பிரமந்தனாறுக்குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவரை இழுத்துச் சென்றது முதலை?

Thursday, July 31, 2014

கிளிநொச்சி, பிரமந்தனாறுக்குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை, முதலை இழுத்துச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தர்மபுரத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான பழனி பன்னீர்ச்செல்வம் (வயது 42) என்பவர் நேற்று கிளிநொச்சி, பிரமந்தனாறுக்குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் உறவினர்கள் தங்களுக்கு தகவல் வழங்கியதை அடுத்து, குளத்தில் அவரை தேடி வருவதாக பொலிஸார் கூறினர். இவரை முதலை இழுத்துச் சென்றிருக்கலாமென்று சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
READ MORE | comments

பெண்ணைக் காதலிப்பதனை நிறுத்திவிட்டு மண்ணைக் காதலியுங்கள். அரியநேந்திரன்

Wednesday, July 30, 2014

பெண்ணைக் காதலிப்பதனை நிறுத்திவிட்டு மண்ணைக் காதலியுங்கள் அப்போது தற்கொலைகளுக்கு பதில் கிடைத்து விடும் அதன்மூலம் எமக்கு எம்மினத்தின் மீது பற்றுறுதி ஏற்படும்.
65 வருடங்களாக எம்மினம் பட்ட துன்பதுயரங்களை ஒருகணம் எண்ணிப்பார்த்தால் நாம் யாருமே தற்கொலைக்கு துணிய மாட்டோம் மாறாக மண்ணைக் காப்பாற்றுவதற்கு உழைப்போம் இன்று எமது தாயக பூர்வீக நிலங்கள் வேற்று இனத்தவர்களினால் நாளுக்கு நாள் அபகரிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது இதனைத் தடுக்க ஒரு கட்சியினால் மாத்திரம் முடியாது இதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு மிகமிக அவசியமாகும்  என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச சபைக்குட்பட்ட தெவிலாமுனை ஸ்ரீ நரசிங்க வைரவராலய வருடாந்த உற்சவத் திருநாளன்று முனைக்காடு நாகசக்தி கலைக்கழக தலைவர் மு.நமசிவாயம் தலைமையில் கலையரங்கில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தொடர்ந்து உரையாற்றுகையில்
இலங்கை அரசாங்கம் சமாதானம் என்று கூறும் 5 வருட காலகட்டத்தில் வடகிழக்கு மாகாணங்களை பொறுத்தளவில் கலாசார சீரழிவுகள், மாணவர் தற்கொலை அதிகரிப்பு, மதுபானசாலைகளின் அதிகரிப்பு ஆகியவையே அதிகரித்துள்ளது.,

ஆலயங்களில் கலைகலாசார நிகழ்வுகள் வைப்பதன் நோக்கம் தமிழர்களின் கலைகலாசாரங்கள் என்றும் உயிர்த்துடிப்புள்ளதாக அமைய வேண்டும் அதன்மூலம் எதிர்காலச் சந்ததியினர் நன்மையடைய வேண்டும் என்பதை சிரத்தை எடுத்து அன்றிலிருந்து இன்று வரைக்கும் நாட்டுக்கூத்து தொடக்கம் அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வரும் ஒரு கலைக்கழகமாக செயற்படுவது மிகவும் பாராட்டிற்குரிய தொன்றாகும்.
ஆனால் இன்று சமாதானம் என்று கூறி தமிழர்களுடைய கலாச்சாரத்தினை மலினப்படுத்தி அதற்கு மாறான செயற்பாடுகளையே இந்த அரசாங்கம் செய்து வருகின்றது.
அதனொரு பகுதி தான் மட்டக்களப்பில் என்றுமில்லாதவாறு மதுபான சாலைகளின் புதிய பரிணாமம் என்று சொல்லலாம் இம் மாவட்டத்தை மாத்திரம் எடுத்து நோக்கினால் அரசாங்க அதிபர் கூறியபடி மாதம் ஒன்றிற்கு 200 மில்லியன் ரூபா மதுபானத்திற்காக செலவிடப்படுகின்றது. அதே போன்று மன்முணை மாதர் அமைப்பின் கணக்குப்படி ஒரு மாதத்திற்கு 41 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகின்றது.
படுவாங்கரை பிரதேசத்தினை எடுத்து நோக்கும் போது ஐந்து வருடங்களுக்கு முன்பு எந்த ஒரு மதுபான சாலைகள் கூட இருந்ததில்லை ஆனால் அரசாங்கம் கூறும் சமாதான காலப்பகுதியில் இந்தப் பிரதேசத்தில் 10க்கும் மேற்பட்ட மதுபானசாலைகள் புதிதாக திறக்கப்பட்டு மக்களின் பொருளாதாரத்தினை சீரழித்து வருகின்றது இதுதான் அரசாங்கம் செய்த மிகப்பெரிய சேவையாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த வரையில் ஏனைய மாவட்டங்களை விட வறுமை நிலை கூடிய மாவட்டமாக கணக்கெடுக்கப்பட்டிருக்கின்றது குறிப்பாக இலங்கையின் வறுமை நிலை இன்று 8.5 வீதமாகும் ஆனால் 25 மாவட்டங்களையும் எடுத்துக்கொண்டால் மட்டக்களப்பு மாவட்டமே 21.6 வீதமான வறுமைக் கோட்டினை காட்டி நிற்கின்றது.
இந்த மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் வறுமைக்கும், மதுபான பாவனைக்குமிடையே நெருங்கிய தொடர்பிருக்கின்றது என்பதனை யாவரும் அறிந்திருப்பது கட்டாயமானதாகும்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஒழுக்கத்துடன் கூடிய கல்வியினை பெற வழிப்படுத்த வேண்டும் அப்போது தான் அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமையும்.  தற்போது மாணவர்கள் தற்கொலை செய்யும் வீதம் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது இதற்கான காரணத்தினை தேடினால் காதல் விவகாரம் என தெரியவருகின்றது இந்த விடயத்தில் பெற்றோர்கள் மிகுந்த சிரத்தை எடுக்கவேண்டும்.
எமது எதிர்காலச் சிந்தனைகள் எமது குடும்பம்,  உறவுகள் என்று இருப்பதற்கும் அப்பால் எமது நிலத்தின் மீதும் சிந்தனை இருத்தல் வேண்டும் அப்பேதுதான் தமிழன் தமிழனாக தலைநிமிர்ந்து வாழமுடியும் எனவும் கூறினார்
READ MORE | comments

இங்கிலாந்திலுள்ள வீடொன்றினுள் 8 அங்குலம் நீளமான அசுர தும்பி

இங்கிலாந்திலுள்ள வீடொன்றினுள் 8 அங்குலம் நீளமான  ஜூராசிக் அளவிலான அசுர தும்பியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கரும்பச்சை நிறத்திலான இந்தத் தும்பியானது சிறிய வகை  ஹெலிகொப்டர் போன்று, பயங்கர சத்தத்துடன் குறித்த வீட்டின் அறையொன்றினுள் சுற்றித் திரிந்ததாக அவ்வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அசுர அளவிலான தும்பியைக் கண்ட திருமதி வில்கின்சன், சத்தம்போட்டு அருகிலிருப்போரை அழைத்துள்ளார். அத்துடன், ஒரு சில புகைப்படங்களையும் அவர் எடுத்துள்ளார்.
அதன் பின்னர், வீட்டின் ஜன்னல் ஒன்றினைத் திறந்து தும்பியை வௌியேற்றியுள்ளார்.
ட்ராகன் ப்ளைஸ் எனப்படும் இந்த அசுர வகை தும்பி இனமானது புவியில் 325 மில்லியன் ஆண்டுகள் வாழ்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூச்சிக்கொல்லி பயன்பாடு மற்றும் நீர் மாசுபாடு ஆகிய காரணங்களால் இந்த இனம் காலப்போக்கில் அழிவடைந்து வருகிறது

READ MORE | comments

அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சர்வதேசத்தில் முஸ்லிம் சமூத்திற்கு ஏற்படும் அநீதியைக் கண்டித்து காத்தான்குடியில் பெருநாள் தொழுகைக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை பொது மக்களால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. 
 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கெதிரான வாசகங்கள் அடங்கிய பாதாதைகளை ஏந்தியவாறு உடனடியாக யுத்தத்தை நிறுத்தி முஸ்லிம்களுக்கு உதவுங்கள் எனக் கோஷம் எழுப்பினர். 
 
இதன்போது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கொடிகளை மிதித்தும், பாதணிகளால் அடித்தும் எரித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
 
READ MORE | comments

மேலதிக வகுப்புகளுக்குத் தடை

2014 கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்காக நடத்தப்படும் மேலதிக வகுப்புகள் யாவற்றையும் நாளை நள்ளிரவு முதல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி வரை தடைசெய்யுமாறு பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ. எம்.என்.ஜே.புஸ்பக்குமார இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
இதன்படி பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் உள்ளிட்ட அனைத்தையும் தடை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இவ்வருடத்திற்கான உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி முதல் 29ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
READ MORE | comments

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையில் "சொல்முனை விவாதிகள் சம்மேளன" அங்குரார்ப்பண நிகழ்வு - 2014

மாணவர்கள் மத்தியில் பேச்சுத்திறன் தர்க்கிக்கும் திறன் மொழியாற்றல் சிறந்த ஒழுக்கப்பண்பு கூட்டு முயற்சி சமூகத்துக்கு ஆரோக்கியமான கருத்துக்களை வெளியிடல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றுக்கான சந்தர்ப்பங்களை உருக்குதல் மேம்படுத்தல் எனும் அடிப்படையிலும் 

வினைத்திறன் மிக்க செயற்பாட்டின் மூலமாக பேச்சாற்றலுடன் கூடிய ஆளுமை மிக்க சமூகத்தை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளிலும் சொல்முனை விவாதிகள் சம்மேளனம் இன்று (30.07.2014) மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் உருவாக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிபர் பொன்.வன்னியசிங்கம், தமிழ் துறை சார்ந்த பாட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் புதிய சொல்முனை விவாதிகள் சம்மேளனத்துக்கு தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் தொழிநுட்பத்தின் வளர்ச்சியானது இன்றைய நிலையில் நன்மை பயக்கும் என ஒரு சாராரும், அதனை எதிர்த்து தொழிநுட்பத்தின் வளர்ச்சியானது தீமை பயக்கும் என அடுத்த சாராரும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டமையைக் காணக்கூயதாக இருந்தது. இந்நிகழ்வை ஏற்பாடு செய்து வழிநடத்தியவர் சுதர்சன் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையில் இடம்பெற்ற சேவை நலன் பாராட்டு விழா


மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் கடமையாற்றி  வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச்  சென்றவர்களுக்கும்  பாடசாலையில் கடமையாற்றி இளைப்பாறியவர்களுக்குமான சேவை நலன் பாராட்டு விழா  பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் 30.07.2014 பி.ப 12.30 மணிக்கு இடம் பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலையில்  கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு சேவை அடிப்படையில் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னமும் பரிசுப் பொதியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. மதிய போசனத்தின் பின்னர் இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களின் ஏற்புரை இடம் பெற்றது. இந்நிகழ்வில் திரு.கே. உதயகுமார் (பிரதியதிபர்) திருமதி.த.திருநாவுக்கரசு (ஆசிரியர்) திரு.க.யோகேந்திரராசா (ஆசிரியர்) திருமதி.நி.சிவராசா(ஆசிரியர்) திரு.ச.சதீஸ்குமார் (ஆசிரியர்) திரு.கு.பார்த்தீபன் (நூலக உதவியாளர்) திரு.க.கோபாலகிருஸ்ணன் (ஆசிரியர்) திருமதி.தக.திருநாவுக்கரசு (ஆசிரியர்) போன்றோர் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்வில் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்துப் பா வாசிக்கப்பட்டதுடன் இவ்வாசிரியர்களைப் பற்றி பலரும் புகழ்ந்து உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது. இவற்றைப் படங்களில் காணலாம்.READ MORE | comments

மட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் 5ம் தர புலமைப் பரீசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இலவசக் கல்விக் கருத்தரங்கு - 2014

Tuesday, July 29, 2014


தரம் 5 மாணவர்களுக்கான இலவசக்  கல்விக் கருத்தரங்கு


2014  5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை தோற்றவிருக்கும் மாணவர்களுக்காக மட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மண்டபத்தில்  கல்விக் கருத்தரங்கு நடாத்தப்பட்டது. இக்கருத்தரங்கானது மட்டக்களப்பு பிரபல ஆசான் திரு.ஜெ.ஜெயக்காந்தன் அவர்களால் நடாத்தப்பட்டது. இந் நிகழ்வானது குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் மற்றும் இளைஞர் கழகங்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


READ MORE | comments

எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்லக் கூடிய ரஷ்ய நாட்டு தயாரிப்பில் உருவான மோட்டார் சைக்கிள்

எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்லக் கூடிய ரஷ்ய நாட்டு தயாரிப்பில் உருவான மோட்டார் சைக்கிள்READ MORE | comments

கீரிக்கும் அனகொண்டா பாம்புக்கும் இடையில் நடக்கும் சண்டையில் வெல்வது யார் vedio

கீரிக்கும் அனகொண்டா பாம்புக்கும் இடையில் நடக்கும் சண்டையில்  வெல்வது யார்


READ MORE | comments

திருமணமான 2 மாதத்தில் கணவன்–மனைவி தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுக்குழிபட்டி சோளகுளத்துபட்டியை சேர்ந்தவர் பூசாரி அம்பலம். இவரது மகன் முருகன்(26). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கும், மார்க்கம்பட்டி அருகில் உள்ள ஆவாரம்பட்டியை சேர்ந்த லலிதா(24) என்ற பெண்ணிற்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் லலிதாவுக்கு மார்பில் கட்டி ஏற்பட்டுள்ளது. வேதனையால் அவதிப்பட்ட மனைவியை முருகன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். அதில் குணமாகவில்லை.
இதையடுத்து வேறு பல ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றும் பலன் இல்லை. அதன்பின்னர் முருகன், மனைவியுடன் கோவில்களுக்கு சென்று மந்திரித்துள்ளார். எந்தவொரு வகையிலும் நோய் குணமாகாததால் மனம் உடைந்தனர்.
தங்களுக்கு இல்லற சுகத்தை தர முடியாத நான் உயிருடன் இருந்து பலன் இல்லை. எனவே இறந்துபோகிறேன் என்று லலிதா கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு முருகன் உன்னை விட்டு நான் மட்டும் எப்படி தனியாக வாழ்வேன் என்றார்.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கணவன்–மனைவி 2 பேரும் சேர்ந்து ஒன்றாகவே தற்கொலை செய்வது என முடிவு செய்துள்ளனர். அதன்படி சம்பவத்தன்று ஆஸ்பத்திரி செல்வதாக கூறி சென்ற அவர்கள் கன்னியாபுரம் அருகே எல்லப்பட்டியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் முருகனின் பெற்றோர்கள் தேடி அலைந்தனர். விசாரித்ததில் அவர்கள் ஆஸ்பத்திரி செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் எங்கு சென்றார்கள்? என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் கன்னிகாபுரம் அருகே உள்ள கிணற்றில் ஆண் – பெண் 2 பேரின் பிணங்கள் கிடப்பதாக சாணார்பட்டி போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று 2 பேரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது இறந்த கிடந்த 2 பேரும் சோளகுளத்துபட்டியை சேர்ந்த கணவன்– மனைவி என்பது தெரியவந்தது. போலீசார் கொடுத்த தகவலின்பேரில் முருகன், லலிதாவின் பெற்றோரும், உறவினர்களும் அங்கு திரண்டு வந்தனர். திருமணமான 2 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட அவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.
2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
READ MORE | comments

SLAS பரீட்சை புதிய பாடத்திட்ட விளக்கம்

இலங்கை நிர்வாக சேவை போட்டிப்பரீட்சைக்கான பாடத்திட்டம் பெரும்பாலும் புதுத்தோற்றம் பெற்றுள்ளமை அது சார்பில் தெளிவின்மையை அல்லது கருத்து மாறுபாடுகளை / ஒத்தகருத்தின்மையை ஏற்படுத்தியுள்ளமை இங்கு பரீட்சார்த்திகளிடையே பெரும் ஐயங்களை தோற்றுவிக்கின்றது. எனவே அவை தொடர்பிலான விளக்கங்கள் பலரதும் அபிப்ராயங்கள் அனுமானங்களின் அடிப்படையில் இங்கே ஒரு சிறு தெளிவுரையாக உங்களுக்காக வழங்கப்படுகின்றது.
அந்த வகையில் முதலில் திறந்த பிரிவு சார்பில் அவதானம் செலுத்துவோம்.
திறந்த பிரிவானது ஐந்து பாடங்களை உட்கொண்டுள்ளது. இதற்கு முன்னர் நுண்ணறிவு, பொது அறிவு, கட்டுரையும் சுருக்கமும், முகாமைத்துவ உளச்சார்பு என்றவாறு நான்கு பாடங்களை உள்ளடக்கியிருந்தது. தற்போது  இப்பரீட்சைத்திட்டம் தற்போது ஐந்து பாடங்களாக மாற்றம் பெற்றுள்ளது. தெளிவாக கூறின், பொது அறிவு எனும் விடயமானது இங்கு சற்று விரிவான வியாக்கியானங்களுடன் இலங்கை தொடர்பான பொதுஅறிவு சார் வினாப்பத்திரம் , உலகியல் நடப்பு / போக்கு தொடர்பிலான இலங்கைக்கு வெளியே சார் பொதுஅறிவு பத்திரம் என்றவாறு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். பாடத்திட்டம் பின்வருமாறு:-
z1இதன்படி சற்று விளக்கமாக வர்த்தமான பத்திரிகை பின்வருமாறு தருகிறது.z2z3
வினாப்பத்திர இல ௦1. பொது விவேகம் :- நுண்ணறிவு பரீட்சைக்கும் பொது விவேகத்திற்கும் வித்தியாம் உள்ளது. நுண்ணறிவு எனும்போது அனேகமாக உங்கள் வேகத்தினையும் கணிதவியலோடு தொடர்பான விவேகங்களையும் மொழியறிவோடு தொடர்பான திறன்களையும் உருவ/கோலங்களோடு தொடர்பான சிந்தனா சுழற்சியையும் அளவிடுவதாகவே 2௦௦7 மற்றும் அதன் முன்பான இ.நி.சேவை நுண்ணறிவு வினாப்பத்திரம் அமைந்திருந்தது. அனால் அதன்பின்னரான வினாக்கள் அனேகமாக 65 ‘/. ஆனவை பந்தி வடிவிலான வினா அமைப்புக்களாக மாற்றம் பெற்றுள்ளதுடன் ஓரளவு சிக்கலான அனுபவமற்ற பரீட்சார்த்தி அதிக நேரங்களை செலவிடக்கூடிய தன்மையதாய் அமைந்து வருவது அவதானிக்கப்பட்டது. இப்பரீட்சைகளிலே தோற்றியவர்கள் அநேகமானோர் இவ்வினாத்தாள் பற்றி ” நேரம் போதாமை ” சார்பாக விமர்சனங்களை முன்வைக்கத்துவங்கினர். இதனால் இம்முறை நுண்ணறிவு எனும் அம்சம் பொது விவகம் என மாற்றப்பட்டுள்ளதுடன் வினாப்பத்திர பாடத்திட்டம் தெளிவாக வரையறுக்கப்பட்டு ஏலவே ௦1 மணித்தியாலமாக இருந்த நேரம் தற்போது ௦1  1/2 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் வினாக்கள் 6௦-75 வரை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன்படி,
z4
மேலே காட்டப்பட்டபடி ( இ.நி.சேவை பிரமானக்குறிப்பின் படி) நோக்கினால் , வினாக்கள் அதிகமாக ஒழுங்கமைப்பு , கிரகித்தல் திறன் சார், மாற்றுவழி உபாயம் , தர்க்க அறிவு என்பவற்றை ஒருமித்து விடை காணும் ஆற்றலை அளவிடுவதாகவே பெரும்பான்மையான வினாக்கள் அமையும். இவை பெரும் பந்திகளாகவும்/சிக்கல் மிக்க சிறு பந்திகளாகவும் அமையும். உதாரணமாகuh
மேற்கண்டவாறான வினாக்களே பெரிதும் எதிர் பார்க்கப்படுகின்றன. எனவே பரீட்சார்த்திகள் பழமைபேணும் விதத்தில் எழுதுனர் பதவிக்கான போட்டிப்பரீட்சை வினாப்பத்திரங்களில் அதிக பயிற்சி எடுப்பதிலும் பார்க்க ஒழுங்கமைப்பு மற்றும் தர்க்கவியல் , சிக்கல் மிக்க பிரசினங்களை தீர்த்தல் தொடர்பிலான வினாக்களோடு தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளுதல் புத்தி சாதூர்யமாகும்.
+++++குறிப்பு +++++ பொதுஅறிவு எனும் அம்சமே தற்போது இரண்டு விடயங்களாக பிரிக்கப்பட்டு புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உலகப் பொதுஅறிவு இலங்கைசார் பொது அறிவு என்று வேறுபாடில்லாமல் வினாவப்பட்டது. தற்போது அவை இரண்டு விடயங்களாக்கப்பட்டுள்ளன. அவை பின்வரும் ௦2ஆம் ௦3ஆம் விடயங்களாகும்.
வினாப்பத்திர இல ௦2. இலங்கையின் சமுக பொருளாதார அரசியல் பின்னணி மற்றும் அதன் போக்குகள் :-
பழைய பாடத்திட்டத்தின்படி பொது அறிவு எனும் அம்சத்தின்கீழ் இலங்கைக்கு உட்பட்ட அல்லது தொடர்புபட்ட சகல பொது அம்சங்களும் வினாவப்படும். அதாவது சமுக,பொருளாதார,சமய,அரசியல்,கலாசார,வரலாற்று,கலை,விளையாட்டு,புவியியல் ரீதியிலான பதிவுகளும் சமகால நிலைமைகளும் வினாவப்படும். மேற்கூறிய சகலமும் ஆரம்பம், வரலாறு, வளர்ச்சி என்ற பின்னனியிலும் அவற்றின் தற்கால நிலை , போக்கு என்ற ரீதியில் CURRENT AFFAIRS வினாக்களாகவும் அமைந்தன.
ஆனால் தற்போது அதே பொது அறிவு விடயங்கள்,   இலங்கை சார்பாக மட்டும் வினாவப்படும் வினாப்பத்திரமாக இது அமையும்.z2 - Copyவித்தியாசம் என்னவெனில் ஏற்கனவே பல்தெரிவு வினாக்கள் மற்றும் சுருக்கவிடை முறைமைகளை மட்டுமே கொண்டிருந்த வினாப்பத்திரம் தற்போது அமைப்புக்கட்டுரை மற்றும் கட்டுரை வினாக்கள் எனும் புது வாசகங்களை உட்கொண்டுள்ளது. இதுவே இன்றைய பரீட்சார்த்திகளின் ஐய நிலைக்கு பிரதான காரணமாகும். வினாப்பத்திரத்துக்கான கடந்த கால பத்திரங்கள் ( pass papers) இன்மையால் இது நீடிக்கிறது. ஆனாலும் ஓரளவுக்கு எம்மால் இதற்கு தெளிவுவழங்க எதிர்பார்க்கிறோம்.
அமைப்புக்கட்டுரை எனும்போது… இலங்கையின் ஏதேனும் ஓர் ஆய்விடயம் / பிரச்சினை/சிறப்பம்சம் அல்லது ஏதேனும் ஓர் திட்டம் தொடர்பான தலைப்பு/சிறப்பு வரி/சிந்தனை தரப்பட்டு அதுபற்றிய பரீட்சார்த்தியின் அறிவு/தெளிவு/புரிதல்களை பரீட்சிக்கும் நோக்கில் வினாக்கள் வினவப்படும். இதற்கான விடைகள் அமைப்புக்கட்டுரை வடிவில் அமைதல் வேண்டும். ( அமைப்புக்கட்டுரையின் அம்சங்கள் பற்றி கீழே அவதானியுங்கள்)
வினாப்பத்திர இல 03. சர்வதேச/உலகளாவிய போக்கு (Global Trend) :-
உலகளாவிய போக்கு எனும்போது இவை பொதுஅறிவு சார் விரிவான பார்வையாகும். இவ்வினாப்பத்திரம் சர்வதேச பதிவுகளை,நிகழ்வுகளை, நகர்வுகளை,மாற்றங்களை,திட்டங்களை,மார்க்கங்களை,உபாயங்களை,பின்னனிகளை,விதானங்களை, அட்டவணைகளை , விளக்க/வியாக்கியானங்களை பற்றிய உங்கள் அறிவினைப் பரீட்சிப்பதாய் அமையும்.. இதற்கென நீங்கள் உலகளாவிய போக்குகளில் திளைத்தவராக இருக்கேவேண்டும் எனும் அவசியம் இல்லை.சளைக்காதவராய் இருக்கவேண்டும். உலக விவகாரங்களில் உங்கள் மூளை நுனிப்புல் மேய்ந்த காலம் இந்த பாடத்திட்ட மாற்றத்தில் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது இங்கு குறிப்பிடப்பட்டே ஆகவேண்டும்.
இவ்வினாத்தாளானது சர்வதேச அரசியல்,சமூக,வரலாறு,புவியியல், பொருளாதார,கலாசார,விஞ்ஞான,தொழிநுட்பம் சார் தரவுகள் தொடர்பிலான வினாக்களை உட்கொண்டிருக்கும். சாதாரணமாக பாட இலக்கம் இரண்டைப்போன்றே சுருக்கவினா,பல்தேர்வுவினா என்பவற்றுடன் கட்டுரை வினா , அமைப்புக்கட்டுரை என்பவற்றையும் கொண்டிருக்கும். எனவே முன்னர்போல் அல்லாது தற்போது சகல பொது அறிவுகள் சார் அம்சங்களும் ஆழமாக பார்க்கப்படல்வேண்டும். உதாரணமாக,
௦1.உலகின் மொத்த தேசிய உற்பத்தியில் முதனிலை வகிக்கும் நாடு எது? i)இந்தியா ii) சீனா  iii) அமேரிக்கா  iv) ஜப்பான்
௦2.உலகின் மொத்த தேசிய உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் முதல் மூன்று நாடுகள் யாவை? i)……………ii)…………………iii)……………………….
௦3.சீனாவின் மொத்த தேசிய உற்பத்தியில் தாக்கம் செலுத்தும் பிரதான காரணிகளில் ஐந்தைக் கூறி அவற்றுள் மூன்றை சுருக்கமாக விளக்குக.
௦4.(  சீன அரசியல் கொள்கை சார்பான சிறு பந்தியை அல்லது ஒரு பிரபல்ய வசனத்தினை தந்துவிட்டு…) சீனாவின் வளர்ச்சியில் தாக்கம் செலுத்துவதில் அரசியல் ஸ்தீரம் வகுக்கும் வகிபாகங்களை தெளிவுபடுத்துக.
௦5. உலக வர்த்தக சந்தையில் சீனப்பொருளாதார வளர்ச்சியின்  தாக்கங்களை/ எண்ணெய் விலை அதிகரிப்பின் / மத்திய கிழக்கு அரசியல் ஸ்திரமற்ற நிலையின் தாக்கங்களை   பரிசீளிக்குக.
மேற்கண்டவாறு ஒரே விடயம் சகல வினா வகைகளிலும் உங்களின் ஒப்பீட்டுப்பார்வைக்காக தரப்பட்டுள்ளன. இதற்கேற்றவாறு உங்கள் சர்வதேச பொதுஅறிவு மட்டத்தினை விருத்திசெய்துகொள்ளுங்கள். இதே முறைமையிலேயே இலங்கைசார் (வினா பத்திரம் -௦2) வினாக்களும் வினாவப்படும் என்பதை கருத்திற்கொள்க.
வினாப்பத்திரம் ௦2&௦3 ====
நண்பர்களே! ஒற்றைச்சொல்லில் விடையளிக்கும் நோக்கில் பொதுஅறிவு படிக்கும்  பாரம்பரியம் இத்தால் முடிவுறுத்தப்படுகிறது. நீங்கள் விரிவாக எந்தவொரு விடயத்தினையும் விமர்சன நோக்கில் பார்க்கும் ஆற்றல் உள்ளவரை இருத்தல் வேண்டும் என்பதே இவ்வினாக்களினூடே எதிர்பார்க்கப்படுகின்றன.
வினாப்பத்திரம் ௦2 மற்றும் ௦3 என்பவற்றில் அமைப்புக்கட்டுரை வரும்போது அதற்கான உங்கள் விடையளிப்புத்திறனை மேம்படுத்தும் நோக்கில் கீழே வரும் வழிமுறைகளை பின்பற்றுவது சிறந்தது.
அமைப்புக்கட்டுரை பற்றிய மிகத்தெளிவான அடிப்படைகள் பின்வருமாறு படவடிவில் தரப்படுகிறது.1234இவற்றை உங்கள் கட்டுரை வினாக்களுக்கு விடையளிக்கும் போது கவனத்தில்கொள்வது சிறந்தது
வினாப்பத்திர இல ௦4. முகாமைத்துவ விவேகம் :-
z3 - Copy
முகாமைத்துவ / நிர்வாக ஆளுமைகள் , திறன்கள் உங்களிடம் இருக்கின்றதா? என்பதை மிகவும் நுட்பமாக பரீட்சிக்கும் வினாப்பத்திரம் இதுவாகும். முகாமைத்துவ விடயங்களோடு சம்மந்தப்பட்ட வினாக்கள் என்றாலும் இவற்றுக்கு விடையளிப்பதற்கு முகாமைத்துவ விடயங்களை முற்றிலும் கற்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் இவ்வினாக்களுக்கு விடையளிக்கும்போது முகாமைத்துவ அடிப்படைகள் அறிந்துவைத்திருப்பது அவசியமாகும். எனவே பாடத்திட்டத்தில் உள்ள முக்கியமான சில தலைப்புக்களை இங்கே தருகின்றேன் . அவை பற்றிய குறிப்புக்களை இருமுறையாவது வாசித்துக்கொள்ளுங்கள். ஆனால் இது முகாமைத்துவ விடயம் அல்ல என்பதால் அதிகமாக நடைமுறைசார் விடய ஆய்வு வினாக்களாகவே இவை அமையும் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

இவ்வகை வினாக்கள் உங்களிடம் ….
அ. பிரச்சினைகளை/நிகழ்வுகளை அணுகும் திறனை, தீர்மானங்களை எடுத்து பொறுப்புக்களை ஒப்படைத்து அதனை நடைமுறைப்படுத்தும் திறனை அளவிடுவதாய் அமையும்.
ஆ. உங்கள் மேல்நிலை / கீழ்நிலை உத்தியோகத்தர்களிடையே, பொதுமக்களிடையே அமைப்புக்களிடையே, சமாந்தர நிறுவனங்களிடையே  தொடர்பாடல்களை மேற்கொள்ளும் முறைமைகள் / உத்திகளை அளவிடுவதாகவும்,
இ. திட்டமிடல்,ஒழுங்கமைத்தல்,நெறிப்படுத்தல்,கட்டுப்படுத்தல் போன்ற முகாமை அம்சங்களினூடாக ஒரு பிரச்சினையை முகம் கொடுக்கும் அறிவை, ஒரு திட்டத்தினை அமுல்படுத்தி அதில் ஏற்படும் சவால்களை வெற்றிகாணும் தன்மையை அறியும் நோக்கிலும்
ஈ. மனிதவள முகாமைத்துவ அறிவினைப் பரீட்சிக்கும் விதத்திலும் ( மனித வள முகாமை எனும்போது… ஒரு நிறுவனத்தின் ஊழியர்களை பயன்படுத்தும் விதமும் அவர்கள் தொடர்பிலான பிரச்சினைகள் சவால்களை வெற்றிகாணும் விதத்தினையும் அளவிடுவதை குறிக்கிறது|)
உ. நேரமுகாமைத்துவம் உள்ளிட்ட அலுவலக ஒழுக்கவியல் திறன்களை அளவிடுவதுடன் அது சார்பில் எழுகின்ற சவால்களை எதிர்கொள் திறனையும் அளவிடுவதாயும்
ஊ. பொதுமக்கள் சேவையை வினைத்திறன்மிக்கதாக்குதல், உற்பத்தித்திறன் மற்றும் ஊக்குவிப்பு தொடர்பில் பரீட்சார்த்திக்குள்ள அறிவு/ஆனுபவம்/யோசனைகளை அளவிடுவதாயும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலான தீர்மானங்களை அளவிடுவதாயும்
எ. சமயோசிதமாக செயற்படும் திறன் உள்ளதா ? என்பதை அளவிடுவதாயும்
இவ்வினாப்பத்திரம் அமையும். இதனால் பரீட்சார்த்திகள் முகாமைத்துவம் சார் குறிப்புக்களை சற்று விளங்கிக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். அனால் விடைகள் தியரி அடிப்படையில் அளிக்கப்படக்கூடாது. தியரியையும் உள்வாங்கியதாக உங்கள் ஆளுமைகளை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும்.

வினாப்பத்திர இல -௦5.
ஆக்கபூர்வமான மற்றும் பகுப்பாய்வு ரீதியான மற்றும் தொடர்பாடல் திறன்
பழைய பாடத்திட்டத்திலே இவ்வினாப்பத்திரமானது ” கட்டுரையும் சுருக்கமும்” என அழைக்கப்பட்டுவந்தது. இதே பழைய கள்ளே இன்று சில புது வர்ணத்தில் புதுப்பெயரில் அறிமுகமாகிறது . 
z3
இவ்வினாப்பத்திரத்தில் தரப்படும் தலைப்புக்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ஒரு கட்டுரை வரையுமாறு கேட்கப்படுவர். இதற்கென பரீட்சார்த்தி ஒரு கட்டமைக்கப்பட்ட கட்டுரையொன்றை வரைவது தொடர்பிலான சகல ஆழ்ந்த அறிவையும் தெளிவான மொழி நடையும் பெற்றிருத்தல் வேண்டும்.
இரண்டாவதாக தரப்படும் தலைப்புக்களில் இருந்து பரீட்சார்த்தி அறிக்கையொன்றை அல்லது மெமோ ஒன்றை வரைந்து சமர்ப்பிக்குமாறு கேட்கப்படுவர். இது எதிர்பார்க்கப்படுவது ஏன் எனில் , ஏற்கனவே ௦2 மணிநேரமாக இருந்த வினாத்தாள் நேரம் தற்போது ௦3 மணித்தியாலங்களாக நீடிக்கப்பட்டுள்ளமையாகும். எனவே ஒரு அலுவலக சார் அறிக்கை/மெமோ தயாரிப்பது பற்றி நன்கு பயிற்ச்சி செய்துகொள்ளுங்கள்.
மூன்றாவதாக வழமைபோல் தரப்படும் கடினமான பந்தியோன்றினை மூன்றில் ஒரு பங்காக சுருக்கி எழுதுமாறு வேண்டப்படுவீர்கள். இதற்கென க.பொ.த.சா/தர சுருக்க முறையை பின்பற்றாது… ஒரு உயர்மட்ட சுருக்கமுறையை நன்கு பயிற்சி பெற்றுக்கொள்ளுங்கள். சுருக்கம் எழுதுவது தொடர்பில் விஞ்ஞான / பொருளியல் ஆய்வுக்கட்டுரைகளின் 2௦௦ சொற்களிலான பந்தியொன்றினை தேர்ந்தெடுத்து சுருக்கப் பழகிக்கொள்ளுங்கள்.
( பாடவிதான விளக்கவுரை முடிந்தது)
ஒவ்வொரு பாடத்திற்குமான செய்முறை வழிகாட்டல்களுக்கு எமது இணையத்தில் தொடர்ச்சியாக இணைந்திருங்கள். எங்களின் வளர்சிக்கும் உங்களின் வெற்றிக்கும் துஆ/பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |