நாட்டின் பொருளாதார நிலைபேற்றுத் தன்மையை அடையும் செயன்முறையில் துரிதமாக மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்த வேண்டிய முக்கிய துறையாக கல்வித்துறையை அரசு அடையாளங் கண்டுள்ளது.
அதற்கமைய, குறித்த அனைத்துப் பங்கீட்டாளர்களின் ஒத்துழைப்புடன் புதிய கல்விக் கொள்கைச் சட்டகத்தை தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.
அடுத்துவரும் 25 ஆண்டுகளுக்கான தேசியக் கல்விக் கொள்கைச் சட்டகம் மற்றும் ஏற்புடைய அனைத்து மறுசீரமைப்புக்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து முன்னுரிமை அடிப்படையில் அமுல்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதற்காக ஜனாதிபதி தலைமையில் மற்றும் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரின் பங்கேற்புடன் 10 உறுப்பினர்களுடன் கூடிய அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments: