2014 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை தோற்றவிருக்கும் மாணவர்களுக்காக மட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மண்டபத்தில் கல்விக் கருத்தரங்கு நடாத்தப்பட்டது. இக்கருத்தரங்கானது மட்டக்களப்பு பிரபல ஆசான் திரு.ஜெ.ஜெயக்காந்தன் அவர்களால் நடாத்தப்பட்டது. இந் நிகழ்வானது குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் மற்றும் இளைஞர் கழகங்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments