கோட்டா கோ கம போராட்டக்களத்தின் முக்கியஸ்தர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கரவ்வே ஜீனரத்ன தேரர் ஆகியோரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிடியாணை பிறப்பித்த நீதிமன்று
கொழும்பு மாவட்ட நீதிமன்ற வழக்கில் குறித்த இருவரும் முன்னிலையாகாத நிலையில் காவல்துறையினருக்கு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காவல்துறையினர் விளக்கம் அளித்து இந்த பிடியாணையைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதன் பிரகாரம் போராட்டத்தின் முக்கிய தலைவர்களான குறித்த இருவரையும் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
0 Comments