மட்டக்களப்பு வாழைச்சேனையில் பொலிசாரால் ஐந்து கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது

Saturday, January 31, 2015


வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் விற்பனைக்காக கொண்டு சென்ற கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களும், முச்சக்கர வண்டி ஒன்றும் வெள்ளிக்கழமை இரவு கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.


வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கஞ்சா வியாபாரம் இடம் பெருவதை குறைக்கும் வகையில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஓ.எஸ்.விதானகேவின் வழிகாட்டலில் விஷேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கும்புறுமூலை பிரதேசத்தில் வைத்து சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை பரிசோதனை செய்யும் போதே முச்சக்கர வண்டியில் ஏறாவூர் பகுதியில் இருந்து வாழைச்சேனை பிறைந்துரைச்சேனைக்கு கொண்டுவரப்பட்ட ஐந்து கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், அந்த கஞ்சாவை கொண்டு வந்த பெண் ஒருவரும், முச்சக்கர வண்டி சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த கஞ்சா வியாபாரத்துடன் குறித்த பெண்னுடன் வேரு எவர்களும் தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.




READ MORE | comments

கோர விபத்து ; இருவர் மரணம் - அதிர்ச்சிப் புகைப்படங்கள்

இந்த விபத்தில் பொலநறுவையை சேர்ந்த பிரசந்த (வயது 28), நுவரேலியாவைச் சேர்ந்த றொசாந் (வயது 35) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியின் பின்புறமாக மோதியது.

இதனால் முச்சக்கர வண்டியில் பயணம் செய்தவரும் சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தென்னிலங்கையை சேர்ந்த இருவரும் யாழ்ப்பாணத்தின் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
READ MORE | comments

ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக 2000 முறைப்பாடுகள் பதிவு

ராஜபக்ச குடும்பத்தினரினதும் அரசியல்வாதிகளினதும் ஊழல் தொடர்பிலான முறைப்பாடுகள் 2000 பதிவாகியுள்ளதுடன், 30 முறைப்பாடுகளே இலங்கை ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலுள்ள தேசிய நூலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அதன் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
முன்னைய அரசாங்கம் பல ஊழல் மோசடிகள், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.
ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பினது ஊழல் மோசடி தொடர்பிலான ஆவணங்களை தற்போது திரட்டி வருகிறது.
இதற்கமைய இதுவரை 2000 முறைப்பாடுகள் எம்மிடம் கிடைக்கப்பெற்றுள்ளன. இவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சிரந்தி ராஜபக்ச, யோசித்த, ரோஹித்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினரிற்கும் மேலும் முன்னைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சர்கள் தொடர்பிலான மோசடி குறித்த முறைப்பாடுகளும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கமைய மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக 150 முறைப்பாடுகளும் சஜின்வாஸ் குணவர்தன எம்.பி.க்கு எதிராக 200 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவற்றில் 30 முறைப்பாடுகள் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த முறைப்பாடுகளை உரிய முறையில் செய்து மேலும் 20 முறைப்பாடுகள் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
குறித்த முறைப்பாடுகளுக்கு அமைவாக சஜின்வாஸ் குணவர்த்தன எம்.பி. யின் மனைவியின் பெயரில் சிங்கப்பூரில் ஹோட்டல் இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு சிங்கப்பூர் வங்கி ஒன்றில் கணக்கு இருப்பதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
READ MORE | comments

கட்டாரில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை விமானப் பணிப்பெண் பலி

கட்டாரில்  நேற்றிரவு  ஜீப் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில்  இலங்கை விமானப்பணிப் பெண்
ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த விபத்தில் மூன்று விமானப் பணிப் பெண்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

முன்னால் ஜனாதிபதியின் புதல்வர் நாமல்,மற்றும் சஜின் பயன்படுத்திய அதி சொகுசு பஸ்கள் மீட்பு!

பாராளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ மற்றும் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர் தமது சொந்த தேவைகளுக்காக
பயன்படுத்தி வந்த இரண்டு அதி நவீன சொகுசு பஸ்கள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன. பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள இரண்டு அதிநவீன சொகுசு பஸ்களும் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பிட்ட தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
   
வெளிவிவகார அமைச்சின் போக்குவரத்துப் பிரிவின் கீழ் இந்த சொகுசு பஸ்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்ட போதும் இந்த பஸ்கள் ஒருபோதும் அமைச்சில் நிறுத்த வைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அமைச்சின் போக்குவரத்துப் பிரிவு மாதாந்தம் இரண்டு பஸ்களுக்கும் 18 இலட்சம் ரூபாவை குத்தகையாக வழங்கி வருகிறது. அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் இயங்கும் வாகனங்கள் தொடர்பில் ஆராய்ந்த போதே அமைச்சில் எவரும் கண்டிராத இந்த பஸ்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இரண்டு சாரதிகள் இந்த பஸ் வண்டிகளை வெளிவிவகார அமைச்சு வளாகத்தில் நிறுத்திச் சென்றதாகவும் அங்கிருந்த உயரதிகாரி ஒருவர் கூறினார். பொதுநலவாய உச்சி மாநாடு கொழும்பில் நடத்தப்பட்டது முதல் இன்று வரை மாதாந்தம் 18 இலட்சம் ரூபா இதற்கு குத்தகையாக செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும் சஜின் வாஸ் எம்.பியின் பிரத்தியோக சாரதிகளைத் தவிர்ந்த அமைச்சிலுள்ள எந்தவொரு சாரதிக்கும் மேற்படி பஸ் வண்டிகளை இயக்கத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.




READ MORE | comments

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கடற்கரையோரம் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு கடற்கரையோரம் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலைமீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
40 வயது மதிக்கத்தக்க குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.
கடலில் மிதந்து வந்த நிலையிலேயே இச்சடலம் கரையொதுங்கியுள்ளது. காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
READ MORE | comments

ஐ.நா விசாரணைக்கான ஆதரவை மீண்டும் உறுதி செய்த பிரித்தானிய தலைவர்கள்

பிரித்தானிய பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களின் மீது ஐ. நா நடாத்தும் சர்வதேச, சுயாதீன விசாரணைக்கான தமது ஆதரவை மீண்டும் உறுதி செய்தனர்.
தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் இணைந்து நேற்று லண்டனில் நடாத்திய இரவு போசனத்தில் காணொளி மூலமும் தமது பிரதிநிதிகள் மூலமும் தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.
பிரித்தானியப் பிரதமர் தமது செய்தியினை தமது பிரதிநிதி மூலம் அனுப்பி வைத்தார்.
இலங்கையின் நிலைமைகளை ஆழமாக அலசிய பிரதமர், புதிய இலஙகை அதிபரின் சில நடவடிக்கைகளை குறிப்பிட்டு வரவேற்றார்.
ஐ. நாவினால் முன்னெடுக்கப்படும் விசாரனைகளுகு இலங்கை அரசு பூரணமாக ஆதரவினைத் தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
2013 கார்த்திகையில் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது அங்கு ஓர் சர்வதேச விசாரணையை தேடுவதில் ஈடுபட்டேன் எனக் கூறும் பிரதமர், அவர்கள் கடந்த பங்குனி மாதம் ஐ.நா வில் கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மமானத்தில் தாம் ஆற்றிய காத்திரமான வகிபாகத்திற்காக தான் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி தலைவரும் லேபர் கட்சி தலைவருமான திரு. எட் மிலிபாண்ட் அவர்கள் காணொளி மூலம் தமது கருத்தை பதிவு செய்தார்.
புதிய மாற்றத்தை வரவேற்ற எதிர்க் கட்சித் தலைவர், அதன் போது இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்கு முகமாக ஐ.நா வினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென புதிய இலங்கை அதிபருக்கு அழுத்தம் கொடுத்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் தமிழர்கள் மீதான சர்வதேச பார்வையில் மாற்றம் ஏற்படுமோ என்ற கருத்து உருவாகி வரும் ஒரு முக்கிய தருணத்தில் பிரித்தானிய பிரமுகர்களை அழைத்து ஓர் ஒன்று கூடலை நடாத்தினோம்.
அதன் போது பிரித்தானிய தலைவர்கள், அமைச்சர்கள் அனைவரும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்குவதில் தமக்குள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதி செய்தது எமக்கு ஓர் தார்மீக பலத்தை தருகின்ற‌து என பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலர் ரவி தெரிவித்தார்.
READ MORE | comments

கிழக்குப் பல்கலைக் கழக நிருவாகத்தில் ஊழல் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


கிழக்குப் பல்கலைக் கழக நிருவாகத்தில் ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழு வை உடனடியாக நியமிக்குமாறு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக் கழக நிருவாகத்தில் மாணவர் அடக்குமுறை நிறுத்தப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் விடுதி வசதிகள் வழங்கப்படவேண்டும் என்பது மாணவர்களது கோரிக்கைகளில் அடங்கியுள்ளன.



மாணவர்கள் பிரதான வீதியோரம் தமது கோரிக்கைகள் குறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழு கிழக்குப் பல்கலைக் கழகத்திலும் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் மாணவர்கள் கேட்டுள்ளனர்

அன்பார்ந்த மாணவர்களே! சிந்தனையாளர்களே! நாங்கள் இங்கே குறிப்பிடப் போகும் விடயங்களுக்கு பொறுப்பானவர்களின் நடவடிக்கைகளால் உயர் கல்வி பல்கலைக்கழகத்திற்கே அவப்பெயர் உண்டாகும் என்பதை மன வேதனையுடன் கூறிக்கொள்கின்றோம்.
•    மாணவர் உரிமை, நலன், சுதந்திரத்தை இல்லாமல் செய்தமை!!!!
•    எவருக்கும் இல்லாத பொலிஸ் பாதுகாப்பு எதற்கு ? பயப்படுவதற்கான காரணம் என்ன?
•    கனேடிய பிரஜை போல் வந்த உபவேந்தரின் ஊழல் மற்றும் மோசடிகள..
•    உபவேந்தர் குழுமத்தின் பாதுகாப்பு, உயர் பதவிகள…
•    நாகரிகமற்ற தொடர்பாடல் முறை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள்…
பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கையினை ஒரு தனி மனிதனின் சுயவிருப்புக்கு ஏற்ப எதேச்சிகரமான முடிவுகளை மூதவையின் 
(Minites)சினை வீட்டிலே தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டு மூதவையிலும்இ பேரவையிலும் இவர் மேற்கோள்காட்டி “ நான் இரவு உணவு அருந்தும் போது எனது …….. 
இப்படிச் சென்னார் என்று” கூறுவதாயின் மூதவையோ அல்லது பேரவையோ எதற்கு? மூதவை மற்றும் பேரவையினை ஒரு ஒழுங்கு கிரமம் இல்லாமல் உபவேந்தர் குழுமத்தின் அதிகாரத்தில் இயக்கப்பட்டு மற்றும் இயக்கப்பட்படுகின்றது. 

பல்வேறு நிதி ஊழல்கள் பதவி உயர்வு, புதிய விரிவுரையாளர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை, மாணவர்களுக்கு எதிரான பல்வேறு முறையிலான பழிவாங்கல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாரிய துஸ்பிரயோங்கள்   இவை மட்டும் எமக்கு தெரிந்தவை தெரியாமல் நடந்ததாக கூறப்படும் பதவி விலகல்கள். உபவேந்தரின் வாசஸ்தலத்தில் வேலை செய்த பெண் பணியாளர்கள் பல பேர் இவரது நடத்தையினால் வேலையினை விட்டுச் சென்றுள்ளனர்.

2012.02.12 நியமனத்திற்கு அமைய முன்னைய உயர்கல்வி அமைச்சர் ஒரு கனேடிய சுற்றுலா அனுபவிக்க வந்தவர் போல காட்சிதரும் ஒருவரை நியமித்து இலங்கை பிரஜை ஒருவருக்கான சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்துள்ளார். இதனை அப்போதும்  இப்போதும் அரசிற்க்கு தெரியப்படுத்தியும் இதுவரை அகற்றுவதற்கு எதுவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. 

இலங்கையில் எந்த ஒரு உபவேந்தருக்கும் EUSL போல பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக எமக்கு தெரியவில்லை.  இருப்பினும் ஒரு கனேடிய (கடவுச்சீட்டு WH847488) சுற்றுலா உபவேந்தர் 12.02.2012ல் இருந்து 12.02.2015ல்  முடிவடையும் 3 வருட கால உபவேந்தர் பதவியை அலங்கரிக்க வந்த இவருக்கு எதற்கு பொலிஸ்?; இவர் பயப்படும் அளவுக்கு இவர் செய்த தவறுதான் என்ன?
 இவர் 25.07.2012ல் தனது  அடையாள அட்டை 662440094எ மூலமாக TTIP/01/014053 என்ற கார் அனுமதிப்பத்திரத்தினை கனேடிய சுற்றுலாப் உபவேந்தா 1.275 million விற்பனை செய்துள்ளா

 தற்போதைய கனேடிய உபவேந்தர் கடந்த அரசின் விசுவாசி. ஏனெனில் பல தடவை கூறியிருக்கின்றார். பசில் கோத்தபாய மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்குப் பின்னர் தெலைபேசியில் கதைத்துவிட்டுத்தானாம் உறங்குவார்.

 அதனாலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக தனது குழுமத்தின் வாழ்த்துச் செய்தியையும் தேர்தல் விதி மீறல் மூலமாக உபவேந்தர் பதவியைப்பயன்படுத்தி பிரச்சாரத்தையும் மேற்கொண்டார்.(04.01.2015 
Sunday times, 05.01.2015 வீரகேசரி) அரச ஊழியராக இருந்து கொண்டு எவ்வாறு செயற்படுவார். இவர் முன்னால் பாதுகாப்பு செயலாளர் ஊடாக இரண்டைப் பிரஜாவுரிமையைப் பெறுவதனூடாக மீண்டும் அடுத்த தவனைக்கு ஆயத்தமானார். 

இவர் வருகை தந்த வேளையில் பல ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு விசாரனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தற்போதைய பிரதிப் பதிவாளர், அழகியல் கற்கை நிறுவகத்தின்  இயக்குனர் முன்னாள் பீடாதிபதிகள் பல பேர் இங்கு விசாரணைக்குழுவில் குற்றவாளிகளாக நிறுவி பல பேருக்கு தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது. “ இனம் இனத்துடன் தான் சேரும்’ என்பது போல அனைத்து ஊழல் குற்றவாளிகளும் ஒரு குழுமமாகி புனிதமான கல்வி கற்கும் இடத்தினை சாக்கடையாக்கிய பெருமை இவர்களைளே சாரும். இவர்களுக்கு மேலும் ஊழல் புரிவதற்கு அதிகாரம் வழக்குவது போல பதவி உயர்வுகள் பல வழங்கப்பட்டும் மற்றும் வழங்கப்படவும் உள்ளன.

•    மாணவர் ஆலோசகரும் ஓரு மிகப்பெரிய ஊழல் குற்றவாளி உறுதிப்படுத்தப்பட்ட இவருக்கு தற்போது சிரேஸ்ட மாணவ ஆலோசகராக பதவி உயர்த்தப் பட்டுள்ளார்

•    முன்னால் தற்காலிக உபவேந்தர் (IRQUE) எனும் நிகழ்ச்சிக்கு அமைவாக 24.06.2014 34வது Audit Committee    கூட்டத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட (Director of  SIVIAS)விவசாயப்பீட விரிவுரையாளர் இசை நடனக்கல்லூரி இயக்குனர். நாங்கள் ஒன்றை இங்கு கேட்கின்றோம் விவசாய விரிவுரையாளரினால் இசை நடனக் கல்லூரி  மாணவர்களின் கல்விக்காக மேற்கொண்ட நடவடிக்கைதான் என்ன? இவரே கடந்த உபவேந்தர் தேர்தலில் இரண்டாம் இடத்தை பெற்ற ஊழல் வாதியாவார். 

•    அதே பாணியில் முன்னாள் உதவிப்பதிவாளர் 1.5 Million சூறையாடியமைக்கு பதிவாளர் பதவி காத்துக் கொண்டிருக்கிறது. இவர் பல முறை கேடுகள் (IRQUE ) ஊடாக குற்றவாளியாக நிருபிக்கப்பட்ட போதும் பல குறுக்கு வழிகளில் மணல் வினியோகம் மற்றும் கனேடிய உபவேந்தரை மீண்டும் பதவிக்கு கொண்டு வருவதற்கு தற்போதே பதிவாளர் போல் நடந்து கொள்கின்றார்.

இவரைப் பற்றி ஒரு வார்த்தையில் “குரங்கிட கையில் கிடைந்த பூமாலை போல” பல்கலைக்கழகத்திற்கு    4 டயர்களை பூட்டி வீட்டுக்கே கொண்டு போகும் வல்லமை கொண்டவர்……

தற்போதைய உபவேந்தர் குழுமத்தில் உபவேந்தர் தேர்தல் வேட்பு மனுவுக்கு அமைய ஒருசில முதுகெலும்பில்லா விரிவுரையாளர்களை டம்மியாக பயன்படுத்தி உபவேந்தர் தேர்தலை நடத்தியதுடன் பேரவை உறுப்பினர்களுக்கும் பல்வோறு சன்மானங்களையும் வழக்கினார் என்பதை 01.10.2014 அன்று முன்னாள் உயர் கல்வி அமைச்சர் எங்களிடம் கூறியிருந்தார். 
தற்பொது நாம் குறிப்பிடும் கனேடிய உபவேந்தரின் வலது, இடது (கைப்பிள்ளை) எல்லாமே அவர் தான் இவரின் வேலை…. 

அலுவலக நேரத்தில் கணணியில் விளையாடுவது, கல்விசாரா ஊழியர்களின் பெயரில் கம்பனியை ஒன்றை நடாத்தி வருமான உழைப்பதை மட்டுமல்லாமல் உபவேந்தரின் ஜடியா மணியாகவும் செயற்படும் மாணவர் நலன்பரிப்பகுதி கடைநிலை ஊழியர். இவருக்கு போக்குவரத்துக்கான வாகன வசதி வேற!! அதுமட்டுமா MCBக்கு பல்கலைக்கழக வாகனம் போக்குவரத்து சேவையையும் மேற்கொள்கின்றது. இந்த இலிகிதர் சாராயம் குடிப்பதற்கு BITES செய்து கொடுப்பது உபவேந்தரின் மனைவிதானாம் என்ன கேவலம்!!! சிந்தியுங்கள்..

இவர் முன்னைய ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக தன்னை பயன்படுத்தி கல்குடா தொகுதியில் பிரச்சாரம் புரித்தமையும் குறிப்பிடத்தக்கது. மூதவையின் முடிவை விட கல்விசாரா ஊழியர் ஒரு சிலரின் முடிவுகளுக்கமைய பல்கலைக்கழகம் இயங்குகின்றது. என்பது மனவேதனை தருகின்றது.

 இங்கு இரவு வேளையில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் மின்குழிள்கள் அடங்கிய இரண்டு பக்கமும் உள்ள நுழைவாயில் மற்றும் மதில்களில் பாரிய நிதி மோசடி இடம் பெற்றுள்ளது. அனுமதிப் பத்திரம் பெற்ற ஒரு நிறுவனம் மதில்களைக்கட்ட அனுமதியில்லாத (Zahran Construction) கம்பனியே நுழைவாயிலைக் கட்டியதுடன் நிதியினைப் பெற முன்னாள் உயர் கல்வி அமைச்சரின் செயலாளர் அனுமதித்தது எவ்வாறு? இதற்கான Procurement Procedure    எங்கே?

உபவேந்தரின்  தொடர்பாடல் முறை மாணவர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களிடம் மிகவும்  இழிவாக நடந்து கொள்ளும் கடைநிலை ஊழியரை விட மோசமாக பேசும் தன்மை கொண்டவர் இவர் பேரவையிலோ மூதவையிலோ ஒரு உயர் அதிகாரிகளைப் போல் நடந்து கொள்வதுமில்லை “என்ட மசிரையும் புடுங்க ஏலா” என்பது போன்ற வசனங்களே அதிகம் உபயோகிப்பார். 
இவரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்திற்கு பணியாட்கள் தேவைதான் ஆனால் மாணவர்களின் பல கல்வி சாரா வேலைகளுக்கு மத்தியில் நான்கு பேரை வீட்டு வேலைகளுக்கு அமர்த்தியது மட்டுமல்லாது 3 தனியார் பாதுகாவலர்களையும் அதில் ஒருவர் முச்சக்கர வண்டி ஓட்டுனர். இவர் தனது வேலை நேரத்தில் உபவேந்தரின் செல்லப்பிராணிகளுக்கான உணவுகளைப் பெறுவதற்கு தனது ஓட்டோவை பயன்படுத்துவதுடன் அதற்கான பணத்தையும் மாதச் சம்பளத்தையும் பெறுகின்றார். என்பது முக்கியமான விடயமாகும்
ஒழுக்க சீலர்கலாக இருக்க வேண்டிய பேரவையில் ஒரு சிலரது தகாத செயல்களை கண்டும் காணாமல் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி உபவேந்தர் 18.04.2014 மாணவர் ஒன்றியத்தை ஒரு விடுமுறை நாளில் (பெரிய வெள்ளி) இரத்துச் செய்து தனது ஊழல்களுக்கு எதிராக வந்தால் இப்படித்தான் செய்வேன் என்று செய்தார். அதோடு விட்டாரா? மீண்டும் அநீதிக்கும் ஊழலுக்கும் எதிராக செயற்பட்ட மாணவர்கள் சிலரை மாணவர் ஒன்றியத்தில் இருந்து 30.10.2014 நீக்கியமையுடன் விடவில்லை. மீண்டும் 16.01.2015 இவருக்கு எதிராக செயற்பட்ட மேலும் சில மாணவர்களை மாணவர் ஒன்றியத்தில் இருந்து நீக்கி பழி தீர்த்துக் கொண்டார். 

தமிழ் சிங்கள மாணவர்களிடையே குரோத மனப்பாங்கினை துண்டி கலவரங்களை உருவாக்கி பிரித்தாளும் சூட்சியை திறம்படச் செய்தார். இதற்கு உபவேந்தர் கூறிய “23ம் புலி கேசி ஒற்றர்” ஒருவர் விஞ்ஞான பீடத்தில் நியமிக்கப்பட்டிரந்தார். இதன் பிரதிபலிப்பே இவரின் காலப்பகுதியில் இடம் பெற்ற கலவரங்கள் பல்கலைக்கழக மூடுகை மற்றும் மாணவர்களின் கல்வி ஆண்டு அதிகரித்தமையாகும். 

மாணவர்களின் உண்மையானதும் அவசியமானதுமான பல தேவைகள் இருத்தும் கூட அவற்றை புறம் தள்ளி தனது வருவாய் மற்றும் விளம்பரத்துக்காகவே அதிகம் வேலை செய்கின்றார். முன்னாள் உயர் கல்வி அமைச்சர் விஸ்வவர்பால அவர்களின் காலப் பகுதியில் வரவழைக்கப்பட்ட நிதியினை முன்னைய Acting VC மற்றம் உதவிப்பதிவாளர் போன்றோர்களின் ஊழல்கலால் இடை நிறுத்தப்பட்டு      CA அத்தநாயங்கவினால் விடுவிக்கப்பட்டு சுற்றுலா உபவேந்தர் செலவு செய்து இப்போது நாம் காணும் பல பகுதியில் “இவரது காலப்பகுதியில் நிர்மானிக்கப்பட்டது” என்று விளம்பரம் செய்கின்றார். ஆனால் விஞ்ஞான பீடத்தின் விலங்கியல் பகுதி கட்டிடத்ததிற்கான நிதியினை பெறுவதற்கு அரும்பாடுபட்ட முன்னைய பட்டிருப்பு தொகுதி பாராளுமனற முயற்சிக்கு 05.02.2013ல் திறப்பு விழாவில் ஒரு நன்றி கூட இருக்கு குறிப்பிடவில்லை என்பது எனைவருக்கும் தெரியும்.

சரசவி மதுரா பாதுகாப்பற்ற விடுதியை கொண்டுவந்த உபவேந்தர் இதன் பாதிப்புப் பற்றி சிறிதளவும் யோசிக்கவில்லை. மருந்துவ பீட 4 மாடி மாணவர் விடுதியை கட்டுவதற்கு அனுமதித்த மணல் பரிசோதனை எங்கே?  4 மாடி கட்டுவதற்கு மாநகர சபையின் அனுமதி எங்கே?  எது நடத்தால் என்ன நமக்கு கொமிசன் வந்தால் போதும் இது தான் அவரின் சிந்தனை…….
குறிந்த விடுதிக்காக கட்டில்கல் வாக்கும் போது இருப்பினால் ஆன கட்டிலைத் தவிர்ந்து மரந்தினால் ஆனான கட்டிலை வாங்க காரணம் என்ன? இதன் உண்மை கதை என்ன? பராமரிப்பு பகுதியிடம் கேட்டதற்கு உயர் கல்வி அமைச்சருக்கு மரத்தளபாடத்தில் ஆசை என்றார். அப்படி ஆசை என்றால் அவரின் வீட்டில் வாங்கிப் போடட்டும். குறைந்த பெறுமதியான கட்டிலுக்கு 54,410/=UP   கொடுத்தது ஏன்? இதில் எவ்வளவு பங்கு இலாபம். 3 விடுதிகளுக்கும் 600 கட்டில் என்றால் நடந்தது என்ன?

02.05.2014 என்று இடம் பெற்ற நியாயமான மாணவர்களின் கோரிக்கையை புறம் தள்ளி தனது அதிகாரத்தை காட்ட முயன்ற உபவேந்தர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்து இடம் மாற்றம் பெற்று வந்த வர்த்தக பீட மாணவியை தன் பங்கம் வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த மாணவர்களின் போராட்டத்தை கொஞ்சை படுத்தினார். குறிந்த மாணவியின் Repeat Exams    முடிவுகள் சாதகமாக இருப்பின் அதற்கு உபவேந்தரே முக்கிய காரணமாக இருக்கும் என நாம் நம்புகின்றோம். மற்றும் குறிந்த மாணவி ஓரு செய்தி சேகரிப்பாளும் கூட இவர் இவ்வாறு செயற்பட்டதனை பதிவாளவும் ஒரு முறை எங்களிடம் உபவேந்தரின் முன்பாக ஒப்புக்கொண்டார்.
மேலும் மாணவர்கள் இவ்வாறு கருதுவதற்கு காரணம் உபவேந்தரின் அடாவடித் தனத்தினை எதிர்க்கும் மாணவர்களை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு குடும்ப சூழ் நிலைகளையும் அற்ப பதவிகளையும் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி தன் பக்கம் இழுக்க பல முறை சுயற்சி செய்த ஒரு கடை நிலை மனிதர். உதாரணம் - வெளிநாட்டு சுற்றுப்பயணம், விரிவுரையாளர் பதவி, முதன்நிலை மாணவராக தரமுயர்த்தல் போன்றவையாகும்.

இவரது உத்தியோக பங்களாவில் 5க்கு மேற்பட்ட குளிருட்டிகளை பொருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாதாந்த மின் கட்டணம் 90000/= க்கு மேல். இதற்கு முன்பிருந்த எந்தவொரு கௌரவமான உபவேந்தரும் இதனைப் போன்ற சலுகைகளை முற்படவில்லை என்பதுடன் மாணவர்களுக்கான பல அத்தியாவசியமான தேவைகள் இருக்க இவருக்கு இத்தனை  குளிருட்டிகள் தேவைதானா? இதுதானா இவரது நிர்வாகத் திறமை.

02.05.2014 அன்று இடம் பெற்ற அசாதாரண சூழ்நிலையில் கனேடிய சுற்றுலா உபவேந்தர் மாணவர்கள் பல முறை தாங்கி ஜன்னல் கண்ணாடிக்கு கல்லெறிந்த உடைந்நதாக எவ்வாறு பொலிஸில் முறையிட முடியும். மாணவர்கள் தாக்கியிருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அவரே 03.05.2014 அன்று சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.  மருந்துவ பீடத்துக்கான வைத்தியருக்கான அழைப்பினை ஏற்று பல்கலைக்கழக திரட்டு நிதியினப் பயன்படுத்தி (பல்கலைக்கழக விவசாயப் பொருள் விற்பனை வருமானம்) சென்றுள்ளார். இது எப்படி இருக்கின்றது என்றால் பிச்சை எடுத்தானாம் பெருமாள் அதை புடுக்கித் திட்டானாம் அனுமான் என்பதைப் போல link எடுத்து வருவதாகப் போய்  டுiமெ  என்ற போர்வையில் எடுத்து வந்ததோ 4-5 போட்டோ தானா? அப்படிக் கூறிய Link எங்கே இதற்கு பேரவையே பதில் கூறுங்கள்

அவருடைய நிர்வாக முறைகேடுகளுக்கு பல உதாரணங்கள் உண்டு. 
•    சேவையில் இணைய முன்பே துறைத் தலைமை பதவி!!!!
•    முதுமாணி மாணவியொருவருக்கு ஒழுக்கவிழுமியமற்ற முறையில் துறைத் தலைவி!!!!
•    Social Harmony என்ற பதவிக்கு வின்னப்பித்த ஒரு கலைத்தறை பட்டதாரியை ICICT க்கான      விரிவுரையாளராக ஒரே நாளில் நேர்முகத் தேர்வு நடத்தாமல் நியமித்தமை!!! 
•    நேர்முகப் பரீட்சையில் துறை சார்த்த வினாக்களை விடுத்து அனாகரிகமான கேள்விகளை கேட்டது மட்டுமல்லாது இவரினால் தெரிவு செய்யப்பட்ட தற்காலிக விரிவுரையாளர்கள் மற்றும் ஏனைய கல்வி சாரா ஊழியர்களிடம் பிழையாக நடந்து கொண்டுள்ளார். என்பதையும் இங்கு குறிப்பிட்டு கொண்டுள்ளோம். 
•    அத்தோடு ஒன்றைக் கேட்க விரும்புகின்றோம் கனடாவில் 01.05.2010ல் கைதானது ஏன்?
•    01.05.2010 – 03.05.2010 வரை கனடாவில் எங்கே இருந்தீர்கள்.
•    05.03.2011 வரை நடந்தது என்ன?

 இவை அனைத்தும் எமக்கு தெரித்தவை. தெரியாத இன்னும் பல உள்ளமையினால் 28.01.2015 கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கூற்றுக்கு அமைய ஊழலுக்கு எதிரான விசாரனைக்குழுவினை உடனடியாக நியமிக்க வேண்டும் அவ்வாறு இடம் பெற்றால் இன்னும் பல ஆதாரங்களுடன் கூடிய ஊழல் மோசடிகள் வெளிவரும். கால தாமதம் ஏற்படின் கனேடிய ஊழலின் சிகரமான சுற்றுலா உபவேந்தர் சுற்றுலா இனிதே நிறைவேறியது சென்று வருகிறேன் என்று தான் உழைத்த சொத்துக்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு சென்றுவிடுவார். எனவே உரிய தரப்பினர் எமது நியாயமான கோரிக்கையினை கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோர்.  

READ MORE | comments

மகிந்தவின் வீட்டுக்குள்ளேயே மைத்திரி என்ற ஜனாதிபதியை வளர்த்த ” ரோ “..!! – ஒரே ஒரு அதிகாரியை வைத்து சாதித்தது இந்தியா

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து இரண்டு வாரங்களாகியுள்ள  நிலையில், இன்னமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நம்பமுடியாததொரு விடயமாக பேசப்படுகிறது.
சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் இதை ஓர் ஆச்சரியமான விடயமாக, அபூர்வமான நிகழ்வாக சித்திரிக்கப்படுகிறது. அந்தளவுக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  இலங்கையில் அசைக்கமுடியாத பலத்துடன் இருந்துவந்தார். அவரது தோல்வியை எவராலும் நம்பமுடியாத நிலை இன்னும் தொடர்கிறது.
ஏன், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கூட, இது நம்பமுடியாத அதிசயமாக நிச்சயம் இருந்திருக்கும். ஆனாலும், அந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் என்ன என்ற கேள்விகளும் அதற்கு விடை தேடும் முயற்சிகளும் தொடர்கின்றன.
இந்தக் கட்டத்திலேயே, முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு பின்னால், இந்திய புலனாய்வு அமைப்பான ‘றோ’ இருந்தது என்ற தகவல் கடந்த வாரம் ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்டது.
கொழும்பிலிருந்த ‘றோ’வின் தலைமை அதிகாரியான கே.இளங்கோ, கடந்த டிசெம்பர் மாதம் திடீரென்று புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டார். அவருக்கு புதுடெல்லியில் ‘றோ’வின் தலைமையகத்தில் புதிய பதவி வழங்கப்பட்டது. இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே ‘றோ’ அதிகாரி இளங்கோ புதுடெல்லிக்கு திருப்பி அழைக்கப்பட்டதாக தேர்தலுக்கு முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எதிரணியின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுடன் நெருக்கமாக இருந்தார் என்பதற்காகவே இளங்கோவை திருப்பி அழைக்குமாறு இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரியதாகவும் கூறப்பட்டது. ஆனால், அப்போது அது பற்றி பெரிதாக எவரும் அலட்டிக்கொள்ளவில்லை.
தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியை தழுவியதுமே,  இதன் பின்னணி குறித்து பலரும் ஆராயத்தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலிலேயே, ஆட்சி மாற்றத்தில் ‘றோ’வின் பங்களிப்பு பற்றிய செய்திகளும் வெளியாகியிருக்கின்றன. இதுபற்றி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமே புதிய சந்தேகங்களை கிளப்பியிருந்தது. உலகளாவிய ஊடகங்களில் அது முக்கிய இடத்தை பிடித்தது. ஏனென்றால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி அந்தளவுக்கு உலக ஊடகங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. எனவே, அதற்கான காரணத்தை விபரிப்பதில் அவை முன்னின்றன. அதைவிட, இந்திய புலனாய்வுத்துறையான ‘றோ’வின் மீது எப்போதும் உலகளாவிய கவனம் இருந்துவருகின்ற நிலையில், இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்கு அது காரணமாயிற்று என்பது இயல்பாகவே கவனத்தை பெறக்கூடிய விடயம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வலுவான பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி, அவரை தோற்கடிப்பதற்கு ஊக்கமளித்தார் ‘றோ’ அதிகாரி இளங்கோ என்று கூறப்படுகிறது.
யார் இந்த இளங்கோ?
இந்தியாவின் வெளியக புலனாய்வுப்பிரிவான ‘றோ’ எனப்படும் ஆய்வு மற்றும் பகுப்பாய்வு அலகின் கொழும்புக்கான தலைமை அதிகாரியாக இருந்தவரே கே.இளங்கோ. இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி.
1981ஆம் ஆண்டு இந்திய பொலிஸ் சேவையில்,  ஜம்மு காஷ்மீர் மாநில ஒதுக்கீட்டின் மூலம் இணைந்துகொண்டவர்.
பொலிஸ் அதிகாரியாக செயற்பட்ட அவர், பின்னர் ‘றோ’வுக்குள் உள்வாங்கப்பட்டார். இரண்டு வருடங்களுக்கு முன்னதாக அவர் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் ஒரு மினிஸ்டர் கவுன்சிலர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
பொதுவாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள், இவ்வாறு தமது புலனாய்வு அதிகாரிகளை தூதரகங்களில் இராஜதந்திரிகளாக நியமிப்பது வழக்கம். அதுபோலவே, இளங்கோவும் கொழும்பில் ஓர் இராஜதந்திரியாகவும் புலனாய்வு அதிகாரியாகவும் இரட்டைப்பணி ஆற்றியிருந்தார்.
கடந்த டிசெம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தை அடுத்து, இவர் திடீரென்று புதுடெல்லிக்கு மாற்றப்பட்டார். அஜித் டோவல் கொழும்பு வந்தபோது, அப்போது பாதுகாப்புச் செயலராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, இந்தியத் தூதரக அதிகாரியான இளங்கோவின் செயற்பாடுகள் குறித்து முறைப்பாடு தெரிவித்திருந்தார் என்கின்றன சில தகவல்கள்.
அப்போது, அவரை திருப்பி அழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டமைக்கு  இணங்க, உடனடியாக புதுடெல்லி அவரை திருப்பி அழைத்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்தியாவின் மறுப்பு
ஆனால், இந்திய இராஜதந்திரிகள் எவரும் அவ்வாறு திருப்பி அழைக்கப்படவில்லை என்று அடித்துச் சொல்கிறது இந்திய அரசாங்கம். இதுபற்றி கருத்து வெளியிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன், ‘வெளிநாட்டில்  அதிகாரி ஒருவர் மூன்று வருடங்களுக்கு மாத்திரமே பணியாற்ற அனுமதிக்கப்படுவார்.
கடந்த வருடத்தில்  கொழும்பிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் அனைவருமே அங்கு தமது சேவைக்காலத்தை பூர்த்திசெய்தவர்களே. யாரும் திருப்பி அழைக்கப்படவில்லை. முகம் தெரியாதவர்கள் வெளியிடும் கருத்துக்களை செவிமடுக்காதீர்கள்’ என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமன்றி, ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழிடம் கருத்து வெளியிட்ட இந்திய பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் அவ்வாறு நடந்திருக்கச் சாத்தியமில்லை என்று அடித்துக்கூறியிருக்கிறார். அவ்வாறு மூத்த இராஜதந்திரி ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டிருந்தால், அது இராஜதந்திர ரீதியில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்குமென்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அதுபோலவே, இலங்கையின் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடமும் இதுபற்றி கேள்வி எழுப்பியபோது, புதுடெல்லியில் வைத்து அதனை நிராகரித்திருந்தார். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது மக்களே தவிர, ‘றோ’ அல்ல என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதிலிருந்து இலங்கை அரசாங்கமோ, இந்திய அரசாங்கமோ இப்போது  இந்த விவகாரம்  தீவிரம் அடைவதை விரும்பவில்லை என்பதை உணரமுடிகிறது.
அதேவேளை, இந்தியா தாம் ஆட்சி மாற்ற விடயத்தில் தலையீடு செய்யவில்லையென்று ஒருபோதும் கூறவில்லை என்பதை இங்கு கவனத்திற்கொள்ளவேண்டும்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரோ அல்லது வேறு எந்த அதிகாரிகளோ ‘றோ’ அதிகாரி திருப்பி அழைக்கப்படவில்லை என்று கூறினரே தவிர, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க இந்தியா முயற்சிக்கவில்லை என்று குறிப்பிடவில்லை.
மஹிந்தவை எதற்காக தோற்கடிக்க இந்தியா விரும்பியது?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தேர்தலில் தோற்கடிக்க இந்தியா ஏன் விரும்பியது- ‘றோ’ அதிகாரி  இளங்கோ அதற்கான முயற்சிகளில் ஏன் ஈடுபட்டார் என்ற கேள்விகளுக்கு விடை கூறுவது அவ்வளவு கடினமானதல்ல.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்படுவதை இந்தியா விரும்பியமைக்கு கடந்த ஒன்பதாண்டுகால அவரது ஆட்சியில் இடம்பெற்ற எத்தனையோ காரணங்களை இந்தியாவினால் அடுக்கமுடியும்.
1. இந்தியாவுக்கு கட்டுப்படுகின்ற ஒருவராக அவர் இருந்திருக்கவில்லை
2. இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுபவராக அவர் நடந்துகொள்ளவில்லை.
3. இந்தியாவின் நலன்களுக்கு எதிரான சக்திகளுக்கு அவர் இடமளிக்கத் தயங்கவில்லை.
4. பிராந்தியத்தில் இந்தியாவின் நலனுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை.
5. அவற்றைவிட, சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, இந்தியாவுடன் அவர் விளையாட முனைந்தார். இவை போன்ற பல காரணங்கள் கூறப்படலாம்.
ஆனால், முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தனது புலனாய்வுப்பிரிவை இந்தியா செயற்படுத்த முனைந்தமைக்கு கடைசியாக காரணமொன்று கூறப்படுகிறது.  அதுவே, சீனாவின் நீர்மூழ்கிகள் கொழும்பில் தங்குவதற்கு இடமளித்தமையாகும்.
ஒன்றல்ல இரண்டு தடவைகள், சீன நீர்மூழ்கிகள் கொழும்பில் தரித்துச்செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுமதியளித்திருந்தார். இது இந்தியாவின் பாதுகாப்பு நலன்களின் மீது கைவைத்த விவகாரம். அதற்கு முன்னதாக தனது பொருளாதார நலன்களை சீனா தட்டிப்பறித்தபோது பொறுமையாக இருந்த இந்தியாவினால், தன் பாதுகாப்பு நலன்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகியபோது, சும்மா இருக்கமுடியவில்லை.
சீன நீர்மூழ்கிகளுக்கு தரித்துநிற்க முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ இடமளித்ததே, இந்தியாவின் கோபத்துக்கு அவரை தோற்கடிக்கவேண்டுமென்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தக் காரணமென்று பொதுவாக நம்பப்படுகிறது. உள்ளேயும் வெளியேயும் இதற்கப்பால் வேறும் பல காரணங்கள் இருக்கலாம்.
எப்படி வகுக்கப்பட்டது வியூகம்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக இந்திய புலனாய்வுத்துறை அதிகாரியான இளங்கோ, இரண்டு அல்லது மூன்று தடவைகள்  தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார் என்கிறது ரொய்ட்டர்ஸ் செய்தி. அதுபோலவே, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடனும் அவர் தொடர்பிலிருந்ததாக கூறப்படுகிறது. அதைவிட, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தை விட்டு வெளியேறவைப்பதிலும் இவர் பங்களித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவேண்டாமென்றும் அவ்வாறு போட்டியிட்டால் தோல்வி அடைய நேரிடுமென்பதையும் விபரித்து, அவரை போட்டியிலிருந்து ஒதுங்கவைத்ததும் இவரே என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைவிட, வெற்றி பெறத்தக்க ஒரு வேட்பாளரை நிறுத்தவேண்டுமென்ற ஆலோசனையையும் அவரே முன்வைத்திருந்தாராம்.
இவையெல்லாம் உண்மையா,  பொய்யா என்பது தெரியவில்லை. என்றாலும், இந்த அரசியல் சூத்திரங்களே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதில் வெற்றியை கொடுத்துள்ளன.  மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பற்காக வியூகம் வகுத்ததில், சந்திரிகா, ரணில் உள்ளிட்ட தலைவர்களுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லையென்றே இத்தகைய ஊகங்கள் கருதவைக்கின்றன.
நிச்சயமாக அத்தகைய வங்குரோத்து நிலையில், இலங்கை அரசியல் தலைமைகள் இல்லையென்றே நம்பலாம். அதற்காக, ‘றோ’ அதிகாரியின் பங்களிப்பு இல்லையென்று முற்றாக ஒதுக்கித்தள்ளவும்முடியாது.
ரணில் விக்கிரமசிங்க யாருடைய ஆலோசனையையும் பெறவில்லையென்று அவரது பேச்சாளர் கூறிருக்கிறார். ஆனால், இரண்டு மூன்று தடவைகள் இந்திய அதிகாரிகள், அவரை சந்தித்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார் ரணிலின் பேச்சாளர்.
அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவும் இந்த விவகாரத்தில் ‘றோ’வின் தலையீடு இருந்திருக்குமென்று வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. ஆனால், அவரது குடும்ப வட்டாரங்கள் அதற்கான வாய்ப்புகளை நிராகரிக்கவில்லை.
ஆக, எல்லாத் தரப்புகளுமே மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதில் ‘றோ’ பங்களித்தது என்பதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லையென்பது கவனிக்கத்தக்கது.
அடக்கி வாசிப்பது ஏன்?
வெளிநாட்டுச் சதியென்று தேர்தல் பிரசாரத்தின்போது ஓயாமல் புலம்பிக்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே, ‘றோ’ விவகாரம் குறித்து செய்திகள் வெளியான பின்னரும் அடக்கி வாசிக்கிறார். எதற்காக இப்போது எல்லாத் தரப்பினரும் இதனை
முக்கியத்துவப்படுத்த விரும்பவில்லையென்றால், அதற்கு தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமே காரணம்.
ஒருவேளை, மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாரேயானால், இந்தளவுக்கு இது பூதாகரமான பிரச்சினையாக வெடித்திருக்கலாம். தன்னை கவிழ்க்க முயன்றதாக இந்தியா மீது அவர் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கலாம்.
தனது முயற்சி தோல்வியில் முடிந்ததென்ற கோபத்தில் இந்தியாவும் தனது அதிகாரியை வெளியேற்றியமைக்கு பதிலடி கொடுக்க முனைந்திருக்கலாம். ஆனால், இப்போது எதையுமே செய்யமுடியாது.
புதிய அரசு, இந்தியாவுடன் நட்புறவை பேண விரும்புகிறதென்பதால், அது இந்த விவகாரத்தை மறைக்கப் பார்க்கலாம்.
இந்தியாவும் தனது அதிகாரி விடயத்தில் அதிருப்தியான விடயங்கள் நடந்தேறியிருந்தாலும், தமது பிரதான திட்டமான மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதில் வெற்றி பெற்றுவிட்டதால், இப்போது அதை பெரிதாக்க விரும்பாது.
ஆரம்பத்தில்கூட, இந்தியா அமைதியாக இருந்தமைக்கு சிலவேளைகளில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றுவிட்டால், அவருடன் இணங்கி செயற்படவேண்டும்  என்ற முன்னெச்சரிக்கையும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதனால், எதிர் நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாதிருந்திருக்கலாம்.
இலங்கையின் புதிய அரசாங்கமும் தமது வெற்றிக்கு அடித்தளமிட்டதென்பதால், அடக்கியே வாசிக்கும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கூட, தன்னை ‘றோ’ தோற்கடித்ததென்ற குற்றச்சாட்டை சுமத்தினால், ஒருபோதும் தன்னை இந்தியாவோ, ஏனைய நாடுகளோ ஆதரிக்காதென்பதை அறிவார். எனவே, இப்போதைக்கு எந்தத் தரப்பினருமே ‘றோ’ விவகாரத்தை தூக்கிப்பிடிக்கத் தயாரில்லை. இது இந்தியாவை பொறுத்தவரையில் ஒரு சாதகமான விடயம்.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக ‘றோ’ வியூகம் வகுத்திருந்தாலும் சரி, வகுக்காதிருந்தாலும் சரி அதனைச் செய்துமுடித்தது இலங்கை மக்கள்; என்பதை மறுக்கமுடியாது.
READ MORE | comments

பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் ஐக்கிய தேசியக் கட்சி

பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் நூறு நாள் செயற்றிட்டத்தின் பின்னர் தேர்தலுக்கு தேவையான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படும் என கட்சி அறிவித்துள்ளது.
பெப்ரவரி மாத இறுதி வாரத்தில் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பமாக உள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு ஏற்ப இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
வெற்றிடமாகியுள்ள கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகள், கட்சிக் கிளை அலுவலகங்கள் அங்குரார்ப்பணம் செய்தல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளது.
பணிகளை துரித கதியில் மேற்கொள்ளுமாறு கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீமிற்கு பிரதமர் ரணில் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கட்சி செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் தெளிவுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
READ MORE | comments

பாராளுமன்றத்தில் அமளி துமளி

இலங்கை பாராளுமன்றம் இன்று மீன் சந்தையைப் போன்று கூச்சலும், குழப்பமும் நிறைந்ததாக இருந்ததை அவதானிக்க முடிந்தது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆளும் கட்சியினரே சபையில் குழப்பம் விளைவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. விமல் வீரவன்ஸ உள்ளிட்ட உறுப்பினர்கள் மீன் வியாபாரிகள் போன்று கூச்சலிட்டு கத்தியுள்ளனர்.
இதனால் பொறுத்துக் கொள்ள முடியாத சபாநாயகர் சபை நடவடிக்கைகளை ஒத்தி வைத்தார்.
பாராளுமன்றத்தில் சலசலப்பு - 20 நிமிடங்கள் சபை நடவடிக்கை ஒத்தி வைப்பு
பாராளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக சபை 20 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி விலக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம நீதியரசர் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதனால் சபையில் குழப்ப நிலைமை ஏற்பட்டது. இதனை அடுத்து அவையின் நடவடிக்கைகளை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் சமால் ராஜபக்ச அறிவித்தார்.
READ MORE | comments

மகாத்மாகாந்தியின் 67 ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தும் நிகழ்வு

Friday, January 30, 2015


மகாத்மாகாந்தியின் 67 ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்றது.

மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ. செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா. அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா துரைரட்ணம், மா. நடராசா, பிரசன்னா இந்திரக்குமார், ஞா. வெள்ளிமைல ஆகியோர் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்தனர்.








READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |