எரிபொருள் பெற்றுக்கொள்ள 5 மில்லியன் வாகனங்கள் பதிவு - கஞ்சன விஜேசேகர

Sunday, July 31, 2022

 


தேசிய எரிபொருள் விநியோக அட்டை QR முறை ஊடாக இதுவரை சுமார் 5 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், நாளைய தினம் முதல் QR முறை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

QR முறையுடன் கூடிய தேசிய எரிபொருள் விநியோக அட்டை தொடர்பான கோட்டா முறை இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படும் எனவும், ஒவ்வொரு வாகனத்திற்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு நாளை முதல் அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

READ MORE | comments

எரிபொருளின் விலைகள் 50 முதல் 100 ரூபாய் வரை குறைவடைய வாய்ப்பு.31-07-2022.*,, ,

எரிபொருளின் விலைகளில் மீண்டும் நாளை நள்ளிரவிலிருந்து மாற்றங்கள் எற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, 50- 100 ரூபாய் வரை எரிபொருளின் விலை குறைவடையலாம் என எரிபொருள் கூட்டுதாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விலை குறைப்பானது நாளை (1) நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எரிபொருளின் விலை வீழ்ச்சிக்கு அமைய, இலங்கையிலும் எரிபொருள்களின் விலை குறைக்கப்படவுள்ளதாகவும் எரிபொருள் கூட்டுதாபன தகவல்கள் தெரிவிக்கின்றன

READ MORE | comments

நாடளாவிய ரீதியில் நாளைமுதல் ஏரிபொருள் விநியோக நடைமுறையில் மாற்றம்: வெளியாகிய அறிவிப்பு

 


கியூ ஆர் முறைமை

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாளை முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளது.

எனினும், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நெரிசல் ஏற்படாத வகையில் செயற்படுமாறு வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொது மக்களிடம் கோரியுள்ளார்.

இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை என்ற கியூ ஆர் (QR)முறைமைக்கு இன்று முதல் வாகன வருமான அனுமதி பத்திரத்தை கொண்டு பதிவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

46 இலட்சத்து 91 ஆயிரத்து 149 வாகனங்கள் பதிவு

நாடளாவிய ரீதியில் நாளைமுதல் ஏரிபொருள் விநியோக நடைமுறையில் மாற்றம்: வெளியாகிய அறிவிப்பு | Fuel Based On Distribution Qr Code Jaffna

கியூ ஆர் முறைமை தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி குறித்த முறைமை முழுமையாக செயற்படுத்துவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமைக்காக, இதுவரையில் 46 இலட்சத்து 91 ஆயிரத்து 149 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 41 லட்சத்து 59 ஆயிரத்து 357 வாகனங்கள் பெட்ரோலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதோடு 5 லட்சத்து 32 ஆயிரத்து 571 வாகனங்கள் டீசலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, சகல முச்சக்கரவண்டிகளையும் அந்தந்த காவல்துறை நிலையங்களில் பதிவு செய்து, அவற்றுக்காக அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை ஒதுக்கி கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்தநிலையில் இன்றைய தினம் வாகன இலக்க தகடுகளில் 3,4 மற்றும் 5 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

READ MORE | comments

போராட்டக்கார்கள் ஐவரை நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்குமாறு பரிந்துரை

 


கொழும்பு காலி முகத்திடல் போராட்டக்கார்கள் ஐவரை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு இதுவே சிறந்த நடைமுறை எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முன்வருமாறு அதிபர் அனைத்து கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இளைஞர்கள் தங்கள் புதிய யோசனையுடன் நாடாளுமன்றத்திற்கு நுழைய முடியும்

போராட்டக்கார்கள் ஐவரை நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்குமாறு பரிந்துரை | Recommend Five Protesters Admitted To Parliament

இந்த நிலையிலேயே நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் பங்கேற்றுள்ள இளைஞர்கள் தங்கள் புதிய யோசனையுடன் நாடாளுமன்றத்திற்கு நுழைய முடியும் என அவர் கூறினார்.

இதனால் வயதான அமைச்சர்களை நாடாளுமன்ற பதவிகளிலிருந்து நீக்குமாறும் அல்லது அவர்களது விருப்பத்துடன் புதியவர்களை நியமிக்குமாறும் கொமுனு விஜயரட்ண அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார்.

எந்த நாடாளுமன்ற ஆசனங்களை இளைஞர் சக்தியுடன் மாற்றுவது என்பது குறித்து அதிபர் தீர்மானிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தல் மீண்டும் நடத்தப்பட்டால் இளைஞர்கள் ஒருபோதும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படமாட்டார்கள். இதனால் நாடாளுமன்றத்திலுள்ள அதிக வயதான அமைச்சர்கள் நாட்டின் எதிர்கால நலனுக்காக சிறந்த முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

READ MORE | comments

ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஒரே நாளில் விநியோகிக்க தயாராகும் #லிட்ரோ ..!

 


நாட்டிற்கு  இன்றைய தினமும் சமையல் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று வருகை தந்துள்ளதாக லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாட்டிற்கு வருகை தந்துள்ள எரிவாயுவினை தரையிறக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பயனாளர்களின் கோரிக்கைக்கு அமைய நாளொன்றுக்கு ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 30 லீற்றர் பெற்றோல் வழங்குமாறு கோரிக்கை - அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் தொழிற்சங்கம் !

 


பொது போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 30 லீற்றர் பெற்றோல் வழங்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது வழங்கப்படும் 5 லீற்றர் பெற்றோல் எவ்வகையிலும் போதுமானதல்ல எனவும் அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார் .


ஏனைய பொதுப் போக்குவரத்து சேவைகளைப் போன்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முச்சக்கரவண்டிகளையும் உள்வாங்க வேண்டும், இல்லையெனில் இலட்சக்கணக்கான முச்சக்கர வண்டி ஊழியர்கள் நடுத்தெருவுக்கு தள்ளப்படுவார்கள் .

பொதுப்போக்குவரத்தில் ஈடுபடாத முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 5 லீற்றர் வழங்க முடியும் . அதேசமயம் முச்சக்கர வண்டிகள் உண்மையில் போக்குவரத்தில் ஈடுபடுகின்றனவா என்பதை இலகுவாக கண்காணிக்கும் தொழில்நுட்பம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்..
READ MORE | comments

முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வந்தால் எரிபொருள் வழங்க மாட்டோம்.31-07-2022.*,, ,

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வரும் நபர்களுக்கு நாளை (01) முதல் எரிபொருள் வழங்க மாட்டோம் என பெற்றோலிய டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், எரிபொருள் நிலையங்களுக்கு வருபவர்களுக்கு சுகாதார வழிகாட்டகல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்

READ MORE | comments

செப்டெம்பர் மாதத்தின் பின் அரை நாள் (12 மணி நேர) மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு !

 


எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பின்னர் போதிய நிலக்கரி கிடைக்காவிடின், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தியில் தடங்கல் ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 


இது நடந்தால் வருட இறுதியில் அரை நாள் (12 மணி நேர) மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ஐந்து இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரி உள்ளதாகவும், செப்டெம்பர் மாதத்திற்கு பின்னர் எதிர்வரும் மார்ச் மாதம் வரை 25 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரி தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அந்த அளவு நிலக்கரியை இறக்குமதி செய்ய 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவையெனவும், தற்போது உலக சந்தையில் நிலக்கரியின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் இருந்து 900 மெகாவாட் மின்சக்தி தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்படுகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
READ MORE | comments

மின் கட்டண பட்டியலை மின்னஞ்சல் மூலம் பெறலாம் மின்சாரசபை புதிய வசதி!


மின்சார பாவனையாளர்கள் தங்களின் மாதாந்த மின் கட்டண பட்டியலை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபயின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இ-பில் சேவையைப் பதிவுசெய்வதன் மூலம் இந்த சேவையை பெறலாம்.

பதிவு உறுதிப்படுத்தலை SMS மூலம் பெறலாம்.

“EBILL” என குறிப்பிட்டு, இடைவெளி விட்டு, கணக்கு எண்ணை குறிப்பிட்டு, இடைவெளி விட்டு, மின்னஞ்சலை குறிப்பிட்டு, 1989 க்கு அனுப்புமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


T+P

READ MORE | comments

இன்றைய வானிலை31-07-2022


நாட்டின் தென் அரைப்பாகத்தில் மேக மூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, தென் மற்றும் மேல் மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில்காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-25 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும்.

READ MORE | comments

கதிர்காமக்கந்தன் கொடியேற்றம் 2022

Saturday, July 30, 2022


 

READ MORE | comments

வாகன எண்ணின் கடைசி இலக்கத்துடன் தொடர்புடைய நாட்களில் எரிபொருளை வழங்கும் முறை இரத்து30-07-2022.

QR அமைப்பின் கீழ் எரிபொருள் விநியோகம் ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, வாகன எண்ணின் கடைசி இலக்கத்துடன் தொடர்புடைய நாட்களில் எரிபொருளை வழங்கும் முறை அன்றிலிருந்து ரத்து செய்யப்படும் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் கூறுகிறது.

இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, 4 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

QR CODE தொடர்பான விழிப்புணர்வு பதிவு.

 


#உங்கள் QR கோர்ட்டை பொது வெளியில் பகிர வேண்டாம். அதன் மூலம் வேறு ஒருவர் பெட்ரோலை பெற்று செல்ல முடியும்.

QR கோர்ட்டின் மேல் வாகன இலக்கம் இருக்கும். ஆனாலும் பெட்ரோல் செட்டுகளில் வாகன நம்பர்களை பரிசோதிப்பது குறைவு. 

அவ்வாறு பரிசோதித்து இது உங்கள் நம்பர் இல்லை என கூறினால் உடனேயே அவரும் "இது சகோதரின் QR மாற்றி தந்துட்டேன் என கூறி தன்னுடையதை கொடுத்து தப்பித்துக்கொள்ள முடியும்.

QR கோர்ட்டை கீ டெக் ஆக அடிப்பது என்னை பொறுத்த வரை பயனில்லை, ஏனெனில் அது கீறல்கள் விழுந்தால் , QR ஸ்கான் பண்ணாது. 

ஸ்மார்ட் போன் வைத்து இருப்பவர்கள் போனில் QR ஸ்கிரீன் சொட் எடுத்து வைத்திருக்கலாம். 

போனில் வைத்திருக்க வசதி இல்லாதவர். QR பிரிண்ட் எடுத்து , QR ரில் அழுக்கு படமால் , மடிப்புக்கள் விழாமல் மடித்து பத்திரமாக வைத்திருக்கலாம். லெமனேட் பண்ணியும் வைக்கலாம். 

அதற்காக A4 சீட்டில் பெரியளவில் QR பிரிண்ட் அடிப்பதில்லை. 

சிறிய ரக மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்கள் உங்கள் மோட்டார் சைக்கிள் எரிபொருள் கொள்வனவு எவ்வளவு என அறிந்து வைத்திருங்கள். தெரியாதவர்கள் கூகிளில் தேடி பாருங்கள். இல்லை மோட்டார் சைக்கிள் வாங்கும் போது தரும் புத்தகத்தில் அந்த விபரம் இருக்கும். 

5 லீட்டர் கொள்வனவு உடைய டாங் எனில் அதற்குள்  இரண்டு லீட்டர் இருந்தால், ஒன்றரை லீட்டரை இழுத்து வைத்து விட்டு செல்லுங்கள். இல்லை நீதிடா நேர்மைடா என்பவர்கள் முதல் தடவை இரண்டு லீட்டருக்கு அடியுங்க. கிழமையில் வரும் அடுத்த உங்கள் இலக்கத்திற்கு உரிய நாளுக்கு சென்று மிகுதி இரண்டு லீட்டரை அடியுங்க. 

அடுத்த வாரம் முதல் இறுதி இலக்கம் நடைமுறையில் இருக்காது என அறிவித்து இருப்பதனால் அது நடைமுறைக்கு வந்தால் கிழமையில் உங்களுக்கான ஒதுக்கீட்டை எத்தனை தடவைகள் வேணும் என்றாலும் பிரித்து பெற்றுக்கொள்ள முடியும். 

உங்கள் பைக்கின் எரிபொருள் கொள்வனவு 2 லீட்டர் தான் என  தெரிந்தால் , QR ஸ்கான் பண்ணும் இடத்தில் சொல்லுங்கள் இந்த தடவை 2 லீட்டர் தான் அடிக்க போறேன் என (கிழமைக்கான உங்கள் ஒதுக்கீட்டை உங்கள் விருப்பப்படி பிரித்து அடிக்கலாம்)

ஒவ்வொரு கிழமையும் உங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு புதிதாக ஒதுக்கப்படும். அதனை அந்த கிழமைக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும். தவறின் அது காலாவதியாகி அடுத்த கிழமைக்கான புதிய ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டு இருக்கும்.

READ MORE | comments

அதிபர் ஆசிரியர்கள் எரிபொருள் பெற பொறிமுறையை உருவாக்குங்கள் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

 


மாவட்ட செயலர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் வாகனங்களுக்கான எரிபொருளை வழங்குவதற்கான ஒரு பொறிமுறையை வகுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பில் சங்கத்தால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

நீண்டகாலமாக பாடசாலைகள் பூட்டப்பட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டமை நீங்கள் அறிந்ததே. கொரோனா நோய் ஒருபுறம் பொருளாதார, போக்குவரத்து நெருக்கடி இன்னொரு புறம் எரிபொருள் தட்டுப்பாடு பூதாகாரம். இவை எல்லாமே இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைக் குழந்தைகளையும் வெகுவாகப் பாதித்துள்ளது.

இத்தகைய நிலமைகளைச் சீர்செய்ய முடியாமல் இல்லை. பல வழிமுறைகள் இருந்தும் அவற்றை நாம் தட்டிக்கழித்தே வருகின்றோம்.

இப்போதுள்ள மிக முக்கியமான பிரச்சனை எரிபொருள் பிரச்சனை. இதனால் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துமே செயலிழந்த நிலையில் உள்ளன.

விசேடமாக ஆசிரியர்களின் போக்குவரத்து மார்க்கங்கள் முற்றாக ஸ்தம்பித்துள்ளன. மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளைச் செய்வதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. 

இந்த வழிமுறையை மத்திய கல்வி அமைச்சிடம் நாம் முன்வைத்து அதனை நடைமுறைப் படுத்துவதாக கல்வி அமைச்சர் உறுதிப்படுத்தியதன் அடிப்படையில் இன்று அந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதே போன்று ஆசிரியர்களின் போக்கு வரத்திற்கும் வழியைக் கண்டறிய வேண்டும். இன்று சகல மாகாணங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மாவட்டச் செயலாளர்களின் கண்காணிப்பில் உள்ளன. 

ஆகையால் மாவட்டச் செயலாளர்கள் உங்களின் மாவட்டத்தில் உள்ள பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் வாகனங்களுக்கான எரிபொருளை வழங்குவதற்கான ஒரு பொறிமுறையை வகுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முன்மாதிரியாக அதிபர், ஆசிரியர்களுக்கு விசேட எரிபொருள் நிரப்பு நிலையத்தை ஒதுக்கீடு செய்து நடைமுறைப்படுத்தியுள்ளமை பாராட்டுக்குரியது.

ஆகையால் சகல மாவட்ட அரசாங்க அதிபர்களும் தயவு செய்து மாணவர்களின் நலன் கருதி இந்த ஒழுங்கினை மேற்கொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.

READ MORE | comments

QR முறையில் இதுவரை பதிவு செய்யாதவர்களுக்கான அறிவித்தல்

 

30-07-2022.

எரிபொருள் விநியோக அனுமதிப் பத்திர QR முறையில் வாகன chassis இலக்கத்தின் ஊடாக பதிவு செய்ய முடியாதவர்கள் வாகன வருமான அனுமதி பத்திர இலக்கத்தின் ஊடாக பதிவு செய்துக் கொள்ளுமாறு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

ட்விட்டர் செய்தியில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறு பதிவு செய்துக் கொள்ளுமாறு அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


READ MORE | comments

QR அனுமதிச்சீட்டைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவெடிக்கை

 


பதுக்கி வைத்திருப்பவர்கள், சட்டவிரோதமாக எரிபொருளை விற்பனை செய்தவர்கள் அல்லது எரிபொருள் விநியோகம் குறித்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றாதவர்கள், அவர்களின் QR அனுமதிச்சீட்டை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு, 0742123123 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு காணொளி/புகைப்பட ஆதாரங்களை அனுப்புமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு

READ MORE | comments

அதிபர்கள் முடிவு செய்தால் நடக்கும்! கல்வி அமைச்சு


30-07-2022.

  அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் செயற்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்தோ அல்லது ஒன்லைன் மூலமோ கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை , போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டால், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலையை ஆரம்பிக்க வலயக் கல்வி மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

READ MORE | comments

பாடசாலைகள் தொடர்பான அறிவித்தல்

 


அனைத்து அரசு & அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார்  பாடசாலைகள் ஆகஸ்ட் 01 முதல் 05 வரை திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மட்டுமே செயல்படும் - கல்வி அமைச்சு-

READ MORE | comments

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

 


30-07-2022

வெள்ளிக்கிழமை நேற்று (29) 131 கொரோனா தொற்றாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் நாட்டில் தற்போது நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாளாந்த கொரோனா தொற்றாளர்களுடன் ஒப்பிடும் போது தற்போது கொரோனா தொற்றாளர்களின் வேகம் அதிகரித்து வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார் 

மேலும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அனைவரும் இணைந்து செயற்படவில்லையாயின் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார் .

READ MORE | comments

திரிபோஷ உற்பத்தி மீண்டும் ஆரம்பம்


30-07-2022.

நாட்டில் மீண்டும் திரிபோஷ போஷாக்கு நிரப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

திரிபோஷ என்பது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் துணை உணவுப் பொருளாகும், இது குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அரசினால் இலவசமாக வழங்கப்படுகிறது. 

குடும்ப சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் கூற்றுப்படி, திரிபோஷ இல்லாததால் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தாய்மார்களுக்கான திரிபோஷ உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா திரிபோஷ லிமிடெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளதுடன், குழந்தைகளுக்கான திரிபோஷா பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இன்னும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் திரிபோஷ விநியோகம் ஆரம்பிக்கப்படும் என திரிபோஷ உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். 

திரிபோஷ தொழிற்சாலையில் மூலப்பொருட்கள் தீர்ந்து போனதால் கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்டது. சோளம் மற்றும் சோயா விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது, ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் சோளம் அறுவடை செய்யப்பட்டவுடன் புதிய இருப்புகளைப் பெற அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.


READ MORE | comments

நாட்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களில் 25 சதவீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள்.

 


30-07-2022.*,, ,

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 25 சதவீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என தேசிய டெங்கு ஒழிப்பு மையம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு காய்ச்சல் மற்றும் உடல் நோவு காணப்படுமாயின் உடனடியாக குருதிப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அதன் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர அறிவுறுத்தியுள்ளார்.

தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் தரவுகளின் அடிப்படையில் ஜுலை மாதத்தில் 7 ஆயிரத்து 26 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 76 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த எண்ணிக்கையானது இந்த வருடத்தில் பதிவாகிய அதிக எண்ணிக்கையாகும்.

நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் பின்னனியில் தமது வீடுகள் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேங்களையும் டெங்கு நுளம்புகள் பெருகா வண்ணம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது பொதுமக்களின் பொறுப்பாகும் என சுகாதாரப்பிரிவு வலியுறுத்தியுள்ளது.


READ MORE | comments

கோட்டாபயவை கைது செய்யுமாறு கோரிக்கை..! சிங்கப்பூர் அரசு பதிலடி கோரிக்கை நிராகரிப்பு

 இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை இனப்படுகொலை குற்றச்சாட்டில் கைது செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி யாஸ்மின் சுகா விடுத்த கோரிக்கையை சிங்கப்பூர் சட்டமா அதிபர் லூசியன் வான் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூர் சட்டப்படி கோட்டாபய ராஜபக்ச எந்த குற்றமும் செய்யவில்லை என்பதும் கோட்டாபய மீது இலங்கை அரசும், இன்டர்போல் அமைப்பும் எந்த முறைப்பாடும் அளிக்கவில்லை என்பதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பாரிய மக்கள் புரட்சியின் காரணமாக கோட்டபாய இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் மாலைதீவுக்கு சென்றிருந்தார்.

மாலைத்தீவிலும் கோட்டாபயவின் வருகையை கண்டித்து கடும் மக்கள் எதிர்ப்பு ஏற்பட்டதால் அங்கிருந்து பிரத்தியேக விமானம் மூலம் சிங்கப்பூருக்கு சென்றிருந்தார்.

சிங்கப்பூர் சென்ற கோட்டபாயவுக்கு சிங்கப்பூர் அரசு 14 நாட்கள் பயண அனுமதி வழங்கியது, அது முடிவடையும் தருவாயில் மேலும் 14 நாட்கள் பயண அனுமதி வழங்கியுள்ளது.

இந் நிலையில் கோட்டாபயவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுமாறும் அவர் புரிந்த குற்றங்களுக்காக கைது செய்யுமாறும் வலியுறுத்திய நிலையிலேயே சிங்கப்பூர் சட்டப்படி கோட்டாபய ராஜபக்ச எந்த குற்றமும் செய்யவில்லை எனவும் அதனால் அவரை கைது செய்ய முடியாது என சிங்கப்பூர் அரசு விளக்கியுள்ளது.

READ MORE | comments

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் இறுதி தீர்மானம்

Friday, July 29, 2022


29-07-2022


எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் விடுமுறை வழங்காது நவம்பர் மாதம் இறுதி வரை பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவிய நெருக்கடியான சூழ்நிலை காரணமாக பாடசாலைகளுக்கு அவ்வப்போது விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில், கல்வி செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

READ MORE | comments

முட்டைக்கும் கோழி இறைச்சிக்கும் தட்டுப்பாடு! எச்சரிக்கும் அதிகாரிகள்

 29-07-2022.

அடுத்த வருடம் இலங்கை பாரிய போஷாக்கு பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி குழு அரசாங்கத்துக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

எனவே நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படவேண்டும் அந்த குழு கோரியுள்ளது.

நாட்டில் தற்போது திரவ பால் உற்பத்தி 19.8 சதவீதமும்இ கோழி உற்பத்தி 12.1 சதவீதமும்.கோழி முட்டை உற்பத்தி 34.9 சதவீதமும் குறைந்துள்ளதாக ஆணைக்குழு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு கோழி மற்றும் முட்டை உற்பத்தி துறைகள் முற்றாக வீழ்ச்சியடையும் என்று அவர்கள் குறிப்பி;ட்டுள்ளனர்.

எனினும் இந்த எச்சரிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் உறுதிப்பாடு குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.


READ MORE | comments

இன்று 25 நிரப்பு நிலையங்களில் எரிபொருள் அனுமதி அட்டை பரீட்சிப்பு

Saturday, July 23, 2022
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையானது நேற்று கொழும்பில் இரண்டு இடங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று(23) நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் தெரிவு செய்யப்பட்ட 25எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையின் கீழ் எரிபொருள் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

பரீட்சார்த்த நடவடிக்கையின் பின்னர் தேசிய மட்டத்தில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலக்கத் தகடுகளில், 0, 1 மற்றும் 2 ஆகியவற்றை இறுதி இலக்கங்களாக கொண்ட வாகனங்களுக்கு இன்று எரிபொருள் விநியோகிகப்படவுள்ளது.

நேற்றைய தினம் பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டது.

எனினும் சில பகுதிகளில் அமைதியின்மை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இதேநேரம், மற்றுமொரு பெற்றோல் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதோடு அதன் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

திங்கள் முதல் பாடசாலைகள் மீள ஆரம்பம் - வாரத்தில் 3 நாட்களே வரவேண்டும்
23-07-2022.*,, ,


அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் 25 ஆம்திகதி திங்கட்கிழமை மீண்டும் தொடங்கவுள்ளதாக கல்வி அமைச்சினால் அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி, மறு அறிவித்தல் வரை, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகள் நடத்தப்படும் என்றும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்தே கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும் எனவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறல்லாவிடின் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

READ MORE | comments

பாடசாலை சேவை வாகனங்களுக்கு இபோச டிப்போ ஊடாக எரிபொருள்23-07-2022.*,, ,

பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்து மற்றும் சிற்றூர்ந்து ஆகிய வாகனங்களுக்கு இன்று பிற்பகல் 3 முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஊடாக எரிபொருள் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி மற்றும் அது தொடர்பில் இனிவரும் காலங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.

கல்வி, மீன்பிடி, சுற்றுலா, விவசாய நடவடிக்கை மற்றும் பொது போக்குவரத்து சேவை சேவையில் ஈடுபடும் தனியார் மற்றும் அரச பேருந்துக்காக அவசியமான எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்தல் மற்றும் விரைவுபடுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது

READ MORE | comments

இலங்கை அரசாங்கத்திடம் கடுமையான போக்கைக் காட்டும் ஐரோப்பிய ஒன்றியம்!23-07-2022.*,, ,


இலங்கையின் புதிய அரசாங்கம் அதன் ஜிஎஸ்பி GSP+ உறுதிமொழிகளுக்கு முழுமையாக இணங்கிச் செயற்படும் என தாம் எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்று (22) கடுமையான அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து, நாட்டின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை தேர்வு செய்ய இலங்கை நாடாளுமன்றம் துரித நடவடிக்கை எடுத்ததை போன்று, ஜனநாயக, அமைதியான மற்றும் ஒழுங்கான மாற்றத்தின் செயல்பாட்டில் உள்ள இலங்கை குடிமக்களின் எண்ணம், கருத்து சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட உரிமைகளை நிலைநிறுத்துவதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக் காட்டியுள்ளது.

போராட்டக்காரர்கள் மீது தேவையில்லாத வன்முறைகள் நடப்பதாக முறைப்பாடுகள் எழுந்துள்ள நிலையில், அமைதியான ஒன்றுகூடல் மற்றும் சங்கத்தின் சுதந்திரத்திற்கான உரிமையின் முக்கியத்துவத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தும் அதேவேளை, அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக தேவையற்ற பலப்பிரயோகத்தை வன்மையாக கண்டித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நிலையான பாதையில் கொண்டு செல்வதற்கு, உள்நாட்டுச் சூழ்நிலையின் அவசரத் தேவைக்கு, சீர்திருத்தங்களின் கட்டமைக்கப்பட்ட திட்டத்தை விரைவாக நிறுவி செயல்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இச்சூழலில், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது இன்றியமையாதது என்றும் சிறந்த பண்புகளுடனான நிர்வாகத்தை வளர்ப்பது மற்றும் நல்லிணக்க முயற்சிகளை மேம்படுத்துதல் அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்சி மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சி நிரலை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்ட இலங்கை மக்களுக்கு ஆதரவான அனைத்து முயற்சிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஆதரவளிக்கும்.

பல ஆண்டுகளாக, ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் இலங்கை மக்களுக்கு ஒரு பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான உதவிகளை வழங்கியுள்ளன.


ஜிஎஸ்பி GSP+ திட்டத்தின் கீழ் ஐரோப்பிய ஒற்றைச் சந்தைக்கான முன்னுரிமை சலுகையை 2017 இல் மீண்டும் அறிமுகப்படுத்தியமை இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானது.


எனவே, புதிய அரசாங்கம் அதன் GSP+ உறுதிமொழிகளுக்கு முழுமையாக இணங்கிச் செயல்படும் என ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கிறது.


தற்போதைய மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு திட்டங்கள் (EUR 70 மில்லியன்) இலங்கையின் மிக முக்கியமான தேவைகளுடன் சீரமைக்கப்படுகின்றன.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டு சிவில் பாதுகாப்பு பொறிமுறையின் மூலம் மருந்துகளை வழங்குவதுடன், மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காக, உறுப்பு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையின் உணவுப் பாதுகாப்பை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


READ MORE | comments

எரியொருளுக்காக வரிசையில் நின்றவர்களில் இருவர் மரணம்

Friday, July 22, 2022

 


கிண்ணியாவில் எரிபொருள் வரிசையில் நின்ற 59 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மத்துகம, பெலவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 64 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார் - நிருபர்-

READ MORE | comments

இலங்கையில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய இளம் உறுப்பினர்களை கொண்ட அமைச்சரவை நியமனம்இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாணம் தற்போது இடம்பெற்று வருகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகிறது.

முன்னதாக இலங்கையின் 27 ஆவது பிரதமராக தினேஸ் குணவர்தன இன்று காலை பதவியேற்றிருந்தார்.

இந்த நிலையில் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டு உறுதிமொழியை சற்றுமுன் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய,

பிரதமர் தினேஸ் குணவர்தன உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராகவும்,

டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராகவும்,

சுசில் பிரேமஜயந்த கல்வி அமைச்சராகவும்,

பந்துல குணவர்தன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராகவும்,

கெஹெலிய ரம்புக்வெல்ல – சுகாதார மற்றும் நீர்ப்பாசன அமைச்சராகவும்,

மஹிந்த அமரவீர விவசாய மற்றும் வனவள, வனப்பாதுகாப்பு அமைச்சராகவும்,

விஜயதாச ராஜபக்ஸ நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராகவும்,

ஹரீன் பெர்ணான்டோ காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும்,

ரமேஷ் பத்திரண பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சராகவும்,  

பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அமைச்சராகவும்,

அலி சப்ரி வெளிவிவகார அமைச்சராகவும்,

விதுர விக்ரமநாயக்க புத்தசாசன மற்றும் சமய கலாசார அலுவல்கள் அமைச்சராகவும்,

கஞ்சன விஜேசேகர வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சராகவும்,

நஸீர் அஹமட் சுற்றாடல் அமைச்சராகவும்,

ரொஷான் ரணசிங்க விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராகவும்,

மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும்,

டிரான் அலஸ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகவும்,

நலின் பெர்ணான்டோ வர்த்தக வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சராகவும்,

பதவியேற்றுக் கொண்டுள்ளனர்

READ MORE | comments

நாடளாவிய ரீதியில் வர்த்தமானியில் பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டம் வெளியீடு

 


பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படையினரையும் ஈடுபடுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி-

READ MORE | comments

கொழும்பில் பதற்றம்! காலிமுகத்திடல் பகுதியில் இராணுவத்தினருடன் சிவில் உடையில் களமிறங்கியுள்ள நபர்கள்

 


ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது போராட்டக்களத்திலிருந்த சட்டத்தரணி ஒருவர் உட்பட 10 போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், காலிமுகத்திடல் பகுதிக்கு சிவில் உடையணிந்த இராணுவத்தினர் நூற்றுக்கணக்கானோர் சற்று முன்னர் வருகை தந்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.


முதலாம் இணைப்பு

ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் நூற்றுக்கணக்கானோர் திடீரென நுழைந்துள்ளமையினால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோட்டா கோ கம போராட்டக்காரர்களையும் அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும்,இராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல் நிலவியுள்ளதுடன்,போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.


இதன்போது இராணுவத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மூன்று போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் மீது இராணுவத்தினர் கொடூரமான முறையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், அவர்களை இராணுவத்தினர் அழைத்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை,காலிமுகத்திடல் பகுதிக்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளதுடன்,காலிமுகத்திடல் பிரதேசத்திற்குச் செல்லக்கூடிய அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு முற்றாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

காலி வீதியில் கொள்ளுப்பிட்டி சந்தியின் சுற்றுவட்டத்தில் இருந்து பாதை மூடப்பட்டுள்ளதுடன்,ஷங்கிரிலா ஹோட்டல் அருகில் பாலதக்‌ஷ மாவத்தையும் குறுக்காக மறிக்கப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் சைத்திய வீதி, லோட்டஸ் வீதி என்பனவும் குறுக்காக மறிக்கப்பட்டு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலி முகத்திடல் பிரதேசத்தை நோக்கிச் செல்ல எந்தவொரு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுத்துள்ளதுடன்,செல்ல முற்படும் சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.  

READ MORE | comments

இறுதி இலக்கத்தின் படி எரிபொருள். நாளைய தினம் எரிபொருளை பெற்றுக்கொள்ள கூடிய வாகனங்களின் இறுதி இலக்கங்கள் தொடர்பான முழுமையான விபரம்.

Thursday, July 21, 2022

 


21-07-2022.

வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் திட்டத்தை வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு திருத்தம் செய்திருந்தது.

இதற்கமைய 6, 7, 8, 9 ஆகிய இலக்கங்களை இறுதி இலக்கமாகக் கொண்ட வாகனங்களுக்கு நாளைய தினம் எரிபொருள் விநியோகிக்கப்படும்.


*எரிபொருள் வழங்கலில் வரையறை,

உந்துருளிக்கு 1,500 ரூபாவுக்கும், முச்சக்கர வண்டிக்கு 2,000 ரூபாவுக்கும், ஏனைய வாகனங்களுக்கு ஏழாயிரம் ரூபாவுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட உள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை QR குறியீட்டு முறைமையானது, எதிர்வரும் 25ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அமுலாக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.


READ MORE | comments

நான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல, மக்களின் நண்பன்.

 


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (20) மாலை கொழும்பு ஹுணுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு விஜயம் செய்தார்.

இந்தப் பயணம் தனிப்பட்ட விஜயமாக திட்டமிடப்பட்டிருந்த போதிலும், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அங்கு பிரித்தானியவின் ‘ஸ்கை நியூஸ்’ ஊடகவியலாளர், இந்நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும், பழைய ராஜபக்ஷ ஆதரவாளரான நீங்கள் எப்படி அந்த மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என்றும் ஜனாதிபதியிடம் கேட்டார்.

நான் எப்படி ராஜபக்ஷக்களின் நண்பனாக இருக்க முடியும்? எனக்கு தெரிந்த காலத்திலிருந்தே அவர்களுக்கு எதிரானவர். இன்று வெளிநாட்டில் இருந்து வந்து ராஜபக்ஷ ஆதரவாளரா என்று கேட்கிறீர்கள்.

இங்கு யாரிடம் கேட்டாலும் அவர்கள் ராஜபக்ஷவின் நண்பர்களாக இருப்பர்.

இலங்கை எதிர்பார்க்கும் மாற்றத்தை எவ்வாறு ஏற்படுத்துவது?

இலங்கை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த நான் தயாராக உள்ளேன்.

நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

ஒரு பத்திரிக்கையாளராக நீங்கள் ஆழ்ந்த தேடலில் ஈடுபட வேண்டும், இது போன்ற கேள்விகளை கேட்காதீர்கள்.

நீங்கள் ராஜபக்ஷக்களின் நண்பன் இல்லையா?

நான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல, மக்களின் நண்பன்.

இன்னொன்றையும் கூறுகிறேன், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் இணைந்து நான் இதற்கு முன்னர் பணியாற்றியுள்ளேன்.

நான் அவருக்கு வாக்களித்ததில்லை. அவள் ஒரு கட்சி, நான் இன்னொரு கட்சி.

நான் ராஜபக்ஷக்களுடன் இணைந்து செயற்படுகிறேன் என்று கூறுவது நான் அவருடைய நண்பன் என்று அர்த்தமல்ல.

எனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மற்றும் எனது கட்சியை பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளை மட்டுமே பார்க்கிறேன் என்றார்.

READ MORE | comments

ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம்

 


முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பதவிப்பிரமாண நிகழ்வைத் தொடர்ந்து இன்று (ஜூலை 21) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரயிலுள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்தார்.


பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த ஜனாதிபதியை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வரவேற்றார்.


ரணில் விக்ரமசிங்க இன்று காலை ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அரச நிறுவனமொன்றுக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டு பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்து  பாதுகாப்பு உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார்.

நாட்டின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் கௌரவ டிரான் அலஸ், சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், தேசிய புலனாய்வுத் தலைவர், அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

READ MORE | comments

க.பொ.த. (உ/த) 2019, 2020 மாணவர்களை கல்வியியல் கல்லூரிக்கு (College of Education) இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனவா? முழு விவரம்

 


க.பொ.த. (உ/த) 2019, 2020 மாணவர்களை கல்வியியல் கல்லூரிக்கு (College of Education) இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனவா? முழு விவரம்.

2019 2020 ஆம் ஆண்டுகளில்  க.பொ.த உயர்தரம் பயின்ற மாணவர்களுக்கான கல்வியில் கல்லூரிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம் இந்த வாரம் கோரப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் டிப்ளோமா கற்கைநெறியாக இருந்த இப்பாடநெறி இம்முறை 4 வருட பட்டப்படிப்பு (Degree) அடிப்படையில் தரம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விண்ணப்ப முடிவுத் திகதி 2022 ஆகஸ்ட் மாதம் 12 ஆகும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://bit.ly/3B5BxT7

READ MORE | comments

“கோட்டா கோ கம” போராட்டத்தின் முக்கியஸ்தர்களை கைது செய்ய உத்தரவு!

 


கோட்டா கோ கம போராட்டக்களத்தின் முக்கியஸ்தர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கரவ்வே ஜீனரத்ன தேரர் ஆகியோரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

2021ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிடியாணை பிறப்பித்த நீதிமன்று

“கோட்டா கோ கம” போராட்டத்தின் முக்கியஸ்தர்களை கைது செய்ய உத்தரவு! | Sri Lanka Gota Go Home Protest Police Arrest Court

கொழும்பு மாவட்ட நீதிமன்ற வழக்கில் குறித்த இருவரும் முன்னிலையாகாத நிலையில் காவல்துறையினருக்கு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காவல்துறையினர் விளக்கம் அளித்து இந்த பிடியாணையைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதன் பிரகாரம் போராட்டத்தின் முக்கிய தலைவர்களான குறித்த இருவரையும் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

READ MORE | comments

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான அறிவிப்பு

 


21-07-2022


2021ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய பிள்ளைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில், இவ்வருடம் தரம் 6 இற்கு பாடசாலைகளை வழங்குவது தொடர்பான முதல் சுற்று பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

https://g6application.moe.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பரீட்சை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் உரிய பெறுபேறுகளை சரிபார்க்க முடியும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்அப் குழுவில் இணைந்து கொள்ள...


https://chat.whatsapp.com/Lb3JH83r7Ec8lBYTf3R8x6

READ MORE | comments

“கோ-ஹோம்-ரணில்” போராட்டக்காரர்களுக்கு இடத்தை ஒதுக்கினார் ரணில்! முக்கிய தீர்மானத்தை வெளியிட்டார்

 


போராட்டக்காரர்கள் தமது ‘கோ-ஹோம்-ரணில்’ போராட்டத்தை, தடையின்றி நடத்துவதற்காக கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவினை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்றைய தினம் கட்சித்தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றுள்ளது. 

இதன்போதே ஜனாதிபதி இந்த விடயத்தினை தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் கடுமையான நிலைப்பாடு - ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்ட வைக்கப்பட்ட செக் 

ஒத்திவைக்கப்படும் நாடாளுமன்றம்

“கோ-ஹோம்-ரணில்” போராட்டக்காரர்களுக்கு இடத்தை ஒதுக்கினார் ரணில்! முக்கிய தீர்மானத்தை வெளியிட்டார் | Go Home Ranil Protesters

மேலும் அரசாங்கத்தையும், நாடாளுமன்றத்தையும், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட துறைசார் குழுக்களை அமைத்து நடத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடாளுமன்றம் புது ஆரம்பத்துக்காக 24 மணிநேரம் ஒத்திவைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்ததாகவும் அவர குறிப்பிட்டுள்ளார். 

Gallery
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |