Home » » நாடளாவிய ரீதியில் நாளைமுதல் ஏரிபொருள் விநியோக நடைமுறையில் மாற்றம்: வெளியாகிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் நாளைமுதல் ஏரிபொருள் விநியோக நடைமுறையில் மாற்றம்: வெளியாகிய அறிவிப்பு

 


கியூ ஆர் முறைமை

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாளை முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளது.

எனினும், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நெரிசல் ஏற்படாத வகையில் செயற்படுமாறு வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொது மக்களிடம் கோரியுள்ளார்.

இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை என்ற கியூ ஆர் (QR)முறைமைக்கு இன்று முதல் வாகன வருமான அனுமதி பத்திரத்தை கொண்டு பதிவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

46 இலட்சத்து 91 ஆயிரத்து 149 வாகனங்கள் பதிவு

நாடளாவிய ரீதியில் நாளைமுதல் ஏரிபொருள் விநியோக நடைமுறையில் மாற்றம்: வெளியாகிய அறிவிப்பு | Fuel Based On Distribution Qr Code Jaffna

கியூ ஆர் முறைமை தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி குறித்த முறைமை முழுமையாக செயற்படுத்துவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமைக்காக, இதுவரையில் 46 இலட்சத்து 91 ஆயிரத்து 149 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 41 லட்சத்து 59 ஆயிரத்து 357 வாகனங்கள் பெட்ரோலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதோடு 5 லட்சத்து 32 ஆயிரத்து 571 வாகனங்கள் டீசலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, சகல முச்சக்கரவண்டிகளையும் அந்தந்த காவல்துறை நிலையங்களில் பதிவு செய்து, அவற்றுக்காக அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை ஒதுக்கி கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்தநிலையில் இன்றைய தினம் வாகன இலக்க தகடுகளில் 3,4 மற்றும் 5 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |