கொழும்பு காலி முகத்திடல் போராட்டக்கார்கள் ஐவரை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு இதுவே சிறந்த நடைமுறை எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முன்வருமாறு அதிபர் அனைத்து கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இளைஞர்கள் தங்கள் புதிய யோசனையுடன் நாடாளுமன்றத்திற்கு நுழைய முடியும்
இந்த நிலையிலேயே நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் பங்கேற்றுள்ள இளைஞர்கள் தங்கள் புதிய யோசனையுடன் நாடாளுமன்றத்திற்கு நுழைய முடியும் என அவர் கூறினார்.
இதனால் வயதான அமைச்சர்களை நாடாளுமன்ற பதவிகளிலிருந்து நீக்குமாறும் அல்லது அவர்களது விருப்பத்துடன் புதியவர்களை நியமிக்குமாறும் கொமுனு விஜயரட்ண அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார்.
எந்த நாடாளுமன்ற ஆசனங்களை இளைஞர் சக்தியுடன் மாற்றுவது என்பது குறித்து அதிபர் தீர்மானிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல் மீண்டும் நடத்தப்பட்டால் இளைஞர்கள் ஒருபோதும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படமாட்டார்கள். இதனால் நாடாளுமன்றத்திலுள்ள அதிக வயதான அமைச்சர்கள் நாட்டின் எதிர்கால நலனுக்காக சிறந்த முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 Comments