நாட்டிற்கு இன்றைய தினமும் சமையல் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று வருகை தந்துள்ளதாக லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டிற்கு வருகை தந்துள்ள எரிவாயுவினை தரையிறக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பயனாளர்களின் கோரிக்கைக்கு அமைய நாளொன்றுக்கு ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments