பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதை, துஷ்பிரயோகங்கள் மற்றும் சகல வன்முறைகளையும் தடுப்பதற்கு அவசியமான சிபாரிசுகள் மற்றும் நடவடிக்கைகளை தயாரிக்குமாறு கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹாலினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி நிறுவனங்களில் பகிடிவதை, துஷ்பிரயோகங்கள் மற்றும் சகல வன்முறைகள் என்ன பண்ற வச்சு இல்லாத ஒழிப்பதற்காக தேசிய வினைத்திறன் காண் படையணியின் அங்கத்தவர்கள் மற்றும் அமைச்சர் இடையே நேற்று (02) கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களினால் நடைபெறும் சகல வன்முறைகளையும் கண்டறிதல் மற்றும் அது தொடர்பாக செயல்படுவதற்கு மூன்று வருடங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள இந்த விடைத்திறன் கான் படையணிக்கு அவசியமான அதிகாரம் மற்றும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
இவ்வாறான வன்முறை செயற்பாடுகளுக்காக தனிப்பட்ட ரீதியிலும் சமூக ரீதியிலும் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் காணப்படுவதாக இதன் போது வினைத்திறன் காண் படையணியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதுடன் கல்வி நிர்வாகம், கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் மாணவர்களுடன் எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளாதிருத்தல், பகிடிவகை தொடர்பாக மாணவர்கள் மத்தியில் காணப்படும் தவறான மனப்பாங்கு, கீழ்ப்படிதல் மற்றும் கௌரவத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வன்முறைகளை பயன்படுத்துதல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இங்கு பிரதிநிதிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது.
பல்கலைக்கழக கட்டமைப்பில் மாணவர்களுக்கு புள்ளி வழங்கும்போது மற்றும் வகுப்பு சித்தி வழங்கும்போது நிர்வாகம் மற்றும் விரிவுரையாளர்கள் மாணவர்களுக்காக மேற்கொள்ளும் செல்வாக்கினால் மாணவர்கள் அழுத்தத்திற்கு உள்ளாகுதல் போன்ற விடயங்கள் குறித்து இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.
0 Comments