Home » » சகல ஆரம்பப் பிரிவு மாணவர்களும் மகிழச்சிகரமான பிரவேசத்திற்கான செயற்பாடுகளில் பங்கு பற்றுதல் அவசியமாகும்- கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு

சகல ஆரம்பப் பிரிவு மாணவர்களும் மகிழச்சிகரமான பிரவேசத்திற்கான செயற்பாடுகளில் பங்கு பற்றுதல் அவசியமாகும்- கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு


 (சித்தா)


மகிழ்ச்சிகரமான கற்றலின் அடித்தளம் மாணவர்களின் உள நலம் ஆகும். கொவிட் - 19 தொற்று நோயின் காரணமாக மாணவர்கள் நீண்ட நாட்களாக பாடசாலை நேரடிக் கற்றலுக்கான வாய்ப்பை இழந்துள்ளதுடன் உள நெருக்கீடுகளுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்.

 மாணவர்களின் உள நலத்தை மேம்படுத்தி கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல ஆரம்பப் பிரிவு மாணவர்களும் மகிழ்ச்சிகரமான பிரவேசத்திற்கான செயற்பாடுகளில் பங்குபற்றுதல் அவசியமாகும். என கிழக்கு மாகாணக் கல்வித்திணைக்களத்தின் மாணவர்களின் உள நலத்தை மேம்படுத்தி மாணவர்களின் மகிழ்ச்சிகரமான பிரவேசத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக விளக்கமளிக்கும் கலந்துரையாடலில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் தெரிவித்தார்.

மேற்படி கலந்துரையாடல் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் தலைமையில் 25.10.2021 மாகாணக் கல்வித் திணைக்கள ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.ச.பார்த்தீபன் வலயங்களில் ஆரம்பப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் சேவைக்கால ஆசிரியர்கள் பங்கேற்றிருந்தனர்.

மகிழ்ச்சிகரமான பிரவேசத்திற்கான செயற்பாடுகள் எதிர்வரும் 01.11.2021 தொடக்கம் 15.11.2021 வரை தினமும் 30 நிமிடம் காலைக் கூட்டம் முடிவடைந்த பின்னர் உள்ளக, வெளியகச் செயற்பாடுகளாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |