மட்டக்களப்பு தனியார் பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் அநாகரிக செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வினால் நகர அபிவிருத்திக்காக சுமார் 6 . 5மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடமே இவ்வாறு இரவு வேளைகளில் அநாகரிக நிலையமாக செயல்பட்டு வருகின்றது .
நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களினால் குறித்த பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்ட போதும் சரியான முறையில் நிர்மாணிக்கப்படாமல் குறித்த கட்டடம் பாழடைந்த நிலையில் காணப்பட்டு வருகின்றது .
குறித்த பேருந்து நிலையம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்,மட்டக்களப்பு மாநகர சபை, பிரதேச செயலகம் மற்றும் வீதிப் போக்குவரத்து அதிகார சபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் தெரிவித்துள்ளனர்
0 Comments