30-07-2022.*,, ,
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 25 சதவீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என தேசிய டெங்கு ஒழிப்பு மையம் தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு காய்ச்சல் மற்றும் உடல் நோவு காணப்படுமாயின் உடனடியாக குருதிப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அதன் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர அறிவுறுத்தியுள்ளார்.
தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் தரவுகளின் அடிப்படையில் ஜுலை மாதத்தில் 7 ஆயிரத்து 26 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 76 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது இந்த வருடத்தில் பதிவாகிய அதிக எண்ணிக்கையாகும்.
நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் பின்னனியில் தமது வீடுகள் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேங்களையும் டெங்கு நுளம்புகள் பெருகா வண்ணம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது பொதுமக்களின் பொறுப்பாகும் என சுகாதாரப்பிரிவு வலியுறுத்தியுள்ளது.
0 comments: