Advertisement

Responsive Advertisement

போதைப்பொருள் பாவித்த 09 பேர் கைது : நிந்தவூரில் சம்பவம் !

 


பாறுக் ஷிஹான்)

புனித ரமழான்   மாதத்தில் போதைப்பொருள்  பாவனையில் ஈடுபட்ட  09 பேர்  நிந்தவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  ஜேர்மன் நட்புறவு பாடசாலை அருகில் உள்ள   பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமாக பலர் நடமாடுவதாக பொலிஸ் விசேட பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கமைய  நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் தலைமையில்  சுற்றிவளைப்பு புதன்கிழமை(12) இரவு மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது 9 சந்தேக நபர்கள் பல்வேறு போதை தரக்கூடிய பொருட்களுடன் கைதாகியுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை  கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு வேளைகளில் சந்தேகத்திற்கிடமாக நடமாடி ஆளடையாளங்களை உறுதிப்படுத்த தவறியவர்களும் சந்தேகத்தின் அடிப்படையில் தினமும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments