Advertisement

Responsive Advertisement

ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக 2000 முறைப்பாடுகள் பதிவு

ராஜபக்ச குடும்பத்தினரினதும் அரசியல்வாதிகளினதும் ஊழல் தொடர்பிலான முறைப்பாடுகள் 2000 பதிவாகியுள்ளதுடன், 30 முறைப்பாடுகளே இலங்கை ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலுள்ள தேசிய நூலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அதன் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
முன்னைய அரசாங்கம் பல ஊழல் மோசடிகள், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.
ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பினது ஊழல் மோசடி தொடர்பிலான ஆவணங்களை தற்போது திரட்டி வருகிறது.
இதற்கமைய இதுவரை 2000 முறைப்பாடுகள் எம்மிடம் கிடைக்கப்பெற்றுள்ளன. இவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சிரந்தி ராஜபக்ச, யோசித்த, ரோஹித்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினரிற்கும் மேலும் முன்னைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சர்கள் தொடர்பிலான மோசடி குறித்த முறைப்பாடுகளும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கமைய மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக 150 முறைப்பாடுகளும் சஜின்வாஸ் குணவர்தன எம்.பி.க்கு எதிராக 200 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவற்றில் 30 முறைப்பாடுகள் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த முறைப்பாடுகளை உரிய முறையில் செய்து மேலும் 20 முறைப்பாடுகள் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
குறித்த முறைப்பாடுகளுக்கு அமைவாக சஜின்வாஸ் குணவர்த்தன எம்.பி. யின் மனைவியின் பெயரில் சிங்கப்பூரில் ஹோட்டல் இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு சிங்கப்பூர் வங்கி ஒன்றில் கணக்கு இருப்பதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments