அரியானா மாநில சாமியார் ராம்பாலை விசாரித்ததில் பல உண்மைகள் வெட்ட வெளிச்சமாகியுள்ளன.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட சாமியார் ராம்பால் ஆசிரமத்தை சோதனையிட்டதில், அவரின் ரகசிய அறையில் காண்டம் மற்றும் போதைபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் பெண்கள் கழிவறையில் ரகசிய கமெரா பொருத்தப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாமியாரின் நெருங்கிய உதவியாளர் பல்ஜித் மற்றும் அவரது மகள் பபிதா குமாரியை கைதுசெய்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளன. விசாரணையில், சாமியாருக்கு பாலியல் பழக்கம் இருந்ததுடன், அவர் தனது ஆசிரமத்தில் உள்ள தனிமாளிகையில் அவரது தனிப்பட்ட பணிவிடைகளுக்காக தேர்ந்து எடுக்கப்பட்ட பணிப்பெண்களை பயன்படுத்தி வந்துள்ளார். இதில் 27 வயதாகும் பேபி என்ற பபிதா குமாரிதான் சாமியாரின் விருப்பமான படுக்கை துணை ஆவார். இவரது பெயரில் 10 லட்சம் ரூபாய் வங்கியில் வைப்பு நிதி செய்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஹரியானா மாநில டிஜிபி எஸ்.என் வசிஷ்த் கூறுகையில், ராம்பாலின் முக்கிய உதவியாளர் இந்த பபிதா. இவருடைய அப்பாவும், இவரும் தற்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பபிதாவுடன் ராம்பால் பலமுறை பாலியல் உறவு கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.



0 Comments