Advertisement

Responsive Advertisement

நாட்டில் ஏற்படப்போகும் பேராபத்து - கடுமையான எச்சரிக்கை

 


டெல்டா வைரஸின் மரபனு மாற்றங்கள் ஊடாக தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுவதற்கு இடமிருப்பதாக வைரஸ் தொடர்பான வைத்திய ஆலோசனை நிபுணர் நதீக ஜானகே (Nathika Janake) தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற செய்தியாயளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார் . நாட்டில் தற்போது கொரோனா  தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது. என்றாலும் இந்த நிலையை தொடர்ந்து பாதுகாத்துக்கொள்ள முடியுமா என்ற கேள்வி இருந்து வருகின்றது. 

எமது சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பேணிவருவதிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. கொரோனா தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக இடம்பெறுவதாலும் இந்த கட்டுப்பாடு ஏற்பட்டிருகின்றது. முன்னர் போன்று தற்போது வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்கள் அதிகளவில்  இல்லை.

என்றாலும் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் கொழும்பு வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்த வைரஸின் மரபனு மற்றும் வீரியம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றோம். அதில் எமக்கு கிடைத்த பெறுபேறுதான் டெல்டா ஆரம்ப பிறழ்வுகள் மேலதிகமாக உப பிறழ்வுகள் உருவாகி வருவதாகும்.

என்றாலும் இந்த டெல்டா உப பிரழ்வுகள் பிரதான டெல்டா வைரஸ் போன்றே செயற்படுகின்றன. என்றாலும் இந்த வைரஸ் பரவலை முடியுமான வரை கட்டுப்படுத்திக்கொள்ளவே நாங்கள் முயற்சிக்கவேண்டும்.

இல்லாவிட்டால் எப்போதாவது ஒருநாள் இந்த வைரஸின் மரபனு மாற்றங்கள் மூலம் தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியாத பிறழ்வு ஏற்படுவதற்கு இடமிருக்கின்றது. அதனால் நாங்கள் தொடர்ந்தும் சுகாதார பாதுகாப்புடனே எமது நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments