உக்ரைன் – ரஷ்ய போர்! ஆசிய நாடுகளுக்கு அதிர்ச்சியான செய்தி

Thursday, March 31, 2022


 உக்ரைனில் நடந்த போர், கப்பல் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க வழிவகுத்தது என்று சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒசாமா ராபி தெரிவித்தார்.


உலகின் அதிமுக்கிய கடல் வாணிப பாதைகளில் ஒன்று சூயஸ் கால்வாய். குறிப்பாக சூயஸ் கால்வாய் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான வேகமான கப்பல் பாதையாகும்.

இந்த கால்வாய் தடைப்பட்டாலோ, அல்லது வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டாலோ, கப்பல்கள் ஆப்பிரிக்கா வழியாக ஆசியா நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.

தற்போதைய நெருக்கடியான காலப்பகுதியில் இதன் கட்டண அதிகரிப்பானது ஆசிய நாடுகளுக்கு குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
READ MORE | comments

மயிரிழையில் உயிர் தப்பிய மாணவர்கள்!!

 


அதிக வேகமாகப் பயணித்த லொறியொன்று, பாடசாலைக் கட்டடமொன்றின் மீது விழுந்ததால் லொறியின் சாரதி மற்றும் உதவியாளும் காயமடைந்து பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இன்று பிற்பகல் 1.30 மணியளவில் பொகவந்தலாவை- பலாங்கொட பிரதான வீதியின் கெம்பியன் தோட்டப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பொகவந்த​லாவை – பெட்ரசோ தோட்டத்திலிருந்து பொகவந்தலாவை நோக்கி அதிக வேகத்துடன் பயணித்த குறித்த லொறி, வீதியின் கீ​ழே 150 அடி பள்ளத்தில் இருந்த கெம்பியன் தமிழ் வித்தியாலய பாடசாலைக் கட்டடத்தின் மீது புரண்டு விழுந்துள்ளது.

லொறி இவ்வாறு புரண்ட போது, அக்கட்டடத்துக்குள் மாணவர்கள் சிலர் இருந்துள்ள நிலையில், அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். எனினும் அப்பாடசாலைக் கட்டடம் பலத்த சேதமடைந்துள்ளது.

லொறியின் சாரதியும் உதவியாளும் மதுபோதையில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது என பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
READ MORE | comments

தினகரன் பத்திரிகையின் 90 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு......

 


அஸ்ஹர் இப்றாஹிம்


தினகரன் பத்திரிகையின்  90 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற பேருவளை எலந்தகொட வைட் ரோஸ் அணியும் , உதைபந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற தர்கா நகர் மக்பூட் கழக. அணியும் சாம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டன.

இவ் இரு அணிகளுக்கும் சாம்பியன் விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் புரவலர் ஹாஷிம் உமர் கலந்து கொண்டார்
READ MORE | comments

தமிழ் புத்தாண்டு - 2022


 அஸ்ஹர் இப்றாஹிம்


கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஆளுனர் செயலகம், முதலமைச்சர் செயலகம், பிரதம செயலாளர் அலுவலகம், மாகாண அமைச்சு மற்றும் திணைக்களத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையில் நடைபெறும் வருடாந்த சிங்களம் மற்றும் தமிழ் புத்தாண்டு - 2022 ஆண்டுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இன்று (29) பிரதம செயலாளர் தலைமையில் திருகோணமலை ஆர். கே. எம். ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 
READ MORE | comments

திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு 2400 மில்லியன் குடிநீர் திட்ட ஆராய்வு கூட்டம் மூன்றாவது தடவையும் தீர்மானமன்றி நிறைவு பெற்றது.

 


அஸ்ஹர் இப்றாஹிம்


திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு 2400 மில்லியன் குடிநீர் திட்ட ஆராய்வு கூட்டம் மூன்றாவது தடவையும் தீர்மானமன்றி நிறைவு பெற்றது.

கள ஆய்வு செய்து ஓரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்தார்.

அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு குளத்தின் புனரமைப்புத்து குடிநீர் திட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பாக ஆராயும் மூன்றாவது கூட்டம் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்று இருந்தன.

இக் கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் ஒழுங்கமைப்பில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் அவர்கள் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழiமை மாலை இடமபெற்று இருந்தன.

திருக்கோவில் பிரதேசத்தில் கஞ்சிகுடிச்சாறு குளத்தினை புனரமைத்து அதன் ஊடாக திருக்கோவில் பிரதேச மக்களுக்கான சுத்தமான குடிநீரை தொடர்ச்சியாக வழங்கும் நோக்குடன் சுமார் 2400 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக அப்பகுதி விவசாகளுக்கும் அரச உயர் அதிகாரிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் முதலாவது கூட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் தலைமையிலும் இரண்டாவது கூட்டம் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையிலும் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்று இருந்ததுடன் இக் கூட்டங்களில் கஞ்சிகுடிச்சாறு விவசாய அமைப்புக்களின் எதிர்ப்பு காரணமாக தீர்மானமன்றி கூட்டங்கள் நிறைவு பெற்று இருந்தன.

இந்நிலையில் மேற்படி இரு கூட்டங்களிலும் ஆரோக்கியமான தீர்மானங்கள் எட்டப்படாத நிலையில் மூன்றாவது கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் அவர்களின் தலைமையில் நேற்றுமாலை இடம்பெற்று இருந்தன.
READ MORE | comments

பசுமை தேசிய வீட்டுத்தோட்டம் அபிவிருத்தி திட்டத்தின் தொடக்க நிகழ்வு

 அஸ்ஹர் இப்றாஹிம்

இலங்கை ஜனநாயக சோசலிசக்  குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி  அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு சிந்தனையின் கீழ் விவசாய அமைச்சின் அறிவுறுத்தலின்படி, சம்மாந்துறை பிரதேச செயலக  விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்ளால்  ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வானது
 
சம்மாந்துறை  பிரதேச செயலாளர் எஸ்.எல்.
முகம்மது ஹனிபா அவர்களின்  அவர்களின் தலைமையில்  மேற்குறிப்பிட்ட திட்டம்    அண்மையில் சம்மாந்துறை ஹிஜ்ரா வித்தியாலயத்தில்  வடக்கு திசை நோக்கி ஆரம்பித்து வைக்கப்பட்டது
 
 
இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் மற்றும் பாடசாலை மாணவர்கள் , கிராம சேவக உத்தியோகத்தர்,பிரதேச சபை உறுப்பினர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம மட்ட குழுக்களின் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன் மரங்களையும் நட்டு வைத்தனர்
READ MORE | comments

திருக்கோவில் பிரதேசத்தில் சமுர்த்தி சௌபாக்கியா திட்டத்தில் புதிய வீட்டுக்கான அடிக்கல்

     அஸ்ஹர் இப்றாஹிம்

அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் திருக்கோவில் 01 கிராமத்தில் சமுர்த்தி சௌபாக்கியா வாரத்தினை முன்னிட்டு புதிய வீட்டுக்கான அடிக்கல்  நடும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது

இந்நிகழ்வானது திருக்கோவில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் பி.பரமானந்தம் தலைமையில் இடம்பெற்றது.

இவ் வீட்டுத் திட்டமானது சமுர்த்தி திணைக்களத்தின் சமுர்த்தி சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் ஊடாக திருக்கோவில் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் வீடற்று வாழ்ந்து வந்த குடும்பம் ஒன்றுக்கு ஆறு இலட்சம் பெறுமதியான புதிய வீட்டினை நிர்மானித்துக் கொடுக்கப்படவுள்ளது.

நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய வீட்டுக்கான அடிக்கல்லினை நட்டு வைத்திருந்ததுடன் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தம்பிலுவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் நிஷாந்தி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் நேசராசா மற்றும் சமுர்த்தி சங்க நிருவாகிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்

READ MORE | comments

காரைதீவில் சிறப்பாக சேவையாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு !

 நூருள் ஹுதா உமர். 


இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத் திட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் சிறப்பாக சேவையாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வும், 2022 ஆம் ஆண்டுக்கான பயிற்சி கருத்தரங்கும் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.                 

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனினால் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தேசிய, மாவட்ட  மற்றும் பிரதேச ரீதியில் இலக்கினை அடைந்து கொண்ட உத்தியோகத்தர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வை தொடர்ந்து அம்பாறை மாவட்ட இணைப்பதிகாரியினால் கருத்தரங்கும் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ். பார்த்திபன்,  பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக கிராம நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், சமூகசேவை உத்தியோகத்தர்கள், அம்பாறை மாவட்ட இணைப்பதிகாரி, விடய பொறுப்பு அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள் ,  சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும்.....

அஸ்ஹர் இப்றாஹிம்

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத் திட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் சிறப்பாக செயலாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வும் மேலும் 2022 ஆம் ஆண்டுக்கான பயிற்சி கருத்தரங்கும் பிரதேச செயலாளர் திரு  சிவஞானம் ஜெகராஜன்  அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.                   
இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களினால் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தேசிய மற்றும்  , மாவட்ட  மற்றும் பிரதேச  ரீதியில் இலக்கினை அடைந்து கொண்ட உத்தியோகத்தர்களை,  திணைக்கள தலைவர்களை கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வை தொடர்ந்து அம்பாறை மாவட்ட இணைப்பதிகாரியினால் கருத்தரங்கும் நிகழ்த்தப்பட்டது. 

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் , கிராம நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், சமூகசேவை உத்தியோகத்தர், அம்பாறை மாவட்ட இணைப்பதிகாரி, விடய பொறுப்பு அபிவிருத்தி  உத்தியோகத்தர் ,  சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம உத்தியோகத்தர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

READ MORE | comments

மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளராக நா . மதிவண்ணன்


 மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளராக  நா.மதிவண்ணன் (SLAS-I)  இன்று  கடமையேற்றுக்கொண்டார்

 இவர் கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) அலுவலக உதவி செயலாளர், கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர், கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்த அனுபவம் கொண்ட இலங்கை நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரியாவார்.

READ MORE | comments

மருந்துகளின் விலைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை!


 மருந்துகளின் விலையை மீண்டும் அதிகரிக்குமாறு மருந்து இறக்குமதியாளர்கள் சங்கம் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமையினால் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக மருந்துகள் விநியோகம் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சின் செயலாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தங்களின் கோரிக்கை ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சில மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்

READ MORE | comments

ஏப்ரல் 15 வரை 24 மணிநேர மின்வெட்டு! முழு தேசிய மின்வட்டமும் வீழ்ச்சியடையுமென எச்சரிக்கை

 


சரிபார்க்கப்படாத நடைமுறைகளை எதிர்கொண்டால் முழு தேசிய மின்வட்டமும் வீழ்ச்சியடையக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நாட்டில் தற்போது பத்து மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கையில் நடைமுறையிலுள்ள முறைசாரா நடைமுறைகள் தொடருமானால் ஏப்ரல் 15ஆம் திகதி வரை 24 மணிநேர மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் மருந்து, உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின்வெட்டும் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

READ MORE | comments

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மத்திய வங்கி எடுத்துள்ள அதிரடி முடிவு!


வெளிநாட்டு அந்நிய செலாவணி சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் கொழும்பு வெள்ளவத்தையில் இயங்கி வந்த பணப் பரிமாற்று நிலையத்தின் அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக இரத்துச் செய்ய இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இன்று முதல் இந்த தற்காலிக நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அந்நிய செலாவணிகளுக்கு மேலதிக ரூபாய் செலுத்தப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து மத்திய வங்கியின் வெளிநாட்டு அந்நிய செலாவணி திணைக்களம் நேற்று சம்பந்தப்பட்ட இடத்தில் விசாரணைகளை நடத்தியுள்ளது.

இந்த விசாரணைகளில் சம்பந்தப்பட்ட பணப் பரிமாற்று நிலையம், அனுமதிப் பெற்ற வங்கிகளின் கொள்முதல் விலையை விட அதிக விலையில் வெளிநாட்டு நாணயங்களை கொள்முதல் செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பணப் பரிமாற்று நிலையத்திற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக இரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இன்று நடைமுறைக்கு வரும் வகையில், குறித்த நிறுவனம் அனுமதிப் பெற்ற பணப் பரிமாற்று வர்த்தகத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட மாட்டாது.

அனுமதிப் பத்திரம் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில் அந்த நிறுவனத்துடன் மேற்கொள்ளும் கொடுக்கல், வாங்கல்கள் வெளிநாட்டு அந்நிய செலாவணி சட்டத்தின் ஏற்பாடுகளை மீறும் நடவடிக்கை எனக் கருதப்படும். 

அதேவேளை பணப் பரிமாற்றும் அனுமதிப் பத்திரம் பெற்றுள்ள நிறுவனங்கள் நடத்தி வரும் இடங்களில் விசாரணைகளை நடத்துவது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அந்நிய செலாவணி சட்டத்தை மீறி கொள்முதல் , விற்பனையில் ஈடுபடும் பணப் பரிமாற்று நிறுவனங்களின் அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்படும் எனவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது

READ MORE | comments

இலங்கையில் முடங்கப் போகும் பேருந்து சேவைகள்! கடுமையான எச்சரிக்கை


 எரிபொருள் தட்டுப்பாடு இலங்கையில் பொதுப் பேருந்து சேவைகள் கடுமையாக பாதித்துள்ளது.

இதேவேளை, நீண்ட தூர பேருந்து சேவைகள் இன்று முதல் முற்றாக தடைப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால் நாளை முதல் சேவைகளை வழங்குவதைத் தவிர்ப்பதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கம் நேற்று தெரிவித்திருந்தது.

எந்தவொரு ஆதரவும் கிடைக்காத போதிலும் மாணவர்களின் பரீட்சை மற்றும் கல்வி போன்றவற்றை கருத்திற்கொண்டு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் தலைவர் என்.எம்.கே ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்தார்.

இதன்படி, இன்று எரிபொருள் தொடர்பான தீர்வு வழங்கப்படாவிட்டால், தமது சேவைகளில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் எச்சரித்தார்.

எவ்வாறாயினும், வழமையான கால அட்டவணையின்படி பேருந்து சேவை இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்

READ MORE | comments

தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண்பேன் - கோட்டாபய உறுதி

Wednesday, March 30, 2022


அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தனது ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண்பதாக தெரிவித்துள்ளார்.

அதன் ஒரு கட்டமாகவே தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக அவர் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, கைதிகள் விடுதலை உள்ளிட்ட ஐந்து விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முதல்கட்டமாகப் பேசியுள்ளேன். இந்தப் பேச்சுக்குப் பல தரப்பிலிருந்தும் வரவேற்புக் கிடைத்துள்ளது. பேச்சுக்கள் தொடரும்,

தமிழ் மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் நான் தீர்வுகளைக் காண்பேன். இது எனது கடமை. புலம்பெயர் தமிழர்களுடனும் நான் பேசத் தயாராகவுள்ளேன். நாட்டின் அபிவிருத்திக்கு அவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

READ MORE | comments

இன்று 10 மணிநேர மின்வெட்டு


இலங்கையில் இன்று (30) சில வலயங்களில் தொடர்ச்சியாக 10 மணிநேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களிற்குட்பட்ட பிரதேசங்களில் இன்று காலை 08 மணி தொடக்கம் பிற்பகல் 02 மணிவரையான காலப்பகுதியில் 06 மணித்தியாலங்களும், பிற்பகல் 02 மணி தொடக்கம் இரவு 10 மணிவரையான 04 மணித்தியாலங்களும், இரவு 10 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியில் 02 மணிநேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களிற்குட்பட்ட பிரதேசங்களில் இன்று காலை 08 மணி தொடக்கம் பிற்பகல் 02 மணிவரையான காலப்பகுதியல் 06 மணித்தியாலங்களும், பிற்பகல் 02 மணி தொடக்கம் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் 04 மணித்தியாலங்களும், இரவு 10 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியில் 02 மணிநேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதேபோன்று, M, N, O, X, Y, Z ஆகிய வலயங்களில் காலை 08 மணி முதல் மாலை 06 மணிவரை தொடர்ச்சியாக 10 மணிநேர மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

READ MORE | comments

500 க்கும் மேற்பட்ட தேவையுடைய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு

Monday, March 28, 2022

 


றம்ஸீன் முஹம்மட்)

முன்னாள் அமைச்சர்கலாநிதி அல்ஹாஜ் மர்ஹூம் ஏ. ஆர். மன்சூர் அவர்களின் நினைவாக அன்னாரின் அன்பு புதல்வியும் ஏ ஆர். மன்சூர் பவுண்டேஷன்  ஸ்தாபகருமான  சட்டத்தரணி மர்யம்_நளீமுதீன் (அவுஸ்திரேலிய முஸ்லிம் கவுன்சிலின் செயலாளர்) அவர்களினால் கல்முனை பிரதேசத்தின் நலன்கருதி தனது சொந்த நிதியில்  வருடா வருடம்  முன்னெடுக்கப்பட்டு வரும்" முக்கிய தேவையுடைய மாணவர்களுக்களின் கல்வியாண்டுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டமானது  அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை ,சாய்ந்தமருதுமருதமுனைஇஸ்லாமபாத்நட்பிட்டிமுனை ,மாளிகைக்காடு மற்றும் மத்திய முகாம் போன்ற பிரதேசங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற விபரங்களைக்  கொண்டு 500க்கும் மேற்பட்ட முக்கிய தேவையுடைய மாணவர்களுக்கு மேற்படி உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டது.

READ MORE | comments

அமைச்சரின் ஓட்டுனர் கொலை - மற்றுமொருவர் கைது

Sunday, March 27, 2022


 அமைச்சர் காமினி லொக்குகேவின் ஓட்டுனர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.


நேற்று (26) பிற்பகல் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சிசிரிவி காட்சிகள் மூலம் கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அமைச்சர் காமினி லொகுகேவின் சாரதியின் சாரதி கடந்த 21ஆம் திகதி மாவித்தறை பகுதியில் வைத்து கத்தியால் குத்தி கொல்லப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் முன்னதாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்
READ MORE | comments

நட்டம் காரணமாக மீண்டும் எரிபொருளினை விலையினை அதிகரிக்கின்றது லங்கா ஐ.ஓ.சி?

 


நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எரிபொருளுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தமது நிறுவனம் நட்டத்தை எதிர்கொண்டுவருவதாக லங்கா ஐஓசி நிறுவனத்தின் பொது முகாமையாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்


இதற்கமைய ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 15 ரூபாவும், ஒரு லீற்றர் டீசலுக்கு 65 ரூபாவும் நட்டம் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் லங்கா ஐஓசி நிறுவனம் பெற்றோல்களுக்கு 49 ரூபாய் விலை அதிகரிப்பினை அறிவித்திருந்தது.

இந்நிலையில் லங்கா ஐஓசி நிறுவன முகாமையாளர் வெளியிட்ட கருத்திற்கமைய நட்டத்தினை ஈடு செய்வதற்காக மேலும் எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்படக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
READ MORE | comments

சாதனைபடைத்த ஊடகவியலாளர்களின் பிள்ளைகள் பாராட்டி கௌரவிப்பு

 ( அஸ்ஹர் இப்றாஹிம்)

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் வருடாந்த ஒன்றுகூடல் பொத்துவில் அறுகம்பே  புளுவேவ் நட்சத்திர ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை ( 26 ) போரத்தின் தலைவர் கலாபுசணம் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் இடம்பெற்றது.

போரத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் இவ்வருடத்தில் போரத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படும் செயற்பாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதுடன் , போரத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் 9 ” ஏ ” சித்திபெற்ற என்.கே. ஜுமானா ஹஸீன் , எம்.ஏ.எம்.அப்துர் றஹ்மான் , தென்கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு கலைப்பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்ட அமீர் பாத்திமா இனாபா  மற்றும் புத்தசாசன ,சமய ,கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடத்தப்பட்ட அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் பாடலாக்கப் போட்டியில் வெற்றிபெற்ற போரத்தின் உறுப்பினரும் அதிபருமான கவிஞர் பி.முஹாஜரின் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்..

இந்நிகழ்விற்கு வைத்திய கலாநிதி டாக்டர் கே.எல்.எம்.நக்பர் பிரதம அதிதியாகவும் , சமாதான ஊடக அமைப்பின் தலைவர் எம்.எம்.ஜெஸ்மின் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

அண்மையில் காலஞ்சென்ற ஊடகவியலாளர்  அமரர் ரெட்ணம் நடராஜன் அவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
READ MORE | comments

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் அரச தரப்பு வெளியிட்ட தகவல்

 


ர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பாக வழங்கியுள்ள அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாணய நிதியத்தின் இந்த அறிக்கையை அமைச்சரவை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை ஆய்வு செய்த பின்னர், அரச தலைவரின் ஆலோசனையுடன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது உட்பட பல ஆலோசனைகளை உள்ளடக்கி சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான அறிக்கையை தயார் செய்துள்ளதுடன் அதனை அண்மையில் அரசாங்கத்திடம் கையளித்தது.

இதேவேளை சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பாக வழங்கியுள்ள அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, நிரோஷன் பெரேரா, ரஞ்சித் மத்தும பண்டார, ஹரின் பெர்னாண்டோ மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது

READ MORE | comments

இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 55 வருடங்களின் பின்னர் இன்று தொடக்கம் மீண்டும் தனது சர்வதேச விமான சேவை


 ( அஸ்ஹர் இப்றாஹிம்)


இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 55 வருடங்களின் பின்னர் இன்று தொடக்கம் மீண்டும் தனது சர்வதேச விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  
முதலாவது விமானம் இன்று காலை 8.40 இற்கு மாலைதீவில் இருந்து இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்தது.  மாலத்தீவின் தேசிய விமான சேவையான MaldivianAero விமானம் வருகை தந்தது.  இதற்கு water cannon salute கொடுத்து வரவேற்கப்பட்டது.
இலங்கைக்கும் மாலத்தீவிற்கும் இடையில் 50 இருக்கைகள் கொண்ட Dash-8 விமானம் பயன்படுத்தப்படும், வாரத்திற்கு மூன்று முறை திட்டமிடப்பட்ட விமானங்களை இயக்கப்படும்  மற்றும் மே 2022 முதல் அதன்  ஐந்து விமானங்களாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுக்கும் இங்கிருந்து விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்படும்.
நிகழ்வில் உமர் அப்துல் ரசாக் – மாலைதீவுக் குடியரசின் தூதுவர்,  ஏ.எம்.ஜே. சாதிக் - மாலைதீவுக்கான இலங்கைத் தூதுவர் அமைச்சர்  நாமல் ராஜபக்ஷ,  பிரசன்ன ரணதுங்க - சுற்றுலா அமைச்சர்,  டி.வி.சானக - விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலயங்களின் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மற்றும் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ. சந்திரசிறி, விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் தலைவர், திருமதி டெய்ட்ரே டி லிவேரா உள்நாட்டு மற்றும் பிராந்திய விமான நிலையங்களுக்கான AASL இயக்குனர் CIAR/JIA / BTIA & CATD, AASL இன் இயக்குநர்கள் குழு மற்றும் CAASL, AASL மற்றும் மூத்த அதிகாரிகள் மற்ற பங்குதாரர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இலங்கையின் தனியார் விமான நிறுவனமான பிட்ஸ் ஏர் நிறுவனமும் மாலைதீவு விமான சேவை நிறுவனமும் இணைந்து தமது சேவைகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.  
READ MORE | comments

மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்ற இ.ஆ.சங்கத்தின் பேராளர் மாநாடு - 2022

 இந் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட இ.ஆ.சங்கச் செயலாளரும் கிழக்கு மாகாண இணைப்பாளருமாகிய பொன்னுத்துரை உதயரூபன் தலைமையில் மட் மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் 26.03.2022 சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெனாண்டோ அவர்களும் இலங்கை ஆசியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் ஜோசப் ஸ்டாலின் அவர்களும் இ.ஆ.சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் தீபன் திலிபன் அவர்களும் வடக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான இ.ஆ.சங்கத்தின் பிரதிநிதிகள் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களுக்கான இ.ஆ.சங்கத்தின் பொறுப்பாளர்கள் அக்கரைப்பற்று சம்மாந்துறை, கல்முனை, பட்டிருப்பு, மட்டக்களப்பு  வலயங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் என பெருந்திரளானோர் கிழக்கு மாகாணத்திற்கான இ.ஆ.ச. பேராளர் மாநாட்டில் கலந்து சிறப்பித்திருந்தனர்.     பேராளர் மாநாட்டில் முதல் நிகழ்வாக மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது.  அதன் பின் வரவேற்பு நடனம், வரவேற்புரை, பாடல்கள், கவிதைகள், இ.ஆ.சங்கத்தின் பொறுப்பாளர்களது உரைகள் என்பன இடம்பெற்றன. இந்நிகழ்விற்கு கிழக்க மாகாண ஆசிரியர்கள் தங்களது பூரண ஆதரவை வழங்கியிருந்தனர். மட்டக்களப்பு மாவட்ட இ.ஆ.சங்கத்தின் செயலாளர் தலமையுரையில் இந்திய, தென்தாபிரிக்காவின் சிறந்த கல்விமுறை ,அதனால் ஏற்பட்ட நன்மைகள் பற்றியும், இலங்கைக் கல்விச் சீர்திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை ஒப்பிட்டு ரீதியில் மிக விளக்கமாகக் கூறினார். இலங்கையில் இன்று கல்வியில் எதிர்நோக்கியுள்ள சவால்கள், பிரச்சினைகள், கல்வியில் அரசியல் வாதிகளின் செல்வாக்கு, குறிப்பாக மட்டக்களப்பில் கல்வியில் அரசியல் வாதிகளின் செல்வாக்கு, கல்வி அதிகாரிகளின் அடக்குமுறை, எதிர்காலச் சந்ததிக்காக அதிபர்கள், ஆசிரியர்கள் ஆற்றவேண்டிய கடமைகள், சமகாலத்தில் கல்வியில் ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினைகள், சவால்கள் என பல ஆக்கபூர்வமான கருத்துக்களை எடுத்துக்கூறினார்.

     வடக்கு மாகாண இ.ஆ.சங்க பொறுப்பாளர் தீபன் திலிபன் அவர்கள் இலங்கை தற்போது அடைந்துள்ள நிலை , கல்விக் கொள்கைகள் , சுயநிர்ணய உரிமை, கல்வியில் அரசியல் மயமாக்கல், இலங்கை ஆசிரயர் சங்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகள், தற்போதைய செயற்பாடுகள், அடக்கு முறைகளைத் தாண்டி இலங்கை ஆசியர் சங்கத்தின் செயற்பாடு , சம்பளமுரண்பாடு தொடர்பாக இடம்பெற்ற போராட்டம் என பல விடயங்கள் தொடர்பாகக் கருத்துக்களைக் கூறினார். 


     இ.ஆ.சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜேசப் ஸ்டாலின் கிழக்கில் கல்வி அதிகாரிகளின் செயற்பாடு, கல்வியில் அரசியல் செல்வாக்கு, சமகாலப் பிரச்சினைகள், சவால்கள், சம்பள முரண்பாட்டின் போது மேற்கொளள்ளப்பட்ட போராட்டம், வெற்றியின் தன்மை , ஆசிரியர்களின் ஒற்றுமை அடக்கு முறைக்கு எதிராக செயற்பட்ட விதம், இனிவரும் காலங்களில் ஒற்றுமையாக நின்று சவால்களை வெற்றி கொள்ளல், எதிர்காலத்தில் இ.ஆ.சங்கத்தின் செயற்பாடு, அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள், நிறைவேறாவிட்டால் அடுத்தகட்டச் செயற்பாடுகள், அனைத்தையும் வென்றெடுக்க ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், இலங்கையில் இருக்கின்ற ஆசியர் சங்கங்களில் மிகப்பழமையான சங்கத்தில் இணைந்துகொள்ளுமாறும் கருத்துக்களை வழங்கினார். 22 அம்சக்கோரிக்கைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டது. அதிபர்கள் ஆசிரியர்களால் எழுப்ப்பட்ட கேள்வி நேரத்தில் செயலாளர் விளக்கத்தினையும்  தீர்வினையும் கூறினார். நன்றியுரையுடன் பி.ப 1.45 மணியளவில் மாநாடு நிறைவுபெற்றது.  இந்நிகழ்விற்கு தமிழில் திரு.ஜெயதீபன் ஆசிரியர் அவர்களும் ஆங்கிலத்தில் திருமதி. சரண்யா சஞ்சீவ் அவர்களும் அறிவிப்பினை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி! - விமல், கம்மன்பில போடும் திட்டம்

 


அரசாங்கத்திற்கு எதிராக ஆளும் கூட்டணி கட்சிகளினால் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட உள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட 11 கூட்டணி கட்சிகள் கூட்டாக இணைந்து இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கையொப்பங்களை திரட்டும் பணிகளில் விமல், உதய தரப்புக்கள் தீவிரம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும்போது 156 வாக்குகளை நாடாளுமன்றில் பெற்றுக்கொண்டது. இந்த எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் உதய, விமல் தரப்பு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்திற்கான ஆதரவு நாளுக்கு நாள் குறைவடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சுப் பதவிகளை வகிக்கும் சிலரும் அரசாங்கத்தை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து, அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்க உதய, விமல் தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெற்கு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

READ MORE | comments

உக்ரைன் மீது ரஷ்ய போர்க் கப்பல் நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் - வெளியானது பகீர் காணொளி

Saturday, March 26, 2022

 


ரஷ்யாவின் போர்க் கப்பலிலிருந்து உக்ரைன் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்திய காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது தொடர்ந்து 31வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய இராணுவம் சுற்றி வளைக்க முயற்சித்து வருகிறது.

அதேவேளை, உக்ரைனின் மரியுபோல், கெர்சன் நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, கடலில் இருந்து படி போர்க் கப்பலிருந்து உக்ரைன் நகரம் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்திய சம்பவத்தின் காணொளி வெளியாகியுள்ளது.

அக் காணொளியில் மாலை நேரத்தில் கடலில் நிலைநிறுத்தப்பட்ட ரஷ்யாவின் போர்க் கப்பலிருந்து உக்ரைனை நோக்கி Kalibar ஏவுகணைகள் சரமாரியாக ஏவப்படுகிறது.

குறித்த ஏவுகணைகள் உக்ரைனின் Zhytomyr நகரை குறிவைத்து ஏவப்பபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து 4 ஏவுகணைகள் போர்க் கப்பலிருந்து ஏவப்பட்டதை காணொளி காட்டுகிறது.

எவ்வாறாயினும் ஏவுகணைகள் எங்கே தாக்கியது, அதன் விளைவாக ஏதேனும் சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டது போன்ற தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

READ MORE | comments

“எங்களை நாய்கள் என்று நினைத்தீர்களா?” கோட்டாபய மீது சம்பந்தன் பாய்ச்சல்

 


எங்களை நாய்கள் என்று நினைத்தீர்களா? 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தாவிட்டால் எங்கள் வழியில் நாங்கள் செல்வதற்கும் தயங்க மாட்டோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் (Ra.Sampathan) ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

 


மின்வெட்டு காரணமாக விற்பனை நிலையங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவ்வாறான உணவுகளை விற்பனை செய்த 407 விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

எனவே, குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொதுமக்கள் அதிக கவனம் செலுத்துமாறு உபுல் ரோஹன கேட்டுக் கொண்டுள்ளார்.
READ MORE | comments

கொழும்பில் தீ பற்றி எரியும் கார் − கடும் வாகன நெரிசல்

 


கொழும்பு − தெமட்டகொட மேம்பாலத்தில் கார் ஒன்றில் தீ பரவியுள்ளது.


இந்த தீ விபத்து சற்று முன்னர் ஏற்பட்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்தது.

தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காரில் தீ பரவியுள்ளமையினால், குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
READ MORE | comments

கல்லடிப்பாலத்தில் மிட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது !

 


காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டு கல்லடிப்பாலத்தின் கீழ் நீரில் மூழ்கிய நிலையில் கடந்த (22)ம் திகதி மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த பெண் செல்வரெத்தினம் றேணுகாடீதவி (59) வயதுடைவர் என்றும் இவர் பெரியஊறணி மட்டக்களப்பை சேர்ந்தவர் என்றும் இவர் கடந்த 20ம் திகதி தனது வீட்டிலிருந்து முச்சக்கரவண்டி ஒன்றில் மட்டக்களப்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை பின்னர் கடந்த 22 திகதி சடலமாக மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்ப்பட்டிருந்த நிலையில் கிளிநெச்சியில் வசித்து வரும் பெண்ணின் மகள் தனது தாயார் என சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார் மரணமானவர் தாக் கைபட எழுதிய கடிதத்தில் தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை தான் நோய் வாய்பட்டிருப்பதனால் இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற் நீதிவான் ஏ.சி.றிஸ்வான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மற்றும் சட்டவைத்திய அதிகாரி அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

இன்று நள்ளிரவு முதல் பெற்றொலின் விலை 49 ரூபாவால் அதிகரிப்பு : IOC

Friday, March 25, 2022

 


இன்று நள்ளிரவு  முதல் பெற்றொலின் விலை 49 ரூபாவால் அதிகரிப்பு :  IOC புதிய விலை 303.00ரூபா

READ MORE | comments

பட்டிருப்பு ம.வி தே.பாடசாலையில் ஆலோசனை , வழிகாட்டல் செயலமர்வு

 அஸ்ஹர் இப்றாஹிம்


பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை
களுவாஞ்சிகுடியில் 
2023ம் ஆண்டு க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு
தோற்றவுள்ள கலை,வர்த்தக,கணித,
விஞ்ஞான, தொழினுட்பத்துறை
மாணவர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல்
செயலமர்வு இன்று இடம்பெற்றது.
பாடசாலை முதல்வர் எம்..சபேஸ்குமார் அவர்களின் வழிகாட்டலிலும்,சிரேஸ்ர
ஆசிரியை நளினி மோகனகுமார்
மற்றும் ஆசிரியர்களின் நெறிப்படுத்தலிலும் இச்செயலமர்வு
இடம்பெற்றது.


"மனப்பாங்கு புலத்தோற்றம் மற்றும்
தலைமைத்துவத்தின் ஊடாக வெற்றி"
எனும் தலைப்பில்
மட்டக்களப்பு உயர்தொழினுட்ப நிறுவன பணிப்பாளர் 
செல்வரெத்னம் ஜெயபாலன் 
அவர்கள் பிரதான வளவாளராக கலந்து கொண்டார்.
READ MORE | comments

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மார்ச் மாத கூட்டமும் வருடாந்த ஒன்றுகூடலும்

 


அஸ்ஹர் இப்றாஹிம்


அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மார்ச் மாத கூட்டமும் வருடாந்த ஒன்றுகூடலும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பொத்துவில் புழுவேவ் ஹோட்டலில் இடம்பெற்றவுள்ளது.

போரத்தின் தலைவர் கலாபுசணம் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் இவ்வருடம் மேற்கொள்ளவுள்ள நிகழ்வுகள் 
 மீளாய்வு செய்யப்படுவதுடன் பொத்துவில், செங்காமம், கோமாரி  பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் சம்பந்தமாகவும் நேர்காணல்களும் இடம்பெறுவுள்ளன.
READ MORE | comments

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த உல்லாசப் பயணிகள் சிலர் நேற்று முன்தினம் ரஷ்யாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


 அஸ்ஹர் இப்றாஹிம்


உக்ரைன் நாட்டைச் சேர்ந்த உல்லாசப் பயணிகள் சிலர் நேற்று முன்தினம் ரஷ்யாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றினில் ஈடுபட்டனர்.
ரஸ்யாவிற்கு எதிராக சுலோகங்களை ஏந்திய வண்ணமும் கோசங்களை எழுப்பியவாறும் யுத்தத்தை மிக விரைவில் முடிவிற்கு கொண்டு வருமாறும்  காலி கோட்டையை சுற்றியவாறு ஊர்வலமாக சென்றனர்.
இதுவரை இந்த யுத்தம் காரணமாக 115 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி வங்கியின் அங்கத்தர்வர்களாகவுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு துரித கடன் வழங்கும் செயற்திட்டம்


அஸ்ஹர் இப்றாஹிம்

அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி வங்கியின் அங்கத்தர்வர்களாகவுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு  துரித கடன் வழங்கும் செயற்திட்டம் புதன்கிழமை(24) ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது. 
 
 வங்கியின் முகாமையாளர் ரீ.கே. றஹ்மத்துல்லா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் மற்றும் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.சி.எம்.தஸ்லீம் ஆகியோரினால் பல்வேறுபட்ட தொழில் துறை முயற்சிbயாளர்களுக்கு இத்துரித கடன் சேவை வழங்கி ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது.

 சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் வழிகாட்டலுக்கமைய சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சௌபாக்கியா இவ்வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸானின் வழிகாட்டல் ஆலோசனையுடன் பல்வேறுபட்ட நலனுதவி வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
READ MORE | comments

பேராதனை பல்கலைக் கழக பொறியியல் பீட பேராசிரியர்கள் மின்சாரத்தில் ஓடும் முச்சக்கர வண்டியினை கண்டுபிடித்துள்ளனர்.

 


அஸ்ஹர் இப்றாஹிம்


பேராதனை பல்கலைக் கழக பொறியியல் பீட பேராசிரியர்கள் மின்சாரத்தில் ஓடும் முச்சக்கர வண்டியினை கண்டுபிடித்துள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட பேராசிரியர்களான ஜானக ஏக்கநாயக மற்றும் லினத சமரநாயக ஆகிய இருவரும் இணைந்து இதனை தயாரித்துள்ளனர்.

என்ஜின் இல்லாத மாறக்கூடிய சூரிய சக்தியில் இயங்கக்கூடிய இம் முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு தரம் இம்முச்சக்கர வண்டியை மின்சாரத்தில் சார்ச் ஏற்றினால் 60 கிலோ மீற்றர் வரை பயணிக்க முடியும் எனவும் இதனை வியாபார ரீதியில் அறிமுகப்படுத்தும் போது மேலதிகமான அனுகூலங்களை இதற்கு பயன்படுத்தலாம் எனவும் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்

இம் முச்சக்கர வண்டியினுள்  உள்ள மின்கலம் 20 நிமிடங்களில் சார்ச் ஆகி விடும் எனவும் இவர்கள் மேலும் தெரிவித்தனர்.
READ MORE | comments

உச்சம் தொட்ட தங்கத்தின் விலை! ஆபரண விற்பனை நிறுத்தப்படும் அபாயம்

 


இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்பாராத விதமாக அதிகரித்து வருவதாக தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 167,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 154,500 ரூபாவாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக  தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறையினால் தங்கத்தின் விலை உச்சம் தொட்டுள்ளமையினால் தங்க விற்பனையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலமை தொடர்ந்தால் தமது வணிக நடவடிக்கையை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம் என யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள நகை கடை வியாபாரிகளிடம் ஐ.பி.சி. தமிழ் நடத்திய கள ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளனர்

READ MORE | comments

வாகன இறக்குமதிக்கு இதுவரை அனுமதியில்லை - ஷெஹான் சேமசிங்க

 


வாகன இறக்குமதி தொடர்பில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அத்தியாவசிய பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.


பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு, வாகனங்களை டொலர்களில் திருப்பி அனுப்புவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் தாம் முன்வைத்த முன்மொழிவை பரிசீலிக்க முடியுமா என டொலவத்த கேள்வி எழுப்பியுள்ளார். இது அதிகரித்து வரும் வாகனங்களின் விலையைக் குறைக்கவும், டொலரில் வரி செலுத்துவதால் அரசுக்கு டொலரை வழங்கவும் உதவும் என்றார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், டொலர் நெருக்கடி தீர்ந்த பின்னரே வாகனங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்றார்.
READ MORE | comments

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணிகளை சுவீகரிக்கிறார்களா? ஆச்சரியத்துடன் கேட்ட கோட்டாபய


 வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணியினை சுவீகரிக்கிறார்களா? அவர்களுக்கு எதற்கு காணி என சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட அரச தலைவர் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு அரச தலைவர் செயலகத்தில்  இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்ததுடன், பகல் 1.30 மணி வரை நடைபெற்றிருந்தது.

இதன்போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்ததாக கூறப்படுகின்றது.

வயல் நிலங்களை சுவீகரிப்பது, மக்கள் நுழைய தடைவிதிப்பதெல்லாம் ஏற்க முடியாத நடைமுறைகள் என அரச தலைவரும், பிரதமரும் தெரிவித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், த.சித்தார்த்தன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் த.கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |