Home » » SLAS பரீட்சை புதிய பாடத்திட்ட விளக்கம்

SLAS பரீட்சை புதிய பாடத்திட்ட விளக்கம்

இலங்கை நிர்வாக சேவை போட்டிப்பரீட்சைக்கான பாடத்திட்டம் பெரும்பாலும் புதுத்தோற்றம் பெற்றுள்ளமை அது சார்பில் தெளிவின்மையை அல்லது கருத்து மாறுபாடுகளை / ஒத்தகருத்தின்மையை ஏற்படுத்தியுள்ளமை இங்கு பரீட்சார்த்திகளிடையே பெரும் ஐயங்களை தோற்றுவிக்கின்றது. எனவே அவை தொடர்பிலான விளக்கங்கள் பலரதும் அபிப்ராயங்கள் அனுமானங்களின் அடிப்படையில் இங்கே ஒரு சிறு தெளிவுரையாக உங்களுக்காக வழங்கப்படுகின்றது.
அந்த வகையில் முதலில் திறந்த பிரிவு சார்பில் அவதானம் செலுத்துவோம்.
திறந்த பிரிவானது ஐந்து பாடங்களை உட்கொண்டுள்ளது. இதற்கு முன்னர் நுண்ணறிவு, பொது அறிவு, கட்டுரையும் சுருக்கமும், முகாமைத்துவ உளச்சார்பு என்றவாறு நான்கு பாடங்களை உள்ளடக்கியிருந்தது. தற்போது  இப்பரீட்சைத்திட்டம் தற்போது ஐந்து பாடங்களாக மாற்றம் பெற்றுள்ளது. தெளிவாக கூறின், பொது அறிவு எனும் விடயமானது இங்கு சற்று விரிவான வியாக்கியானங்களுடன் இலங்கை தொடர்பான பொதுஅறிவு சார் வினாப்பத்திரம் , உலகியல் நடப்பு / போக்கு தொடர்பிலான இலங்கைக்கு வெளியே சார் பொதுஅறிவு பத்திரம் என்றவாறு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். பாடத்திட்டம் பின்வருமாறு:-
z1இதன்படி சற்று விளக்கமாக வர்த்தமான பத்திரிகை பின்வருமாறு தருகிறது.z2z3
வினாப்பத்திர இல ௦1. பொது விவேகம் :- நுண்ணறிவு பரீட்சைக்கும் பொது விவேகத்திற்கும் வித்தியாம் உள்ளது. நுண்ணறிவு எனும்போது அனேகமாக உங்கள் வேகத்தினையும் கணிதவியலோடு தொடர்பான விவேகங்களையும் மொழியறிவோடு தொடர்பான திறன்களையும் உருவ/கோலங்களோடு தொடர்பான சிந்தனா சுழற்சியையும் அளவிடுவதாகவே 2௦௦7 மற்றும் அதன் முன்பான இ.நி.சேவை நுண்ணறிவு வினாப்பத்திரம் அமைந்திருந்தது. அனால் அதன்பின்னரான வினாக்கள் அனேகமாக 65 ‘/. ஆனவை பந்தி வடிவிலான வினா அமைப்புக்களாக மாற்றம் பெற்றுள்ளதுடன் ஓரளவு சிக்கலான அனுபவமற்ற பரீட்சார்த்தி அதிக நேரங்களை செலவிடக்கூடிய தன்மையதாய் அமைந்து வருவது அவதானிக்கப்பட்டது. இப்பரீட்சைகளிலே தோற்றியவர்கள் அநேகமானோர் இவ்வினாத்தாள் பற்றி ” நேரம் போதாமை ” சார்பாக விமர்சனங்களை முன்வைக்கத்துவங்கினர். இதனால் இம்முறை நுண்ணறிவு எனும் அம்சம் பொது விவகம் என மாற்றப்பட்டுள்ளதுடன் வினாப்பத்திர பாடத்திட்டம் தெளிவாக வரையறுக்கப்பட்டு ஏலவே ௦1 மணித்தியாலமாக இருந்த நேரம் தற்போது ௦1  1/2 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் வினாக்கள் 6௦-75 வரை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன்படி,
z4
மேலே காட்டப்பட்டபடி ( இ.நி.சேவை பிரமானக்குறிப்பின் படி) நோக்கினால் , வினாக்கள் அதிகமாக ஒழுங்கமைப்பு , கிரகித்தல் திறன் சார், மாற்றுவழி உபாயம் , தர்க்க அறிவு என்பவற்றை ஒருமித்து விடை காணும் ஆற்றலை அளவிடுவதாகவே பெரும்பான்மையான வினாக்கள் அமையும். இவை பெரும் பந்திகளாகவும்/சிக்கல் மிக்க சிறு பந்திகளாகவும் அமையும். உதாரணமாகuh
மேற்கண்டவாறான வினாக்களே பெரிதும் எதிர் பார்க்கப்படுகின்றன. எனவே பரீட்சார்த்திகள் பழமைபேணும் விதத்தில் எழுதுனர் பதவிக்கான போட்டிப்பரீட்சை வினாப்பத்திரங்களில் அதிக பயிற்சி எடுப்பதிலும் பார்க்க ஒழுங்கமைப்பு மற்றும் தர்க்கவியல் , சிக்கல் மிக்க பிரசினங்களை தீர்த்தல் தொடர்பிலான வினாக்களோடு தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளுதல் புத்தி சாதூர்யமாகும்.
+++++குறிப்பு +++++ பொதுஅறிவு எனும் அம்சமே தற்போது இரண்டு விடயங்களாக பிரிக்கப்பட்டு புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உலகப் பொதுஅறிவு இலங்கைசார் பொது அறிவு என்று வேறுபாடில்லாமல் வினாவப்பட்டது. தற்போது அவை இரண்டு விடயங்களாக்கப்பட்டுள்ளன. அவை பின்வரும் ௦2ஆம் ௦3ஆம் விடயங்களாகும்.
வினாப்பத்திர இல ௦2. இலங்கையின் சமுக பொருளாதார அரசியல் பின்னணி மற்றும் அதன் போக்குகள் :-
பழைய பாடத்திட்டத்தின்படி பொது அறிவு எனும் அம்சத்தின்கீழ் இலங்கைக்கு உட்பட்ட அல்லது தொடர்புபட்ட சகல பொது அம்சங்களும் வினாவப்படும். அதாவது சமுக,பொருளாதார,சமய,அரசியல்,கலாசார,வரலாற்று,கலை,விளையாட்டு,புவியியல் ரீதியிலான பதிவுகளும் சமகால நிலைமைகளும் வினாவப்படும். மேற்கூறிய சகலமும் ஆரம்பம், வரலாறு, வளர்ச்சி என்ற பின்னனியிலும் அவற்றின் தற்கால நிலை , போக்கு என்ற ரீதியில் CURRENT AFFAIRS வினாக்களாகவும் அமைந்தன.
ஆனால் தற்போது அதே பொது அறிவு விடயங்கள்,   இலங்கை சார்பாக மட்டும் வினாவப்படும் வினாப்பத்திரமாக இது அமையும்.z2 - Copyவித்தியாசம் என்னவெனில் ஏற்கனவே பல்தெரிவு வினாக்கள் மற்றும் சுருக்கவிடை முறைமைகளை மட்டுமே கொண்டிருந்த வினாப்பத்திரம் தற்போது அமைப்புக்கட்டுரை மற்றும் கட்டுரை வினாக்கள் எனும் புது வாசகங்களை உட்கொண்டுள்ளது. இதுவே இன்றைய பரீட்சார்த்திகளின் ஐய நிலைக்கு பிரதான காரணமாகும். வினாப்பத்திரத்துக்கான கடந்த கால பத்திரங்கள் ( pass papers) இன்மையால் இது நீடிக்கிறது. ஆனாலும் ஓரளவுக்கு எம்மால் இதற்கு தெளிவுவழங்க எதிர்பார்க்கிறோம்.
அமைப்புக்கட்டுரை எனும்போது… இலங்கையின் ஏதேனும் ஓர் ஆய்விடயம் / பிரச்சினை/சிறப்பம்சம் அல்லது ஏதேனும் ஓர் திட்டம் தொடர்பான தலைப்பு/சிறப்பு வரி/சிந்தனை தரப்பட்டு அதுபற்றிய பரீட்சார்த்தியின் அறிவு/தெளிவு/புரிதல்களை பரீட்சிக்கும் நோக்கில் வினாக்கள் வினவப்படும். இதற்கான விடைகள் அமைப்புக்கட்டுரை வடிவில் அமைதல் வேண்டும். ( அமைப்புக்கட்டுரையின் அம்சங்கள் பற்றி கீழே அவதானியுங்கள்)
வினாப்பத்திர இல 03. சர்வதேச/உலகளாவிய போக்கு (Global Trend) :-
உலகளாவிய போக்கு எனும்போது இவை பொதுஅறிவு சார் விரிவான பார்வையாகும். இவ்வினாப்பத்திரம் சர்வதேச பதிவுகளை,நிகழ்வுகளை, நகர்வுகளை,மாற்றங்களை,திட்டங்களை,மார்க்கங்களை,உபாயங்களை,பின்னனிகளை,விதானங்களை, அட்டவணைகளை , விளக்க/வியாக்கியானங்களை பற்றிய உங்கள் அறிவினைப் பரீட்சிப்பதாய் அமையும்.. இதற்கென நீங்கள் உலகளாவிய போக்குகளில் திளைத்தவராக இருக்கேவேண்டும் எனும் அவசியம் இல்லை.சளைக்காதவராய் இருக்கவேண்டும். உலக விவகாரங்களில் உங்கள் மூளை நுனிப்புல் மேய்ந்த காலம் இந்த பாடத்திட்ட மாற்றத்தில் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது இங்கு குறிப்பிடப்பட்டே ஆகவேண்டும்.
இவ்வினாத்தாளானது சர்வதேச அரசியல்,சமூக,வரலாறு,புவியியல், பொருளாதார,கலாசார,விஞ்ஞான,தொழிநுட்பம் சார் தரவுகள் தொடர்பிலான வினாக்களை உட்கொண்டிருக்கும். சாதாரணமாக பாட இலக்கம் இரண்டைப்போன்றே சுருக்கவினா,பல்தேர்வுவினா என்பவற்றுடன் கட்டுரை வினா , அமைப்புக்கட்டுரை என்பவற்றையும் கொண்டிருக்கும். எனவே முன்னர்போல் அல்லாது தற்போது சகல பொது அறிவுகள் சார் அம்சங்களும் ஆழமாக பார்க்கப்படல்வேண்டும். உதாரணமாக,
௦1.உலகின் மொத்த தேசிய உற்பத்தியில் முதனிலை வகிக்கும் நாடு எது? i)இந்தியா ii) சீனா  iii) அமேரிக்கா  iv) ஜப்பான்
௦2.உலகின் மொத்த தேசிய உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் முதல் மூன்று நாடுகள் யாவை? i)……………ii)…………………iii)……………………….
௦3.சீனாவின் மொத்த தேசிய உற்பத்தியில் தாக்கம் செலுத்தும் பிரதான காரணிகளில் ஐந்தைக் கூறி அவற்றுள் மூன்றை சுருக்கமாக விளக்குக.
௦4.(  சீன அரசியல் கொள்கை சார்பான சிறு பந்தியை அல்லது ஒரு பிரபல்ய வசனத்தினை தந்துவிட்டு…) சீனாவின் வளர்ச்சியில் தாக்கம் செலுத்துவதில் அரசியல் ஸ்தீரம் வகுக்கும் வகிபாகங்களை தெளிவுபடுத்துக.
௦5. உலக வர்த்தக சந்தையில் சீனப்பொருளாதார வளர்ச்சியின்  தாக்கங்களை/ எண்ணெய் விலை அதிகரிப்பின் / மத்திய கிழக்கு அரசியல் ஸ்திரமற்ற நிலையின் தாக்கங்களை   பரிசீளிக்குக.
மேற்கண்டவாறு ஒரே விடயம் சகல வினா வகைகளிலும் உங்களின் ஒப்பீட்டுப்பார்வைக்காக தரப்பட்டுள்ளன. இதற்கேற்றவாறு உங்கள் சர்வதேச பொதுஅறிவு மட்டத்தினை விருத்திசெய்துகொள்ளுங்கள். இதே முறைமையிலேயே இலங்கைசார் (வினா பத்திரம் -௦2) வினாக்களும் வினாவப்படும் என்பதை கருத்திற்கொள்க.
வினாப்பத்திரம் ௦2&௦3 ====
நண்பர்களே! ஒற்றைச்சொல்லில் விடையளிக்கும் நோக்கில் பொதுஅறிவு படிக்கும்  பாரம்பரியம் இத்தால் முடிவுறுத்தப்படுகிறது. நீங்கள் விரிவாக எந்தவொரு விடயத்தினையும் விமர்சன நோக்கில் பார்க்கும் ஆற்றல் உள்ளவரை இருத்தல் வேண்டும் என்பதே இவ்வினாக்களினூடே எதிர்பார்க்கப்படுகின்றன.
வினாப்பத்திரம் ௦2 மற்றும் ௦3 என்பவற்றில் அமைப்புக்கட்டுரை வரும்போது அதற்கான உங்கள் விடையளிப்புத்திறனை மேம்படுத்தும் நோக்கில் கீழே வரும் வழிமுறைகளை பின்பற்றுவது சிறந்தது.
அமைப்புக்கட்டுரை பற்றிய மிகத்தெளிவான அடிப்படைகள் பின்வருமாறு படவடிவில் தரப்படுகிறது.1234இவற்றை உங்கள் கட்டுரை வினாக்களுக்கு விடையளிக்கும் போது கவனத்தில்கொள்வது சிறந்தது
வினாப்பத்திர இல ௦4. முகாமைத்துவ விவேகம் :-
z3 - Copy
முகாமைத்துவ / நிர்வாக ஆளுமைகள் , திறன்கள் உங்களிடம் இருக்கின்றதா? என்பதை மிகவும் நுட்பமாக பரீட்சிக்கும் வினாப்பத்திரம் இதுவாகும். முகாமைத்துவ விடயங்களோடு சம்மந்தப்பட்ட வினாக்கள் என்றாலும் இவற்றுக்கு விடையளிப்பதற்கு முகாமைத்துவ விடயங்களை முற்றிலும் கற்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் இவ்வினாக்களுக்கு விடையளிக்கும்போது முகாமைத்துவ அடிப்படைகள் அறிந்துவைத்திருப்பது அவசியமாகும். எனவே பாடத்திட்டத்தில் உள்ள முக்கியமான சில தலைப்புக்களை இங்கே தருகின்றேன் . அவை பற்றிய குறிப்புக்களை இருமுறையாவது வாசித்துக்கொள்ளுங்கள். ஆனால் இது முகாமைத்துவ விடயம் அல்ல என்பதால் அதிகமாக நடைமுறைசார் விடய ஆய்வு வினாக்களாகவே இவை அமையும் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

இவ்வகை வினாக்கள் உங்களிடம் ….
அ. பிரச்சினைகளை/நிகழ்வுகளை அணுகும் திறனை, தீர்மானங்களை எடுத்து பொறுப்புக்களை ஒப்படைத்து அதனை நடைமுறைப்படுத்தும் திறனை அளவிடுவதாய் அமையும்.
ஆ. உங்கள் மேல்நிலை / கீழ்நிலை உத்தியோகத்தர்களிடையே, பொதுமக்களிடையே அமைப்புக்களிடையே, சமாந்தர நிறுவனங்களிடையே  தொடர்பாடல்களை மேற்கொள்ளும் முறைமைகள் / உத்திகளை அளவிடுவதாகவும்,
இ. திட்டமிடல்,ஒழுங்கமைத்தல்,நெறிப்படுத்தல்,கட்டுப்படுத்தல் போன்ற முகாமை அம்சங்களினூடாக ஒரு பிரச்சினையை முகம் கொடுக்கும் அறிவை, ஒரு திட்டத்தினை அமுல்படுத்தி அதில் ஏற்படும் சவால்களை வெற்றிகாணும் தன்மையை அறியும் நோக்கிலும்
ஈ. மனிதவள முகாமைத்துவ அறிவினைப் பரீட்சிக்கும் விதத்திலும் ( மனித வள முகாமை எனும்போது… ஒரு நிறுவனத்தின் ஊழியர்களை பயன்படுத்தும் விதமும் அவர்கள் தொடர்பிலான பிரச்சினைகள் சவால்களை வெற்றிகாணும் விதத்தினையும் அளவிடுவதை குறிக்கிறது|)
உ. நேரமுகாமைத்துவம் உள்ளிட்ட அலுவலக ஒழுக்கவியல் திறன்களை அளவிடுவதுடன் அது சார்பில் எழுகின்ற சவால்களை எதிர்கொள் திறனையும் அளவிடுவதாயும்
ஊ. பொதுமக்கள் சேவையை வினைத்திறன்மிக்கதாக்குதல், உற்பத்தித்திறன் மற்றும் ஊக்குவிப்பு தொடர்பில் பரீட்சார்த்திக்குள்ள அறிவு/ஆனுபவம்/யோசனைகளை அளவிடுவதாயும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலான தீர்மானங்களை அளவிடுவதாயும்
எ. சமயோசிதமாக செயற்படும் திறன் உள்ளதா ? என்பதை அளவிடுவதாயும்
இவ்வினாப்பத்திரம் அமையும். இதனால் பரீட்சார்த்திகள் முகாமைத்துவம் சார் குறிப்புக்களை சற்று விளங்கிக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். அனால் விடைகள் தியரி அடிப்படையில் அளிக்கப்படக்கூடாது. தியரியையும் உள்வாங்கியதாக உங்கள் ஆளுமைகளை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும்.

வினாப்பத்திர இல -௦5.
ஆக்கபூர்வமான மற்றும் பகுப்பாய்வு ரீதியான மற்றும் தொடர்பாடல் திறன்
பழைய பாடத்திட்டத்திலே இவ்வினாப்பத்திரமானது ” கட்டுரையும் சுருக்கமும்” என அழைக்கப்பட்டுவந்தது. இதே பழைய கள்ளே இன்று சில புது வர்ணத்தில் புதுப்பெயரில் அறிமுகமாகிறது . 
z3
இவ்வினாப்பத்திரத்தில் தரப்படும் தலைப்புக்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ஒரு கட்டுரை வரையுமாறு கேட்கப்படுவர். இதற்கென பரீட்சார்த்தி ஒரு கட்டமைக்கப்பட்ட கட்டுரையொன்றை வரைவது தொடர்பிலான சகல ஆழ்ந்த அறிவையும் தெளிவான மொழி நடையும் பெற்றிருத்தல் வேண்டும்.
இரண்டாவதாக தரப்படும் தலைப்புக்களில் இருந்து பரீட்சார்த்தி அறிக்கையொன்றை அல்லது மெமோ ஒன்றை வரைந்து சமர்ப்பிக்குமாறு கேட்கப்படுவர். இது எதிர்பார்க்கப்படுவது ஏன் எனில் , ஏற்கனவே ௦2 மணிநேரமாக இருந்த வினாத்தாள் நேரம் தற்போது ௦3 மணித்தியாலங்களாக நீடிக்கப்பட்டுள்ளமையாகும். எனவே ஒரு அலுவலக சார் அறிக்கை/மெமோ தயாரிப்பது பற்றி நன்கு பயிற்ச்சி செய்துகொள்ளுங்கள்.
மூன்றாவதாக வழமைபோல் தரப்படும் கடினமான பந்தியோன்றினை மூன்றில் ஒரு பங்காக சுருக்கி எழுதுமாறு வேண்டப்படுவீர்கள். இதற்கென க.பொ.த.சா/தர சுருக்க முறையை பின்பற்றாது… ஒரு உயர்மட்ட சுருக்கமுறையை நன்கு பயிற்சி பெற்றுக்கொள்ளுங்கள். சுருக்கம் எழுதுவது தொடர்பில் விஞ்ஞான / பொருளியல் ஆய்வுக்கட்டுரைகளின் 2௦௦ சொற்களிலான பந்தியொன்றினை தேர்ந்தெடுத்து சுருக்கப் பழகிக்கொள்ளுங்கள்.
( பாடவிதான விளக்கவுரை முடிந்தது)
ஒவ்வொரு பாடத்திற்குமான செய்முறை வழிகாட்டல்களுக்கு எமது இணையத்தில் தொடர்ச்சியாக இணைந்திருங்கள். எங்களின் வளர்சிக்கும் உங்களின் வெற்றிக்கும் துஆ/பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |