சீரற்ற கால நிலை! 4 பேர் பலி : 23 பேரை காணவில்லை

Thursday, November 30, 2017

நேற்று இரவு முதல் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காணமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்களுக்கிடையே கடலுக்கு சென்ற மீனவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -
READ MORE | comments

The goat herd was put fired

( M.I.M.Azhar – )

The goat herd was put fired in hijra village area in mullippothana police division recently.
Five goats were burned as the fire damaged the whole herd.
No suspects have been identified as of yet.
Mullippothana police are investigating.


READ MORE | comments

ஆவா குழு உறுப்பினர்கள் மூன்று பேர் கொழும்பில் கைது

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் ஆவா குழு உறுப்பினர்கள் மூன்று பேர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
நேற்றைய தினம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய், யாழ்ப்பாணம், மானிப்பாய் போன்ற பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு, கொள்ளை சம்பவங்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 வயதுடைய ஆப்டீன் மொஹமட் இக்ராம், 20 வயதுடைய சிவக்குமார் கதியோன் மற்றும் 17 வயதுடைய இராசேந்திரன் சிந்துயன் ஆகிய மூன்று பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
READ MORE | comments

30 ஆண்டுகளின் பின் 29 ஏக்கர் நிலம் விடுவிப்பு

இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் வசாவிளான் கிராமத்தின் 29 ஏக்கர் நிலப் பகுதி இன்று (30) இராணுவத்தினரால் விடுவிக்கப்படுள்ளது.
வசாவிளான் உத்தரமாதா தேவாலயம், றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் J/245 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட நிலப் பகுதிகள் இன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
யாழ். ஆஜர் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாகக் கடந்த 30 ஆண்டுகளின் பின்னர் குறித்த பகுதியை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணங்கியுள்ளனர். எனினும், வசாவிளானின் எஞ்சிய பகுதி விடுவிக்கப்படாமை தொடர்பில் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இன் நில விடுவிப்பு நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ தளபதி, யாழ் அரசதிபர், உதவி அரசாங்க அதிபர், வலி வடக்கு பிரதேச செயலர் உள்ளிட அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
READ MORE | comments

National Reading month activities at Addalaichenai National College of Education

( M.I.M.Azhar ) “ Reading  maketh a  full man “ was the slogan for this years National Reading month activities at Addalaichenai National College of Education conducted throughout the whole month of October – 2017.
These activities are being held as per the circular and instruction of the ministry of education chief commissioner for teaching education ,Mr.K.M.H.bandara and chairman of National library  and documentation services board Dr.W.A.Abesinghe.
A book exhibition attracting the learners and readers was held recently at the library of the college with the participation of the chief commissioner for teacher  education ,Mr.K.M.H.bandara as the chief guest.
All the books ,magazines ,news papers and other reading materials were exhibited under the library classification titles for the convenience of the visitors.
All the activities were held under the patronage of the college president Mr.M.I.M.Nawas , directed  by A.G.Ahamed Naleer ,Lecturer incharge for library development and Oraganaization ,lectures Mr.K.Pathmaraja ,M.T.M.Muzammil and Actioned by Library Assistants M.L.M.Razeen ,A.W.M.Azeem and M.I.Jowfer with the assistance of the Readers circle members of the College.


READ MORE | comments

University Students hold blood donation( M.I.M.Azhar ) A blood donation campaign under the auspices of south eastern university applied science faculty recently at university meeting hall in Sammanthurai.
The Sammanthurai Base hospital blood bank collected the blood donated by  Students and lecturers  of south eastern university applied science faculty.
applied science faculty dean Dr.U.L.Zainulabdeen and assistant register A.R.M.Mahir were present.


READ MORE | comments

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபா நிவாரணம்

இயற்கை அனர்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவராணமாக 10,000 ரூபாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
யாரேனும் அனர்த்த நிலைமைகளுக்கு முகம்கொடுத்திருந்தால் 117 , 011267002 , 0112136136 என்ற இலகத்திற்கு அறிவிக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். 
READ MORE | comments

மலையகத்தில் கடும் மழை – 300ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

மலையத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து 29.11.2017 அன்று காலை முதல் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்து நோர்வூட் பகுதியில் 100ற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட சுமார் 50ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலத்திலும், சிங்கள மகா வித்தியாலத்திலும் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இதே வேளை பொகவந்தலாவ பொலிஸ் பிரவுக்குட்பட்ட கொட்டியாகல செல்வகந்த ஆரியபுர, பொகவான, குயினா, ஆகிய பகுதிகளில் 29.11.2017 அன்று மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை வீசிய கடும் காற்றினால் 200 இற்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன.
சில வீடுகளின் கூரைகளில் போடப்பட்டிருந்த தகரங்கள் பல மீற்றர் தூரத்திற்கு வீசி எறியப்பட்டுள்ளன. மலையகத்தின் பல பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக 29.11.2017 அன்று இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பல வீதிகளின் போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக 30.11.2017 அன்றும், 01.12.2017 அன்றும் மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.
இதனால் 30.11.2017 அன்று காலை சில மாணவர்கள் பாடசாலைக்கு வந்து மீண்டும் வீடு திரும்பினர்.
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் பொது போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
மலையத்தில் நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சிகாரணமாக நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் மிக வெகுவாக உயர்ந்து வருகின்றன. இதனால் மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் மகாவலி கங்கைக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொகவந்தலாவ டின்சின் பகுதியில் மரக்கறி தோட்ட காவலாலி ஒருவர் வெள்ள நீரில் சிக்குண்டு இருப்பதாக அறிவித்ததனையடுத்து அங்கு பொகவந்தலாவ பொலிஸார் அவரை காப்பாற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
Photo (1)Photo (2)Photo (3)Photo (4)Photo (6)
READ MORE | comments

இயற்கை சீற்றம்! 3 பேர் பலி

சீரற்ற கால நிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குருவிகொல்ல பகுதியில் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்றின் மீது மரமொன்று முறிந்து விழுந்ததில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் கிரிபத்கொட பகுதியில் லொறியொன்றின் மீது மரமொன்று முறிந்து விழுந்து ஒருவரும் அம்பலங்கொட பகுதியில் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
READ MORE | comments

இயற்கை அனர்த்தம்! கொழும்பில் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பில் நேற்று இரவு முதல் வீசிய கடும் காற்று காரணமாக பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது காயமடைந்த 15 பேர் வரையிலானோர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 
READ MORE | comments

நாட்டின் கால நிலை குறித்து சிகப்பு எச்சரிக்கை விடுப்பு : அவதானமாக இருக்கவும்

நாட்டில் கால நிலை தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு , சப்ரகமுவ , மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யலாம் எனவும் இதன்போது அனர்த்த நிலைமைகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வேளையிலும் அனர்த்த முகாமைத்துவத்தின் எச்சரிக்கைகள் தொடர்பாக அவதானத்துடன் இருக்குமாறு அந்த நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை கடல் பகுதிகளில் 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதாகவும் இது குறித்து கரையோர மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் மலையகத்தில் பெய்யும் மழையுடன கூடிய காலநிலையால் மண்சரிவு அபாயங்கள் காணப்படுவதாகவும் இது குறித்து அவதானமாக இருக்குமாறும் அந்த நிலையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. 
READ MORE | comments

காலநிலை சீர்கேட்டால் பாடசாலைகளுக்கு பூட்டு : பரீட்சைகள் ஒத்தி வைப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தென் , மேல் , மத்திய மற்றும் ஊவா மாகாண பாடசாலைகளுக்கு இன்று 30ஆம் திகதி விடுமுறை வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி இன்றைய தினத்திற்குறிய பரீட்சைகள் அனைத்தும் பிற்போடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!

Wednesday, November 29, 2017

93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், தபால் மூலம் வாக்களிக்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை, குறித்த விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் என தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.
93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்புமனுக்களை ஒப்படைக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு நேற்று அறிவித்தல் விடுத்திருந்தது.
READ MORE | comments

மைத்திரி – மகிந்த இடையேயான பிரச்சினைக்கு எப்படி தீர்வு காணலாம் : அனுர யோசனை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவையும் ஒரே அறையில் போட்டு 24 மணி நேரங்களுக்கு பூட்டி வைத்தால் அவர்களுக்கு இடையே காணப்படும் பிரச்சினைக்கு இரண்டில் ஒரு தீர்வை கண்டு விடலாம் என ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்‌ஷவுக்கும் மற்றும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே காணப்படும் பிரச்சினை தனிப்பட்டதே. கொள்கை ரீதியானது அல்ல. தனது கட்சியின் செயலாளராக இருந்தவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட வைராக்கியமே மகிந்தவிடம் இருக்கின்றது. இருவரையும் அறையொன்றில் 24 மணி நேரத்திற்கு பூட்டி வைத்தால் இரண்டில் ஒன்றை காணலாம். ஒன்று இருவரும் கட்டிப்பிடித்துக்கொள்வார்கள் இல்லையேல் இருவரும் அடித்துக்கொண்டு முடிவொன்றுக்கு வருவார்கள். அவ்வளவுதான். என அவர் தெரிவித்துள்ளார்
READ MORE | comments

இலங்கை வீரர்கள் தாங்கள் விளையாடிய விதத்திற்காக வெட்கப்படவேண்டும்-நிக்பொத்தாஸ்

Tuesday, November 28, 2017

இந்திய அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்டில் விளையாடிய விதம் குறித்து இலங்கை வீரர்கள் வெட்கப்படவேண்டும் என இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் நிக்பொத்தாஸ் தெரிவித்துள்ளார்
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் விளையாடிய விதம் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது இது பெரும் அவமானகரமான விடயமாக அமைந்துள்ளது எனத்தெரிவித்துள்ள அவர் இந்த போட்டியில் விளையாடி விதம் குறித்து வீரர்கள் வெட்கப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

ஜப்பானின் கடல்பகுதியில் உடல்களுடன் கரையொதுங்கும் மர்ம கப்பல்கள்

மனித எலும்புக்கூடுகளுடன் நவம்பர் மாதத்தில் நான்கு சிறிய கப்பல்கள் ஜப்பானின் கடற்கரைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் குறிப்பிட்ட கப்பல்கள் வடகொரியாவிலிருந்து வந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் கொன்சு தீவின் மியாசாவா கடற்கரைப்பகுதியை வந்தடைந்த கப்பலொன்றில் எட்டு உடல்கள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இனந்தெரியாத படகை வெள்ளிக்கிழமையே அவதானித்துவிட்டதாகவும் எனினும் திங்கட்கிழமையே எலும்புக்கூடுகள் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட சிறிய கப்பல் வடகொரியாவிலிருந்து வந்துள்ளதாக என்பதை உறுதிசெய்ய முடியாத போதிலும் ஏற்கனவே ஜப்பானிய கடற்பகுதிக்கு வந்துசேரும் கப்பல்களை போலவே இந்த கப்பல் காணப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு வார காலப்பகுதிக்குள் நான்கு படகுகளை மீட்டுள்ளதாகவும் இவற்றிலிருந்து 1 வடகொரிய பிரஜைகளின் உடல்களை மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அதிகாரிகள் 11 வடகொரிய பிரஜைகளை உயிருடன் மீட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்
வடகொரியாவில் காணப்படும் பாரிய பட்டினி நிலை காரணமாக அங்கிருந்து தப்பியோடும் முயற்சியின் போது மரணித்தவர்களின் உடல்களாக இவையிருக்கலாம் என அதிகாரிகள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.
READ MORE | comments

பஸ்களுக்கு கல்வீச்சுத் தாக்குதல்

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பருத்தித்துறை டிப்போ பஸ்கள் மீது, இன்று  காலை இனந்தெரியாதோர் கற்கள் வீசித் தாக்குதல்களை மேற்கொண்டதால், பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான பஸ் சேவைகள், காலை 10.30 மணியுடன் இடைநிறுத்தப்பட்டது.
எனினும், ஏனைய பாதைகளினூடாக பஸ் சேவைகள் அனைத்தும் இடம்பெற்றன.
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பாதுகாப்பு தரப்பு மற்றும் நிருவாக அதிகாரி ஆகியோரின் நடவடிக்கைகளைக் கண்டித்து, நேற்று  யாழ்ப்பாணம் இ.போ.ச டிப்போ ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இப்பணிப்புறக்கணிப்புக்கு, பருத்தித்துறை இ.போ.ச டிப்போ ஊழியர்கள் ஆதரவு தெரிவிக்காது, பருத்தித்துறை இ.போ.ச டிப்போ பஸ் சேவைகள் யாவும் நேற்று  அதிகாலை முதல் வழமை போல் ஆரம்பமாகி நடைபெற்றுவந்தன.
இந்நிலையிலேயே, இந்த கற்கள் வீசித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
READ MORE | comments

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாணசபையினால் வழங்கப்பட்ட பட்டதாரிகள் ஆசிரியர் நியமனத்தில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதுடன் அறிவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரிய நியமன விண்ணப்ப அறிவுறுத்தலுக்கு மாறாக நியமனம் வழங்கப்பட்டதை கண்டித்தும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (28)காலை முன்னெடுக்கப்பட்டது.மட்டக்களப்பு காந்தி”ங’கா முன்பாக ஒன்றுகூடிய மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.
40புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் நியமனம் வழங்கு,எங்கள் கண்ணீருக்கு நீதிவேண்டும்,அரசியல்வாதிகளே சிந்தியுங்கள்,இன்று நாங்கள் தெருவில் நாளை நீங்கள் தெருவில்,பரீட்சையிலும் சித்தி,நேர்முகதேர்விலும் சித்தி ஏன் நாங்கள் இன்னும் வீதி ஓரத்தில் போன்ற சுலோகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாணசபையினால் வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கு கோரப்பட்ட விண்ணப்பத்திற்கு மாறான முறையில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாணத்திற்கு பொதுவான கொள்கை இருக்கும்போது மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வழங்கப்பட்டு மிகவும் குறைந்த புள்ளிகளைப்பெற்றவர்கள் ஏனைய மாவட்டங்களில் ஆசிரியர்களாக உள்ளீர்க்கப்பட்ட நிலையில் அதிகளவிலான புள்ளிகளைப்பெற்றவர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் 40புள்ளிகளுக்கு மேல் பெறுவோர் ஆசிரியர்களாக உள்ளீர்க்கப்படுவார்கள் என்று கிழக்கு மாகாணசபையினால் அறிவிக்கப்பட்டிருந்தபோதும் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்ற பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு பட்டதாரிகள் தெரிவித்தனர்.
நேர்முகம்தேர்வு போட்டிப்பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களில் பலருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் எந்த அரசியல்வாதிகளும் தங்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கவில்லையெனவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.
விண்ணப்பத்தில் வேறு அரச நிறுவனங்களில் நியமனம் பெற்றவர்கள் விண்ணபிக்கமுடியாது என்று கோரப்பட்டபோதிலும் பலர் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே கிழக்கு மாகாணசபை வேலையற்ற பட்டதாரிகள் நியமனத்திற்காக நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்திபெற்ற அனைவரையும் உள்ளீர்க்க நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
DSC01982DSC01983DSC01987DSC01996DSC01998DSC02005DSC02009DSC02012DSC02014DSC02016DSC02018DSC02021DSC02025DSC02031
READ MORE | comments

பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவ மாணவிகளுக்கான மூன்று நாள் வருடாந்த சாரணர் பாசறை

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவ மாணவிகளுக்கான மூன்று நாள் வருடாந்த சாரணர் பாசறை பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தலைமையில் அண்மையில் திக்கோடை பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சாரணர்
ஆணையாளர் திருஆனந்தராஜா , உதவி சாரணர் ஆணையாளர்களான ஏ.புட்கரன் , என்.நாகராஜா , பட்டிருப்பு வலய உதவி மாவட்ட சாரணர் ஆணையாளர்
திரு.அலோசியஸ் ,பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடி சாரணர் பொறுப்பாசிரியர் ரீ. றுத்ராஹரன் உள்ளிட்ட பாடசாலைக்கு பொறுப்பான சாரணர் ஆசிரியர்களும் வலயத்திற்குட்பட் 10 பாடசாலைகளிலிருந்து 100 மாணவ மாணவிகளும் இந்த சாரணியர் பாசறையில் கலந்து கொண்டனர்.
READ MORE | comments

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 272 பேருக்கு ஆங்கில பாட ஆசிரியர் நியமனங்கள்

Monday, November 27, 2017

(26.11.2017)ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித  வீழ்ச்சியடைந்துள்ள கிழக்கு மாகாணத்தின் கல்வியை மேம்படுத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டும் அந்த வகையில் புதிதாக நியமனம் பெற்றுள்ள அனைத்து ஆசிரியர்களும் இதற்காக பங்களிப்பு செய்ய வேண்டும். ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் கிழக்கு மாகாணத்தின் கல்வி  நிலையை நாங்கள் மேம்படுதத வேண்டும். இதற்காக கல்வியமைச்சின்  அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும். கிழக்கு மாகாணத்தின் கல்வியில் ஒரு மாற்றத்தினை கொண்டு வருவதற்கான ஒரு சிறந்த செயற் திட்டமாகும் எனகிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் அலிசாகீர் மௌலானா கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் கலபதிமுன்னாள் கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் உதுமாலெப்பைமுன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞர்.கிருஸ்ணபிள்ளைசிப்லிபாரூக் எம்.எஸ்.சுபைர் உட்பட பலர் கலந்துகொண்டனர்
.
 கிழக்கு மாகாணத்தின்  சேர்ந்த 272பேருக்கு இந்த நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்  கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் உட்பட செயலாளர்கள்வலய கல்விப்பணிப்பாளர்கள்அதிபர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.READ MORE | comments

கூட்டு அரசு உடைகிறது!

நல்லாட்சியின் கூட்டுக்குள் ​பாரிய நெருக்கடியான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, அந்தக் கூட்டு உடைந்துவிடுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக, நம்பகரமான தகவல் தெரிவிக்கின்றது. அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுமாயின், புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கான ஆலோசனைகளும் மறுபுறத்தில் முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிகின்றது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து போட்டியிடுவதற்குத் தீர்மானித்தால் மட்டுமே, இவ்வாறான நிலைமையொன்று ஏற்படுமென்றும் அத்தகவல் தெரிவிக்கின்றது.
சுதந்திரக்கட்சி அவ்வாறான தீர்மானமொன்றை எடுத்தால், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலருடன் கைகோர்த்துக்கொண்டு, புதிய கூட்டணியை உருவாக்கும். அதற்கான பேச்சுவார்த்தைகள் மிக இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக, அத்தகவல் தெரிவிக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த யோசனைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் வகையிலேயே கருத்துகளைக் கூறியுள்ளதாக அறியமுடிகிறது. எனினும், இந்த விவகாரம் தொடர்பிலான இரகசியப் பேச்சுவார்த்தை இன்னும் நிறைவடையவில்லையெனவும் அத்தகவல் தெரிவிக்கின்றது. இது இவ்வாறிருக்கையில், இவ்வாறான புதிய கூட்டணியில், ஜே.வி.பியையும் இணைத்துக்கொள்ளவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றனவென அறியமுடிகின்றது. எனினும், அதனை இரு பக்கத்திலும் உறுதிப்படுத்த முடியவில்லை.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து போட்டியிட்டால், அரசாங்கத்திலிருந்து சு.க விலகவேண்டுமென, ஐ.தே.கயினர் பகிரங்கமாகக் ​கருத்துத் தெரிவித்துவருகின்றமையை அடுத்தே, இவ்வாறான புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
READ MORE | comments

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு கேக் வெட்டியதால் வவுனியா வளாகத்தில் குழப்பம்
: சிங்கள மாணவர்கள் அராஜகம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்தநாளுக்கு வவுனியா வளாகத்தில் கேக் வெட்டியமையால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பம்பைமடு விடுதியில் தங்கியுள்ள முதலாம் வருட மாணவர்கள் நேற்று (26.11) பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டியுள்ளனர். தமது விடுதியில் இடம்பெற்ற இந் நிகழ்வை முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்த பின்னர் அதை அவதானித்த சிங்கள மாணவர்கள் பிறந்தநாள் கொண்டாடியவர்களுடன் முரண்பட்டுள்ளனர். எனினும் விடுதி மேற்பார்வையாளர் இரு பிரிவினரையும் சமரசம் செய்து வைத்துள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை வவுனியா வளாகத்தின் குருமன்காடு கற்கைகள் பீடத்திலும் இதே சம்பவம் இடம்பெற்ற நிலையில் சிங்கள மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் முரண்பாடு இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

இந் நிலையில் வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள வளாகத்தின் நிர்வாக அலுவலகத்திற்கு இரவு 9 மணியளவில் வருகை தந்த சிங்கள மாணவர்கள் கேக் வெட்டிய மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அங்கு பதற்ற நிலை காணப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு வவுனியா பொலிசாரும் வருகை தந்திருந்தனர்.
வவுனியா வளாகத்தில் அண்மைக்காலமாக சிங்கள மாணவர்கள் அதிகமாக அனுமதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

ஜனாதிபதி தென்கொரியா பயணமானார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் தென் கொரியா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

மாகாணசபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பில் மாவட்ட மட்ட மக்கள் பிரதிநிதிகளை அழைக்காதது தவறான விடயம்!

மாகாணசபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பில் மாவட்ட மட்ட மக்கள் பிரதிநிதிகளை அழைக்காதது தவறான விடயம் என வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், வடமாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் மாகாண சபை தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு வருகை தந்த போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய தொகுதி முறையில் அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளமையால் வவுனியா மாவட்டத்தில் மாகாணசபை தேர்தலுக்கான புதிய தொகுதி பிரிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக பத்திரிகை வாயிலாக அறிந்தோம். அதன் பின் வவுனியா மாவட்ட செயலகத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவ்வாறு ஒன்று நடைபெறவுள்ளதாக கூறினார்கள். இந்த மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளாகிய எமக்கு இதில் கலந்து கொள்வது தொடர்பில் எந்தவித உத்தியோக பூர்வமான அறிவித்தலும்வழங்கப்படவில்லை. இந்த எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் கடந்த 9 ஆம் மாதம் 3 ஆம் திகதி உத்தேச திட்டம் ஒன்றினை வழங்கியிருந்தேன். அதில் வவுனியா மாவட்டத்தின் எல்லைகளை எவ்வாறு பிரிக்கலாம் என குறிப்பிட்டு இருந்தேன். அதனை அரசாங்க அதிபர் ஊடாகவும், மாகாணசபை பிரதம செயலாளர் ஊடாகவும் அனுப்பியிருந்தேன்.
இந்த மாவட்டத்தின் உடைய மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் ஒரு உத்தேச திட்டத்தை அனுப்பியிருந்தும் எங்களை இந்தக் கூட்டத்திற்கு அழைக்காதது மிகவும் கவலையான விடயம். இந்த மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளை அழைக்காது யார் இந்த எல்லை மீள் நிர்ணயத்தை செய்வது. இதேபோல் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான எல்லை மீள்நிர்ணயத்தின் போதும் நேரடியாகவும், எழுத்து மூலமாகவும் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அதேபோல் கொழும்பில் உள்ளூராட்சி அமைச்சரின் கூட்டத்திலும் கலந்து கொண்டு எழுத்து மூலமான கோரிக்கைகளை முன்வைத்தோம். அவ்வாறு முன்வைத்தும் கூட சில வேலைத்திட்டங்கள் நடைபெறவில்லை. குறிப்பாக வவுனியா வடக்கில் சிங்கள மக்களினுடைய நான்கு வட்டாரங்கள் வவுனியா வடக்கு பிரதேச சபையுடன் இணைக்கப்பட்டிருந்தது. அவர்கள் நிர்வாக ரீதியாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கீழ் வாழும் மக்கள். ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்தின் பிரதேச சபைத் தேர்தலுக்கு வாக்களிப்பது இது தான் முதல் தடவை என வெளிப்படுத்தியிருந்தோம். ஆகவே அப்படியான செயற்பாடு இனி நடைபெறக் கூடாது. அந்த மக்கள் வாழுகின்ற பிரதேசம் முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பகுதியில் புதிய பிரதேச சபையை உருவாக்கி அங்கு வாக்களிக்க விட வேண்டும் எனக் கேட்டிருந்தோம் அது தவறும் பட்சத்தில் அந்த மக்களை வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் இணைத்தால் அவர்களுக்கும் சுகமாக இருக்கும் என தெரிவித்திருந்தோம். வவுனியா வடக்கு பிரதேச சபையினுடைய 47 ஆவது அமர்விலே ஏகமனதாக அவர்கள் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியும் இருந்தார்கள். ஆனால் தற்போது அந்த நான்கு வட்டாரங்களையும் முல்லைத்தீவு பிரிவில் இருந்து எடுத்து வவுனியா மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களான பட்டிக்குடியிருபக்பு, வெடிவைத்தகல் என்பவற்றுடன் இணைத்திருக்கிறார்கள். அது யாருடன் பேசி அவ்வாறு செய்யப்பட்டது என தெரியாது.
ஆகவே, எல்லை நிர்ணயம் செய்யும் போது அந்தப் பகுதி மக்கள் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும். இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரியவர்களிடம் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்ம். அடுத்து மக்கள் பிரதிநிதிகளால் மக்களால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
READ MORE | comments

யாழ். பல்கலைக்கழகத்தில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் திரண்டு வந்து மாவீரர்களுக்கு அஞ்சலி

யாழ். பல்கலைக்கழகத்தில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மாவீரர்களின் எழுச்சி கீதங்கள் இசைக்க பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர்களுக்கான நினைவிடத்தில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் இன்று காலை நடத்தப்பட்டுள்ளன.
இதன்போது தமிழ் மக்களின் விடுதலைக்காக களமாடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், விரிவுரையாளர்கள், ஆசிரியர் சங்கத்தினர், ஊழியர்கள் எனப் பெருந்திரளானோர் மாவீரர் நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மாவீரர்கள் நினைவாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பயன்தரு மரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.121333445599
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |