மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயப்பிரிவிற்குட்பட்ட மட் /பட் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய கல்வி சமூகத்தினால் பட்டிருப்பு கல்வி வலயக்கல்விப்பணிப்பாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் இன்று ( 09 ) இடம்பெற்றது.
இதன் போது பாடசாலை முன்றலில் இருந்து பேரணியாக பட்டிருப்பு வலயகல்வி அலுவலகம் வரை போராட்டம் அமைதியான முறையில் இடம்பெற்றது.
இதன் போது ஆர்ப்பாட்ட காரர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பி ,ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் / மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் தலையிட்டு இதற்கான உடனடி தீர்வு வழங்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதன் பிரகாரம் மாவட் அபிவிருத்தி குழு தலைவரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிரத்தியேக செயலாளர் , பூ. பிரசாந்தன் சம்பவ இடத்துக்கு நேரடியாக விஜயம் செய்து , ஆசிரியர்கள், மாணவர்கள், மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து , கொண்டதுடன் ? கல்விச்சமூகம் இப்பிரச்சினைக்கான மகஜரை இராஜாங்க அமைச்சரின் செயலாளர் பூ. பிரசாந்தனிடம் கையளித்தனர்.
இதனை தொடர்ந்து ஆர்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.
0 comments: