எட்டு மாதங்களுக்கு தேவையான பெட்ரோல் மற்றும் டீசலை சிங்கப்பூரில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு அமைச்சவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயத்தை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார்.
2022 ஜனவரி முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை 08 மாதங்களுக்கு தேவையான பெட்ரோல் மற்றும் டீசலுக்கான ஒப்பந்தம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் உதய கம்மன்பில சமர்ப்பித்துள்ளார்.
அந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய, சிங்கப்பூரின் தனியார் நிறுவனம் ஒன்றிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது எரிபொருளுக்கு பற்றாக்குறை இல்லை எனவும், எதிர்காலத்திலும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது எனவும் அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் ரமேஸ் பத்திரன சுட்டிக்காட்டினார்.
0 Comments