Home » » சிவானந்தா தேசிய பாடசாலையினை டிஜிட்டல் பாடசாலையாக அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

சிவானந்தா தேசிய பாடசாலையினை டிஜிட்டல் பாடசாலையாக அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

 



(கல்லடி நிருபர்)

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையினை டிஜிட்டல் பாடசாலையாக அபிவிருத்தி செய்யும் முதற்கட்ட வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

உலக நவீன மயமாக்கலுக்குள் சென்றுகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் கல்வித்துறையும் நவீனமயமாக்கல் ஊடாக டிஜிட்டல் மயமாக்கப்படுவதன் ஊடாக மாணவர்களும் இலகுவாக கல்வி கற்கக்கூடிய வகையில் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவைப்பாடுகள் இருந்து வருகின்றது. அந்த வகையில் சிவானந்தா தேசிய பாடசாலையினை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டமானது மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி தட்சயானந்தா ஜீ மஹராச் அவர்களது ஆசீர்வாதத்தோடு ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர் நவரெட்ணம் சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மலர்மாலை அணிவித்து அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, அதிதிகளின் உரை இடம்பெற்றதனைத் தொடர்ந்து இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி தட்சயானந்தா ஜீ மஹராச் அவர்களது முயற்சியினால் வழங்கப்பட்ட சுமாட் பனல் வோட் இதன்போது பாடசாலை நிருவாகத்திடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி நீலமானந்தா ஜீ மஹராச், பாடசாலையின் உப அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் ச.சந்திரகுமார், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என குறிப்பிட்டளவிலானோர் கலந்துகொண்டனர்.




Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |