Home » » ஐ.நா விசாரணைக்கான ஆதரவை மீண்டும் உறுதி செய்த பிரித்தானிய தலைவர்கள்

ஐ.நா விசாரணைக்கான ஆதரவை மீண்டும் உறுதி செய்த பிரித்தானிய தலைவர்கள்

பிரித்தானிய பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களின் மீது ஐ. நா நடாத்தும் சர்வதேச, சுயாதீன விசாரணைக்கான தமது ஆதரவை மீண்டும் உறுதி செய்தனர்.
தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் இணைந்து நேற்று லண்டனில் நடாத்திய இரவு போசனத்தில் காணொளி மூலமும் தமது பிரதிநிதிகள் மூலமும் தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.
பிரித்தானியப் பிரதமர் தமது செய்தியினை தமது பிரதிநிதி மூலம் அனுப்பி வைத்தார்.
இலங்கையின் நிலைமைகளை ஆழமாக அலசிய பிரதமர், புதிய இலஙகை அதிபரின் சில நடவடிக்கைகளை குறிப்பிட்டு வரவேற்றார்.
ஐ. நாவினால் முன்னெடுக்கப்படும் விசாரனைகளுகு இலங்கை அரசு பூரணமாக ஆதரவினைத் தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
2013 கார்த்திகையில் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது அங்கு ஓர் சர்வதேச விசாரணையை தேடுவதில் ஈடுபட்டேன் எனக் கூறும் பிரதமர், அவர்கள் கடந்த பங்குனி மாதம் ஐ.நா வில் கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மமானத்தில் தாம் ஆற்றிய காத்திரமான வகிபாகத்திற்காக தான் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி தலைவரும் லேபர் கட்சி தலைவருமான திரு. எட் மிலிபாண்ட் அவர்கள் காணொளி மூலம் தமது கருத்தை பதிவு செய்தார்.
புதிய மாற்றத்தை வரவேற்ற எதிர்க் கட்சித் தலைவர், அதன் போது இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்கு முகமாக ஐ.நா வினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென புதிய இலங்கை அதிபருக்கு அழுத்தம் கொடுத்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் தமிழர்கள் மீதான சர்வதேச பார்வையில் மாற்றம் ஏற்படுமோ என்ற கருத்து உருவாகி வரும் ஒரு முக்கிய தருணத்தில் பிரித்தானிய பிரமுகர்களை அழைத்து ஓர் ஒன்று கூடலை நடாத்தினோம்.
அதன் போது பிரித்தானிய தலைவர்கள், அமைச்சர்கள் அனைவரும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்குவதில் தமக்குள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதி செய்தது எமக்கு ஓர் தார்மீக பலத்தை தருகின்ற‌து என பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலர் ரவி தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |