Advertisement

Responsive Advertisement

நான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல, மக்களின் நண்பன்.

 


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (20) மாலை கொழும்பு ஹுணுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு விஜயம் செய்தார்.

இந்தப் பயணம் தனிப்பட்ட விஜயமாக திட்டமிடப்பட்டிருந்த போதிலும், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அங்கு பிரித்தானியவின் ‘ஸ்கை நியூஸ்’ ஊடகவியலாளர், இந்நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும், பழைய ராஜபக்ஷ ஆதரவாளரான நீங்கள் எப்படி அந்த மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என்றும் ஜனாதிபதியிடம் கேட்டார்.

நான் எப்படி ராஜபக்ஷக்களின் நண்பனாக இருக்க முடியும்? எனக்கு தெரிந்த காலத்திலிருந்தே அவர்களுக்கு எதிரானவர். இன்று வெளிநாட்டில் இருந்து வந்து ராஜபக்ஷ ஆதரவாளரா என்று கேட்கிறீர்கள்.

இங்கு யாரிடம் கேட்டாலும் அவர்கள் ராஜபக்ஷவின் நண்பர்களாக இருப்பர்.

இலங்கை எதிர்பார்க்கும் மாற்றத்தை எவ்வாறு ஏற்படுத்துவது?

இலங்கை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த நான் தயாராக உள்ளேன்.

நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

ஒரு பத்திரிக்கையாளராக நீங்கள் ஆழ்ந்த தேடலில் ஈடுபட வேண்டும், இது போன்ற கேள்விகளை கேட்காதீர்கள்.

நீங்கள் ராஜபக்ஷக்களின் நண்பன் இல்லையா?

நான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல, மக்களின் நண்பன்.

இன்னொன்றையும் கூறுகிறேன், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் இணைந்து நான் இதற்கு முன்னர் பணியாற்றியுள்ளேன்.

நான் அவருக்கு வாக்களித்ததில்லை. அவள் ஒரு கட்சி, நான் இன்னொரு கட்சி.

நான் ராஜபக்ஷக்களுடன் இணைந்து செயற்படுகிறேன் என்று கூறுவது நான் அவருடைய நண்பன் என்று அர்த்தமல்ல.

எனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மற்றும் எனது கட்சியை பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளை மட்டுமே பார்க்கிறேன் என்றார்.

Post a Comment

0 Comments