலைகளுக்கு. மேலும், சேறு மற்றும் நீர் சார்ந்த நிலங்களில் விவசாயம் செய்பவர்களும், கீரை கொத்து பயிரிடுபவர்களும் உள்ளனர்.

குறிப்பாக காலில் புண்கள் அல்லது காயங்கள் இருந்தால் வயலுக்கு செல்ல வேண்டாம் என்று சொல்கிறோம். சேற்று நீரில் செல்ல வேண்டாம். இந்த எலிக்காய்ச்சல் எலி சிறுநீரில் உள்ள பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா ஒருவரது உடலுக்குள் செல்லாமல் இருந்தால் இருபது நாட்கள் வெளியில் இருக்கும். இந்த பாக்டீரியா குப்பை கிடங்குகளிலும் காணப்படுகிறது.

எனவே, காய்ச்சல், உடல்வலி, வயலில் வேலை செய்தபின் தலைவலி, சேறு நிறைந்த நிலத்தில் வேலை செய்தல், குப்பை மேடுகளை சுத்தம் செய்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தகுதியான மருத்துவரை அணுகவும்

READ MORE | comments

சமூகமயமாக்கல் செயன்முறையின் குறைபாடுகள் காரணமாக தோன்றும் சமூகப் பிரச்சினைகள்*

Thursday, April 27, 2023



அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் அரசியல் சமூக மாற்றங்களாலும் உலகம் முழுவதும் பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு ஏற்ப சமூகமயமாக்கல் செயன்முறை இடம்பெற்ற வண்ணம் உள்ளது. இன்று உலகம் ஒரு சிறு கிராமமாக சுருங்கி விட்டது. இதனால் நாடுகளிடை யேயும் மக்களிடையேயும் இடைவெளி குறைந்து தொடர்புகள் அதிகரித்துள்ளன. இதனால் மனித சிந்தனைகளாலும் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள், பழக்க முறைகள், சமுதாய அமைப்புகள் போன்றவற்றாலும் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இவற்றுக்கு ஏற்ப ஆதி தொட்டு இன்றுவரை மனிதன் சமூகமயமாக்கலில் ஈடுபடுகிறான். மனிதன் சமூகமயமாக்கலினை சீராக மேற்கொண்டால் மாத்திரமே மனிதனாக வாழ முடியும். இல்லையெனில் மனிதனின் இயல்புத் தன்மை மாறி மனிதன் வாழ்வது கேள்விக்குறியாகிவிடு ம். ஆகையால் சமூகமயமாக்கல் செயன்முறை சீராக இடம் பெறுதல் அவசியம் ஆகும்.




எனினும் சமூக சசூழலையும் சமுதாயத்தையும் சரியாக புரிந்து கொள்ளாமலும் சமூகத்திற்கு ஏற்புடைய மனிதனாக இயைபாக்கம் பெறாமலும் மனிதனின் நடத்தை வேறு விதமாகவும் நடைமுறைக்கு எதிராகவும் செல்லும்போது சமூகமயமாக்கலில் குறைபாடுகள் தோன்றுகின்றன. 


சிறுபராயம் முதல் பிள்ளைகளை நெறிப்படுத்தாமை 


பிள்ளைகளின் தவறுகளை சீர் செய்யாமை 


உளவியல் ரீதியான தாக்கங்கள், வழிகாட்டுதல் இன்மை 


வாழும் சுழலில் உள்ள பிரச்சினைகள் குரோதங்கள் போன்ற காரணங்களால் மனிதனின் சமூகமயமாக்கல் செயன்முறையானது சிக்கல் அடைகின்றன. 


இத்தகைய குறைபாடுகளால் மனித சமுதாயத்தில் சமூகப் பிரச்சினைகள் உருவெடுக்கின்ற. அவையாவன, 

தற்கொலைகள் 

பிறழ்வு நடத்தைகள் 

பாலியல் சார்ந்த குற்றங்கள் 

போதைப்பொருள் பாவனை  

இன முரண்பாடு 

கலாச்சார சீர்கேடுகள் 

முறையற்ற ஆடை அலங்காரம் 

இளைஞர் விரக்தி 

குடும்ப முரண்பாடு, இளவயது திருமணம் 

 

தற்கொலை என்பது  விருப்பத்துடன் ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்ளும் செயலாகும். தற்கொலைகள் பெருமளவில் வறுமையால் ஏற்படுவதாக கூறப்பட்டாலும் தற்போது அதற்கான காரணங்கள் பல விதமாக அமைகின்றன. 


 பெற்றோரிடையே ஏற்படும் பிரச்சினை 

காதல் தோல்வி 

குடும்ப உறவுகளில் மனரீதியான அழுத்தம் 

சமுதாய ரீதியான ஒதுக்கம் 

சுய கௌரவத்திற்கு பங்கம் ஏற்படும் நிலை 

தாழ்வு மனப்பாங்கு

ஆளுமைக் குறைபாடு என்கின்ற எண்ணம் போன்ற நிலையில் மனிதன் தற்கொலை மேற்கொள்கின்றான்.


எனினும் இத்தகைய தற்கொலைகள் மனிதனின் மனம், உடல், அறிவு மூன்றும் சமூகத்துடன் இணைந்து செல்லாமையால் தோன்றுகின்ற பிரச்சினையாகும். பிரச்சினைக்கு முகம் கொடுப்பதற்கு பக்குவம் இன்றியும் தற்கொலைகள் இடம்பெறுகின்றன. குழந்தையினை சமூகப்படுத்தாது, வெளி உலகுக்கு அனுப்பாது, அதிக பாதுகாப்பு, அரவணைப்புடன் ஏனைய சிறுவர்களுடன் விளையாடுவதற்கு விடாது வீட்டினுள் வைத்து  பிள்ளையினை பெற்றோர் வளர்க்கும்போது, திடீரென பிள்ளை பல்கலைக்கழகம், கல்லூரிக்குச் கற்கச் செல்லும் போது விடுதிகளில் தங்கிக் கொள்ளும் நிலை தோன்றும். அதன் போது பிள்ளை அவற்றை முகம் கொடுக்க முடியாத நிலையில் பல்கலைக்கழக வாழ்வில் இடம்பெறும் சவால்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் தற்கொலை செய்கின்றது. இதற்கு அடிப்படைக் காரணம் குறித்த பிள்ளைக்கு சீரான சமூகமயமாக்கலின்மையாகும். 


அந்தவகையில் செப்டம்பர் 10 உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனமானது ஒரு வருடத்தில் 10 லட்சம் பேர் வரை தற்கொலை செய்கின்றார்கள் என்று குறிப்பிடுகின்றது. இவை அனைத்தும் சமூகமயமாக்கல் குறைபாட்டால் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் இவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் உள்ளன. அவையாவன 

பிள்ளைகள் பாடசாலையில் கற்கும்போதே வெற்றி, தோல்வியை சகஜமாக எண்ணுவதற்கான ஆற்றலை ஏற்படுத்துதல். 


பிள்ளைகளை வௌpயுலகத்துடன் தொடர்பு படுத்துவதில் ஆர்வம் காட்டுதல்


நண்பர்கள் சமூகத்துடன் அதிக நேரம் செலவழித்தல் 


 பிறருக்கு உதவி செய்தல் 


சமூக விடயங்களில் பங்கு கொள்ளுதல் 


சமூகத்தில் வாழ்வதற்கு பல வழிகள் உண்டு என்பதை உணர்ந்து செயற்படல்


உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்குதல் முதலிய பண்புகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் சமூகமயமாக்கல் மேற்கொண்டு தற்கொலைகளை தவிர்க்க முடியும்.


அதனை தொடர்ந்து சமூகமயமாக்கல் செயன்முறையையின் குறைபாட்டால் தோன்றும் சமூகப்பிரச்சனைகளுள் பாலியல் வன்முறைகளையும் குறிப்பிடமுடியும். பாலியல் வன்முறை என்பது பாலியல் நோக்குடன் அடிமைப்படுத்துதல், கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தல், வலிந்து கர்ப்பமாக்குதல், கட்டாய இனவிருத்தி, பாலியல் சார்ந்த மிரட்டல்கள், கருத்தரிப்பு போன்றவற்றை குறிப்பிட முடியும். இத்தகைய பாலியல் வன்முறைகள் சீரான சமூகமயமாதல் இன்மையால் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


படித்தவர்கள், ஏழைகள், பணக்காரன் என்ற பாரபட்சமின்றி ஆண்கள் மதுவுக்கு அடிமையாக உள்ளனர். இதனால் போதயில் சமூக விரோத செயலில் ஈடுபடுகின்றனர். அத்துடன் இணைய வசதிகளை தவறான வகையில் பயன்படுத்துவதனாலும்  வன்முறைகள் இடம் பெறுகின்றனர். இதனால் பெண்களையும் பெண் குழந்தைகளையும் வக்கிர புத்தியுடன் பார்ப்பதும் அணுகுவதுமான நிலை உண்டு.  அத்துடன் கட்டிளமை பருவத்தில் இருக்கும் ஆண்களும் பெண்களும் ஈர்ப்பின் காரணமாக அதனை காதல் என்று அர்த்தப்படுத்திக் கொண்டு தவறான நிகழ்வுகளில் ஈடுபடுகின்றனர். உலகில் ஏதோ  ஒரு இடத்தில் இத்தகைய வன்முறைகள் நாள்தோறும் இடம் பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறையினை ஆய்ந்தறிந்த உலக சுகாதார அமைப்பு இவ் வன்முறையை ஐந்து படிநிலைகளில் நடைபெறுவதாக கூறியுள்ளது. 


பிறப்பிற்கு முன்னர்  (கருவில் பெண் குழந்தைகளை அழித்தல்)


மழை பருவம் (பெண் குழந்தை பிறந்ததும் கொல்லுதல். இந்தியாவில் இந்நடைமுறை காணப்பட்டது.)


சிறுமியர் (பெண் சிறுமிகளை பாலியலுக்கு ஈடுபடுத்தல்) வளர்ச்சிப் பருவம் 


வளர்ந்தோர் (பெண்களுக்கு எதிரான செயற்பாடு) 


முதியோர் பருவம் 


பப்பு நியூக்கினி யில் 67.7% கிராமப்புற பெண்கள் வன்முறைக்கு உள்ளாகின்றனர். கனடாவில் 4 பேருக்கு ஒரு பெண் வன்முறையை அனுபவிக்கின்றார். தாய்லாந்தில் இருந்து சுமார் 10,000 பெண்கள் கடத்தப்படுகின்றனர், இந்தியாவில் வன்முறைகளாக வரதட்சனை கொடுமைகளும் காணப்படுகின்றன. இவற்றை தடுக்கும் வண்ணம் பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. எனினும் பாலியல் வன்முறைகள் நடவடிக்கைகள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. சீரான சமூகமயமாக்கல் அடையாதவர்கள் மூலம் இத்தகைய பிரச்சினைகள் இடம்பெறுகின்றன. 


ஆகையால் அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்வது அவசியமாகும். 


பாடசாலையிலிருந்து பிள்ளைகளுக்கு சமத்துவத்தை கற்பித்தல். 


ஆண் பெண் பாரபட்சமின்றி சம வாய்ப்புகளை வழங்குதல். 


சமூகம் பெண்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர்த்தல்


சமூக ஊடகங்களின் தவறான விடயங்களை பதிவேற்றுவதை தடுத்தல் 


உளவியல் பின்னடைவானவர்க்குஅதற்கான சிகிச்சையை பெற வைத்தல். போன்ற செயற்பாடுகள் மூலம் சமூகமயமாக்கல் மேற்கொள்ள முடியும். ஒவ்வொரு மனிதனும் இதனை மேற்கொள்வதன் மூலம் சமூக பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.


சமூகமயமாக்கல் குறைபாட்டினால் இன வர்க்க முரண்பாடுகள் தோன்றுவதையும் காணமுடிகின்றது. முரண்பாடு என்பது இரு குழுக்களுக்கிடையில் அல்லது இரு தனி மனிதர்களுக்கு இடையே ஏற்படுகின்ற போட்டித்தன்மை என குறிப்பிட முடியும். பொதுவாக முரண்பாடுகள் வலிமையான நபர் அல்லது குழுக்கள் வலிமை குறைந்தவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் போது ஏற்படுகின்றன. முரண்பாடு தோன்றுவதற்கான காரணங்களாக,


 மதரீதியான முறுகல் நிலை

வளங்களை பெறுவதில் சிக்கல்

மொழி ரீதியான தாக்கம்

தௌவற்ற பொறுப்புகள், தொடர்பாடல் சிக்கல்கள்

ஆதிக்கப் போக்கு போன்றவற்றால் தோன்றுகின்றன. 


இத்தகைய முரண்பாடுகளுக்கு அடிப்படை காரணி சமூகத்தில் சீரான சமூகமயமாக்கல் இன்மையே ஆகும். சமூக மக்கள் வேறுபாடுகளை கழைந்து ஒற்றுமை, சமாதானம் என்பனவற்றை மையப்படுத்திய ஒன்றே குலம் மனிதகுலம் என்ற தொனிப் பொருளின் அடிப்படையில் இணைவதால் முரண்பாடுகள் சமூகத்தில் தோன்றாது இருக்க வழிவகுக்கும். எனினும் சீரான இடைத்தொடர்பின்மை சமூகமயமாக்கலில் வேற்றுமை நிலை அதிகரிக்கும் போது அங்கு இன முரண்பாடுகள் உருவாக்கம் பெறும். இதன் தாக்கம் எமது இலங்கை நாட்டில் உள்ளமையினை அவதானிக்க முடிகின்றது.


சமூகமயமாக்கலின் குறைபாட்டால் கலாச்சாரச் சீர்கேடும் சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளன. கலாச்சாரம் என்பது பொதுவாக மனித செயற்பாட்டு கோலங்களையும் அத்தகைய செயற்பாடுகளுக்கு சிறப்புத் தன்மைகளையும் முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புகளை குறிக்கிறது. சமூகத்தை நல்வழியில் கொண்டு போக உதவும் ஒரு வழிபாட்டு முறையாக கலாச்சாரம் அமைகிறது. ஒவ்வொரு சமூகமும் கலாச்சார நெறிமுறைகள், கலாசார பழக்க வழக்கங்கள், கட்டமைப்புகள், நம்பிக்கைகள், ஆடை, உணவு உள்ளிட்ட அனைத்தும் உள்ளன. 


நாகரீகம், நவநாகரீக வளர்ச்சி என படிப்படியாக மக்களது பண்பாடு, கலாசாரம் மாற்றம் காண்பதனை காணமுடிகின்றது. முன்னோர்கள் காலம் காலமாக கட்டிக்காத்த சமூக கலாச்சாரங்கள் சமூகமயமாக்கலின் குறைபாட்டால் தற்போது கலாசார சீர்கேடுகளாக உருவெடுத்துள்ளன. நாகரீகத்துக்கு ஏற்ப இசைவாக்கம் பெறுவது இயல்பு ஆனால் எமது கலாச்சாரத்தினை அவமரியாதை செய்வது சிறந்த சமூகமயமாக்கல் அல்ல. இன்றைய கலாச்சார சீரழிவுக்கு முக்கிய காரணம் சந்தைக் கலாச்சாரமும் அது உருவாக்கிய பொய்கள் பொய்களை முன்னிறுத்திக் கொண்டாடும் ஊடகங்கள் அதில் உருவான பொய்யான நாகரிகமே காரணங்களாகும். இவற்றை தனி மனிதன் சமூகப் புரிந்துணர்வின்றி பின்பற்றுவதும் அதனால் ஏற்படுகின்ற நிலையுமே கலாசார சீர்கேட்டுக்கு அடிப்படை காரணமாகின்றது. 

 

இவற்றுக்குக் காரணம் தனி மனிதன் சீரான சமூகமயமாக்கலில் ஈடுபடாமையே ஆகும். குறித்த கலாச்சாரத்தில் உள்ள மரபுகள் பழக்க வழக்கங்கள் கொள்கைகள் விதிமுறைகள் கருத்துக்களுக்கு ஏற்ப இயைபாக்கம் பெற்று சமூகமயமாக்கலை கடைப்பிடிக்க தெரியாத நபர்கள் நாகரிகத்தின் தவறாக பயன்படுத்துகின்றனர். அதிகரித்துவரும் smart phone பாவனையால் அதிக சீர்குலைவுகள் இடம் பெறுவதைக் காண முடியும்.


சமூகமயமாக்கல் குறைபாட்டால் எழும் பிரச்சினைகளில் போதைப்பொருள் பாவனையும் ஒன்றாக காணப்படுகின்றது. சமூகத்துடன் இணைந்து சமூகத்திற்கு ஏற்ப வாழும் மனிதன் போதைப் பொருளுக்கு அடிமையாகமாட்டான். எனினும் சமூகத்துடன் இணையாத நபர்கள் வேறு பாதையில் பயணிப்பதற்காக போதைப்பொருளை பயன்படுத்துகின்றனர். 1987 ஆம் ஆண்டு. ஐ.நா வின் தீர்மானத்தின்படி ஜூன் 26 போதைப்பொருள் தடை தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. உலகம் முழுவதும் 200 மில்லியன் பேர் போதைப்பொருள் பாவிப்பவர்களாக உள்ளனர். மக்கள் சமூகத்திற்கும் ஆரோக்கியத்துக்கும் எதிரான உலகளாவிய ரீதியில் எழுந்துள்ள பிரச்சினையாக போதைப்பொருள் பாவனை காணப்படுகின்றது. போதைப்பொருள் பாவனையால் தனிமனிதன், குடும்பம், சமுதாயம் என பல வகையிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.


தனி மனிதன் தன் சிந்தனையில் போதையினுள் புதைத்து மன மயக்கத்தையும் குழப்பத்தையும் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்கிறான். போதைப் பொருட்களாக மது, ஹெராயின் ஊசி, கஞ்சா, புகையிலை, பான்மசாலா, அபின் போன்றன காணப்படுகின்றன. உலக சனத்தொகையில் சுமார் 100 கோடி பேர் புகைப்பிடிக்கின்றனர். அவ்வாறே ஏனைய போதைப்பொருட்களுக்கும் அடிமையாகியுள்ளனர்.


இத்தகைய போதை பொருளுக்கு அடிமையானவர்களால் குடும்ப வாழ்க்கை, சமுதாய அந்தஸ்து, அலுவலக வேலை, நட்பு, உறவினர்கள் தொடர்புகள் என எல்லாவற்றிலும் விரிசல் ஏற்படுகின்றன. போதை என்பது தனிமனிதனை மட்டும் பாதிக்கும் பழக்கம் என எண்ணிவிட முடியாது. இதனால் அவனை சூழவுள்ள சமுதாயம் பாதிப்படைகின்றது.


மேலும் வாகனம் ஓட்டுபவர்கள் போதைக்கு அடிமையானால் அவர்களால் சமூகரீதியாக விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. அத்துடன் போதைக்கு அடிமையானவர்கள் சிறிது சிறிதாக அற்ப இன்பதற்காக திருடுதல், பொய் பேசுதல் மற்றும் மானக்கேடான செயலில் ஈடுபடுதல் போன்றனவற்றில் இணைகின்றனர். இவர்கள் சமூக விரோத செயல்களுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். இதனால் சமூகம் சீரழிகிறது. ஆகையால் முறையான சமூகமயமாக்கல் மூலம் இதனை தடுக்க முடியும். அதன்படி விழிப்புணர்வு வழங்கல், மறுவாழ்வு அளித்தல், நற்சிந்தனை ஊட்டுதல், ஆன்மீகத்தில் உள் வாங்குதல் போன்ற சமூகமயமாக்கல் செயல்முறைகள் மூலம் இதனை தடுக்க முடியும்.


இவ்வாறு சமூகமயமாக்கலில் ஏற்படும் குறைபாட்டினால் சமூகப் பிரச்சினைகள் எழுவதனை அறியமுடிகின்றது. ஆகையால் சமூகத்தில் வாழும் மனிதர்கள் தான் வாழும் சமூகத்தில் குறைபாடு இன்றி சமூகமயமாக்கலில் ஈடுபடுவதன் மூலம் சமூகப் பிரச்சினைகள் ஏற்படாது தடுக்க முடியும்.


யோ. அகல்யா,

உதவி விரிவுரையாளர்,

கல்வி, பிள்ளை நலத்துறை,

கிழக்குப்பல்கலைக்கழகம்

இலங்கை.

READ MORE | comments

காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமியின் உயிரைக் காவு கொண்ட அதிகளவு பரசிட்டமோல் வில்லைகள் : காரணம் வெளியானது!

Wednesday, April 26, 2023

 


காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 7 வயதுச் சிறுமியொருவர் அதிகளவு பரசிட்டமோல் வில்லைகளை உட்கொண்டு உயிரிழந்துள்ளதாக கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.


உடுவெல்ல, உடுஹெந்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஷாமலி தருஷி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். இவர் பாடசாலையொன்றில் 2ஆம் தரத்தில் கல்வி கற்றவராவார்.

கம்பளை பிரதேச வைத்தியசாலையில் இரண்டு தடவைகள் சிறுமியின் பெற்றோர் மருந்தை பெற்றுள்ளனர்.

இருப்பினும், மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்தளவுக்குப் பதிலாக வைத்தியசாலையின் மருந்தகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட வயது வந்தோருக்கான டோஸ் குழந்தைக்கு வழங்கப்பட்டதால் சிறுமி இந்த மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்டுள்ளார். இதனையடுத்தே, இந்த மரணம் நிகழ்ந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
READ MORE | comments

நெடுந்தீவு படுகொலை - சந்தேகநபருக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு..!

Tuesday, April 25, 2023

 


நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து, 100 வயதான மூதாட்டிக்கு கடும் காயங்களை ஏற்படுத்தி, நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைதான நபரை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே. கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை நெடுந்தீவு இறங்கு துறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து ஐந்து முதியவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதுடன் , 100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு , யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த  காவல்துறையினர் , குறித்த வீட்டில் சம்பவம் இடம்பெற்ற தினத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்பிருந்து தங்கியிருந்த நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

9ஆம் திகதி வரையில் விளக்கமறியல்

நெடுந்தீவு படுகொலை - சந்தேகநபருக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு..! | Jaffna Neduntheevu Murder Judge Order

குறித்த நபர் வெளிநாடொன்றில் வசித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அந்நாட்டில் இருந்து , இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டவர் எனவும் , அவரிடம் இருந்து கொலையானவர்களின் உடைமைகள் மற்றும் நகை உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் முற்படுத்திய  காவல்துறையினர் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக 48 மணி நேரம் காவல்துறை காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதிக்க வேண்டும் என மன்றில் கோரினர்.

காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மன்று , 48 மணி நேரத்தின் பின்னர் சந்தேகநபரை மன்றில் முற்படுத்துமாறு பணித்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தேக நபரை சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு அழைத்து சென்ற காவல்துறையினர் , சம்பவ இடத்தில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி , மற்றும் , கொலை செய்யும் போது உடுத்தியிருந்த சாரம் என்பவற்றை குறித்த வீட்டின் கிணற்றில் இருந்து  மீட்டு இருந்தனர்

அதனை அடுத்து மேலதிக விசாரணைகள் முடிவடைந்த நிலையிலும் மன்றினால் வழங்கப்பட்ட 48 மணிநேர அவகாசம் முடிவடைய இருந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சந்தேகநபரை முற்படுத்தினர்.

அதனை அடுத்து சந்தேகநபரை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

READ MORE | comments

ஹர்த்தாலினால் மட்டக்களப்பும் முடங்கியது!

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தாலையடுத்து அனைத்து வர்த்தக நிலையங்கள், பொதுசந்தைகள் மூடப்பட்டு போக்குவரத்து இன்றி வீதிகள் வெறிச்சோடி மாவட்டத்தில் அனைத்து நிர்வாக செயற்பாடுகளும் இன்று(செவ்வாய்க்கிழமை) முடங்கியுள்ளது.

புதிய உத்தேச பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஹர்த்தாலுக்கு இன்று அழைப்பு விடுத்தனர்.

இதனையடுத்து இன்று மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் வர்தக நிலையங்கள் மற்றும் பொது சந்தைகள் முற்றாக மூடப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கு மாணவர்கள் எவரும் சமூகமளிக்காததையடுத்து பாடசாலைகள் முடங்கியுள்ளன.

போக்குலரத்து இடம்பெறாததையடுத்து வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதுடன், அனைத்து செயற்பாடுகளும் முற்றாக முடங்கியுள்ளன




READ MORE | comments

தேசிய கல்விக் கொள்கைச் சட்டகத்தை தயாரிக்க ஜனாதிபதி தலைமையில் விசேட குழு நியமனம்!

 


நாட்டின் பொருளாதார நிலைபேற்றுத் தன்மையை அடையும் செயன்முறையில் துரிதமாக மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்த வேண்டிய முக்கிய துறையாக கல்வித்துறையை அரசு அடையாளங் கண்டுள்ளது.

அதற்கமைய, குறித்த அனைத்துப் பங்கீட்டாளர்களின் ஒத்துழைப்புடன் புதிய கல்விக் கொள்கைச் சட்டகத்தை தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. 

அடுத்துவரும் 25 ஆண்டுகளுக்கான தேசியக் கல்விக் கொள்கைச் சட்டகம் மற்றும் ஏற்புடைய அனைத்து மறுசீரமைப்புக்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து முன்னுரிமை அடிப்படையில் அமுல்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதற்காக ஜனாதிபதி தலைமையில் மற்றும் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரின் பங்கேற்புடன் 10 உறுப்பினர்களுடன் கூடிய அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்காக ஜனாதிபதி  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

READ MORE | comments

பரீட்சையின்றி அனைத்து சாதாரண தர மாணவர்களையும் உயர்தரத்துக்கு அனுப்ப கோரிக்கை


 

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இன்று பாராளுமன்றில் உரையாற்றிய அமைச்சர், க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பெண் வழங்குவதில் உருவாகியுள்ள தாமதம் காரணமாக தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 600,000 மாணவர்களால் க.பொ.த உயர்தரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்துவது தொடர்பில் பரிசீலிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த அழகப்பெரும, அதற்குப் பதிலாக அனைத்து மாணவர்களும் உயர் தரக் கல்வியை ஆரம்பிப்பதற்கு தகுதியுடையவர்கள் என பரீட்சை திணைக்களத்தின் சான்றிதழை வழங்குமாறும் அறிவுறுத்தினார்.


இந்த நடவடிக்கையானது, க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை மீண்டும் டிசம்பரில் நடத்துவதற்கு அதிகாரிகளுக்கு இடமளிக்கும் என்றும், மாணவர்களுக்கு அநீதியை ஏற்படுத்தாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

READ MORE | comments

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆபத்து - அவசரமாக மூடப்பட்ட ஒரு பகுதி

Saturday, April 22, 2023

 


தேசிய கண் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவுகள் அனைத்தும் திடீரென மூடப்பட்டுள்ளன.

பக்டீரியா தொற்றுக்குள்ளான பல நோயாளிகள் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

எடுக்கப்பட்ட நடவடிக்கை

பக்டீரியா பரவாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆபத்து - அவசரமாக மூடப்பட்ட ஒரு பகுதி | Colombo National Hospital Surgery Ward Closed

மேலும் குறித்த நோயாளிகளின் உடலில் பக்டீரியா எவ்வாறு சென்றதென்பது எங்களுக்கு குழப்பமாக உள்ளது. அதனை கண்டறிவதற்கான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பக்டீரியா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் மருந்து வகை குறித்தும் தகவல் கிடைத்துள்ளது. அதற்கமைய, அந்த மருந்து உடனடியாக திரும்ப கோர சுகாதார அமைச்சு திரும்ப கோரும் என தான் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையின் மாணவன் சஞ்சீவ் தேசிய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் முதலிடம்

Thursday, April 20, 2023

 


மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையின் 2022 உயர்தரத்தை சேர்ந்த மாணவன் தர்மலிங்கம் சஞ்சீவ் அவர்கள் தேசிய மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் தேசிய மட்டத்தில் முதல் இடத்தை பெற்று  பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

READ MORE | comments

10 வருடங்களுக்கு மேலாக இடமாற்றம் பெறாத 170 ஆசிரியர்களை இடமாற்றம் செய்த பணிப்பாளரின் துணிச்சலை பாராட்டுகின்றோம் : கல்முனை கல்வி வலய அதிபர் சங்கம்




நூருல் ஹுதா உமர்

கல்வி அமைச்சின் 20/2007ம் இலக்க தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக மிகவும் துணிச்சலோடு நீண்ட காலமாக மேற்கொள்ளப்படாத இடமாற்றத்தை புதிதாக வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையேற்ற எம்.எஸ். சஹ்துல் நஜீம் அவர்கள் மிக வெற்றிகரமாக எதிர்கொண்டு முடித்தமையானது கல்முனை கல்வி வலயத்தின் கல்வி வளர்சியில் அவர் ஆற்றிய மதத்தான சேவையாகும். இது பாடசாலை வளர்ச்சியிலும் பொதுவாக கல்முனை கல்வி வலயத்தின் கல்வி வளர்ச்சிக்கும் முக்கியமான அம்சமாக இருப்பதாக கல்முனை கல்வி வலய அதிபர் சங்கத்தின் தலைவர் இசட். அஹமட் செயலாளர் ஏ.ஜி.எம்.றிசாத் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்முனை கல்விவலயத்தில் நீண்டகாலமாக ஒரே பாடசாலையில் பத்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய ஆசிரியர் இட மாற்றமானது மேற்கொள்ளப்படாதிருந்தமை கவலை அளித்த போதிலும் அதனை துணிச்சலோடு பொறுப்பேற்று அந்த இடமாற்றத்தை புதிய வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் வெற்றிகரமாக செய்து முடித்ததையிட்டு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் கடந்த பத்து வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் 170க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படாமல் அப்பாடசாலையிலேயே சேவையாற்றி இருந்தபோதும், இப்போது நடைபெற்றதை போன்ற இவ்வாறான இடமாற்றங்கள் வருடாந்தம் இடம்பெறவேண்டும் எனவும், இதன் ஊடாகவே பாடசாலைகளின் தேவையான ஆசிரியர் பங்கீடு சீராக செய்ய முடியும் எனவும்,  அதேபோன்று ஒரு ஆரோக்கியமான, சிறப்பான கல்வி வளர்சிக்கு இது துணைபுரியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
READ MORE | comments

பால் மா விலையை மேலும் குறைக்க பால் மா இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம் !

Wednesday, April 19, 2023

 


எதிர்வரும் நாட்களில் பால்மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நாட்டிலுள்ள பிரதான பால் மா இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்

அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்த இணக்கத்தை வெளிப்படுத்தப்பட்டதாக பேஸ்புக் பதிவொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பான அறிக்கை விரைவில் வர்த்தக அமைச்சகத்துக்கு அனுப்பப்பட உள்ளதாக வர்த்தக அமைச்சர் அந்தப் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

READ MORE | comments

அதிக வெப்பம் ! எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாகாணங்களும் மாவட்டங்களும் !

 


தெற்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களும் மொனராகலை, குருணாகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.


இந்தப் பகுதிகளில் மனித உடல் வெப்பநிலை தீவிர எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியிடங்களில் தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிர்க்குமாறும் அதிக நீரை பருகுமாறும் வெளிர்நிறத்திலான மெல்லிய ஆடையை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
READ MORE | comments

இளம் பெண் ஆசிரியை பாலியல் வன்கொடுமை செய்த அதிபர் கைது!

Tuesday, April 18, 2023


 இளம் பெண் ஆசிரியை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றின் 60 வயதுடைய அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தனியார் பாடசாலை நேற்று (17) மூடப்பட்டிருந்த போதிலும் சந்தேகநபரான அதிபர் 22 வயதுடைய இளம் ஆசிரியையை விசேட கடமையின் காரணமாக பாடசாலைக்கு வருமாறு அறிவித்துள்ளார்.

பின்னர், உரிய அறிவிப்பை தொடர்ந்து, இந்த ஆசிரியர் நேற்று மதியம் பாடசாலைக்கு வந்தார்.

ஆசிரியை தனது கடமைகளை முடித்துக் கொண்டு வெளியில் செல்ல தயாரான போது சந்தேகநபரான அதிபர் அவரை கட்டிப்பிடித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், அந்த ஆசிரியை அங்கிருந்து தப்பிச் சென்று மினுவாங்கொடை பொலிஸ் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்தார்.

அதனையடுத்து, இது தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் அதிபர் கைது செய்யப்பட்டார். பின்னர், இளம் ஆசிரியருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

சந்தேகத்திற்குரிய அதிபரிடம் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

READ MORE | comments

25ம் திகதி முடங்கப்போகும் தமிழர் தாயகம்..!

 


தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட பௌத்தமய மாக்கல் செயற்பாடுகளை நிறுத்தக்கோரியும், பயங்கரவாத எதிர்ப் புச் சட்டத்தை நிறைவேற்றுவதை நிறுத்தக்கோரியும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் முழுவதும் எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப்போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

இது தொடர்பில் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான க.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்ததாவது:-

எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு முன்வைக்கப்படுகின்றது. அன்றையதினம் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டு நாடாளுமன்றத்தினுள் வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறியல் போராட்டத்தை முன்னெடுப்பார்கள்.

முழு அடைப்புப் போராட்டம்

25ம் திகதி முடங்கப்போகும் தமிழர் தாயகம்..! | The North Will Be Paralyzed On The 25Th

இந்தப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவை வழங்கும். அதேநாளில் தமிழர் தாயகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு எதிர்ப்பு வெளியிடுவது மாத்திரமல்லாமல் இங்கு முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பை வெளிக்காட்டுவது இதன் நோக்கமாகும். இந்தப் போராட்டத்துக்கு முஸ்லிம் மற்றும் மலையகக் கட்சிகளும் ஆதரவை வழங்கவுள்ளன - என்றார்.

கல்வியன்காட்டிலுள்ள ஈ.பி.ஆர்.எல். எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் நேற்றுக்காலை கூடினர்.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியினர், தமிழ்த் தேசியக் கட்சியினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

READ MORE | comments

எதிர்க்கட்சி அரசாங்கத்தில் இணைகிறதா..! சஜித் விசேட அறிக்கை

Monday, April 17, 2023


ஐக்கிய மக்கள் சக்தியும் நாமும் அமைச்சுப் பதவிகளைப் பகிர்தல் போன்ற மானியச் சலுகைகளின் அடிப்படையில் அரசாங்கத்தில் இணையத் தயாராகி வருகிறோம் என்ற புதிய செய்தியை அரசாங்க சார்பு குழுக்கள் உருவாக்கி சமூகமயமாக்கியுள்ளன.

இந்தப் போலிச் செய்தியை முற்றாக நிராகரிப்பதுடன், போலிச் செய்தியைப் போலவே அதனை இழிவாகவும் கண்டிக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தோல்வியான நிகழ்ச்சி நிரல்

எதிர்க்கட்சி அரசாங்கத்தில் இணைகிறதா..! சஜித் விசேட அறிக்கை | Sajith Issues Special Statements Sjb

“படுமோசமான ராஜபக்ச அரசாங்கத்தின் நீட்சியாக இருக்கும் தற்போதைய அரசாங்கம், முன்னைய அரசாங்கத்தை விடவும் மோசமாக பாதாளத்திற்கு எமது நாட்டைத் தள்ளுவதாக ஆரம்பம் முதலே எச்சரிப்பதோடு, விரைவில் இந்த அரசாங்கத்தின் தோல்வியடைந்த வேலைத்திட்டம் அப்பட்டமாக வெளிப்படும் என்பதில் சந்தேகமில்லை.

மொட்டுவின் நிழல் அரசாங்கமாக மாறிவரும் இந்த அரசாங்கம் ஐக்கிய மக்கள் சக்தி குறித்து போலியான செய்திகளை பரப்பி தனது தோல்வியான நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த முயன்றது.

முதலாளித்துவ கும்பல்கள் மற்றும் பிற்போக்கு சக்திகளின் ஒரே சவால் எமது ஐக்கிய மக்கள் சக்தியாகும். அந்தக் கும்பல் ஐக்கிய மக்கள் சக்தியை சேதப்படுத்துவதற்கு எந்த விலையையும் கொடுக்க இருமுறை யோசிப்பதில்லை.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஒரு குழு அரசாங்கத்தில் இணையப்போவதாக ஆரம்பத்தில் போலியான செய்திகளை வெளியிட்ட கும்பல், பிரதமர் பதவிக்காக ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணையும் என்பதை தங்களின் சமீபத்திய உத்தியாகப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு அப்பட்டமான பொய் என்பதுடன் ஆதாரமற்ற பொய்யான செய்தியுமாகும்.

அந்தக் கும்பலுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் தீர்க்கமான பிளவு கோடு என்னவென்றால், நாங்கள் மக்கள் ஆணை மற்றும் வெளிப்படைதன்மையை நம்பும் அதே வேளையில், அவர்கள் டீல் மற்றும் மறைமுக தன்மையை நம்புகிறார்கள்.

இந்தத் துரதிர்ஷ்டவசமான விதியிலிருந்து எமது நாட்டை தேர்தலாலொன்றால் காப்பாற்ற முடியாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இந்நாட்டில் இயங்கும் நாகரீக ஊடகங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுமாறு தொடர்ச்சியாக பல முயற்சிகளை மேற்கொண்டு ஊடகங்களை துஷ்பிரயோகம் செய்து போலிச் செய்திகளை வெளிப்படுத்திய ஒரு சில கைக்கூலி ஊடகங்களுக்கு வலியுறுத்திக் கூறுகிறோம்.

அவர்களுக்குக் கொடுக்கப்படும் விலைக்காக எந்தவொரு கட்டுக்கதையையும் சமூகமயமாக்குவதற்குப் பதிலாக, அவர்கள் ஊடகங்களை புத்திசாலித்தனமாகவும் நெறிமுறையாகவும் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம்.

இருப்பினும், அவர்களின் எஜமானரின் கருத்தை பிரபலப்படுத்த அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் எங்கள் அனுதாபத்தை தெரிவிக்கிறோம்.

உண்மையால் மக்களை மாற்ற முடியும்

எதிர்க்கட்சி அரசாங்கத்தில் இணைகிறதா..! சஜித் விசேட அறிக்கை | Sajith Issues Special Statements Sjb

மக்களால் உண்மையை மாற்ற முடியாது என்றாலும், உண்மையால் மக்களை மாற்ற முடியும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

இப்போது கடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் நம் நாட்டின் அப்பாவி மற்றும் ஆதரவற்ற மக்களின் வாழ்க்கையின் தலைவிதிக்கு தீர்க்கமானது என்பதை நாங்கள் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம்.

அந்த மக்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியடையச் செய்வதற்கு நேரத்தை ஒதுக்குவதற்குப் பதிலாக, வெறுப்பும், பேரம் பேசுவதும், சதிகள் மற்றும் உல்லாசப் பேரரசர்களின் அரசியலை மட்டும் முன்னெடுப்பது தொடர்பில் எங்களது கடுமையான அதிருப்தியினை இந்த எதேச்சதிகாரமான துரதிஷ்டமான அரசாங்கத்திற்கு எமது எதிர்ப்பினை தெரிவிக்க விரும்புகின்றோம்” - என்றுள்ளது

READ MORE | comments

மட்டக்களப்பில் ரயிலில் மோ து ண் டு ஒருவர் ப லி

Friday, April 14, 2023

 


மட்டக்களப்பு புகையிரத நிலைய புகையிரத கடவையில் இருந்து ஆணொருவரின் சடலம்  இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

சத்துருக்கொண்டான் பகுதியை சேர்ந்த ராசநாயகம் ரமேஸ்குமார் (45 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் நேற்று வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல் போயிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த நபர் நேற்று வியாழக்கிழமை இரவு பயணித்த ரயிலில் அல்லது இன்று அதிகாலை பயணித்த ரயிலில் மோதுண்டு உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

READ MORE | comments

பண்டிகை காலத்தில் எரிபொருள் விநியோகம் குறித்த அறிவிப்பு!


 கடந்த வாரத்தில் தேசிய எரிபொருளின் விற்பனை மற்றும் QR குறியீடு மூலம் எரிபொருளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

முந்தைய வாரத்தில் QR குறியீடு மூலம் எரிபொருள் விற்பனை குறைவாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 66 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதன் பின்னர், 60% ஆக இருந்த QR குறியீட்டைப் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் விற்பனை 80% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பண்டிகை கால எரிபொருள் தேவைக்கு ஏற்ப, அடுத்த சில நாட்களுக்கு நாளாந்த எரிபொருள் விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, 4,650 மெற்றிக் தொன் 92 ரக பெற்றோல் மற்றும் 5,500 மெற்றிக் தொன் ஆட்டோ டீசல் நாளாந்தம் வழங்கப்பட்டு விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். .

READ MORE | comments

போதைப்பொருள் பாவித்த 09 பேர் கைது : நிந்தவூரில் சம்பவம் !

Thursday, April 13, 2023

 


பாறுக் ஷிஹான்)

புனித ரமழான்   மாதத்தில் போதைப்பொருள்  பாவனையில் ஈடுபட்ட  09 பேர்  நிந்தவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  ஜேர்மன் நட்புறவு பாடசாலை அருகில் உள்ள   பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமாக பலர் நடமாடுவதாக பொலிஸ் விசேட பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கமைய  நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் தலைமையில்  சுற்றிவளைப்பு புதன்கிழமை(12) இரவு மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது 9 சந்தேக நபர்கள் பல்வேறு போதை தரக்கூடிய பொருட்களுடன் கைதாகியுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை  கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு வேளைகளில் சந்தேகத்திற்கிடமாக நடமாடி ஆளடையாளங்களை உறுதிப்படுத்த தவறியவர்களும் சந்தேகத்தின் அடிப்படையில் தினமும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

READ MORE | comments

மசாஜ் நிலையத்தில் ஒருவர் உயிரிழப்பு

Wednesday, April 12, 2023

 


கந்தானை பகுதியில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 42 வயதுடையவர் என தகவல் வெளியாகியுள்ளது.

கந்தானை நாகொட பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் நேற்று நள்ளிரவு மசாஜ் நிலையத்துக்கு வந்துள்ளார். பின்னர் இன்று காலை அந்த நபர் அங்கு உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |