(26.11.2017)ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித வீழ்ச்சியடைந்துள்ள கிழக்கு மாகாணத்தின் கல்வியை மேம்படுத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டும் அந்த வகையில் புதிதாக நியமனம் பெற்றுள்ள அனைத்து ஆசிரியர்களும் இதற்காக பங்களிப்பு செய்ய வேண்டும். ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலையை நாங்கள் மேம்படுதத வேண்டும். இதற்காக கல்வியமைச்சின் அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும். கிழக்கு மாகாணத்தின் கல்வியில் ஒரு மாற்றத்தினை கொண்டு வருவதற்கான ஒரு சிறந்த செயற் திட்டமாகும் எனகிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் அலிசாகீர் மௌலானா கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் கலபதிமுன்னாள் கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் உதுமாலெப்பைமுன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞர்.கிருஸ்ணபிள்ளைசிப்லிபாரூக் எம்.எஸ்.சுபைர் உட்பட பலர் கலந்துகொண்டனர்
.
கிழக்கு மாகாணத்தின் சேர்ந்த 272பேருக்கு இந்த நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் உட்பட செயலாளர்கள்வலய கல்விப்பணிப்பாளர்கள்அதிபர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
0 Comments