Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அத்துருகிரியவில் இன்று காலை அன்ரனோவ் விமான விபத்து! நால்வர் பலி! மூன்று வீடுகள் சேதம்

கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய ஹோகந்தரவில் விமானமொன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து தொடர்பான தகவலை சிவில் விமான சேவைகள் கட்டுப்பாட்டுத் திணைக்களம் உறுதி செய்துள்ளது.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அன்ரனோவ் 32 ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விமான விபத்து காரணமாக இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.
இன்று அதிகாலை 5.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஹோகந்தர கத்தரின் பார்க் பகுதியில் விமான விபத்து காரணமாக பாரிய சுவாலைகளுடன் தீப்பற்றிக் கொண்டுள்ளது.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்கவிலிருந்து ரத்மலானை நோக்கிப் பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் நான்கு பேர் பயணித்துள்ளனர்.
மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தற்போது பொலிஸாரும் மீட்புப் பணியாளர்களும் இணைந்து காயமடைந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விமான விபத்து காரணமாக மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளனர்.
விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

- See more at: http://newjaffna.com/moreartical.php?newsid=35165&cat=nnews&sel=current&subcat=14#sthash.MwBADsAQ.dpuf

Post a Comment

0 Comments