Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இன்று 25 நிரப்பு நிலையங்களில் எரிபொருள் அனுமதி அட்டை பரீட்சிப்பு




தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையானது நேற்று கொழும்பில் இரண்டு இடங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று(23) நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் தெரிவு செய்யப்பட்ட 25எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையின் கீழ் எரிபொருள் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

பரீட்சார்த்த நடவடிக்கையின் பின்னர் தேசிய மட்டத்தில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலக்கத் தகடுகளில், 0, 1 மற்றும் 2 ஆகியவற்றை இறுதி இலக்கங்களாக கொண்ட வாகனங்களுக்கு இன்று எரிபொருள் விநியோகிகப்படவுள்ளது.

நேற்றைய தினம் பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டது.

எனினும் சில பகுதிகளில் அமைதியின்மை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இதேநேரம், மற்றுமொரு பெற்றோல் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதோடு அதன் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments