இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை இனப்படுகொலை குற்றச்சாட்டில் கைது செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி யாஸ்மின் சுகா விடுத்த கோரிக்கையை சிங்கப்பூர் சட்டமா அதிபர் லூசியன் வான் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கப்பூர் சட்டப்படி கோட்டாபய ராஜபக்ச எந்த குற்றமும் செய்யவில்லை என்பதும் கோட்டாபய மீது இலங்கை அரசும், இன்டர்போல் அமைப்பும் எந்த முறைப்பாடும் அளிக்கவில்லை என்பதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட பாரிய மக்கள் புரட்சியின் காரணமாக கோட்டபாய இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் மாலைதீவுக்கு சென்றிருந்தார்.
மாலைத்தீவிலும் கோட்டாபயவின் வருகையை கண்டித்து கடும் மக்கள் எதிர்ப்பு ஏற்பட்டதால் அங்கிருந்து பிரத்தியேக விமானம் மூலம் சிங்கப்பூருக்கு சென்றிருந்தார்.
சிங்கப்பூர் சென்ற கோட்டபாயவுக்கு சிங்கப்பூர் அரசு 14 நாட்கள் பயண அனுமதி வழங்கியது, அது முடிவடையும் தருவாயில் மேலும் 14 நாட்கள் பயண அனுமதி வழங்கியுள்ளது.
இந் நிலையில் கோட்டாபயவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுமாறும் அவர் புரிந்த குற்றங்களுக்காக கைது செய்யுமாறும் வலியுறுத்திய நிலையிலேயே சிங்கப்பூர் சட்டப்படி கோட்டாபய ராஜபக்ச எந்த குற்றமும் செய்யவில்லை எனவும் அதனால் அவரை கைது செய்ய முடியாது என சிங்கப்பூர் அரசு விளக்கியுள்ளது.
0 Comments