நெஞ்சில் பூத்த நெருப்பு' கவிதை நூல் வெளியீட்டு விழா

Sunday, October 31, 2021

 


கவிஞர்  பல்துறை கலைஞர்  அபிநய நாயகர் என்.எம். அலிக்கான் எழுதிய 'நெஞ்சில் பூத்த நெருப்பு' கவிதை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை(30) மாளிகைக்காடு தனியார் விடுதியில்  மாலை இடம்பெற்றது.


முதலில் நிகழ்வின் ஆரம்பமாக கிறாஆத் தேசிய கீதத்தை தொடர்ந்து கொரோனாவில் உயிரிழந்தவர்கள்,கொரோனாப்பணியில் களப்பணியாற்றிய போது உயிர்நீத்த வைத்தியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் எல்லோருக்கும் நினைவு கூர்ந்து இரு நிமிட மௌன அஞ்சலி இடம்பெற்றது.

அடுத்து வரவேற்புரையினை அல்- மீசான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் நிகழ்ச்சி திட்டப்பணிப்பாளரும்இ சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம். ஸஹிர் மேற்கொண்டதுடன் தலைமையுரையினை அல்- மீசான் பௌண்டஷன்இ ஸ்ரீலங்காவின் தவிசாளரும், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான, சிலோன் மீடியா போரத்தின் பொருளாளர்   நூருல் ஹுதா உமர் உரையாற்றினார்.குறித்த நூலின்  ஆய்வுரையை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவரும், பிரபல இலக்கிய செயற்பாட்டாளருமான,கவிஞர்,ஆசிரியர்  ஜெஸ்மி மூஸா மேற்கொண்டார்.

 மேலும் இந்நிகழ்வில் சிறப்புரையினை   பிரபல ஆசிரியர் றிசாத் செரீப்பும்  சிறப்புரையினை அல்- மீசான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஆலோசனை சபை தவிசாளரும்,கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் தவிசாளருமான இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினருமான கலாநிதி அன்வர் எம் முஸ்தபாவும்
அஹமட் அலி வைத்தியசாலையின் முதல்வர், பிரபல சமூக சேவகர் எம்.எம். இஸ்ஸதீன் நூலின்  முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் முஸ்லிம் விவகார தேசிய இணைப்பாளரும், பிரபல அரசியல் சமூக செயற்பாட்டாளருமான சிராஸ் ஜுனூஸ்சட்டமொழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளராக இருந்த இலங்கை பொதுசேவை ஆணைக்குழுவின் கௌரவ உறுப்பினர், ஓய்வுபெற்ற  சிரேஷ்ட இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பிரபல பாடகர் டைட்டானிக் இசைக்குழுவின் பிரதானிஎம்.எச். றியாஸ்கான் இசைத்தட்டு அறிமுக நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
READ MORE | comments

கடைசி ஆயுதமும் புஷ்வாணமாகியது!! வெளிச்சத்திற்கு வந்த நிகழ்ச்சி நிரல்

 


பசில் ராஜபக்சவும் (Basil Rajapaksa) ஞானசார தேரருடன் (Galagoda Aththe Gnanasara) உள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. இதனால், அரசுக்கு ஆதரவளித்த முஸ்லிம் உறுப்பினர்களின் கடைசி ஆயுதமும் புஷ்வாணமாகியுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (Imran Maharoof) தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று(30)ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளிட்ட அவர்,

“ஆளும் கட்சி கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எல். எம். அதாவுல்லா (A. L. M. Athaullah), ஞானசார தேரர் தொடர்பாக வெளியிட்ட கருத்தையும் அதற்கு அமைச்சர் பசில் ராஜபக்ச வழங்கிய பதிலையும் ஊடகங்கள் வாயிலாக அறிய கிடைத்தது.

இது தொடர்பாக பசில் ராஜபக்ச அளித்த பதிலில் இருந்து, அவரும் ஏனைய ராஜபக்சர்களைப் போல் ஞானசார தேரருடனேயே உள்ளார் என்பது தெளிவாக தெரிந்தது.

அரசுக்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பசில் ராஜபக்ச இனவாதமற்றவர், முஸ்லிம்களுக்கு சார்பானவர், அவர் அரச தலைவரானால் இனவாதிகளை அடித்து விரட்டி விடுவார் என்ற பிரசாரத்தையே இதுவரை காலமும் முன்னெடுத்து வந்தனர்.

இவ்வாறு அடுத்த தேர்தலில் பசில் ராஜபக்சவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அவர்கள் வைத்திருந்த கடைசி ஆயுதமும் இதன்மூலம் புஷ்வாணமாகிவிட்டது.

பசில் ராஜபக்ச உட்பட அனைத்து ராஜபக்சர்களும் ஞானசார தேரரின் பின்னால் உள்ளனர். ராஜபக்சர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலையே ஞானசார தேரர் நிறைவேற்றுகிறார்.

இதுவரை காலமும் வாயை மூடியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா இப்பொழுதாவது வாயை திறந்திருப்பது பாராட்டுக்குரியது.

அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை,அவர் எதிர்பார்த்த சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை. இருந்தும் இருபதாம் திருத்தச் சட்டமூலத்துக்கு வாக்களித்தார், துறைமுக நகர சட்டமூலத்துக்கு ஆதரவளித்தார். காதி நீதிமன்றம், மாடறுப்புத் தடை எனப் பல சட்டமூல திருத்தங்கள் தொடர்பாக பேசப்பட்டபோதும் அமைதியாக இருந்தார்.

ஆனால் தொடர்ந்தும் இவ்வாறு அமைதியாக இருந்தால் தனது அரசியல் இருப்பே கேள்விக்குறியாக மாறிவிடும் என உணர்ந்து இப்போது பேசியுள்ளார்.

அத்துடன் சீனாவுக்கு துறைமுக நகரம், இந்தியாவுக்கு மேற்கு முனையம் என வழங்கப்பட்ட போது அமைதியாக இருந்த அதாவுல்லா உட்பட விமல் கூட்டணி, அமெரிக்காவுக்கு மின்னுற்பத்தி நிலையத்தை வழங்கும்போது கூட்டாக எதிர்ப்பதின் பின்னணியில் சீனா உள்ளதா என்ற சந்தேகமும் நிலவுகிறது” என்றார்

READ MORE | comments

மாகாணங்களுக்கு இடையிலான தடை நீங்கியது : பொதுமக்களிடம் விடுக்கும் கோரிக்கை!

 


மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டு தளர்த்தப்பட்டது.


இன்று (31) அதிகாலை 4 மணியுடன் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.

இந்த நிலையில், இன்று (31) முதல் மாகாணங்களுக்கு இடையில் தடையின்றி மக்களுக்கு பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகளை உரிய வகையில் பின்பற்றுமாறு சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை, நாளைய தினம் (01) முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து வழமை போன்று ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

பஸ்களின் ஆசன எண்ணிக்கைக்கு அமைவாகவே, பயணிகள் அழைத்து செல்லப்படுவார்கள் என அவர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, முதலாம் திகதி முதல் ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பும் என ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது
READ MORE | comments

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியீடு

Saturday, October 30, 2021

 


பல்கலைக்கழக மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கமக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


admission.ugc.ac.lk/ அல்லது www.ugc.ac.lk ஆகிய உத்தியோகபூர்வ இணையத்தளங்களுக்கு பிரவேசிப்பதன் ஊடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
READ MORE | comments

இலங்கைக்கு அண்மையில் நிலைகொண்டுள்ள ஆபத்து

 


குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்றது. கிழக்குக் கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பில் நிலை கொண்டுள்ளது.


இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்
READ MORE | comments

அனைத்து அரச பாடசாலைகளிலும் க.பொ.த O/L & A/L (தரம் 10, 11, 12, 13) வகுப்புகள் நவம்பர் 08 திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் - கல்வி அமைச்சு-

 


அனைத்து அரச பாடசாலைகளிலும் க.பொ.த O/L & A/L (தரம் 10, 11, 12, 13) வகுப்புகள் நவம்பர் 08 திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் - கல்வி அமைச்சு

READ MORE | comments

சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானம்

Friday, October 29, 2021

 


சாதாரண தரம் மற்றும் உயர் தரம் பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.


அதன்படி, எதிர்வரும் வாரத்தில் இருந்து குறித்த வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் கடைப்பிடிக்கப்படவேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

கலைந்துபோகும் ராஜபக்சர்களின் கனவு - வெளிவந்த உள்ளக தகவல்

Thursday, October 28, 2021

 


பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு பசளையை பெற்றுத்தருமாறு நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு பசளையை வழங்க ராஜபக்ச கூட்டணி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உலகின் ஒரே இயற்கை விவசாய நாடு என்ற கனவை அரசாங்கம் கைவிட்டு இரசாயன பசளை இறக்குமதிக்கான தடையை நீக்கியுள்ளதாக அரசாங்க அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையின் தரம் வீழ்ச்சியடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு அமோனியா சல்பேட்டை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது” என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் விவசாயத்தை 100 வீதம் இயற்கையானதாக மாற்ற விரும்புவதாகக் கூறி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ( Gotabaya Rajapaksa) கடந்த மே மாதம் விவசாய இரசாயனப் பொருட்களுக்கு பூரண தடை விதித்தார்.

தேயிலைத் தோட்ட உரிமையாளர்களும் ஏனைய துறைகளைச் சேர்ந்த விவசாயிகளும் அரச தலைவர் கோட்டாபயவின் கொள்கையால் சீற்றமடைந்தனர். மேலும் இரசாயன பசளைத் தட்டுப்பாட்டல் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்டு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுவதோடு, தோட்டத் தொழிலாளர்களின் வருமானம் பாதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

இது தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுடன் பெருந்தோட்ட நிறுவனங்களின் சங்கம் நடத்திய கலந்துரையாடலின் பலனாக, தேயிலை நிறுவனங்களுக்கு மாத்திரம் இரசாயன பசளையை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

“நெற் செய்கைக்கு இயற்கை பசளை பொருத்தமானது என்றாலும், தேயிலை பயிர்ச்செய்கைக்கு அது வெற்றியளிக்காது” என முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன் செனவிரத்ன அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இரசாயன பசளை இறக்குமதி மீதான தடை நீக்கப்பட்டதன் மூலம் வருடாந்தம் 1.3 பில்லியன் டொலர்களை ஏற்றுமதி செய்யும் இலங்கை தேயிலை விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

உள்ளுர் விவசாயத் தேவைகளுக்குத் தேவையான இயற்கை பசளையை நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வரை இரசாயன பசளையின் இறக்குமதி தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தேயிலை நிறுவனங்களுக்கு இவ்வாறான சலுகைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கம ஆகியோரின் உருவப்படங்களை எரித்து பசளையை வழங்குமாறு நாடு முழுவதிலும் உள்ள ஏனைய விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

READ MORE | comments

ஜனாதிபதியின் நிலைப்பாட்டை என்னால் விமர்சிக்க முடியாது பிள்ளையான்

 


ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணிக்கு ஜனாதிபதியால் ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.


அரசியல் ரீதியான கருத்துக்களை அதிகமாக கதைக்க விரும்பவில்லை இது ஜனாதிபதியின் முடிவின் பெயரிலேயே நியமிக்கப்பட்டுள்ளார். ஒரே நாடு ஒரே சட்டம் என்கின்ற உட்பொருளை நான் ஊடகங்கள் வாயிலாக விமர்சிக்க முடியாது அதனுடைய நோக்கம் என்னவென்று உங்களுக்கு தெரியும் ம் தானே.

நானும் வர்த்தமானி மூலம் ஜனாதிபதியின் முடிவினை பார்த்திருந்தேன் அவர் எந்த நோக்கத்திற்காக இவரை நியமித்தார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஜனாதிபதியின் நிலைப்பாட்டினை என்னால் விமர்சிக்க முடியாது என்னுடைய நிலைப்பாடு அரசாங்கத்துடன் சேர்ந்து மக்களுக்கான நியாயத்துடன் சேவை செய்வது. ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை பற்றி கதைப்பதாக இருந்தால் விரிவாக கதைக்க வேண்டும் இது பல விமர்சனங்களை கொண்டு வரலாம் அதனால் நான் கதைக்க விரும்பவில்லை. ஞானசார தேரர் பற்றி என்னைவிட ஊடகவியலாளர் உங்களுக்கு தெரியும் தானே இதில் என்ன இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

ஆரம்ப பிரிவு மாணவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று ?

 


ஆரம்ப பிரிவு  பாடசாலை மாணவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe) குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்த ஆரம்பப் பிரிவு பாடசாலை மாணவர்கள் மத்தியில் இவ்வாறு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

தரம் 6 முதல் 13 வரையிலான மாணவர்களுக்கு பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு இன்னமும் அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 எவ்வாறெனினும், மாணவர்களும் ஆசிரியர்களும் பலவந்தமான அடிப்படையில் அதிபர்களினால் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்

READ MORE | comments

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரின் கல்விச் சேவையினை பாராட்டி கௌரவிப்பு

 


எஸ்.கார்த்திகேசு)


திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னாள் கல்விப் பணிப்பாளரும் தற்போதய கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருமான திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அம்மணியின் கல்விச் சேவையினை பாராட்டி திருக்கோவில் வலயக் கல்வி அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி கௌரவமளித்துள்ளனர்.

இந்நிகழ்வு திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் வலயக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரனின் தலைமையில் இன்று வியாழக்கிழமை (28) திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்று இருந்தன.

இவ் கௌரவிப்பு விழாவில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அம்மணிக்கு திருக்கோவில் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களால் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு இருந்ததுடன் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தில் அம்மணியின் காலத்தில் முன்னெடுக்கப்பட்டு இருந்த நிலைபேறான கல்வி மற்றும் நிருவாக ரீதியான அபிவிருத்திகள் தொடர்பாக நன்றிகள் தெரிவித்து விசேட உரைகளும் இடம்பெற்று இருந்தன.

இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அம்மணிக்கு திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கல்வி அதிகாரிகளால் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டு இருந்தன. இதேவேளை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் சிறப்புரைகளும் இடம்பெற்று இருந்தன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் மற்றும் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டு இருந்தனர்.




READ MORE | comments

டிசம்பர் மாதமளவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் – பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்


 டிசம்பர் மாதமளவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து மக்கள் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்டு வருவதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

மக்கள் சகாதார நடைமுறைகளை மீறி சுற்றலாக்கள் சென்றுள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்வரும் இரு வாரங்களில் மேலும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
READ MORE | comments

நாட்டில் ஏற்படப்போகும் பேராபத்து - கடுமையான எச்சரிக்கை

Wednesday, October 27, 2021

 


டெல்டா வைரஸின் மரபனு மாற்றங்கள் ஊடாக தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுவதற்கு இடமிருப்பதாக வைரஸ் தொடர்பான வைத்திய ஆலோசனை நிபுணர் நதீக ஜானகே (Nathika Janake) தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற செய்தியாயளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார் . நாட்டில் தற்போது கொரோனா  தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது. என்றாலும் இந்த நிலையை தொடர்ந்து பாதுகாத்துக்கொள்ள முடியுமா என்ற கேள்வி இருந்து வருகின்றது. 

எமது சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பேணிவருவதிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. கொரோனா தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக இடம்பெறுவதாலும் இந்த கட்டுப்பாடு ஏற்பட்டிருகின்றது. முன்னர் போன்று தற்போது வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்கள் அதிகளவில்  இல்லை.

என்றாலும் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் கொழும்பு வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்த வைரஸின் மரபனு மற்றும் வீரியம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றோம். அதில் எமக்கு கிடைத்த பெறுபேறுதான் டெல்டா ஆரம்ப பிறழ்வுகள் மேலதிகமாக உப பிறழ்வுகள் உருவாகி வருவதாகும்.

என்றாலும் இந்த டெல்டா உப பிரழ்வுகள் பிரதான டெல்டா வைரஸ் போன்றே செயற்படுகின்றன. என்றாலும் இந்த வைரஸ் பரவலை முடியுமான வரை கட்டுப்படுத்திக்கொள்ளவே நாங்கள் முயற்சிக்கவேண்டும்.

இல்லாவிட்டால் எப்போதாவது ஒருநாள் இந்த வைரஸின் மரபனு மாற்றங்கள் மூலம் தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியாத பிறழ்வு ஏற்படுவதற்கு இடமிருக்கின்றது. அதனால் நாங்கள் தொடர்ந்தும் சுகாதார பாதுகாப்புடனே எமது நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

சிவானந்தா தேசிய பாடசாலையினை டிஜிட்டல் பாடசாலையாக அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

 



(கல்லடி நிருபர்)

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையினை டிஜிட்டல் பாடசாலையாக அபிவிருத்தி செய்யும் முதற்கட்ட வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

உலக நவீன மயமாக்கலுக்குள் சென்றுகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் கல்வித்துறையும் நவீனமயமாக்கல் ஊடாக டிஜிட்டல் மயமாக்கப்படுவதன் ஊடாக மாணவர்களும் இலகுவாக கல்வி கற்கக்கூடிய வகையில் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவைப்பாடுகள் இருந்து வருகின்றது. அந்த வகையில் சிவானந்தா தேசிய பாடசாலையினை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டமானது மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி தட்சயானந்தா ஜீ மஹராச் அவர்களது ஆசீர்வாதத்தோடு ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர் நவரெட்ணம் சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மலர்மாலை அணிவித்து அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, அதிதிகளின் உரை இடம்பெற்றதனைத் தொடர்ந்து இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி தட்சயானந்தா ஜீ மஹராச் அவர்களது முயற்சியினால் வழங்கப்பட்ட சுமாட் பனல் வோட் இதன்போது பாடசாலை நிருவாகத்திடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி நீலமானந்தா ஜீ மஹராச், பாடசாலையின் உப அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் ச.சந்திரகுமார், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என குறிப்பிட்டளவிலானோர் கலந்துகொண்டனர்.




READ MORE | comments

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பம் – கொரோனா பரவுவதாக குற்றச்சாட்டு!

 


நாட்டில் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பித்த பல பாடசாலைகளில் கொரோனா தொற்று உருவாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.


ஆரம்பப் பாடசாலை மாணவர்களில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை பதிவாகியுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்னும் 6 முதல் 13 வரையிலான வகுப்புகளுக்குக் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கான பரிந்துரைகள் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சில பாடசாலைகளில் அதிபர்கள் மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைக்கவுள்ளதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் இதனால் ஏற்படக் கூடிய பின்விளைவுகளை அதிபர்கள், ஆசிரியர்கள் பொறுப்பேற்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த அரசாங்கம் ஒரு முறையின் கீழே 1 முதல் 5 வகுப்புகளை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது என்றும் குறித்த சில பாடசாலைகளில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

மட்டு. பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் முகம் சுழிக்க வைக்கும் செயற்பாடுகள் - மக்கள் கடும் அதிருப்தி

 


மட்டக்களப்பு தனியார் பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் அநாகரிக செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வினால் நகர அபிவிருத்திக்காக சுமார் 6 . 5மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடமே இவ்வாறு இரவு வேளைகளில் அநாகரிக நிலையமாக செயல்பட்டு வருகின்றது .

நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களினால் குறித்த பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்ட போதும் சரியான முறையில் நிர்மாணிக்கப்படாமல் குறித்த கட்டடம் பாழடைந்த நிலையில் காணப்பட்டு வருகின்றது .

குறித்த பேருந்து நிலையம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்,மட்டக்களப்பு மாநகர சபை, பிரதேச செயலகம் மற்றும் வீதிப் போக்குவரத்து அதிகார சபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் தெரிவித்துள்ளனர்

READ MORE | comments

யானைகளின் அச்சுறுத்தலினால் திணறும் அம்பாறை : யானைவேலியமைத்தல் தொடர்பில் கூடியது உயர்மட்டம் !

Tuesday, October 26, 2021




மாளிகைக்காடு நிருபர் - நூருல் ஹுதா உமர் 

கல்முனை பிராந்தியத்தில் அண்மைக்காலங்களில் அதிகரித்துவரும் யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி பொதுமக்களின் உடமைகளையும், சொத்துக்களையும் பாதுகாக்கும் நோக்கில் யானைவேலி அமைத்தல் தொடர்பில் வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விளக்கமளித்து உடனடியாக அந்த வேலிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். 

இன்று (26) அம்பாறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது பொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்டம், கல்முனை கிரீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டம், மருதமுனை பிரான்ஸ் சிட்டி சுனாமி வீட்டுத்திட்டம், குடுவில், வாங்காமம், நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்கள் அடங்களாக அம்பாறையின் ஏனைய பிரதேசங்களில் யானையின் கெடுபிடி அதிகமாக உள்ளதையும், இதனால் பொதுமக்களின் அன்றாட இரவுவேளை பீதியில் உள்ளதையும் எடுத்துரைத்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் உடனடியாக மக்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்க வேண்டி மிக அவசரமாக யானை வேலிகளை அமைக்குமாறு இராஜாங்க அமைச்சரை கேட்டுக்கொண்டார். 

இந்த கலந்துரையாடலில் வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், டாக்டர் திலக் ராஜபக்ஸ, மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் டீ. வீரசிங்க, அம்பாறை அரசாங்க அதிபர், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம். நௌஸாத், இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் ஜெமீல் காரியப்பர்,  அம்பாறை பிரதேச செயலாளர் அடங்களாக உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
READ MORE | comments

இலங்கையில் சனிக்கிழமைகளிலும் பாடசாலைகளை நடத்த திட்டம் - கல்வி அமைச்சு அறிவிப்பு

 


இலங்கையில் சனிக்கிழமைகளிலும் பாடசாலைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட் காரணமாக பாடசாலைகள் காலம் தாழ்த்தி ஆரம்பிக்கப்பட்ட போதிலும் கல்வியாண்டுக்குள் பாடங்களை கற்றுக் கொடுக்க விசேட திட்டங்களை கல்வி அமைச்சு வகுத்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா (Kapila Perera) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

மாற்று வழிகளைப் பயன்படுத்தி விடுபட்ட பாடங்களை கற்றுக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் விடுபட்ட பாடங்களைக் கற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப்படுகிறது. 

சனிக்கிழமைகளிலும் பாடசாலைகளை திறந்தும், வேறு மாற்று வழிகளை பயன்படுத்தியும் விடுபட்ட பாடங்களை கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளார். 

READ MORE | comments

சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் இறக்குமதி


 எட்டு மாதங்களுக்கு தேவையான பெட்ரோல் மற்றும் டீசலை சிங்கப்பூரில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு அமைச்சவை அனுமதி வழங்கியுள்ளது.


இந்த விடயத்தை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார்.

2022 ஜனவரி முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை 08 மாதங்களுக்கு தேவையான பெட்ரோல் மற்றும் டீசலுக்கான ஒப்பந்தம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் உதய கம்மன்பில சமர்ப்பித்துள்ளார்.

அந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய, சிங்கப்பூரின் தனியார் நிறுவனம் ஒன்றிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது எரிபொருளுக்கு பற்றாக்குறை இல்லை எனவும், எதிர்காலத்திலும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது எனவும் அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் ரமேஸ் பத்திரன சுட்டிக்காட்டினார்.
READ MORE | comments

என்றுமில்லாத வகையில் வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் மாணவர்கள்


என்றும் இல்லாத வகையில் வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னர் வெளிநாடு செல்வதற்கு தினசரி விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 350 ஆகக் காணப்பட்டது.

எனினும் தற்போது அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

READ MORE | comments

பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!

 


நவம்பர் முதலாம் திகதி முதல் பல கட்டங்களாக பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் பல்கலைக்கழகங்களை பல கட்டங்களின் கீழ் மீண்டும் நவம்பர் முதலாம் திகதிக்குப் பின்னர் எந்தத் திகதியில் திறப்பது என்பது குறித்த அதிகாரம் துணைவேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

முதல் கட்டத்தின் கீழ், இரண்டு வாரங்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.

முதல் கட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகளை மீண்டும் ஆரம்பிக்க பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
READ MORE | comments

நடுவீதியில் சட்டத்தரணியின் மகனை சீருடையில் தாக்கிய காவல்துறை அதிகாரி

 


நாட்டில் காவல்துறையால் பொதுமகன்கள் பகிரங்க இடங்களில் வைத்து தாக்கப்படும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்கின்றன.

அண்மையில் மட்டக்களப்பில் இளைஞர்கள் இருவரை காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பகிரங்கமான இடத்தில் வைத்து தாக்கிய நிலையில் அவர் பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

அவ்வாறான ஒரு சம்பவம் மீண்டும் பதிவாகியுள்ளது.

இதன்படி இரத்தினபுரிகிரியல்ல வீதியில் சிரேஸ்ட காவல்துறை அதிகாரியொருவர் சீருடையில் சட்டத்தரணியொருவரின் மகனை தாக்குவதை காண்பிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

சிரேஸ்ட காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கே என்பவரே இந்த தாக்குதலில் ஈடுபட்டுதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் ஒன்று தொடர்பில் காவல்துறையினர் தன்னை கைதுசெய்ய முயன்றதாகவும் தான் மறுத்தவேளை காவல்துறையினர் தன்னை தாக்கியதாகவும் சட்டத்தரணியின் மகன் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் சிரேஸ்ட காவல்துறை அதிகாரியும் தன்னை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

சகல ஆரம்பப் பிரிவு மாணவர்களும் மகிழச்சிகரமான பிரவேசத்திற்கான செயற்பாடுகளில் பங்கு பற்றுதல் அவசியமாகும்- கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு


 (சித்தா)


மகிழ்ச்சிகரமான கற்றலின் அடித்தளம் மாணவர்களின் உள நலம் ஆகும். கொவிட் - 19 தொற்று நோயின் காரணமாக மாணவர்கள் நீண்ட நாட்களாக பாடசாலை நேரடிக் கற்றலுக்கான வாய்ப்பை இழந்துள்ளதுடன் உள நெருக்கீடுகளுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்.

 மாணவர்களின் உள நலத்தை மேம்படுத்தி கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல ஆரம்பப் பிரிவு மாணவர்களும் மகிழ்ச்சிகரமான பிரவேசத்திற்கான செயற்பாடுகளில் பங்குபற்றுதல் அவசியமாகும். என கிழக்கு மாகாணக் கல்வித்திணைக்களத்தின் மாணவர்களின் உள நலத்தை மேம்படுத்தி மாணவர்களின் மகிழ்ச்சிகரமான பிரவேசத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக விளக்கமளிக்கும் கலந்துரையாடலில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் தெரிவித்தார்.

மேற்படி கலந்துரையாடல் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் தலைமையில் 25.10.2021 மாகாணக் கல்வித் திணைக்கள ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.ச.பார்த்தீபன் வலயங்களில் ஆரம்பப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் சேவைக்கால ஆசிரியர்கள் பங்கேற்றிருந்தனர்.

மகிழ்ச்சிகரமான பிரவேசத்திற்கான செயற்பாடுகள் எதிர்வரும் 01.11.2021 தொடக்கம் 15.11.2021 வரை தினமும் 30 நிமிடம் காலைக் கூட்டம் முடிவடைந்த பின்னர் உள்ளக, வெளியகச் செயற்பாடுகளாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.


READ MORE | comments

காத்தான்குடியில் இன்று காலை விபத்து L

 மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பிரதேசத்தினூடாக பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மோதி சேதத்துக்குள்ளாக்கியுள்ளதுடன் வீதியோரம் இருந்த வேப்பமரத்தையும் பதம்பார்த்துள்ளது


READ MORE | comments

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது புதிய நடைமுறை

Monday, October 25, 2021

 




சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டி வௌியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான நடமாட்டத்தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், திருமண நிகழ்வுகளில் மண்டபத்தின் கொள்ளளவில் 1/3 பங்கினருக்கு பங்குப்பற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மண்டபங்கள் தவிர்ந்த வௌி இடங்களில் நடத்தப்படும் திருமண வைபவங்களில் 150 பேர் வரை கலந்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


READ MORE | comments

நாடு முழுவதும் அதிபர், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

 


அதிபர்கள் – ஆசிரியர் பல கோரிக்கைகளை முன்வைத்து அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்கள் இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டன.


சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்- ஆசிரியர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்கள் இன்று நாடு முழுவதும் இடம்பெற்றன.

ஆசிரியர்களுக்கு ஒன்லைன் மூலம் கற்பித்தல் தொடர் பான அனைத்து வசதிகளையும் வழங்க வேண்டும். சகல மாணவர்களுக்கும் ஒன்லைன் வசதி செய்து கொடுக்க வேண்டும். மாணவர்களின் கல்வி உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பல மாதங் களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளில் கற்பித்தல் நடவடிக்கை முடிவடைந்த பின்னர் ஏராளமான அதிபர், ஆசிரியர்கள் போராட்டத் தில் கலந்து கொண்டனர்.




READ MORE | comments

சம்பள முரண்பாட்டினை நீக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மட்டக்களப்பில் ஆசிரியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.


 ®சம்பள முரண்பாட்டினை நீக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டுவில் போராட்டம்!

சம்பள முரண்பாட்டினை நீக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மட்டக்களப்பில் ஆசிரியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், ஆசிரியர் அதிபர்களின் தொழிற்சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.


மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஒன்றுகூடிய ஆசிரியர்கள்,அதிபர்கள் ஊர்வலமாக சென்று மட்டக்களப்பு மணிக்கூண்டு கோபுரத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிபர் ஆசிரியர்களின் 24வருட சம்பள முரண்பாட்டினை நீக்கு,பிள்ளைகளின் கல்வி உரிமையினை உறுதிப்படுத்து, கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலத்தினை கிழித்தெறி,அதிபர், ஆசிரியர் மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் அழுத்ததினை கொடுக்காதே உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.


இந்தபோராட்டத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டதுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பினர்

READ MORE | comments

எரிபொருள் விலை உயருமா?அமைச்சர் கூறிய பதில்

 


எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானம் இன்னும் எடுக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இதனைக் கூறியுள்ளார்.
READ MORE | comments

முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதி

 முன்பள்ளிகளை ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை அடிப்படை வசதிகள், கல்வி சேவை இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.



சிறுவர் செயலகத்தினூடாக இதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


மாவட்ட COVID ஒழிப்பு குழுவின் அனுமதியுடன், பொது சுகாதார பரிசோதகரின் கண்காணிப்பின் கீழ் சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய முன்பள்ளிகளை ஆரம்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

முன்பள்ளிகளுக்கு தேவையான சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதற்கமைய, 16,000-இற்கும் மேற்பட்ட முன்பள்ளிகளுக்கு உடல் வெப்பமானி, தொற்று நீக்கும் திரவம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

இவ்வாரம் Z – SCORE வெளியாகும்!

 


பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி (Z – SCORE), இந்த வாரம் வெளியிடப்படும் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி.உடவத்த தெரிவித்தார்.


கொரோனா பரவல் காரணமாக பணிகளை மேற்கொள்ள ஊழியர்கள் இல்லாமை காரணமாகவே, வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.
READ MORE | comments

சீல்வைக்கப்பட்டது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை!

 


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் தற்காலிகமாக மூடி சீல் வைக்கப்பட்டது.

நேற்றைய தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலையில் நோயாளியொருவர் வாங்கிய உணவுப்பொட்டலத்தில் பல்லியொன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பில் புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரசிறியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அதனையடுத்து இன்றைய தினம் போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலைக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது.

இதனை ஆராய்ந்த நீதிபதி குறித்த சிற்றுண்டிச்சாலையினை தறிகாலிமாக மூடுவதற்கான உத்தரவினைவிடுத்தார். அதனைத்தொடர்ந்து புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரசிறியின் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் சிற்றுண்டிச்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

READ MORE | comments

ஒருநாள் சேவை இன்று முதல் ஆரம்பம் - முன்பதிவு அவசியம்

 


கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவை, ,இன்று (25) திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், ஒரு நாள் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு, முன்கூட்டியே அதற்கான முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று தொடர்பான சுகாதார வழிகாட்டிக்கு அமைவாக ஒரு நாள் சேவையை, பத்தரமுல்லையிலுள்ள பிரதான அலுவலகத்திலும், காலி - தென் மாகாண காரியாலயத்திலும் பொதுமக்கள் ஒருநாள் சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

இதேவேளை, ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளவர்கள் , தமது விண்ணப்பப் படிவத்தை தமது கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள அடையாள அட்டை தொடர்பான பிரிவில் ஒப்படைத்து, அதற்கான திகதி மற்றும் நேரம் என்பவற்றை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என்றும் வியானி குணத்திலக்க மேலும் தெரிவித்தார்

READ MORE | comments

ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

 


கொரோனா பரவலால் மூன்று மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்ட ரயில் சேவை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுகிறதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


எனினும் இவை மாகாணங்களுக்குள் மாத்திரம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக 133 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

இருளில் மூழ்கப்போகும் சிறிலங்கா - பகிரங்க எச்சரிக்கை

 


கெரவலப்பிட்டிய தீர்மானம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நள்ளிரவு நேரத்தில் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுமதியின்றி அமெரிக்க நிறுவனத்துடன் இரகசிய ஒப்பந்தத்தினை மேற்கொண்டிருந்தது.

இதனை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |