மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் கடமையாற்றி வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களுக்கும் பாடசாலையில் கடமையாற்றி இளைப்பாறியவர்களுக்குமான சேவை நலன் பாராட்டு விழா பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் 30.07.2014 பி.ப 12.30 மணிக்கு இடம் பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலையில் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு சேவை அடிப்படையில் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னமும் பரிசுப் பொதியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. மதிய போசனத்தின் பின்னர் இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களின் ஏற்புரை இடம் பெற்றது. இந்நிகழ்வில் திரு.கே. உதயகுமார் (பிரதியதிபர்) திருமதி.த.திருநாவுக்கரசு (ஆசிரியர்) திரு.க.யோகேந்திரராசா (ஆசிரியர்) திருமதி.நி.சிவராசா(ஆசிரியர்) திரு.ச.சதீஸ்குமார் (ஆசிரியர்) திரு.கு.பார்த்தீபன் (நூலக உதவியாளர்) திரு.க.கோபாலகிருஸ்ணன் (ஆசிரியர்) திருமதி.தக.திருநாவுக்கரசு (ஆசிரியர்) போன்றோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்துப் பா வாசிக்கப்பட்டதுடன் இவ்வாசிரியர்களைப் பற்றி பலரும் புகழ்ந்து உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது. இவற்றைப் படங்களில் காணலாம்.
0 Comments