மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் மாநகர பொறியியலாளர் பா.அச்சுதன் மாநகர கணக்காளர் A.S.ஜோன்பிள்ளை மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் வர்த்தக சங்கத்தினரின் பிரதி நிதிகள்; வரியிறுப்பாளர் சங்கத்தினரின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதில் வணக்கத்துக்குரிய அருட்தந்தை X.I றஜீவன் மற்றும் வணக்கத்துக்குரிய கோட்டைமுனை மெதடிஸ்த சேகர முகாமைக்குரு ஸ்ரீபாலராஜ் ஆகியோர் விஷேட அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இங்கு உரையாற்றிய வணக்கத்துக்குரிய சேகர முகாமைக்குரு ஸ்ரீபாலராஜ் பேசுகையில் மாநகர சபையின் பழமைபோற்றும் தன்மையையும் மாநகர சபையின் சிறந்த சேவையையும் பாராட்டினார். அதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய வணக்கத்துக்குரிய அருட்தந்தை X.I றஜீவன் தேவ ஆசிர்வாதம் நிறைந்த ஒளிவிழா செய்தியை வழங்கியதுடன் தற்பொழுது மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களையும்; மாநகர சபையின் ஆணையாளரையும் வெகுவாக பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய மாநகர ஆணையாளர் “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்கள் என்ற வேதாகம வார்தையை குறிப்பிட்டு பேசியதுடன் மறைந்த கவிஞர் கண்ணதாசன் எழுதிய இயேசு காவியத்திலிருந்து ஒரு கவியையும் அங்கு குறிப்பிட்டார்”
இதில் மாநகர சபை உத்தியோகத்தர்களினால் பாடப்பட்ட கரோல் கீதங்களும் வேலைப்பகுயினரால் அமைக்கப்பட்ட அழகிய மேடையும் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்ததுடன் அழகிய மேடையை அமைத்த குழுவினருக்கு மாநகர ஆணையாளரினால் பரிசும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதனைத்தொடர்ந்து மாநகர பொறியிலாளர் பா.அச்சுதனின் நன்றியுரையுடனும் கிறிஸ்மஸ் தாத்தாவின் பரிசில்களுடனும் விழா இனிதே நிறைவடைந்தது.

0 Comments