Home » » ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம்

ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம்

 


முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பதவிப்பிரமாண நிகழ்வைத் தொடர்ந்து இன்று (ஜூலை 21) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரயிலுள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்தார்.


பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த ஜனாதிபதியை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வரவேற்றார்.


ரணில் விக்ரமசிங்க இன்று காலை ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அரச நிறுவனமொன்றுக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டு பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்து  பாதுகாப்பு உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார்.

நாட்டின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் கௌரவ டிரான் அலஸ், சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், தேசிய புலனாய்வுத் தலைவர், அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |