ஆசிரியர்களின் வெளிநாட்டு பயண விடுமுறை அனுமதி நடைமுறையில் மாற்றம்.

Wednesday, April 17, 2024

 


17-04-2024


ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை உத்தியோகத்தர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுறைகளை அனுமதிக்கும் அதிகாரம் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆறு மாதங்கள் அதற்கு குறைவான காலப் பகுதிக்கான குறுகிய கால வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுறைகளை மாகாண கல்விப் பணிப்பாளர்களே அனுமதிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுறை கோரிக்கைகளை பரிசீலனை செய்வதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறைசார் உத்தியோகத்தர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுறை, விடுமுறையை நீடித்தல் உள்ளிட்டனவற்றுக்கான அனுமதி வழங்கம் அதிகாரம் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  

மேலும் இந்த விடுமுறைகள் தொடர்பிலான தகவல்கள் கோரப்படும் போது அவை குறித்து தாமதமின்றி தகவல்களை வழங்கக்கூடிய முறைமையொன்றை உருவாக்கிக்கொள்ளுமாறு மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

எவ்வாறெனினும், ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட வெளிநாட்டுப் பயண விடுமுறை அனுமதி கோரல்கள் கல்வி அமைச்சிடம் முன்வைக்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


READ MORE | comments

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக செல்லத்துரை புவனேந்திரன் இன்று கடமையேற்பு

 


பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக செல்லத்துரை புவனேந்திரன் இன்று (16.04.2024) கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கல்வி நிருவாக சேவையின் முதலாந்தர அதிகாரியாவார். அத்துடன் அனுபம் கொண்ட சிறந்த முகாமையாளராக தன்னை நாடி வரும் பயனாளிகளை இன்முகத்துடன் வரவேற்று அவர்களின் பிரச்சினைகளை உடன் அணுகி  பணியினை  ஆற்றிய   சிறந்த முகாமையாளராகும். ஆசிரியராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராக, வலயக் கல்விப் பணிப்பாளராக, கிழக்கு மாகாணத்தின் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார்.

இவர் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியாகவும், கல்வி, திட்டமிடலில் முதுமானிப் பட்டம், கல்வி முதுமானிப் பட்டம் போன்ற உயர் பட்டங்களைப் பெற்ற சிறந்த கல்விமானாகும். 


READ MORE | comments

விண்ணப்பம் கோரல் : முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி டிப்ளோமா பயிற்சிநெறி 2024-2025 .

Tuesday, April 16, 2024

 

விண்ணப்பம் கோரல் : முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி டிப்ளோமா பயிற்சிநெறி 2024-2025 .

Director 
Mr.A.K.MURUGAKUAMR
0754553527
HEAD OFFICE BATTICALOA..

READ MORE | comments

மட் /களுவாஞ்சிகுடியில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரை இடமாற்றக் கோரி இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ! ! !

Tuesday, April 9, 2024















மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயப்பிரிவிற்குட்பட்ட மட் /பட் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய கல்வி சமூகத்தினால்  பட்டிருப்பு  கல்வி வலயக்கல்விப்பணிப்பாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் இன்று ( 09 )  இடம்பெற்றது.

இதன் போது பாடசாலை முன்றலில் இருந்து பேரணியாக பட்டிருப்பு வலயகல்வி அலுவலகம் வரை போராட்டம் அமைதியான முறையில் இடம்பெற்றது.

இதன் போது ஆர்ப்பாட்ட காரர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பி ,ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதற்கு  கிழக்கு மாகாண ஆளுநர் / மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் தலையிட்டு இதற்கான உடனடி தீர்வு வழங்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதன் பிரகாரம் மாவட் அபிவிருத்தி குழு தலைவரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிரத்தியேக செயலாளர் , பூ. பிரசாந்தன் சம்பவ இடத்துக்கு நேரடியாக விஜயம் செய்து , ஆசிரியர்கள், மாணவர்கள், மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து , கொண்டதுடன் ? கல்விச்சமூகம் இப்பிரச்சினைக்கான மகஜரை இராஜாங்க அமைச்சரின்  செயலாளர் பூ. பிரசாந்தனிடம் கையளித்தனர்.

இதனை தொடர்ந்து ஆர்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.

READ MORE | comments

மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.

 மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.






READ MORE | comments

மத்ரஸா பாடசாலை கல்வியும் கல்வி அமைச்சின் கீழ் மேற்பார்வை?*

Monday, April 8, 2024



முஸ்லிம்களுக்கு தமது மதநம்பிக்கையின் பிரகாரம் நல்லடக்கம் செய்வதை உறுதி செய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு எந்த மதமாக எந்த இனமாக இருந்தாலும் எந்த ஒரு நபரின் இறுதிச் சடங்கையும் அவரது இறுதி விருப்பத்திற்கு அமைய மேற்கொள்ள இடமளிப்பது தொடர்பிலும் இந்தக் குழு ஆராயும் என்று தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் இவை தொடர்பான சட்டங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

கண்டி, கட்டுகெலே ஜும்மா பள்ளிவாசலில் நேற்று (07) இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது கல்வி அமைச்சின் கீழ் பிரிவெனாக் கல்வி முறைப்படுத்தப்படுவது போன்று மத்ரஸா பாடசாலை கல்வியையும் கல்வி அமைச்சின் கீழ் மேற்பார்வை செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் இஸ்லாமிய புத்தகங்களை தருவிப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள தடைகளை கண்டறிந்து அவற்றை நீக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த கொரோனா தொற்றுநோயின் போது, முஸ்லிம் சமூகம் தங்களின் இறுதிச் சடங்குகளை முறையாகச் செய்ய முடியாமல் மிகவும் வேதனையான சூழ்நிலையைச் சந்தித்தது. அந்த நிலையை எதிர்காலத்தில் மாற்றியமைக்க நாங்கள் செயற்பட்டு வருகிறோம்.

மத ரீதியாகவோ அல்லது இறுதி உயில் மூலமாகவோ யாரேனும் தங்கள் விருப்பப்படி இறுதிச் சடங்குகளைச் செய்யக்கூடிய சட்டங்கள் எதிர்காலத்தில் தயாரிக்கப்படும். அடக்கம் அல்லது தகனம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. அவரவர் விருப்பப்படி செயற்படத் தேவையான விதிகளை நாங்கள் தயார் செய்வோம்.

இலங்கை மக்கள் இன்று ரமழான் நோன்பை அனுஷ்டிக்கின்ற போதும் காஸா பகுதியில் மிகவும் சோகமான நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகம் சுமார் முப்பத்தைந்தாயிரம் உயிர்களை இழந்துள்ளது. அதனால்தான் இந்த ஆண்டு தேசிய இப்தார் நிகழ்வை நடத்தாதிருக்க முடிவு செய்யப்பட்டதோடு அந்த பணத்தை காஸா முஸ்லிம் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தோம்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் காஸா பகுதியில் பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதாகவும் உறுதியளித்துள்ளோம். பலஸ்தீன அரசை கலைப்பதை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம். எனவே, இந்தப் போரை நிறுத்துவதற்கு எமது ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

காத்தான்குடி பள்ளிவாசலினால் 10 மில்லியன் ரூபாவும், கட்டுகெலே ஜும்மா பள்ளிவாசலினால் 2.2 மில்லியன் ரூபாவும், முஸ்லிம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களினால் 3.5 மில்லியன் ரூபாவும் காஸா முஸ்லிம் சமூகத்திற்கு வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

READ MORE | comments

ஏப்ரல் 15 பொது விடுமுறையா?

 ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக மாற்றுவது தொடர்பில் இன்று (08) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.


ஏப்ரல் 14 ஆம் திகதி புத்தாண்டு சுபமுகூர்த்தம் நடைபெறும் நிலையில், ஏப்ரல் 15 ஆம் திகதி திங்கட்கிழமை இப்போது வழக்கமான வேலை நாளாக மாறியுள்ளது.

எனினும் எதிர்வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக மாற்றுமாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு விடுமுறை தினமாக மாற்ற வேண்டுமாயின் அமைச்சரவை தீர்மானம் தேவை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று பிற்பகல் கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

READ MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாழைக்குளப் பகுதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாகப் இன்று பிரகடனம் ! !

Friday, April 5, 2024

 


மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாழைக்குளப் பகுதி  சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாகப் இன்று பிரகடனம் ! !


மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாலைக்குள சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாக  பிரகடனம்.
மட்டக்களப்பு நிருபர் சோபிதன்

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை.உத்தியோகபூர்வமாக  அங்குரார்ப்பணம் செய்தல் நிகழ்வு  இன்று வெள்ளிக்கிழமை (05.04.2024) குருக்கள்மடம் ஐயனார் ஆலய முன்றலில்  நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி முரளிதரன் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் மற்றும்  பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது குருக்கள்மடம் ஏத்தாழைக்குளத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உடனடி கள விஜயத்தினை மேற்கொண்டு , ஏத்தாலைக்குளம் சார்ந்த சூழலை பார்வையிட்டனர்.

 










உத்தியோக பூர்வமாக மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாழைக்குள ஈரநிலப்பாதுகாப்பு வலயமாக வழங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதானி , மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அம்மணியிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது




READ MORE | comments

சமகால ஜனநாயகம் மற்றும் தேர்தல்கள் மீது நிலவுகின்றன முக்கிய கருத்தாடல்.

Thursday, April 4, 2024



மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு சமகால ஜனநாயகம் மற்றும் தேர்தல்கள் மீது நிலவுகின்ற விடயங்கள் தொடர்பான முக்கியமான கருத்தாடல் செயலமர் வொன்று புதன்கிழமை (03.04.2024)  மட்டக்களப்பில் சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்றது.


இதன்போது தேர்தங்கள் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் (Centre for monintoring Election violence)  அமைப்பின் ஏற்பாட்டில் இந் பற்றுதலுடன் இந் நிகழ்வு இடம் பெற்றது. 


இச்செயலமர்வின் வளவாளராக ஓய்வு பெற்ற தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். முகமட், மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பின் நிறை நேற்று அதிகாரி கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, பேராசிரியர் கிருஸ்ண மோகன், தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலைய தேசிய இணைப்பாளர் ஏ.எம்.என். விக்டர், சிவில் சமூக செயற்பாட்டாளர் சேதீஸ்வரி, மாவட்ட இணைப்பாளர் வி.ரமேஸ்ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஜனநாஜகம் மற்றும், தேர்தல்களின் பால் சமகால சவால்கள் தொடர்பில் தெளிவூட்டளையும், விளக்கங்களையும் வழங்கினர்.








READ MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாலைக்குளப் பகுதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் ! !

 


மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


இதனை.உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்தல் நிகழ்வு நாளை (05) வெள்ளிக்கிழமை குருக்கள்மடம் ஐயனார் ஆலய முன்றலில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி j.j முரளிதரன் மற்றும் , மத்திய சுற்றாடல் அதிகார சபையின் , தலைவர் மற்றும் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

பாதுகாக்கப்பட வேண்டிய குருக்கள்மடம் ஏத்தாலைக்குளச்சுற்றுச்சூழலை கட்டியெடுப்ப முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந் நிகழ்விற்கு கிராம பொதுமக்கள், நலன்விரும்பிகள், ஆலய ,சங்க பிரதிநிதிகள், விளையாட்டுக்கழகங்கள் என அனைவரையும் தவறாமல் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : மத்திய சுற்றாடல் அதிகார சபை.

READ MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் அதிகாலையில் இடம் பெற்ற விபத்து

Tuesday, April 2, 2024

 மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் இன்று அதிகாலையில் இடம் பெற்ற விபத்து




நேற்றிரவு மட்டு #குருக்கள்மடத்தில் மின்சாரத் தூண்களை பதம்பார்த்த மகேந்திரா  வாகனம்

களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் நேற்றிரவு விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மட்டு கல்முனை பிரதான சாலை வழியே நேற்றிரவு பயணித்துக்கொண்டிருந்த மகேந்திரா ரக வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமிருந்த உயர் அழுத்த மின்சாரத் தூனில் மோதியுள்ள நிலையில் மின்சாரத்தூண் உடைந்து விழுந்துள்ளது அதனை அடுத்து அதனுடன் தொடர்புபட்டிருந்த இரண்டு மின்சாரத்தூண்களும் சரிந்து விழுந்துள்ளது.

இவ் விபத்து காரணமாக அப் பகுதிக்கான மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்


READ MORE | comments

ஏப்ரல் விடுமுறைக்கு பின் ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை

Monday, April 1, 2024


 மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் ஏப்ரல் விடுமுறைக்கு பின்னர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பரீட்சை நடத்தி, பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையிலும் ஆசிரியர் வகையின் அடிப்படையிலுமே ஆரம்பகட்டமாக 2400 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

பரீட்சையில் சித்தியடைந்த ஏனையவர்கள் தொடர்பில் இந்த நாட்களில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏப்ரல் விடுமுறைக்கு பின்னர் அவர்களுக்கும் நியமனம் வழங்க முடியும் என நம்புகிறேன்.

இதற்கு மேலதிகமாக நீதிமன்ற உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால 13ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு 9 மாகாணங்களிலும் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தற்போது நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எஞ்சிய பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் விரைவாக அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.


READ MORE | comments

நாடளாவிய ரீதியில் 10 வைத்தியசாலைகளில் நாளை வேலை நிறுத்தம்

 


நாடளாவிய ரீதியில் 10 வைத்தியசாலைகளில் நாளை (02) அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கை தேசிய வைத்தியசாலை,
கராபிட்டிய போதனா வைத்தியசாலை,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை,
பேராதனை போதனா வைத்தியசாலை,
திருகோணமலை போதனா வைத்தியசாலை,
கேகாலை பொது வைத்தியசாலை,
பொலன்னறுவை பொது வைத்தியசாலை,
மன்னார் ஆதார வைத்தியசாலை,
கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளில் நாளை அடையாள வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |